பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

சுதந்திர‌ம் அடைவ‌த‌ற்க்கு முன் இந்திய‌வில் பொது துறை நிறுவ‌ன‌ங்க‌ளே இல்லை.
ரயில் போக்குவ‌ர‌த்து, மின் வின‌யோகம், வங்கி, இன்ஸுரனஸ்
கூட‌ த‌னியார் வ‌ச‌ம்தான். அப்போது ஊழல், திருட்டு இந்த
அளவு இல்லை, இது போன்ற நிறுவனங்களில் கூட.
நன்றாகவே நடந்தன.

நேரு, சோசியலிச பாணி கொள்கைகளை முன்மொழிந்து ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்
பொது துறை நிறுவனங்கள் உருவாக வழி வகுத்தார். 50களில் பெரும் செலவில் பல
துறைகளில் அவை உருவாக்கப்பட்டன. அரசி முதலீடு
செய்ய கடன் வாங்கி /நோட்டடிதே செயல் பட்டது. மேலும் வரிவிகுதங்களை மிக
மைக அதிகமக்கியது. அதன் மூலம்
பண வீக்கம் மிக அதிகமாகி விலைவாசி விசம் போல் உயர்த்தொடங்கியது.

சரி, அத்தனை செலவு செய்து உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின்
வரல்லறை இன்கு பார்ப்போம்.

இரும்பு உருக்காலைக‌ள் அப்போது டாடா நிறுவ‌ன‌ம் ம‌ட்டும் ந‌ட‌த்திய‌து.
அமெரிக்க‌ க‌ம்பெனிக‌ள் 50க‌ளில் இந்தியாவில் புதிய‌ உருக்காலைக‌ள்
துவ‌ங்க‌ ஆர்வ‌ம் காட்டின‌. அந்நிய‌ முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப‌ட‌வே
இல்லை. இந்திய‌ர் தொழில் முனைவோர்க‌ளும் புதிதாக் ஆர‌ம்பிக்க
அனும‌திக்க‌ப‌ட‌வில்லை. (இன்ரு நேர் எதிர்). அர‌சே க‌ன‌ர‌க‌ தொழில்க‌ளை
துவ‌க்க‌ முற்ப‌ட்ட‌து, மிக‌ அதிக‌ செல‌வில்.

துர்காபூர், ரூர்க்கி, பிலாய் போன்ற‌ இட‌ங்க‌ளில் ர‌ஸ்ஸிய‌ உத‌வியுட‌ன்
இரும்பு உருக்கு ஆலைக‌ள் ஆர‌மிப்க்க‌ ப‌ட்ட‌ன‌. ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌டும்
சிக்க‌ல்க‌ள். ந‌ஸ்ட‌ம். ப‌ற்றாக்குறை.
அங்கு வேலை பார்ப‌வ‌ர்க‌ளும் அர‌சு ஊழிய‌ர்க‌ளாக‌ அனாத‌ல் அவ‌ர்க‌ளிட‌ம்
நேர்மையான‌ வேலை செய்யும் ம‌னோபாவ‌ம்
மிக‌ குறைவாக‌ இருந்த‌து.

மிக் முக்கிய‌மாக‌, நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு உய‌ர் அதிகாரிக‌ளால்
தான் மேலாண்மை செய்ய‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர்க‌ள் ம‌த்திய‌ அமைச்ச‌ர்க‌ளுக்கு
கீழ் இருந்த‌ன‌ர். அதாவ‌து ஆளும்
காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர்க‌ள், அமைச்ச‌ர்க‌ள், அரசு உயர் அதிகாரிக‌ள் :
இவ‌ர்க‌ளின் முழு க‌ட்டுப்பாட்டில் இய‌ங்கிய‌து. எத்த‌னை தூர‌ம் நேர்மை,
ந‌டுவு நிலைமை, professionalisim,
சிக்க‌ன‌ம், இருந்திருக்கும் என்று க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள்.

போட்டிகள் கிடையாது, லாபம் எனப்து கெட்ட வார்த்தை.
இறக்குமதி மூலமும் போட்டிகள் கிடையாது. ஏனேனில் இறக்குமதி
செய்ய அன்னியல் செலவாணியே இல்லை. அரசிக்கு தட்டுபாடு.
இறக்குமதி லைசென்ஸ்கள் அளிப்பதில் கடும் ஊழல், அரசியல்
மற்றும் கள்ள சந்தை. இப்போது புரிந்து கொள்ள மிகவும்
கஸ்டம்.

அதாவது ஒரு நிறுவனம் ஒரு கனரக எந்திரங்கள் அல்லது உதிரி
பாகங்கள் வெளினாட்டில் இருந்து இன்று சர்வ சாதாரணமாக
இறக்குமதி செய்ய முடிகிறது. அன்று பகல் கனவு.
சுங்க வரிகளும் மிக மிக மிக அதிகம். 200 சதவீதம் எல்லாம்
இருந்தன.

அதனால் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் உறபத்தியை
மட்டுமே பல துறைகளில் நம்ப வேண்டிய நிலை.
இருந்த சில தனியார்களும் உற்பத்தியை பெருக்க தடை,
கடும் கட்டுப்பாடுகள்.

இரும்பு, சிமென்ட், உரம், கம்ரெஸ்ரர்கள், என்று பல முக்கிய‌
பொருட்க‌ளில் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளே ஏக‌ போக‌மாக‌ திக‌ழ்ந்த‌ன‌.

ஏர் இந்தியா பற்றி பார்ப்போம். 1930களில் சிறிய அளவில் ஜே.ஆர்.டி டாடா
அவர்களால் கடும் முயற்சிகளுக்கு பிறகு ஆரபிக்கப்பட்டது. அவரின் திறமையான‌
மேலாண்மையினல் படிப்படியாக வளர்ந்தது. 1950களில் சோசியலிச பாணி அரசால்
'தேசியமயமாக்க' பட்டது. அதாவது ஜே.ஆர்.டி அவர்களிடம் இருந்து
பிடுங்கப்பட்டது.திருடப்பட்டது என்றும் சொல்லாம். ஆனால் செய்தது மக்கள்
அரசாச்சே.

அதன் பின் ஆரபித்தது சீரழிவு. ஒரு விமான போக்குவரத்து துறை இரு மத்திய
அமைச்சரின் கீழ் உருவானது. (இப்படித்தான் தேவை இல்லா புதிய அமைச்சர்
பதவிகள், அதிகாரி பதவிகள், பல் கோடி வெட்டிச் செலவுகள் ஆண்டு தோறும் ;
அதை விட கொடுமை இவர்கள் மிரட்டி வாங்கும் லஞ்சம், கட்டுபாடுகள் ; வேறு
பல‌ நாடுகளில் இது போன்ற அமைச்சர்கள் கிடையாது. தேவையும் இல்லை) விமானம்
வாங்குவதில் இருந்து, உதிரிப்பாகங்கள் வாங்குவது வரை, பராமரிப்பு
காண்ட்ராக்ட், ஆள் எடுப்பது போன்ற அனைத்து 'துறை' களிலும் லஞ்சம், ஊழல்,
கொள்ளை. இன்றும் தொடர்கிறது. பல வருடங்கள் நஸ்டம். மேலும் நஸ்டம்.
இந்த நஸ்டங்களை ஈடு செய்ய மத்திய அரசு, வரி பணத்தை வாரி இறைக்கும் கொடுமை.

சரியான நேரத்தில் பயணம் ஆரம்பிப்பது அரிது. பயணிகள் நலம் பற்றி கண்டு
கொள்ளாத திமிர் பிடித்த ஊழியர்கள். (அவர்கள் தாம் அரசு ஊழியர்களயிற்றே.
என்ன தவறு செய்தாலும் வேலை போகாதே). இதர தனியார் / வெளினாட்டு
விமானங்களில் பயணித்தவர்களுக்கு இந்த வித்தியாசம் உடனே தெரியும்.

நன்கு, திறமையாக நிர்வாகிக்கப்பட்ட ஒரு நிறுவனம், அரசுடைமயாக்கப் பட்டதன்
விளைவு எத்தனை கொடுமையான சீரழிவு. இது போல் பல நிறுவனங்கள்...

இந்தியன் வங்கியின் (Inidan Bank) கதை :

சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் செட்டியார் ஜாதியனரால்
துவக்கப்பட்ட வங்கிகள் பல : இந்தியன் வங்கி, கரூர் வைசியா வங்கி, லக்ஷ்மி
விலாஸ் வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி போன்றவை.

1969இல் 100 கோடி ரூபாய் மதிப்பிற்க்க்கு மேற்பட்ட தனியார் வங்கிகளை
இந்திரா காந்தி 'தேசியமயமக்கினார்' ; ஓட்டு வங்கிகளை பெருக்கவும், தன்னை
ஒரு ஏழை பங்காளன் / உண்மையன சோசியசிஸ்ட் என்று காட்டிக்கொள்ளவும்,
காங்கிரஸில் நடந்த உட்பூசலில் தன்னை மக்கள் செல்வாக்குடன்
வலுவாக்கிக்கவும் இதை கள்ளத்தனமாக அமலாக்கினார். கரூர் வைசியா வங்கி,
லக்ஷ்மி விலாஸ் வங்கி போன்றவை தப்பின ; ஆனால் இந்தியன் வங்கி மாட்டியது.

1969 வரை இந்தியன் வங்கி நேர்மையாகவும், திறம்படவும் நிர்வாகம் செய்யப்
பட்டது. நஸ்டம் மற்றும் வராக்கடன் மிக குறைவு. அரசுடமையக்கப்பட்ட பின்
ஆரமத்தது சனி. நிதி அமைச்சரகத்திற்க்கு கீழ் நேரடி கட்டுப்பாட்டில்
வந்தது. வங்கி உயர் அதிகாரிகள் 'முன்னேற' அரசியல்வாதிகள் மற்றும் அரசு
உயர் அதிகாரிகளின் 'தயவு' தேவை பட்டது.

கடன் வழங்க‌ 'கமிஸன்' வாங்கும் ஊழல் பெரிய அளாவில் ஆரம்பித்தது.
த‌னியார்வ‌ச‌ம் இருக்கும் போதும் ஊழ‌ல் சிறிய‌ அளவில் இருந்திருக்கும்
தான். ஆனால் நிர்வாக‌ம் உட‌னுக்குட‌ன் அவ‌ற்றை விழிப்புண‌ர்வுட‌ன்
க‌ண்கானித்து உட‌ன‌டியாக‌ த‌குந்த‌ மாற்று ந‌ட‌வ‌டிக்கை ம‌ற்றும்
தண்ட‌னைக‌ள் க‌ன்டிப்புட‌ன் செய்வ‌ர். ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில்
சொல்ல‌வேண்டிய‌ பொறுப்பு எப்போதுமே தனியா‌ர் நிர்வாகிக‌ளுக்கு மிக‌ மிக‌
அதிக‌ம். ஆனால் அர‌சுடைமையாக்க‌ப் ப‌ட்ட‌ பிற‌கு அனைத்து ப‌ங்குக‌ளும்
அர‌சிட‌ம்தான். அர‌சு என்றால் அதிகாரிக‌ளும், அமைச்ச‌ர்க‌ளும் தான்.
யாருக்கும் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ 'பொறுப்பு' இல்லையே. ந‌ஸ்ட‌ம்
ஆனாலும், சீர‌ழிந்தாலும் பொதுப்ப‌ண‌ம் தானே என்ற‌ அல‌ட்சிய‌ம் ம‌ற்றும்
பொறுப்பின்மை அனைத்து அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளுக்குமே பொது.

90க‌ளில் நிலைமை ப‌டுமோச‌மான‌து. வ‌ங்கிச் சேர்ம‌னாக‌ கோப‌ல‌க்கிருஷ்ண‌ன்
நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். ப‌ல‌ருக்கும் ச‌க‌ட்டுமேனிக்கு வாரி வ‌ழ‌ங்கினார்.
மூப்பானாரின் சிபாரிசுக‌ள் அதிக‌ம். ப‌ல‌ அயோக்கிய‌ர்க‌ளுக்கு
அநியாயமா‌க‌, அனைத்து விதி முறைக‌ளையும் மீறி க‌ட‌ன்க‌ள்
வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் வ‌ங்கி திவால் நிலைமையை அடைந்த‌து.
கோபாலக்கிருஷ்ணன் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அர‌சு வேறு வ‌ழியில்லாம‌ல் 2000 கோடி வ‌ரை புதிய‌ முத‌லீடுக‌ளை
வ‌ங்கிக்குள் செலுத்தி வ‌ங்கியின் நிலைமையை ச‌ரி செய்த‌து. இந்த‌ 2000
கோடிக‌ள் ம‌க்க‌ளின் வரிப்ப‌ணாம். ப‌ல‌ முக்கிய‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளுக்கு
செலவு செய்ய வேண்டிய‌ ம‌க்க‌ள் ப‌ண‌ம் இப்ப‌டி 'கொள்ளை' போன‌து.

ஆனால் த‌னியார் வ‌ச‌மே தொட‌ரும் க‌ரூர் வைசியா வ‌ங்கி போன்றவை ந‌ன்கு
வ‌ள‌ர்ந்த‌ன‌. இந்திய‌ன் வ‌ங்கிக்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே அர்.பி.அய்
விதிமுறைக‌ள், க‌ட்டுப்பாடுக‌ள் தாம் அவைக்கும். ஆனால் திற‌ம்ப‌ட‌,
நேர்மையான்‌ நிர்வாக‌ம் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை அளிக்கின்ற‌து இன்ற‌ளவும்.
அங்கும் வ‌ராக்க‌ட‌ன்க‌ள், ந‌ஸ்ட‌ம் அவ்வ‌போது ஏற்ப‌டும். ஆனால்
திற‌மையாக் ச‌மாளிக்க‌ ப‌டும்.

60,000 கோடிக‌ளுக்கு மேல் அர்சு வங்கிக‌ளில் வ‌ராக்க‌ட‌ன். அவ‌ற்றை
வாங்கிய‌ தொழில‌திப‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டும் என்று
அனைவ‌ரும் (முக்கிய‌மாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ள்) வ‌லியுறுத்துவ‌து ச‌ரிதான்.
ஆனால் அவை த‌னியார் வ‌ங்கிக‌ளில் ஏன் அந்த‌ அளவு வ‌ராக்க்ட‌ன் ம‌ற்றும்
ஊழ‌ல் இல்லை என்ப‌தை விள‌க்க‌ வேண்டும்.

க்ளோப‌ல் ட‌ர‌ஸ்ட் வ‌ங்கி என்னும் புதிய‌ த‌னிய‌ர் வ‌ங்கி ப‌ல‌
த‌வ‌றுக‌ள் புரிந்து திவாலான‌து உண்மைதான். ஆனால் அதை ஈடு செய்ய‌ அர‌சின்
பொது ப‌ண‌ம் செல‌விட‌ப்ப்ட‌வில்லை. அந்த‌ வ‌ங்கி வேறு ஒரு ப‌ல‌மான‌
வ‌ங்கியுட‌ன் அய்க்கியப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் ப‌ங்குதார்க‌ள்தான்
ந‌ஸ்ட‌த்தை ஏற்ற‌ன‌ர். அர‌சு அல்ல். இது தான் முக்கிய‌ வித்தியாச‌ம்.

ஜென்ரல் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களான் GIC : National, Oriental, United
India, New India Assurance ; நான்கும் 50களில் தேசியமயமாக்கப்பட்டன.
அத‌ன் பிற‌கு அதில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் ம‌ற்றும் கூட்டுக் கொள்ளைக‌ள்
ப‌ற்றி த‌னியாக‌ க‌ட்டுரை எழுத‌லாம். வாகன‌ இன்ஸுர‌ன்ஸ், அதாவ‌து வாக‌ன‌
விப‌த்து காப்பீடுக‌ளில் ந‌ட‌ப்ப‌து ஒரு கூட்டுக்கொள்ளை. காப்பீட்டு
நிறுவ‌ன‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர், நீதிப‌தி, போலிஸார்,
விப‌த்தில் ப‌லியான‌ / அடிப‌ட்ட‌வ‌ரின் உற‌வின‌ர் ம‌ற்றும் அவ‌ரின்
வ‌ழ‌க்க‌றிஞ‌ர் அனைவ‌ரும் 'சேர்ந்து' காப்பீட்டு நிறுவ‌ன‌த்தை
கொள்ளை/சுரண்ட‌ல் செய்கின்ற‌ன‌ர். காப்பீட்டு நிறுவ‌ன‌ அதிகாரிக‌ளும்
வ‌ழ‌க்கு ப‌ற்றி க‌ண்டு கொள்ள மாட்ட‌ர்க‌ள். போலி வ‌ழ‌க்குக‌ள், போலி
'முத‌ல் த‌க‌வ‌ல் அறிக்கைக‌ள்' போலி ஆவ‌ண‌ங்க‌ள் என்று ஒரு முறையே
உருவாகியுள்ளது. ச‌மீப‌த்தில் நாம‌க்க‌ல், க‌ரூர் ப‌குதி தேசிய‌
இன்ஸுர‌ன்ஸ் நிறுவ‌ன‌ ஊழ‌ல்க‌ளை விசாரிக்க‌ சி.பி.ஐ வ‌ந்த‌து ஞாப‌க‌ம்
இருக்க‌லாம்.

த‌னியார் இன்ஸுர‌ன்ச் நிறுவ‌ன‌ங்க‌ள் வாக‌ன‌ இழ‌ப்பீடு விசிய‌ங்க‌ளில்
ஏமாறுவ‌தில்லை. நிர்வாகிக‌ள் ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌
க‌ட்டாய‌ம் ; அத‌ன் வ‌ழ‌க்கறிஞ‌ர்கள், தோற்க்கும் வ‌ழ‌க்குக‌ளுக்கு
த‌குந்த‌ ப‌தில் சொல்ல‌ வேண்டும். இதெல்லாம் அர‌சு நிறுவ‌ன‌ங‌க‌ளில்
கிடையாது. அத‌னால் தான் பிரிமிய‌த் தொகை அதிக‌மாக்க‌ வேண்டிய‌ நிலை.
சுர‌ண்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ணத்தை வாடிக்கையாளார்க‌ளிட‌ம் இருந்து வ‌சூல் செய்து
ச‌ரிக‌ட்டும் அவல‌ம்.

நிலகரி சுரங்கங்கள் சுதந்திரத்திற்க்கு முன் தனியார் வசம் தான் இருந்தன.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சர் மோகன்
குமாரமங்கலமின் வழிகாட்டுதலில், அவரின் கீழ் பணி புரிந்த ஒரு உயர்
அதிகாரி தேசியமயமாக்கலை வழினடத்தினார். 25 ஆண்டுகள் கழித்து அந்த அதிகாரி
அதற்க்காக மிகவும் வருத்தப்பட்டு, நொந்து போய் எழுதிதியிருந்தார். எந்த
நோக்கத்திற்க்காக நிலக்கரி சுரங்கங்கள் அரசுடைமையாக்கப்பட்ட‌னவோ,
அதற்க்கு நேர் எதிரான விளைவுகளே நடந்தன. நிலக்கரி மாஃபியா என்னும்
கிரிமினல் குழுக்கள் பீகார் பகுதிகளில் புதிதாக தோன்றி இன்று
கான்ட்ராக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மிரட்டல், பணம் பறிப்பு,
கடத்தல் மற்றும் ஊழல் அதிகாரிகள்/அமைச்சர்களோடு 'கூட்டு சேர்ந்து' கொள்ளை
போன்ற கொடுமைகளில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றன. அவர்களாஇ மீறி அங்கு
யாரும் நிலகாரியை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல முடியாது. மேலும் ஒரு
புத்தகமே இதை பற்றி எழுதலாம்...

http://www.india-seminar.com/2001/502/502%20suhel%

////Corporate corruption in India can easily be classified into two parts:
corruption by PSUs (public sector units) and that by the private
sector. The analysis in many parts will be common, but suffice to say
that it is the PSUs which even today practise it with aplomb. Every
PSU gives way when it comes to accountability. While institutions such
as the Unit Trust of India have come in for heavy criticism because of
the parameters they have used to disburse loans, the picture is no
different in most PSUs which remain the fountainhead of all white
collar corruption.

No amount of vigilance activities or the fulminations of the CVC have
been able to curb their wanton expenditure. From private visits in
some steel plant's planes to quota disbursals, especially in the Coal
Indias of the world, we have seen it all. It is the PSU that still
supports the errant ways of bureaucrats and ministers in its
supervising ministries which is why corruption cannot be snuffed out –
it travels right to the top. India is the only country which sees
battles within the Prime Minister's Office to appoint chairmen of
nationalized banks or functionaries to some important financial
institutions.

Corruption at the PSU is manifested in several ways; it ranges from
the empanelment of suppliers to the selection of employees. In fact,
some of the biggest scams are in the area of recruitment for these
PSUs. The tack that most PSUs employ is to create artificial
employment, which in the ultimate analysis is harmful to shareholder
interest. However, since the largest (if not the only) shareholder in
almost all these PSUs is the government, accountability is the least
important of issues! The other facet of corporate corruption is what I
call the 'constituency nurturing' syndrome. A careful observation will
show that many ministers make it a point to extract all they can in
the form of cash or kind in order to benefit their constituency. Now
if this isn't corruption, then what is?

Would this happen if things were transparent? It is galling that
despite severe strictures, even from the Supreme Court in many
instances, we see flagrant violations in appointments to these
high-powered posts. We have put in place a system which breeds
corruption at all levels: whether it is the lowly excise inspector to
the Chairman of the Customs Board (who was recently arrested),
corruption has permeated every aspect of Indian existence and it is
not getting any better! ////

15 comments:

Anonymous said...

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துற ஆளா நீ?

K.R.அதியமான் said...

எது மூட்டைபூச்சி, எது வீடு என்று விளக்கவில்லையே ?

அது சரி ஏன் அனானி ஆப்சன் ? பயமா ?

இந்த பதிவில் உள்ள விவரங்கள் பற்றி ஆதாரத்திடன் மறுக்கவும் ;
முடிந்தால் மாற்று வழி கூறவும்.

DHANS said...

மிக நல்லபதிவு வாழ்த்துக்கள்,
தமிழகத்தில் போக்குவரத்து துறை, இப்போது சில கழகங்களில் சம்பளம் குடுக்க கூட காசு இல்லை, தொழிலாளிகளுக்கு கடந்த மாதம் பத்து நாட்கள் கழித்து சம்பளம் தந்துள்ளனர், அதிகாரிகளுக்கு பதினைந்து நாட்கள் கழித்து :(

Unknown said...

அதியமான்,

நல்ல பதிவு.

நமது அரசுகள் முன்பு (இப்போதும்) புகுந்த துறைகளை கேட்டாலே நமக்கு எரிச்சல் வரும்.

ரொட்டி தயாரிப்பது (மாடர்ன் பிரட்ஸ்)
ஓட்டல் (அசோகா ஓட்டல்)
சினிமா தயாரிப்பது (என்.டி.ஃஎப்.சி)
தொலைகாட்சி (தூரதர்சன்)
டீக்கடை (தமிழ்நாடு ஓட்டல்)
சிமெண்டு தயாரிப்பது (அரசு சிமெண்ட்)
கார் தயாரிப்பது (மாருதி)
ஸ்கூட்டர் தயாரிப்பது (மகராஷ்ட்ரா ஸ்கூட்டர்)...

நாட்டுக்கு மிகவும் முக்கியமான துறைகள் இவை அனைத்தும் பாருங்கள்...இதில் அரசு இழந்த வரிப்பணத்தில் ஒரு ஐந்தாண்டு திட்டமே போட்டிருக்கலாம்...ஹ்ம்ம்

Anonymous said...

அதியமான்,
socialism,communisn,globalisation,freemarket,பற்றி ஒரு விளக்க பதிவு ஒன்று போடுங்கள்.

Anonymous said...

அதியமான்,
socialism,communisn,globalisation,freemarket,பற்றி ஒரு விளக்க பதிவு ஒன்று போடுங்கள்.

Anonymous said...

Your blog is good. You are doing an excellent analysis. I am yet to go thru all the posts and will make it a point to go through all of them.
Not only were the public sector companies bad for the economy during the dark ages . I can clearly say, even private sector did not do better because of the licencing and regulations. I cant forget the long days of waiting for a dubba Bajaj scooter.
In our pettai people used to have a big feast after they get a phone connection, and it used to be so valuable that, the phone used to be kept in a case with a big lock.
That apart,what is surpricing me is, the government has still not realised the importance of primary education, skill development, efficient utilisation of manpower and other resources like land, water etc, corruption control etc. After all our counrty has produced a lot of economic geniuses.

ரமணா said...

பொதுத்துறை நிறுவனமான பி.ஸ்.என்.எல் செல் சேவை துவக்கும் முன் கொள்ளை லாபம் அடித்த தனியார் கம்பெனிகள்,இப்போது 50 பைக்கும் 60 பைக்கும் கொடுப்பதை மறந்து விட்டீர்களா?


பண்டிகை காலங்களில் ஆம்னிபஸ் கொள்ளைபற்றி என்ன சொல்கிறிர்கள்?

அமெரிக்காவில் தனியார் வங்கிகளை காப்பாற்ற மக்கள் பணம் வாரி இறைக்கப் படுகிறதே?

அமெரிக்கா செய்தால் அதுக்கு "ஓ" போடும் கூட்டம்

இந்தியாவை கடவுள்கூட காப்பாற்ற முடியாது

அமெரிக்க பொருளாதாரம் 2022 ல் தான் சரியாகுமாம்

http://www.horoscoper.net/financial/US-credit-crisis-horoscope.htm






உங்கள் பதில் என்ன?


please read the articles and give your reply.
1.http://jamalantamil.blogspot.com/2008/10/blog-post_19.html
2.http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

Thangavel Manickam said...

அரசு நிர்வாகம் மீண்டும் மறு கட்டமைப்புக்கு உட்படுத்தப் படல் வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பிரச்சினை தீரும். அது அரசியல்வியாதிகள் இருக்கும்வரை நடக்கப்போவது இல்லை. இந்தியாவின் பொருளாதார நிலைமையும் அதோகதியாகி அதன் பின்னர் தான் எவராவது வந்து சரி செய்வர். அதுவரை மக்கள் துன்பப்படப்போகிறார்கள். இந்தியாவின் தலைவிதி இது. வேறேன்ன சொல்ல

புருனோ Bruno said...

அது சரி

அமெரிக்காவில் வாரி வழங்கப்பட்ட 700 பில்லியன் டாலர்
தனியார்மயத்தின் கொள்கைதானா

--

K.R.அதியமான் said...

///புருனோ Bruno said...

அது சரி

அமெரிக்காவில் வாரி வழங்கப்பட்ட 700 பில்லியன் டாலர்
தனியார்மயத்தின் கொள்கைதானா

////

வாங்க டாக்டர் ப்ரூனோ,

அத்தனை சிம்பிள் இல்லை. அது அவர்கள் செய்த முட்டாள்தனத்தை ஈடு செய்ய அரசு அளிக்கும் மான்யம் அல்லது கடன் என்று சொல்லாம். தனியார்மயத்தால் இந்த கேடு விளையவில்லை.

1980களில் இருந்த லைசென்ஸ் கட்டுபாடுகள் மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனகங்களுக்கு அனுமதி வழங்காமல் பி.எஸ்.என்.எல் மட்டும் இன்றும் தொடர்திருந்தால் நாம் சந்திதிருக்க முடியாது ; இந்த உரையாடல் இத்தனை எளிதாக, மலிவாக இன்டெர்னெட்டில் இந்தியாவில் முடிந்திருக்காது. 80கள் வரை ஒரு போன் கனெக்ஸன் வாங்கிய அனுபவம் உண்டா ?

ok.இந்த கடும் நெருக்கடிக்கான அடிப்படை காரணிகளை மிக மிக எளிமையாக, அழகாக, கோர்வையாக விளக்குகிறார் சுவாமினாதன் (நான் படித்தவரையில் இவரை விட தெளிவாக, அருமையாக, சுருக்கமாக யாரும் எழுதவில்லை) :

பொருளாதார வீழ்ச்சி யாரால் ?
Who murdered the financial system?

by Swaminathan S. Anklesaria Aiyar

http://www.swaminomics.org/articles/20081022.htm

Dated: October 22, 2008

Anonymous said...

1950களில் சோசியலிச பாணி அரசால்
'தேசியமயமாக்க' பட்டது. அதாவது ஜே.ஆர்.டி அவர்களிடம் இருந்து
பிடுங்கப்பட்டது.திருடப்பட்டது என்றும் சொல்லாம். ஆனால் செய்தது மக்கள்அரசாச்சே.

||நல்லது இந்த டாடாவுக்கு அப்போது பணம் எனக்கு இருந்து வந்தது? எல்லாம் இந்திய மக்களை ஏமாற்றி
சுரண்டப்பட்ட பணம் என்பது உங்களுக்கு தெரிய வேண்டிய நாயம் இல்லை? இப்போது இந்திய அரசு
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இவர்களுக்கு வரி சலுகை அளித்த தோகை எவ்வல்லவு தெரியுமா?
கடந்த (2007-08)பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அள்ளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் மட்டும் 58,655 கோடி ரூபாய்.

பங்கு நிறுவங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச் சலுகை ரூபாய். 4,000 கோடி.
தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகை ரூபாய். 38,000 கோடி
தொழில் நிறுவங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச்சலுகை ரூபாய். 88,000 கோடி
சுங்க வரி விதிப்பில் கோடுக்கப்பட்ட சலுகை ரூபாய். 1,48,000 கோடி
பெரு முதலாளிகள் இந்திய அரசு வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாமல் மத்திய அரசால் வாராக்கடன் என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய். 44,000 கோடி.

ஆக, மொத்தம் மத்திய அரசால் (2007-0 பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய். 3,80,655 கோடி.

இந்தியாவின் ஓட்டு மொத்த பட்ஜெட்டில் 3,80,655 கோடி தள்ளுபடி என்ற பெயரால் இந்திய மக்களின் வரி பணத்தை முதலாளிக்கு வரி வழங்கும் சிதம்பரம், விவசாயிக்கு 66,000 கோடி (இதுவே ஒரு பிராடு)||

த‌னியார் இன்ஸுர‌ன்ச் நிறுவ‌ன‌ங்க‌ள் வாக‌ன‌ இழ‌ப்பீடு விசிய‌ங்க‌ளில்
ஏமாறுவ‌தில்லை. நிர்வாகிக‌ள் ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் ; அத‌ன் வ‌ழ‌க்கறிஞ‌ர்கள், தோற்க்கும் வ‌ழ‌க்குக‌ளுக்கு த‌குந்த‌ ப‌தில் சொல்ல‌ வேண்டும். இதெல்லாம் அர‌சு நிறுவ‌ன‌ங‌க‌ளில் கிடையாது. அத‌னால் தான் பிரிமிய‌த் தொகை அதிக‌மாக்க‌ வேண்டிய‌ நிலை. சுர‌ண்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ணத்தை வாடிக்கையாளார்க‌ளிட‌ம் இருந்து வ‌சூல் செய்து ச‌ரிக‌ட்டும் அவல‌ம்.

\\என்ன ஒரு பொய் மராஷ்டிர அரசு ICICU வங்கியின் இன்சூரன்ஸ் துறையில் அரசு ஊழியர்களுக்கு Health Insurance எடுத்து இருந்தது
ஆனால், ஒருவருக்கு கூட அது இழப்பிட்டு தரவில்லை. அதனால் அதன் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது.இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதியை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று ஹெச்எஸ்பிசி! ஆனால் இந்த வங்கி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.78,540 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது. இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து காப்பீட்டுத் துறையில் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனம் ஏஐஜி ஆகும். இந்த நிறுவனம் ரூ.84,996 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது.
||

க்ளோப‌ல் ட‌ர‌ஸ்ட் வ‌ங்கி என்னும் புதிய‌ த‌னிய‌ர் வ‌ங்கி ப‌ல‌ த‌வ‌றுக‌ள் புரிந்து திவாலான‌து உண்மைதான். ஆனால் அதை ஈடு செய்ய‌ அர‌சின்
பொது ப‌ண‌ம் செல‌விட‌ப்ப்ட‌வில்லை. அந்த‌ வ‌ங்கி வேறு ஒரு ப‌ல‌மான‌
வ‌ங்கியுட‌ன் அய்க்கியப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் ப‌ங்குதார்க‌ள்தான் ந‌ஸ்ட‌த்தை ஏற்ற‌ன‌ர். அர‌சு அல்ல். இது தான் முக்கிய‌ வித்தியாச‌ம்.

||மீண்டும் பொய் இந்த Golbal Trust வங்கியை அப்போது IDBI என்ற அரசு துறை வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டு அதன்பங்குதாரார்களுக்கும், முதலீடு செய்தவர்களுக்கும் பணம் திருப்பி தரப்பட்டது, ஆனால் அதன் முதலாளி ஒரு பைசா கூட இழக்கவில்லை அவர்க்கு தண்டனை கூட இல்லாமல் ஜாலியாக இருக்கிறார்.

த‌னியார் வ‌ச‌மே தொட‌ரும் க‌ரூர் வைசியா வ‌ங்கி போன்றவை ந‌ன்கு
வ‌ள‌ர்ந்த‌ன‌. இந்திய‌ன் வ‌ங்கிக்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே அர்.பி.அய்
விதிமுறைக‌ள், க‌ட்டுப்பாடுக‌ள் தாம் அவைக்கும். ஆனால் திற‌ம்ப‌ட‌,
நேர்மையான்‌ நிர்வாக‌ம் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை அளிக்கின்ற‌து இன்ற‌ளவும்.அங்கும் வ‌ராக்க‌ட‌ன்க‌ள், ந‌ஸ்ட‌ம் அவ்வ‌போது ஏற்ப‌டும். ஆனால்திற‌மையாக் ச‌மாளிக்க‌ப‌டும்.

|| TmBank ஏன் தீவலாக கூடிய சூழ்நிலை? அமெரிக்க வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை அவைகள் ஏன் தீவால் ஆனது என்பதை வில்லக்க முடியுமா? \\

http://timesofindia.indiatimes.com/UP_govt_files_66_cases_against_Anil_Ambanis_company/articleshow/2759264.cms

MUMBAI: Anil Ambani Group’s Reliance Infratel Ltd appears to be facing maximum problem in Uttar Pradesh, where the government has filed over five dozen cases of property and stamp duty disputes against the company, which is planning an IPO to raise Rs 6,000 crore.

“There have been 66 cases against our company by the Uttar Pradesh government before the Court of Additional Divisional Commission, Additional District Magistrate or the Collector,” said the draft prospectus filed with market regulator SEBI on Monday.

The company has proposed an IPO within days of another group company Reliance Power raising Rs 11,560 crore through a maiden public issue. The issue was oversubscribed 73 times, even as other companies like Emaar and Wockhardt are finding it hard to attract investors.

Most of the cases filed by the UP government against Reliance Infratel pertain to property disputes and payment of stamp duty, the draft red herring prospectus said.

In addition, the company is also facing property related litigations and consumer disputes concerning noise and air pollution in different parts of the country.

The disputes relating to property and pollution assumes significance as the company is primarily engaged in setting up towers for facilitating wireless communication.

According to the draft document, the company proposes to utilise about Rs 4,623.7 crore of the public issue to set up 16,000 passive infrastructure sites for wireless communication.

The company proposes an initial public issue of 8.9 crore equity shares at a face value of Rs 5 each.








மேல்
தள மேலாண்மை
விடு பதிக
இடுகைகளின் RSS.
மறுமொழிகள் RSS
WordPress.com
வகைகள்
அரசியல்
இந்துதுவா

சிதம்பர ரகசியங்கள்
ஜக்கி வாசுதேவ்
டாலர்
பகுக்கப்படாதது
பங்குச்சந்தை
மருத்துவம்
மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்
M.B.B.S
R.S.S

K.R.அதியமான் said...

//||நல்லது இந்த டாடாவுக்கு அப்போது பணம் எனக்கு இருந்து வந்தது? எல்லாம் இந்திய மக்களை ஏமாற்றி
சுரண்டப்பட்ட பணம் என்பது உங்களுக்கு தெரிய வேண்டிய நாயம் இல்லை? இப்போது இந்திய அரசு
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இவர்களுக்கு வரி சலுகை அளித்த தோகை எவ்வல்லவு தெரியுமா?
கடந்த (2007-08)பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அள்ளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் மட்டும் 58,655 கோடி ரூபாய். ///

very very supeficial cliches.
Do you have any idea about creating an business convern or industry ? try reading the biographies of Jamsedji Tata or G.D.Birla. they started with almost nohing and created superlative industries and created wealth, epmployment and tax reveune for the govt and for all of us. the parrot cry of exploitation is simply old cliche.

and tax breaks : they should not be confused with subsidies. can you explain why 'proogressive' taxation of 98 % or so in the 70s was reduced to present 33 % ; you mean this reduction is not a ....../ ?

tax breaks are temporary and meant to stimulate the economy in a backward area. suppose if 98 % tax regime and license raaj continued even after 1991 crisis till date, there wouldn't be any talk of such huge amounts of taxe reveues and breaks.

GTB was absorbed by the govt bank, yes. but GTB shareholders and investors lost their investment, unlike the 2000 crores bailout to Indian Bank bankrupted by your trade union comrades and crony capitalists and political animals like g.K.Moopanar and men like Gopalakrishan. what do say for all that ?

Comrade, you simply do not know what you are talking about...

Anonymous said...

Can you write about the various benefits that the PSU employees enjoy. I think the have 104 sat & sun. 30 days CL, 30 days - Medical , 30 days - earn leave. Then they get gift cheques, uniform, car, etc. Can any one write on this

K.R.அதியமான் said...

Govt approves revival package for Instrumentation Ltd

New Delhi (PTI): The government on Wednesday approved a Rs 652.72-crore revival package for State-run Instrumentation Ltd (IL) based in Kota.

The revival package approved by the Cabinet Committee on Economic Affairs (CCEA) includes cash infusion of Rs 103.36 crore and waiver of government loan and interest, amounting to Rs 504.36 crore, besides a Rs 45-crore government guarantee.

IL was established in 1964 as a fully-owned central pubic service enterprise to cater to automation and control for process industry. The company manufactures and supplies to various industries such as power, steel, fertiliser, chemical, petrochemical, refineries, pharmaceutical, cement and textile.

The company's manufacturing facilities are based at Kota and Palakkad in Kerala. Flow elements, control valve and actuators are manufactured at Palakkad plant and other items are manufactured at Kota plant.

http://www.hindu.com/thehindu/holnus/006200902111685.htm