ஆம்னி பஸ்களுக்கு விடுதலை

Ban on omnibus permits revoked
http://www.hindu.com/2009/06/11/stories/2009061159630800.htm

தமிழகத்தில், சுமார் 18 வருடங்களாக இருந்த ஆம்னி
பஸ்களுக்கான லைசென்ஸ் கட்டுபாடுகளை தளர்த்தியது
அரசு. நீண்ட தொலைவு பயணத்திற்க்கு அரசு பஸ்கள்
மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் அதிகம் தேவைபடுகின்றன.
(ரயில் வண்டிகளில் இடம் நிரம்பி வழிவதால்) ; ஆனால்
1991 முதல் புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட்டுகள்
வழங்குவதை நிறுத்தி வைத்தது தமிழக அரசு. விளைவு :
கடும் பற்றாக்குறை மற்றும் டிக்கட் விலைகள் மிக
அதிகமானது.

ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் விதமே வினோதமானது,
முட்டாளதனாமானது. மதுரையில் இருந்து சென்னை
செல்லும் ஆம்னி பஸ், டூரிஸ்ட் வண்டியாகவே இயக்கப்படுகிறது.
அதவாத பயணிகள் அனைவரும் "சேர்ந்து" சென்னையை
சுற்றி பார்க்க செல்வதாக ஒரு செட்டப். தனியார் பஸ்களுக்கு
நேரடியான அனுமதி வழங்கப்படாதால் 40 வருடங்களாக இந்த
அவலம். மேலும் புதிய ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட்
அனுமதிக்காமல் இருந்ததால், இருக்கும் பெர்மிட்டுகள்
பல கோடி ரூபாய்களுக்கு (கருப்பில்) கைமாறின. எனக்கு
தெரிந்து கரூர் சென்னை ஆம்னி பெர்மிட், சில வருடங்களுக்கு
முன் சுமார் 2 கோடிக்கு கைமாறியது.

இதில் மறைந்து நிற்க்கும் விசியம் : அரசு அதிகாரிகள்,
அமைச்சர்கள், முதல்வர் வரை லஞ்சம் விளையாடுவது.
வருடந்தோரும் மாமுலாக சூட்கேஸ்கள் அனுப்பபடுகின்றன.
இதற்க்கு பெயர்தான் குரோனி கேபிடலிசம். புதிய போட்டியாளர்கள்
உருவாகி, மலிவான சேவைகள் அதிகமாகி, லாபம்
குறைவதை தவரிக்க‌ இதுவரை பெர்மிட் பெற்ற முதலாளிகளும்,
அரசு எந்திரமும் கூட்டாக செய்யும் சதி இது.

"தனியார் முதலாளிகள் வளர்ந்துவிடுவார்கள், லாபம்
இல்லாத வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க மாட்டார்கள்,
டிக்கட் விலை மிக அதிகமாகும், மக்கள் தவிப்பர்கள்" :
இந்த டைலாக் மாமுலாக உபயோகிக்கப்பட்டு, பொது
புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது.

இப்போதும், புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட் வழங்கும்
அதிகாரம் ஆர்.டி.ஓ மற்றும் அதன் தலைவரான் போக்குவரத்து
கமிஸ்னர் (மிகவும் 'பசையுள்ள' பதவி) ஆகியோரிடம் தான்
வழங்கள்ப்பட்டுள்ளது. இனி பல கோடிகள் கைமாறும். பேரங்கள்,
சூட்கேஸ்கள்...

ஏல முறையில் வெளிப்படையாக வழங்கும் முறையே
சரியானது. ஊழல் உருவாவதை தடுக்கும். ஆனால்
விடமாட்டார்கள்.

மேலும் பார்க்க :

http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html