கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை. சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளில் சோசியலிச அரசு அமைக்கப்பட்டு, படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கி நகரும் காலங்களில், திரிபுவாதிகள் தோன்றி, சீரழித்துவிட்டார்கள். இதுதான் தோழர்களின் version of history.

கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்க்கு (சமூகத்திற்க்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சமளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs..

இதில்தான் சிக்கலே. மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.

தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.

பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கத்திற்க்கா வேலை செய்யும் ஊழியர்கள். தனியார் நிறுவனங்கள் அறவே இருக்காத அமைப்பு. பிரதமர் முதல் கடைனிலை ஊழியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். (இங்கு அரசு எனபடுவதற்க்கு அர்த்தம் வேறு). அவர்களுக்கான சம்பளம், அவர்களின் வேலை மற்றும் தகுதிக்கேற்ப ஆரம்ப காலங்களில் வழங்கப்படும். பிறகு உண்மையான கம்யூனிசம் உருவாகும் போது, தேவைக்கேற்ற ஊதியம் மட்டும் வழங்கப்படும்.

ஒரு தொழிற்சாலை அல்லது கூட்டு பண்னையில் ஒரே வகை வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருக்கும். இதன் விளவு, திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல், சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்கும் நிலை. இது நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தை குறைக்கும். அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும். மொத்த விளைவு : உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைவாகவே இருக்கும். மிக முக்கியமாக மூளை உழைப்பை செய்யும் நிர்வாகிகளின்
திறன் ஒழுங்காக வெளிப்படாது.

தொழில்முனைவோர் என்படும் entrepreneuers, இவர்களின் முழு திறமையும் வெளிபட வாய்பிருக்காது. ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எந்த பாணியில் அமைக்கப்படிருந்தாலும், அதை நிர்வாக்கிக திறமையான, ஊக்கமான, நிர்வாகிகள் மிக அவசியம் தேவை. Managerial and entrepreunarl talent. இதை பொது உடமைசமூகத்தில் இழக்க நேரிடுவதால், உற்பத்தி மற்றும் efficiency மிக குறைவாகவே இருக்கும்.

தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செழுத்த ஊக்குவிக்கும். இதற்க்கு விதிவிலக்குகள் இருக்கலாம். பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகளும் அப்படி இருப்பர். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான். பெருவாரியானவர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே மனித இயல்பு. லாப நோக்கு மறுக்கப்ட்டு, தனியுடைமையின் அடிப்படையான சொத்துர்மை ரத்து செய்யப்படும் அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையாக, போதுமானதாக இருக்காது.

சோவியத் ரஸ்ஸியாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்க்கான காரணிகளை தோழர்கள் விரிவாக விவாதித்து, மிக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளனர். அதாவது திரிபுவாதிகள், ஏகாதிபத்திய சதி போன்றவை தான் காரணம் என்று சொல்வர். ஆனால் இது மனித இயல்பு என்பதே உண்மை. ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற முடியாது. ஒரு தலைமுறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினரை மட்டும்தான் உண்மையான கம்யுனிஸ்ட்களாக மாற்ற முடியும். பெரும்பான்மையோர் தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் நடிப்பார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்வார்கள். அவர்களை ‘திருத்தி’, re-training and educating about communism செய்ய அரசும், கட்சியும் முயலும். அதற்க்காக பல மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக புரிய வேண்டி வரும்.

எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை. இதை தான் வரலாறு நிறுபிக்கிறது. செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக போக உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். முக்கியமாக விவசாயத்தை திடிரென பொது உடைமை பாணியில், கூட்டுபண்னைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. இது செம்புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் ஆரம்ப வருடங்களில் நடந்தது. விதிவிலக்கே இல்லை. ஏன் என்று யோசிக்க வேண்டும். 80களி ஒரு சோவியத் ரஸ்ஸிய கூட்டுபண்ணை தொழிலாளர் சொன்னது : “We pretended to work while they pretended to pay”

இன்று உலகில் எங்கும் சோசியலிச பாணி கம்யூனிச அமைப்புடைய நாடே இல்லை. கூபாவையும் சொல்ல முடியாது. 50 ஆண்டுகளில் பெரும் மாற்றம். வரும் காலங்களில் செம்புரட்சி உருவாக வாய்புள்ள நாடு என்று ஒரு நாட்டையும் சொல்ல முடியவில்லை. (60களில் அப்படி இல்லை). மொத்த தென் அமெரிக்காவும் பொது உடைமையை நோக்கிய பாதையை கைவிட்டுவிட்டன. சீலே மற்றும் பெரு போன்ற நாடுகளின் மாற்றம் வியக்க வைக்கும். 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு புரட்சி பற்றிய சிந்தனைகள் இன்று இல்லை. ஒரு முன்னாள் மார்க்ஸிய போராளியும், இன்று ஜனாதிபதியுமான
ஒருவரின் பேட்டி இது :

A new beginning : The emerging democratic paradigm in Latin America
http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

இந்தியா இன்று ஊழல்மயமாக உள்ளது. சராசரி இந்தியானின் நேர்மை மற்றும் ஊழலுக்கு துணை போகாத ஒழுக்கம் குறைவுதான். எதோ ஒரு வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் மிக பரவலாக வேறூண்றிவிட்டது. அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் உற்பத்தி திறன் பற்றி சொல்லவே வேண்டாம். மொத்த மக்களும் செம்புரட்சியின் மூலம் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே கொடுமையாக உள்ளது.

இதற்க்கு மாற்றாக, தனிநபர்வாதத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர சந்தை பொருளாதாரத்தை, ஜனனாயக முறையில், முறையாக பின்பற்றிய பல நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று, வறுமையில் அளவை மிக மிக குறைத்து, இன்று செழிப்பான வளர்ந்த நாடுகளாக மாறின. மே.அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற பல நாடுகளின் economic history அய் பார்த்தாலே புரியும்.

கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து, அதை நம்ப வைத்து, முழுமையாக ஏற்க்க வைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதையே வரலாறு நிருபிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் இச்சித்தாந்தம் இன்று காலாவதியானதாக கருதப்படுகிறது.

மேலும் உபரி மதிப்பு மற்றும் சுரண்டல் தான் இதற்க்கு ஆதாராமான விசியங்கள். ஆனால் அவை உண்மை அல்ல என்பதை எமது முந்திய பதிவில் எழுதியுள்ளேன்.