ஊழலின் ஊற்றுகண் - 2

சோசியலிசம் என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்துப்படுவதால்
குழப்பம் அதிகம். கம்யூனிசததிற்க்கு முன்னோடியான சோசியலிசம் வேறு. நான் சொல்ல வருவது, சில மே.அய்ரோப்பிய நாடுகளில், இந்தியாவில் அன்று கடை பிடிக்கப்பட்ட ஜனனாயக பாணி சோசியலிசம்.
இந்தியாவில் சோசியலிச பாணி என்ற பெயரில் 50களில் இருந்து நடைமுறை படுத்தப்பட்ட கொள்கைகள் :
அய்ந்தாண்டு திட்டங்கள் : இவை நாட்டில் பொருளாதாரத்தை முழுவது திட்டமிட்டு நடத்தும் நோக்கதில் உருவாக்கப்பட்ட்ன. முடிந்த வரை அரசு துறைக்குதான் முக்கியத்துவம். தனியார் துறை மிகுந்த கட்டுப்படுகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒவ்வொறு துறையிலும் தனியார்கள் எந்த ஒரு பொருளையும், எத்தனை அளவு உற்பத்தி செய்ய முன் அனுமதி அளிக்க industrial licensing policy என்ற சட்டம் இயற்றப்பட்டது.
சில முக்கிய துறைகள் தனியார்களுக்கு அனுமதி மறுக்கப்ப்ட்டன. பல துறைகளில், மிக குறைந்த அளவு லைசென்ஸே அளிக்கப்பட்டது. பொதுதுறை வளர வேண்டி, தனியார் துறை முடக்கப்பட்டது. ஆனால் பொதுதுறையால வேண்டிய உற்பத்தி செய்ய இயலாமல் பற்றாக்குறை உண்டாகியது. சிமெண்ட். நூல், ஜவுளி என்று பல விசியங்களில் கடும் பற்றாக்குறை. அதனால கடத்தல், கள்ள சந்தை உருவாகி, ஊழல் தலைகாட்டியது.
இந்த லைசென்ஸ் ராஜ்ஜியத்தை கட்டிக்காக்க பெரும் அரசு அதிகாரவர்கள் உருவாக்கப்பட்டது. அவர்களின் நேர்மை படிப்படியாக குறைந்தது. தொழிலதிபர்கள் புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க, இருக்கும் நிறுவனங்களை விரிவு படுத்த, இந்த அதிகாரிகள், அமைச்சர்களின் தயவை நாட வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால லைசென்ஸ் வழங்குவதில் லஞ்சம் மற்றும் political patronage பெரிய அளவில் உருவானது. இது இந்திரா காந்தி காலங்களில் அதி உச்சமடைந்தது.
அரசு துறையை தொடர்ந்து விரிவு படுத்த, ராணுவ செலவுகளை செய்ய அரசு பெரும் அளவில் வரி விதித்தது. புதிய புதிய வரிகள் விதிக்கப்பட்டன. உச்சபட்சமான வருமான வரி 98 % அளவிற்க்கு (கோடீஸ்வர்களுக்கு மட்டும்) 70களில் உயர்ந்தது. இதனால் பெரும் அளவில் வரி ஏய்ப்பு நடக்க ஆரம்பித்தது. கருப்பு பணம் மிக மிக மிக அதிகம் உருவாகி, நேர்மையை அழித்தது.
தேசியமயமாக்கல் என்ற ‘அபாயம்’ இருந்ததால், பலரும் புதிய தொழில்களை துவக்க, ரிஸ்க் எடுக்க தயங்கினர். அதனாலும் உற்பத்தி பற்றாகுறை ஏற்பட்டு சிக்கல் அதிகரித்தது.
அன்னிய முதலீடுகளே தடை செய்யப்பட்டன. அன்னிய நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ரூபாய், பணச் சந்தையில் இன்று போல் float செய்யப்படாமல், severe foreign exchange rate controlsகளுக்கு உட்படுத்தப்பட்டது. ரூபாயின் மதிப்பு செயற்க்கையாக சந்தை மதிப்பை விட, பல மடங்கு அதிகமா நிலை நிறுத்தப்பட்டது. அனைத்து பரிவர்த்தனைகளும் அரசின் ரிஸர்வ் வங்கி மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இறக்குமதி எப்போதும் நமக்கு ஏற்றுமதியை விட டாலர் மதிப்பில்அதிகம். அதனால் டாலர் இருப்பு எப்போதும் பற்றாக்குறை. ஏற்றுமதியும் அதிகரிக்க வழியில்லை காரணம் நம் ரூபாயின் மதிப்பு செயற்கையாக அதிகமாக வைக்கப்பட்டதால். வெளிநாடுகளில், நம் பண்டங்களை இறக்குமதி செய்பவர்கள், சந்தை மதிப்பை விட அதிக விலை அளித்து, இறக்குமதி செய்ய தயாரில்லை. இது புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படையான விசியம் தான். (ரூபாய்க்கி எதிராக டாலர் வீழ்ச்சி அடைந்த 2007இல், நம் ஏற்றுமதியாளர்கள் அடைந்த பிரச்சனைகள், நஸ்டங்களை நினைவு கூருங்கள்).
இறக்குமதி செய்ய லைசென்ஸ்கள் அரசாங்கத்தால் அளிக்க்பட்டன. அன்னிய செலவாணி மிக தட்டுப்பாடாக இருந்தால், எந்த பண்டம் அத்தியாவியம், எது ஆடம்பரம், யாருக்கு இறக்குமதி லைசென்ஸ் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் (காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும்), உருவாக்கப்பட்டன. இது பெரும் ஊழலுக்கு வகை செய்தது. பெரும் தொழிலதிபர்கள், தளவாடங்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அதிகாரிகளில் தயவு மிக மிக அதிகம் தேவை பட்டது. போதாக்குறைக்கு, சில முக்கிய ஏற்றுமதி / இறக்குமதி வணிகம் அரசுடைமயாக்கப்பட்ட State Trading Corporation மூலமாக மட்டும் தான் சாத்தியாமானது. அதில் மெகா ஊழல் உருவானது.
அரசின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேயிருந்தது. சமாளிக்க தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்டுகள். அதாவது புதிதாக பெரிய அளவில் நோட்டடித்து, அரசு பொறுப்பில்லாமல் செலவு செய்தது. இதன் விளைவு கடுமையான விலைவாசி உயர்வு. ஆண்டுகள் 18 சதவீதம் எல்லாம் சாதாரணம். அதனால வட்டி விகுதங்களும் அதை விட அதிகமாக உயர்ந்து, மக்களை வாட்டியது.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்த்தால், அதற்க்கு ஏற்றது போல், கூலி உயர்வு கேட்டு, தொழிலாளர்களின் போராட்டமும் வலுத்தது. அதனால் வருடத்தில் பல நாட்கள் உற்பத்தி முடங்கி, பற்றாக்குறை அதிகரித்தது. புதிய தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தியிம் அதிகம் இல்லை. இரும்பு, சிமெண்ட், சர்கரை, உரம் போன்ற பல பொருட்களின் விலையை அரசு கடுமையான price controls மூலம் கட்டுப்படுத்தியது.
இதனால கள்ள சந்தை, கடத்தல், பதுக்கல் உருவாகி, நேர்மையை மேலும் சீரழித்தது.
வறுமையும் தொடர்ந்து அதிகரித்தது. வேலை இல்லாத்திண்டாடமும் மிக மிக அதிகரித்தது. ஜனத்தொகையும் தொடர்ந்து உயர்ந்தது.
தொழிற்துறையை முடக்கியது போதாது என்று விவசாயத்தையும் சோசியலிச கோட்ப்படுகள் என்ற பெயரில் முடக்கினார்கள். நில உச்ச வரம்பு சட்டம் என்று எந்த ஒரு விவசாயும், நஞ்சை நிலங்கள் 15 ஏக்கர்களுக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க கூடாது என்று தடை. இதனால் பினாமி நிலங்கள் உருவாகின. வளர்ந்த நாடுகளில் நடந்தது போல், பெரும் அளவு கொண்ட நவீன பண்ணைகள் உருவாகி, விவசாய உற்பத்தி திறன், அதாவது maximization of yield and minimization of productions costs due to economies of scale and use of modern technology இங்கு சாத்தியமில்லாமல் போயிற்று. இதனால் தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்தது.
அன்னிய முதலீடுகள், இந்திய பெரு முதலாளிகள், பெரிய விவசாயிகள் : இவர்கள் அனைவரும் மெகா வில்லன்கள் என்று இடதுசாரிகளால் தொடர்ந்து மேடைகளிலும், ஊடகங்களிலும் தூற்றப்பட்டனர். மக்களின் பொது புத்தியிலும் அப்படி ஏற்றப்பட்டது. இதனால் (இன்று போல் அல்லாமல்) தொழில் துவங்க பலரும் அன்று தயங்கினர். A whole generation of ‘would be’ entrepreneurs were blunted from risk taking and made to look for got jobs.
தனியார் துறை மிக குறைவான வேலை வாய்புகளையே இதனால் உருவாக்க முடிந்தது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மிக மிக அதிகரித்தது. வேலை என்றால் அரசு துறை வேலை மட்டும் தான் என்று பல பத்தாண்டுகள் இருந்தது. எம்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்துவிட்டு, வேலை கிடைக்காமல், இளைஞர்கள் தாடி வளர்த்துக் கொண்டு, குட்டை சுவற்றில் அமர்ந்து, கம்யூனிசம் பேசினர். 1980இல் வெளிவந்த வறுமையில் நிறம் சிகப்பு படம் அருமையாக இந்த சூழலை காட்சிபடுத்தியது.
அன்னிய செலவாணி பற்றாமல், அய்.எம்.எஃப் வங்கியிடம் ஆண்டு தோறும் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு. ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டோம். 1991இல் இது ஒரு களைமாக்ஸ்க்கு நகர்ந்தது.
மேலும்..

1 comments:

K.R.அதியமான் said...

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html