முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 2

நம்பிக்கை, நாணயம், கூட்டு முயற்சி : இவைதான் முதலீட்டியத்தின் அடிப்படை அம்சங்கள். இதை பற்றி சற்று பார்ப்போம்.

 

தொழில் நிறுவனங்கள் பல வகை வடிவங்களை கொண்டவை :

 

1.Sole Proprietorship (தனி நபர் உரிமை)

2.Partnership Firm (கூட்டாளிகள் கொண்ட சிறு நிறுவனம்)

3.Private Limited Company (இயக்குனர்கள், பங்குதாரர்கள் கொண்ட நிறுவனம்)

4.Public Limited Company (பங்குகளை வெளியிட்டு, பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்).

5.Venture Capital based companies (தொழில் முனைவோர்களை நம்பி முதலீடு செய்யப்பட்ட நிறுவனம்)

 

மிக குறைந்த முதலீட்டில், ஒரு தனிநபரால், தன் திறமை, உழைப்பின் மீது கொண்ட நம்பிக்கையால் உருவக்கப்படும் நிறுவனமே sole proprietorship நிறுவனம். அதன் வளர்ச்சி மற்றும் அளவு பொதுவாக பெரிய அளவில் இருக்காது. முதலீட்டிய அமைப்பில், இவைதான் முதல் படி.

 

இரண்டாவது வகையான கூட்டாளிகளை கொண்ட partnership firm : இவைதான மிக முக்கியமானவை. Building blocks of capitalism and prosperity. கூட்டாளிகளில் ஒருவரிடம் அதிக முதலீடு இருக்கும். ஒருவரிடம் தொழில் திறமை இருக்கும். ஒருவரிடம் உழைக்கும் திறன் அதிகமிருக்கும். நிர்வாகத்திறன், மார்கெட்டிங் திறன் என்றும் பிறருக்கு திறமைகள் இருக்கும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்டால் தான் நிறுவனத்தை துவக்க முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை (mutual trust and faith) தான் மிக முக்கியமான அம்சம். சில பகுதிகளில் இந்த நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி மிக அதிகம் இருக்கும். அப்பகுதிகளே துரிதமாக வளம் பெறும். (இதில் சாதிய, குடும்ப உறவுகளின் பங்கும் உண்டு.) உதராணமாக கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இத்தகைய கூட்டாளி நிறுவனங்கள் மிக மிக அதிகம். அதனால் தான் அப்பகுதிகளில் தொழில் வளர்சியும் அதிகம். வறுமை அளவும் குறைவு. (in relative terms). பொதுவாக நிர்வாக கூட்டாளி என்று ஒருவரோ அல்லது இருவரோ இருப்பர். மற்றவர் sleeping partners என்று முதலீடு மட்டும் செய்யும் கூட்டாளிகள். நிர்வாக கூட்டாளி(கள்), மற்ற கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிறுவனத்தை நிர்வாகிக்க முனையும் தன்மை கொண்டவரகளாக இருப்பது மிக அவசியம். ஏமாற்றும் தன்மை கொண்டவரகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற நிறுவனங்கள் உருவாகுவது அரிது. சக மனிதர்களை அதிகம் நம்பாமள், குறுகிய மனோபாவம் கொண்ட பகுதிகளில் உருவாகாது.

 

இன்று பெரும் பன்னாட்டு நிறுவனமாக திகழும் Infosys நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப முதலீட்டில் ஒரு partnership firm ஆகவே துவக்கபட்டது ! இன்று பெரு நிறுவனங்களாக திகழும் பல புகழ் பெற்ற நிறுவனங்களுல் பல பத்தாண்டுகளுக்கு முன் அல்லது நூற்றாண்டுகளுக்கு முன் இது போன்ற partnership firmகளாகவே துவக்கப்ட்டன.

 

சக கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிருவனத்தை நிர்வாக்கிக்கும் குண நலனே மிக மிக அடிப்படை. ஊரில் உள்ள அனைத்து 'திறமையாளர்களும்' பிராடு பயலுகளாகவே இருந்தால், யாரும் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள். தொழில் வளர்ச்சி இல்லாமல், அந்த பகுதி வறுமையிலேயே தேங்கி கிடக்கும். யாரும் கடனும் அளிக்க மாட்டாரக்ள். எனவே இந்த அடிப்படை நேர்மை என்பது மிக முக்கியமானது. Business ethics and morals..

 

Private Limited Company என்பது அடுத்த கட்டம். இதுவும் partnership firmஅய் போன்றதுதான். ஆனால் சில அடிப்படை வித்தியாசங்கள். முதலீடு சற்று பெரிய அளவில் இருக்கும். இந்த லிமிட்ட என்பது, நஸ்டமடைந்து திவாலாகும் போது, கூட்டாளிகளின் தனிபட்ட சொத்துகளை கடன் கொடுத்தவர்கள் ஏலத்திற்க்கு கொண்டு வர முடியாது. நிறுவனத்தின் சொத்துக்களை மட்டுமே attach செய்ய முடியும். Limited Liability partnership (LLC) நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. To reduce risks and to encourage entrepreunership.

 

Public Limited Company அடுத்த நிலை. இவை பங்குகளை / கடன் பத்திரங்களை (shares and debentures) பொது மக்களுக்கு வெளியிட்டு / விற்று பெரும் மூலதனம் சேகரித்து, பெரிய projectகளை ஆரம்பிக்க ஏதுவானவை. பங்கு சந்தை மற்றும் ஆன்லைன் வர்தகம் பற்றி பல தவறான, மேலோட்டமான தகவல்கள் தான் பொது புத்தியில் அதிகம். அவற்றின் மிக அடிப்படை நோக்கங்கள் (functions) பற்றிய தெளிவு குறைவு. பொது மக்களின் சேமிப்பை ஆக்கபூர்வமான, லாபகரமான, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழிகளில் செலுத்த மிக இன்றியமையாத பணிகளை செய்வதே பங்கு சந்தையின் அடிப்படை. பங்கு சந்தை அதிகம் develop ஆகாத காலங்களில், நம் மக்களின் சேமிப்பு, பயனற்ற, unproductive முறைகளில் முடங்கியிருந்தன. பல நூற்றாண்டுகளாக தங்கத்திலும், நிலத்திலும் மட்டும் சேமிப்புகளை முடக்கும் தன்மை தொடர்ந்தது. (இன்றும் இத்தகைய 'பாதுகாப்பான' வழிகளை நாடுபவர்களே அதிகம்).

 

மக்களின் சேமிப்புகள் சரியான முறையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் நாடுகளில் தான் பொருளாதார வளர்சி மற்றும் முன்னேற்றம் அதிகம்  இருக்கும். இந்தியாவில், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பங்கு சந்தை வளர்ச்சி அடையாமல், முடங்கி போய் இருந்தது. இன்று ஓரளவு வளர்ந்து, விரிவடைந்து விட்டது. இதுவும் ஆரம்ப நிலை தான். இன்னும் matured markets ஆக இங்கு உருவாமாறவில்லை.

 

ஒரு நிறுவனம் புதிய தொழிற்சாலையை அமைக்க அல்லது விரிவுபடுத்த வங்கி கடன் ஒரளவிற்க்குதான் பெற முடியும். புதிய பங்குகளை வெளியிட்டு, பெரும் தொகைகளை திரட்டுவதுதான் வழி. நிறுவனங்களின் வரலாற்றையும், நன்னம்பிக்கையையும் (goodwill)அய்யும் பொறுத்தே மக்கள் அதன் பங்குகளை வாங்குவர். முதலீட்டாளர்களை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்களே, மேலும் மூலதனத்தை திரட்ட முடியும். Goodwill and past track record எத்தனை முக்கியம் என்பதே இங்கு அடிப்படையான அம்சம்.

 

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல முறையில், தரமான பொருட்களை, சேவைகளை, மலிவான விலையில் அளித்தால் தான் சந்தையிலும் நன்மதிப்பை (Goodwill) பெற முடியும். இதை கட்டமைக்க பல பத்தாண்டுகள் ஆகும். (இழக்க சில நாட்களே போதும் !) உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்களில் Sony நிறுவன பொருள் என்றால் உடனே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தான் நமக்கு நினைவிற்க்கு வரும். அதுதான் அதன் சந்தைக்கு அடிப்படை. Brand building என்று சொல்வார்கள். வெறும் பொய்யான விளம்பரங்களினால் அதை கட்டமைக்க முடியாது. "பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோறையும் எல்லா காலங்களுக்கும் ஏமாற்ற முடியாது." என்ற முதுமொழி இங்கு மிக பொருந்தும். தரம் மற்றும் விலை : இவை மூலம் தான் சந்தையில் வெற்றி பெற முடியும். சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை அம்சம் இது.

 

நம்பிக்கை, நாணயம் மற்றும் Goodwillஇன் முக்கியத்துவத்தை சுருக்கமாக பார்த்தோம். தொழில் நிறுவனங்களில் இறுதி வடிவமான Ventute Capital based companies பற்றி பார்ப்போம். பில் கேட்ஸ் போன்ற திறமையான தொழில் முனைவோர்களை சரியாக கண்டறிந்து, அவர்களின் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு, எந்தவிதமான செக்யூரிட்டி (அடமானம்) இல்லாமல், பெரிய அளவில் நிதியை முதலீடாக அளிக்கும் முறை. பல புதிய கண்டுபிடிப்புகள் அல்லது செயல் திட்டங்களுக்கு போதுமான முதலீடும், வங்கி கடன்களுக்கு கிடைக்காத நிலை எப்போதும் உண்டு. அந்த வகை கண்டுபிடிப்புகளுக்கும், தொழில் முனைவோர்க்களுக்கும் தாரளமாக முதலீடு அளிக்க மிக அதிகம் ரிஸ்க் எடுத்து செயல்படும் நிதி நிறுவனங்களே Venture Capital Funds. அவை முதலீடு செய்யும் நிறுவனங்கள் / திட்டங்களில் பெரும் பகுதி work out ஆகாமல் நட்டத்தில் முடியும். ஆனால் பத்தில் ஒரு திட்டம் வெற்றி பெற்றாலே போதும். மீதி ஒன்பது நிறுவன முதலீட்டிழப்பை சரிகட்டி, அதற்க்கு மேலும் பல மடங்கு லாபத்தை ஈட்டித்தரும். மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன், கம்யூட்டரை சிறிய அளவில் உருவாக்கி தனி மனித பி.சிகளாக்க வடிவமைக்க முடியும் என்று யாரும் நம்பாத போது, ரிஸ்க் எடுத்து பில் கேட்ஸுக்கு உதவிய Venture capital நிறுவனம், பின்னர் மிக பெரிய லாபத்தை வென்றிருக்கும். இதே போல பல் நூறு புதிய முயற்சிகளுக்கு பிறகு உதவ வழி பிறந்திருக்கும். Venture Capital Funds are the greatest and noblest form of capitalism. அவை எந்த நாடுகளில் அதிகம் தழைக்கிறதோ, அந்நாடுகள் தாம் மிக பெரும் வளர்ச்சி அடைந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் பாக்கியத்தை அடைகின்றன.

 

மேலும்..

முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1

முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1

 

சில காலம் முன்பு, வேதியலில் முனைவர் பட்டம் பெற்று, உயர் அரசு பதவியில் இருக்கும் குடும்ப நண்பர் ஒருவருடன் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னது :"….ஏழ்மையை ஒழிக்க, அரசு அதிகம் ரூபாய்களை அச்சடித்து, ஏழைகளுக்கு அளிக்க முடியாதா ?" ; அது வறுமையை குறைப்பதிற்க்கு பதிலாக, விலைவாசியை மட்டும் உயர்த்தும் என்பது அவருக்கு புரியவில்லை. பகுதி நேரம் பேராசியராக இருக்கும் இவருக்கே, அடிப்படை பொருளாதார விதிகள் புரியவில்லை. அறியாமை. இது போன்ற அடிப்படை விசியங்கள் பற்றி எளிமையாக விளக்க முயல்கிறேன்.

 

முதலீட்டியம் என்று சொல் சமீப காலமாக உபயோகிக்கப்படுகிறது. முதலாளித்துவம் என்ற சொல்தான் அதிகம் பிரயோகிக்கப்படும் சொல். அதைவிட முதலீட்டியம் என்ற சொல் Capitalism என்பதற்க்கு சரியான தமிழாக்கமாக உள்ளது. முதலாளி, முதலாளித்துவம் என்ற சொற்கள் வில்லத்தனமான, எதிர்மறையான அர்த்தங்களுடன் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. ஆகவே முதலீட்டியம் என்ற சொல் எமக்கு உவப்பாக இருக்கிறது !!

 

தொழிற் புரட்சி துவங்கிய பிறகுதான் முதலீட்டியம் உருவானது. அதற்க்கு முன் உலகெங்கும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நிலப்பிரவுத்துவம் தான். நவீன வடிவ ஜனனாயகமும், தொழில் புரட்சியுடன் சேர்ந்தே வளர்ந்தது. அய்ரோப்பாவில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 

முதலீட்டியம் பல வகைகள், பாணிகள் கொண்டது. மார்க்சியம் போன்ற ஒற்றைபடை தன்மை கொண்ட definition கிடையாது. ஒவ்வொறு நாட்டிலும் ஒவ்வொறு பாணிகள். அதை பற்றி பிறகு விரிவாக பார்போம்.

 

பாசிசம், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் : இவைகள் முதலீட்டியத்தோடு சேர்ந்தே பார்க்கப்படும் கோணம் உள்ளது. முதலீட்டியத்தை இரு வகைகளாக பிரிக்கலாம் : லிபரல் ஜனனாயகத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம், பாசிசத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம். இரண்டு வகைகளையும் 'முதலீட்டியம்' என்ற சொல்லிற்க்கு கீழ் அடைத்து, குழப்பிக்கொள்ளும் தன்மை அதிகம். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் லிபரல் ஜனனாயக பாணி முதலீட்டியம் பரவலாகியது. அதுவரை பாசிச பாணியிலான, ஏகாதிபத்திய தன்மை கொண்ட முதலீட்டியம் கோலோச்சியது.

காலனியாதிக்கம் செலுத்திய அய்ர்ப்ப்பிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கிய முதலீட்டிய பாணி இது.

 

1948இல் அய்.நா சபை பிரகடனமான : Universal Declaration of Human rights. http://www.un.org/en/documents/udhr/  இதுதான மிக மிக முக்கியமான, அடிப்படையான கொள்கை விளக்கம். மீற கூடாத 'புனித பசு' என்றும் கொள்ளளாம். சொத்துரிமை இதில் ஒரு பகுதி. அவ்வளவுதான். இந்த சொத்துரிமை தான் முதலீட்டியத்தின் ஆணி வேர். அதாவது பொது உடைமை கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை.

 

மேலோட்டமாக பார்த்தால், சொத்துரிமை என்பது பணக்காரர்கள், பண்னையார்கள், பெரு முதலாளிகளின் நலன்களை பாதுக்காக்க, ஏழைகளை 'சுரண்ட' உருவாக்கப்பட்ட கொள்கை போல தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏழைகளில் பலரும் கடின உழைப்பில் முன்னேறி தொழில் அதிபர்களாக, பெரு விவசாயிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், இன்று பெரும் நிறுவனங்களின் 'முதலாளிகள்' அல்லது பங்குதாரகள் அனைவரும் தங்கள் 'தனி உடைமையை' சுயமாக உழைத்து பெற்றவர்கள். அல்லது அவர்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, பண்னைகளை வாரிசு அடிப்படையில் பெற்று, அதை பெருக்கி, நிர்வாகிப்பவர்கள்.

தொடர்ந்து 1000 வருடங்களாக 'பணக்காரகளாக' இருக்கும் குடும்பம் அல்லது குழு எதுவும் இல்லை. இருப்பதாக நான் அறியவில்லை.

 

ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கும் ஒருவர், தம் உழைப்பினாலும், ஊக்கத்தாலும், திறமையாலும், ஒரு சிறு நிறுவனத்தை துவக்கி, படிப்படியாக வளர்த்தி, மேம்மட்ட வரலாறுகள் பல உண்டு. தாம் பாடுபட்டு உழைத்து, உருவாக்கிய நிறுவனம் அல்லது பண்ணையை, ஒரு சோசியலிச அரசோ அல்லது 'கொள்ளையர்களோ' கைப்பற்றும் சூழல் உருவானால், தொழில் முனைவோர்கள் ஊக்கமாக 'உழைக்க' மாட்டார்கள். தன்னால் உருவாக்கப்பட்ட அல்லது முன்னோர்களாக தமக்கு அளிக்கப்பட்ட சொத்துகள் / நிறுவனங்கள் / பண்னைகள், இவைகளுக்கு 'பாதுகாப்பில்லை' என்றால் அவற்றை பேணவோ, விரிவுபடுத்தவோ ஊக்கம் இருக்காது. இது அடிப்படை மனித இயல்பு. 'சோசியலிச' கொள்கைகளை அமலாக்கும் நோக்கத்தில் பெரு நிறுவனங்களை தேசியமயமாக்கும் 'அபாயம்' தொடர்ந்த காலங்களில் இருந்த ஊக்கத்தைவிட, இன்று தாரளமயமாக்கல் காலத்தில் வெளிப்படும் ஊக்கம் மிக அதிகம். Unleashed potential of Indian entrepreuneship and energy. பார்க்கவும் : http://www.heritage.org/index/pdf/2006/index2006_chapter3.pdf  இதை புரிந்து கொள்ள கடந்த காலத்தில், 1991க்கு முன் இருந்த சூழல் பற்றி அனுபவ அறிவோ அல்லது வாசிப்பனுபவமோ தேவை.

 

நிறுவனங்கள், வணிக அங்காடிகளுக்கு பாதுகாப்பில்லாத பகுதிகளிலும் விளைவுகள் இதே போல் தான். பீகார் போன்ற பகுதிகளில் தொழில் துவங்க பலரும் தயங்குவது இதனால் தான். மாஃபியா போன்ற அமைப்புகள், தீவிரவாதிகள் மாதந்தோரும் 'protection money' (அதாவது மாமுல்) கேட்டும் அச்சுருத்தும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகுவது மிக கடினம். புதிய தொழில்கள் அல்லது முதலீடுகள் உருவாகாவிட்டால், வேலை வாய்புகளும், வரி வசூலும் பெருகாமல், வறுமை தான் அதிகரிக்கும். பீகார், ஒரிஸா, மே.வங்க ஏழை மக்கள் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் வேலை தேடி வரும் அவலம் இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். கங்கை பாயும் செழிப்பான பகுதி, கனிம வளங்கள் அதிகம். ஆனாலும் கடும் வறுமை. வேலை இல்லாத் திண்டாட்டம். காரணம் அங்கு சொத்துகளுக்கு போதிய 'பாதுகாப்பு' இல்லை.

 

சொத்துரிமையின் முக்கியம் பற்றி வேறு விதமாக பார்ப்போம். எழுத்தாளர்கள் மற்றும் படைப்பளிகள் உருவாக்கும் ஆக்கங்களை வணிக ரீதியாக பாதுக்க காபிரைட் சட்டங்கள் உள்ளன். ஆக்கங்களும் ஒரு வகையான சொத்துக்கள் தாம். அவற்றை விற்று பணமாக்க அரசு கொள்கைகள் தடை செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் ? அதாவது அவை பொது உடைமையாக்கப்பட்டு, எழுதாளர்கள், படைப்பளிகளுக்கு மாத சம்பளம் மட்டும் அளிக்கும் ஒரு முறை உருவானால் எப்படி இருக்கும் ?

புதிய ஆக்கங்களை உருவாக ஊக்கம் குறையும். ஒரு துறை பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூலகள் போன்றவற்றிக்கு காபிரைட் பாதுகாப்பு இல்லாமால், பலரும் அதை அப்படியே காபி அடித்து வெளியிட்டாலும், ஊக்கம் குறையும். சினிமா துறையில் அதிக நஸ்டம் வர இந்த வீடியோ பைரசி ஒரு முக்கிய காரணம் என்பதை இங்கு பார்க்க வேண்டும்.

 

இந்தியாவில் சொத்திரிமையின் நிலை மற்றும் சட்ட விதிகளில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றி ஒரு விரிவான சுட்டி : http://www.ccsindia.org/ccsindia/policy/rule/studies/wp0041.pdf

 

சொத்துரிமையை அடிப்படை உரிமையாக (Right to property as a 'Fundamental Right') ஏற்க்கபட்ட நாடுகள் தான் கடந்த நூற்றாண்டில் வறுமை அளவை மிக மிக குறைத்து, முன்னேறிய நாடுகளாக மாறின. சொத்துரிமையை பல விதங்களில் முடக்கிய, வலிமை இல்லாமல் dilute செய்த நாடுகளால் அந்த அளவு முன்னேற முடியாமல், இன்றும் வறுமையில் தத்தளிக்கின்றன. இதை பற்றி மிக விரிவான ஆய்வுகள், தரவுகள் உள்ளன. மிக எளிமையாக இதை புரிந்து கொள்ள, இன்றைய வட கொரியாவையும், தென் கொரியாவையும் ஒப்பிட்டாலே போதும்.

 

மேலும்..