புனரபி ஜனனம், புனரபி மரணம்

புனரபி ஜனனம், புனரபி மரணம்

மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை. மிக ஆழமான அர்த்தங்கொண்டது. பார்டிக்கள் இயற்பியல், காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவை இதில் அடங்கும்.

ஐன்ஸ்டினின் பிரபல சம்ன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து
சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி
வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும்,
சக்தி மீண்டும் துகள்களாகவும் சதா மாறிக்கொண்டே
இருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே. ஒவ்வொறு பரோட்டானும் இந்த படைக்கும்-அழிக்கும் நடனம் செய்கிறது.

உலகமே, ஏன் பிரபஞ்சமே இந்த எதிர்-மறைகளால் ஆனதுதான்.

பிறப்பு x இறப்பு
துகள் x சக்தி
யின் x யாங் (Taoism)
இரவு x பகல்
ஆண் x பெண்
இன்பம் x துன்பம்
கம்யுனிசம் x கேப்பிடலிஸ்ம்
ஆத்திகம் x நாத்திகம்
இரக்கம் x குரூரம்
அன்பு x வெறுப்பு
வெற்றி x தோல்வி
வெப்பம் x குளிர்
1 x 0 (binary system)

குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் சொன்னபடி 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.'
டேவிட் போம் என்னும் மற்றொரு விஞ்ஞானி 'பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கும் ஒரு விதமான ஒருமைப்பட்ட உறவு நிலைதான் உண்மை' என்கிறார்.

அரவிந்தர் : 'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின், ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும், காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிபாடு'

ஒப்பன்கைமர் : 'உலகம் என்பது பற்பல சம்பவங்களின் ஒன்று சேர்ந்த ஒரு முழுமையின் வடிவம்தான்.'

இந்த உண்மையைதான் பிரம்மம் என்கிறோம்.

'வானும் மண்ணும் காற்று வெளியும் எல்லா உயிர் மூச்சுக்களும் கலந்த ஒருவன்' என்று முனடகோபனிஷத் சொல்வதும் இதைத்தான்.

----------------------------------

நன்றி :

1.'Tao of Physics' by Frijof Capra
2.'ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து' , சுஜாதா.

3 comments:

கீதா சாம்பசிவம் said...

நன்றி, ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்ததுக்கு.

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் இதே விஷயத்தை உங்களிடமிருந்து மின்னஞ்சலாகப் பெற்றேன். இதை பதிவாகப் போடலாம் என ஆயத்தம் செய்து பிளாக்கர் கணக்கை திறந்தேன். பிறகு வ்யூ ப்ளாக் போட்டு அங்கிருந்து தமிழ்மணத்துக்கு வந்தால் உங்களது இப்பதிவு.

வாழ்த்துக்கள்.

அம்ன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

இந்த துகள்களை பற்றி படிக்கும் போது நேற்று "சின்னக்குட்டி" பாலகுமாரன் பற்றிய ஒரு சலனப்படம் போட்டிருந்தார்,அதில் அவர் கடவுளை உணர (காண அல்ல) அவர் குருநாதர் தலையை தடவி முதுகு பக்கம் போய்.... அப்படி போகிறது.அப்போது அவருக்கு ஏற்பட்ட எண்ணம் எல்லாம் துகள்களாகத்தான் இருந்ததாம்.
முடிந்தால் பாருங்கள்.