பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.
இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.
ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
உங்கள் வரவு நல்வரவாகுக. பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தவும்.
உங்கள் வரவை குறித்து பதிவு போட்டுள்ளேன்.
http://dondu.blogspot.com/2007/07/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போதுதான் மட்டுறுத்தல் மிக்க அவசியம் தற்காப்புக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
vanga vanga. I got ur blog thru DONDU's blog. Porul-nu sonnathum etho panaththai patrithaan sollarporeengalonnu ninaichen.
அதியமான்
வேறு மாற்று வழிகள் செய்யப்படவேண்டும்,அதுவும் சென்னை புறநகர் பேருந்துகளில் கூட்டம் சொல்லி மாளாது.
சாலையில் இரு சக்கர மற்றும் கார்களினால் ஏற்படும் சுகாதாரக்கேடு தாய்லாந்து- பேங்காக் அளவுக்கு போன பிறகு செய்தால் தான் சிலருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.அதற்காக காத்திருக்கிறார்களோ என்னவோ?
அதியமான் வாங்க.
ஆனா இந்த மாதிரியா வெய்ட்டான (weight) விஷயங்கள இப்பல்லாம் வலைப்பூ உலகத்துல பெரும்பாலோர் படிக்கறதில்லைங்க.
ஆரம்பத்துல கொஞ்சம் லைட்டான விஷயங்கள எழுதுங்க..இல்லன்னா சர்ச்சைக்குரிய விஷயத்த பத்தி எழுதுங்க..
உங்களுடைய வலைப்பூ பிரவேசம் இனிதே அமைய வாழ்த்துக்கள்..
TBR Sir,
Thank you very much.
anbudan
Athiyaman
அதியமான்.. ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்கீங்க.. டோண்டு கூட்டிட்டு வந்திருக்காருல்ல.. அதான்.. எப்படியாகினும் தங்களது வருகைக்கு வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்.. ஆனா சூதானம் வேணும் தம்பி... ஏன்னா டோண்டு கூடவே இருக்காரு.. இந்த கமெண்ட்டை allow பண்ணிட்டு கையோட கூடவே அனானி கமெண்ட்டுகளை தடை பண்ணிருங்க. அப்பத்தான் ராத்திரி நீங்க நிம்மதியா தூங்க முடியும்..
மாற்றுக்கருத்துக்களை வரவேற்பவன் என்ற முறையில் உங்களை வரவேற்கிறேன்.என்னையும் சும்மா இருக்காமல் டோண்டு சார்தான் தமிழில்எழுதச் சொல்லி அழைத்து வந்தார்... அதற்காக அவர் நிச்சயம் சந்தோசப் படுவாரா வருந்துகிறாரா என்று எனக்கு தெரியவில்லை! lol! All the best!
வருக, வருக.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு சோசியலிசப் பித்து தலை முதல் கால் வரை எக்குத்தப்பாக இருக்கிறது. இந்தப்பித்தம் தெளிய ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் உங்கள் வலைப்பதிவில் பார்த்தமையால் சந்தோஷம் அடைகிறென்.
The road to serfdom by FA Hayek என்ற புத்தகம் கிடைத்தால் அதிலிருந்து சில பதிவுகள் எழுதுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
barbarindians.blogspot.com
acorn.nationalinterest.in
realitycheck.wordpress.com
போன்ற வலைப்பதிவாளர்கள் ஆங்கிலத்தில் இந்திய அறிவுசீவிகளின் சோசியலிசப் பித்தை தெளியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி,
வஜ்ரா.
வாழ்த்தி, வரவேற்ற் அனைவருக்கும் மிக்க நன்றி.
நண்பர் மா.சிவக்குமார் அவர்களுக்கு மிகவும் நன்றி கடமைபட்டுளேன். அவரது உதவியினால் இந்த இடுகை சாத்தியமானது. டோண்டு அய்யாவின் முன்மொழிதலுக்கு நன்றி.
வாங்க செல்லா,
மாற்றுக்கருத்துக்கள் factual, logical and pertinent ஆக இருந்தால் நலம்.
வாங்க வஜ்ரா,
அந்த புத்தகம் என்னிடம் உள்ளது. எழுதுகிறேன்.
அன்புடன்
அதியமான்
வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன் அதியமான். தொடர்ந்து தரமான பதிவுகளை எழுத விரும்புகிறேன்.
உங்கள் கருத்துக்கள் ஓரளவு நியாயமாகத்தான் படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த விஷயத்தில் இன்னும் ஆழ்ந்து யோசித்து கருத்து சொல்லுமளவிற்கு எனக்கு விஷய ஞானம் குறைவு.
please do not follow joseph's advice.it's enough if 2 or 3 persons read your blog.your articles are useful.keep the same track.there are 100's of dirty writers in thamizhmanam who use filthy language and and use the web to insult others and fight.it's very rare to find decent blogs.my humble request is try to post useful articles in decent language
அருமை நண்பர் அதியமான் அவர்களே
இவ்வளவு நாட்கள் எப்படி நான் பார்க்காமல் போனேன் ?ஒவ்வொன்றும் தங்க கிரீடத்தில் வைர கற்கள்.நன்றிகள் பல உரித்தாகுக .நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,விருப்பங்கள்.
உங்கள் பதிவுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன,இன்றைய சமுதாய சூழலுக்கு ஏற்ற சவுக்கடிகள்,நீங்கள் தொடர்ந்து சமூக அவலங்களை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்,உங்கள் பேனா தொடர்ந்து எழுதட்டும்,வந்தே மாதரம்
கார்த்திகேயன்
Post a Comment