' தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல்' இவை பற்றிய தெளிவான , சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் 'தாரளமயமாக்கல்' பற்றி புரிந்து கொள்வோம்.
.
சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசியலிச கொள்கைகளின் முக்கிய அம்சம் ' திட்டமிடல்' (centralised planning ) ; அதாவது நாட்டிலுள்ள இயற்கை மற்றும் மனித வளங்களை எவ்வாறு உபயோகப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மட்டுமே 'திட்ட கமிசன்' மூலம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு நேர் எதிரான சித்தாந்தம். பொதுத் துறை நிறுவனங்களுகே முக்கியத்துவம். தனியார்கள் பல முக்கிய துறைகளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்பத்தி) நுழைய தடை. ஏற்கனவே இருக்கும் துறைகளில் தொழிலை விரிவுபடுத்த , குறைக்க பல பல கட்டுப்பாடுகள். உற்பத்தியை பெருக்க தடைகள் பல. இக்கட்டுப்பாடுகளை (controls and licenses) அமல்படுத்த ஒரு மிகப் பலமான , பூதகரமான அரசு எந்திரம் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த எந்திரம் ஊழல் மயமானது. ஒரு தொழிலதிபர் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவ வேண்டுமானால் பல அதிகாரிகளின் தயவும் , 'கருணையும்', அரசியல்வாதிகளின் (பெரும்பாலும் காங்கிரசஸ் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள்) 'ஆதரவும்' தேவையாக இருந்தது. தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வளவே பரவாயில்லை.
.
உதராணமாக கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை. சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும் பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! 'concentration of economic power ' என்ற ஒரு மூடத்தனமான சிந்தனை நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான தட்டுப்பாடுகள் , பதுக்கல் , கள்ளமார்க்கட், லஞ்சம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல் செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 களில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் போன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!
.
Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும் , மிகப்பெரிய அளவில் 'வளரக்கூடாது '. இதற்கான அளவுகோள்கள் 'percentage of market share' அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி , தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.
.
இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். 'பணக்கார்கள்' மீது மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ' செலவு' செய்யவதாக சொல்லப்பட்டது. அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 95 % ஆனது. விளைவு வரி ஏய்ப்பு , கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான விலைவாசி உய்ர்வும் , வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.
.
1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி , சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.
.
விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி , மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமே அன்னிய செலவாணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.
.
இந்த 'தாரளமயமாக்கலை' செய்யாமல் இருந்திருதால், இன்னேரம் நாடே திவாலாகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னும் அதிகரித்திருக்கும்...
15 comments:
அதியமான்,
நல்ல பதிவு. பலருக்கு தெரியாத விசயங்களை வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
நன்றி!
நல்ல வேளையாக சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி ஆகியவை அழிந்தனவோ, நமது அரசுக்கும் சிறிது பயம் வந்ததோ. அதே சமயம் அம்மாதிரி உலக வரைபடத்திலிருந்தே மறைந்த அந்த நாட்டு மக்களும் பரிதாபத்துக்குரியவர்களே.
இவ்வளவு ஆகியும் கம்யூனிசத்தை பிடித்து தொங்கி இங்கே இந்தியாவில் குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவர்களை என்னவென்று சொல்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்களது இந்த பதிவினை anticommies பதிவில் பதிந்து வைக்கலாமா?
நன்றி
கலர மாற்றுங்க; படிப்பது கஷ்டமா இருக்கு
அதியமான்
பஜாஜ் நிறுவனம் இந்த கன்ட்ரோல் ராஜ்ஜியத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நிறுவனம்.1960,70களில் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் பயங்கர டிமாண்ட்.அந்த சமயத்தில் ஸ்கூட்டரை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் பஜாஜ் தான்.சுமார் 20 வருஷம் ஸ்கூட்டருக்கான கோட்டாவை காங்கிரஸ் அரசு உயர்த்தவே இல்லை.அதனால் பஜாஜ் ஸ்கூட்டர் வாங்க வருடக்கணக்கில் பணம் கட்டி வெயிட் செய்ய வேண்டிய நிலை.
பஜாஜ் நிறுவனம் பல வருஷமாக கேட்டும் ஸ்கூட்டர் கோட்டாவை இந்திரா காந்தி உயர்த்தவில்லை.காந்தி குடும்பத்தினரும் பஜாஜ் குடும்பத்தினரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள்.ராகுல் பஜாஜின் பெயரைத்தான் ராகுல்காந்திக்கு வைத்தார்கள் என்பார்கள்.பிறகு பஜாஜ் குடும்பம் ஜனதா கட்சியுடன் நெருங்கியது.1977ல் காங்கிரஸ் அரசு வீழ்ந்தபிறகுதான் ஸ்கூட்டர் கோட்டாவை உயர்த்த ஜனதா அரசு அனுமதித்தது.
பஜாஜின் கனவு கார் கம்பனி துவக்க வேண்டும் என்பது.அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.சஞ்சய்காந்தி மாருதி உத்யோக்கை துவக்க இருந்தது தான் காரணம் என்கிறார்கள்.
நன்றி நண்பர்களே.
தமிழ்மணி, உங்கள் ப்ளாகில் இப்பதிவை (எனது மற்ற எந்த பதிவையும் கூட) சேர்துக்கொள்ள மகிழ்வுடன் இசைகிறேன்..
சிவஞானம்ஜி அவர்களே, கலர மாத்தி விட்டேன் !
செல்வன், இந்த பெர்மிட், கன்ட்ரோல் ராஜியத்தைப் பற்றி ஒரு விரிவான
பதிவிட வேண்டுகிறேன், புள்ளி விவரங்களுடன். ஹரி நந்தா (1917 டு 1996) (எஸ்கார்ட்ஸ் நிறுவனர்) அவர்களின் சுயசரிதை மிகவும் அருமையான ஒரு நூல்.
மேலும் பல அரிய தகவல்கள் அதில் கிடைக்கின்றன...
Recently Mr.Jagdish Khattar Ex-chairman of Maruti Suzuki told in a interview... Before the automobile industry was liberlised, Maruti was earning more income from car bookings deposit than from actual sale of its cars.
The interest they earned on car bookings were higher than their sales income.
shows how bad the situation was for the public.
//தங்களது இந்த பதிவினை anticommies பதிவில் பதிந்து வைக்கலாமா?//
தமிழ்: Please also add a tag Pro-People to it.
நான் கொஞ்சம் லேட். நல்ல உபயோகமான பதிவு. அடிக்கடி எழுதுங்கள்.
அய்யா நீங்கள் என்ன வெளிநாட்டுகாரர்களின் கை கூலியா
முட்டாள் தனமான உங்கள் மேலோட்ட சிந்தனை விடுத்து அறிவியல் துனைக்கொண்டு பல கோணத்தில் சிந்தித்து பாருப்பா.தற்காலிக மாற்றம் என்றைக்குமே அழிவையும் வருமையும் தான் கொடுத்து இருக்கு.நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதற்காக மற்றவர்களும் அப்படிதான் என்று நினைத்து கொள்ளாதே.
சிமின்ட் பற்றியே பேசுவோம். தாராளமயமாக்கல் ஆன பின்பும் விலை உயர்வு ஏன்? அரசாங்கம் என்ன செய்துகொண்டு இருக்கிறது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படாமல் உள்ளதே? தாராளமயமாக்கல் வந்தும் பிரயோஜனம் இல்லை! எதனால்? தனி மனிதன் ஒவ்வொருவரும் திருந்தவேன்டும். அப்பொழுது தான் சுபிட்சம் கிட்டும்.
தனிமனிதன் என்றால்?
நான், நீ, ஆசிரியர்,பெற்றோர்,பொது மக்கள், நிறுவனங்கள்,வங்கிகள்,ஊழியர்கள் என அனைவரும் திருந்துவது எப்போது? அரசு அதிகாரிகள்,அரசியல் தலைவர்களை யார் திருத்துவது?
//அய்யா நீங்கள் என்ன வெளிநாட்டுகாரர்களின் கை கூலியா
முட்டாள் தனமான உங்கள் மேலோட்ட சிந்தனை விடுத்து அறிவியல் துனைக்கொண்டு பல கோணத்தில் சிந்தித்து பாருப்பா.தற்காலிக மாற்றம் என்றைக்குமே அழிவையும் வருமையும் தான் கொடுத்து இருக்கு.நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதற்காக மற்றவர்களும் அப்படிதான் என்று நினைத்து கொள்ளாதே.//
நீ என்ன ஜோசியரா வேல பாக்குறியா?
உனது பினூட்டம் படிச்சா ராசி பலன் படிக்கிற மாதிரி இருக்கு.
///நீ என்ன ஜோசியரா வேல பாக்குறியா?
உனது பினூட்டம் படிச்சா ராசி பலன் படிக்கிற மாதிரி இருக்கு///
Annoy,
Why annoy vesaham ?
only people like u may feel that all these are like raasi palan.
மின்தமிழ் கூகிள் குழுமத்தில் இந்தச்சுட்டியைக் கொடுத்து நீங்கள் எழுதியிருந்த குறிப்பிற்குப் பதில் அங்கே எழுதியது, இங்கேயும்:
திரு அதியமான்!
உங்கள் சுட்டியில் இருக்கும் பதிவில் (செல்வன் பின்னூட்டத்தில் சொன்னபடி), தாராளமயமாக்கல் என்று வந்த பிறகு கூட பஜாஜ் நிறுவனத்திற்குக் கார் தயாரிக்க லைசன்ஸ் வழங்கப்படவில்லை. தாராளமயமாக்கல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தத்தில் நீங்கள் பொருள் கொள்கிறீர்களோ எனக்குத் தெரியாது, ஆனால் அது சர்வ ரோகநிவாரணி கிடையாது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
நீங்கள் உண்மை என்ன என்பதைப் பக்கச் சார்பெடுக்காமல் பார்க்கத் தவறினாலும் கூட, சீனாவில் டெங் சியாவோ பிங்கும் அப்புறம் ஆட்சிக்கு வந்தவர்களும் கடந்த முப்பதாண்டுகளில் சாதிக்க முடிந்ததை இந்தியாவில் இந்த அறுபத்துமூன்றாண்டுகளில் ஏன் சாதிக்க முடியவில்லை?
நீங்கள் உயர்த்திப்பிடிக்கிற சுதந்திரப் பொருளாதாரம் ஐரோப்பிய யூனியனில் ஏன் வேலை செய்யவில்லை?
ஒரு திறமையான அரசு, நல்ல தலைவர்கள், வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழலற்ற அரசியல் இவை ஒன்று சேர்ந்தால் எந்த இசத்திலும் கூட வளர்ச்சி இருக்கும்!
------------------------------
'இசங்களைத் தூக்கிப் பிடிப்பதில் இல்லை கோளாறு!
இலவசங்களில் மயங்கிக் கிடப்பதில் அது தொடங்குகிறது.
கிருஷ்ணமூர்த்தி
Nice ...
was useful
Post a Comment