வட கொரியா என்னும் நரகக்குழி

வட கொரியாவின் வரலாறு மற்றும் இன்றைய நிலைமை பற்றி
பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு,
பல கொடுமைகளை அனுபவித்த கொரியா நாடு, பின் உள்நாட்டு
யுத்ததில் சிக்கியது. வடக்கு பகுதியில் கம்யூனிஸ்டுகள் (சீனா
மற்றும் ரஸ்ஸியா ஆதரவுடனும்), தென் பகுதியுல்
முதலாளித்துவாதிகள் / ஜனனாயகவாதிகள் அமெரிக்க மற்றும்
இதர நாடுகள் ஆதரவுடனும், கொரியாவை கைப்பற்ற கடும்
போரிட்டனர். 1950 முதல் 1953 முதல் நடந்த போரின்
இறுதியில் கொரியா தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு,
தென் கொரியா மற்றும் வட கொரியா என்று இரு நாடுகளாக‌
பிரிக்கப்பட்டது.

தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான
தொழில்களையும் வெற்றிகரமாக‌ பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும்
பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல்
ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது.

ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு
பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல்
பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவ செலவிற்க்காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால்,
உற்பத்தி திறன் மிக மிக‌ குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக
இருந்தது.

1994இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர்.
மிக மிக கொடுங்கோலனான‌ இவர், 'எதிரிகள்' பலரையும் கொன்றழத்தார். வட
கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி
செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே "கடத்தல்" மூலம்
அன்னிய செலவாணியை பெற முயன்றது.

பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும்,
ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும்
உருவாக்கி குவிக்கின்றனர்.

தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக
அடிமைகளாக‌ வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட
ராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது
படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே ராணுவ
செலவை குறைக்க மறுக்கும் அரசு.

ஆனால் உண்மையில் உலகின் எந்த நாடும் வட கொரியா மீது
படை எடுக்க விரும்பாது. ரஸ்ஸியா, ஜப்பான், அமெரிக்கா, தென்
கொரியா, சைனா என்று முக்கிய நாடுகள் அனைத்தும் இன்று
வரை வட கொரியாவை தாஜா செய்து, அவ்வப்போது உதவி
செய்து வருகிறது. காரணம், வட கொரியா ஒரு "failed state"ஆக
வீழ்ந்தால், பல லச்சம் அகதிகள் தென் கொரியா, சைனா மற்றும்
இதர அண்டை நாடுகளில் தஞ்சம் புக முனைவர். ச‌மாளிக‌வே
முடியாத‌ நிலை அது.

இப்போதே, அக‌திக‌ள் எண்ணிக்கை மிக‌ அதிக‌ம். ர‌க‌சிய‌மாக‌
அங்கிருந்து த‌ப்பித்து செல்வ‌ர். வ‌ட‌ கொரியா கிராம‌ங்க‌ளில்
வாழும் ம‌க்க‌ளின் நிலை, ஈழ‌ ம‌க்க‌ளின் நிலையை விட‌ மிக‌
மிக‌ கொடுமையான‌து. விடிவே இல்லாத‌ சூழ‌ல்.

தென் கொரியாவில் வாழும் கொரியார்க‌ள் மிக‌ மிக‌ மிக‌
அதிர்ஸ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். ஒரே நாட்டில் இரு நிலை.

ஆனால் இன்றும் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சிதான்.
செங்கொடி பற‌க்கிறது. நமது காம்ரேடுகள், வட கொரிய
ஆட்சியாளர்களை  "திரிபுவாதிகள்",  "போலிகள்" என்று மிக
சுலபமாக நிராகரிப்பர். ஆனால் உலகெங்கிலும் (க்யூபா) உள்பட‌
செம்புரட்சி, காலப்போக்கில் "திரிபுவாதிகள்"
வசம் சிக்கி, சீரழிந்ததே வரலாறு.

சொல்லிவைத்தது போல் விதிவிலக்கில்லாமல் அனைத்து "கம்யூனிச"
நாடுகளும் எப்படி திரிபுவாதிகளிடம் சிக்கியதாம் ? காரணம், அந்த
சித்தாந்தம் விஞஞான‌ பூரவமானது அல்ல. அல்ல. அதிகாரம் ஒரு
முனையில் குவிக்க வகை செய்யும், மக்களாட்சிக்கு, அடிப்படை
உரிமைகளுக்கு விரோதமான சித்தாந்தம் அது. அதனால் இறுதியில்
சர்வாதிகார ஃபாசிசத்திற்கே வழி வகுக்கும். இதில் எங்கும் விதி
விலக்கே  இருக்க முடியாது. மேலோட்டமாக தொழிலாளர் அரசு,
சுரண்டலை  ஒழித்தோம், சமத்துவம் என்ற labelகளை வைத்துக்
கொள்வார்கள்.

தொழிலாளர்கள் நிலை கம்யூனிச நாடுகளில்தான் மிக மிக
கொடுமையானது. கொத்தடிமைகள் போல் வாழ்க்கை. அதை பற்றி
விரிவாக பின்னர்..

North Korea Human Rights (Amnesty International's reports)
http://www.amnestyusa.org/all-countries/north-korea/page.do?id=1011213