விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்
நிதியமைச்சர் அறிவித்த இந்திய பட்ஜெட்டின் வரவு செலவின்
சுருக்கம் :
அரசின் வருமானம் : ரூ.6,41,079 கோடிகள்
நிகர செலவு : ரூ.10,20,838 கோடிகள்
பற்றாக்குறை : ரூ.3,79,759 கோடிகள் (அனுமானம்)
அதாவது சுமார் 4 லச்சம் கோடி துண்டு விழுகிறது. பெட்சிட் அல்லது
படுதா என்றும் சொல்லாம். அதை கடன் வாங்கித்தான் ஈடு செய்கிறது
நமது அரசு. மொத்த கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை
வாங்கிய கடன்களுக்கான இந்த வருட வட்டித் தொகை : சுமார் 3,00,000
கோடிகள். மொத்த கடன் எவ்வளவு என்பதை சரியாக கண்டுபிடிக்க
முடியவில்லை. வட்டி தொகையில் இருந்து யூகிக்கலாம்.
அரசு பற்றாக்குறைய கடன் வாங்கியும், நோட்டடித்தும் செலவு
செய்கிறது. அதனால் தான் விலைவாசி கண்டபடி உயர்கிறது. இன்னும்
இரண்டு ஆண்டு கழித்து இந்த பட்ஜெட்டினால் விலைவாசி உயர்வு
ஏற்படும். உடனே தெரியாது. ஆனால் அன்று அதற்கான காரணிகள்
இது போன்ற பட்ஜெட் பற்றாகுறைகள் என்று பொது புத்தியில்
அறியப்படாமல், இதர காரணிகள் மட்டும் விவாதிக்கப்படும். பார்க்க :
விலைவாசி ஏன் உயர்கிறது ?
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
பொருளாதார மந்தத்தை நீக்கவும், நாட்டின் பொருளாதாரம் "வளரவும்"
இது போன்ற பற்றாகுறை பட்ஜெட்டுகள் தேவை என்று ஒரு எண்ண
ஓட்டம் இருக்கிறது. லார்ட் கீயின்ஸ் என்ற பொருளாதார நிபுணரின்
வழிமுறை இது. ஆனால் அவர் சொன்ன பற்றாக்குறை பட்ஜெட் விகுதம்
மிக மிக குறைவானது.இந்தியாவில் மொத்த ஜி.டி.பியில் சுமார் 10 முதல்
12 சதவீத அளவில் மத்திய / மாநில மற்றும் மான்ய பட்ஜெட்டுகளின்
பற்றாகுறை உள்ளது. அது தொடர்ந்து விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி,
விவசாயிகளையும், ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கடும்
துன்பத்திற்க்காளாக்கி, எதிர் மறையான விளைவுகளையே தரும்.
கடனாளியான அரசு, மேலும் பல லச்சம் கோடிகள் கடன் வாங்கி,
பொருளாதாரத்தை மேம்படுத்துவது நடவாத காரியம். வளர்ந்த நாடுகள்
அளவு இந்திய பொருளாதாரம் பாதிக்க பட வில்லை. பொருளாதார
வளர்சி விகுதம் தான் குறைந்து உள்ளது. பற்றாகுறை பட்ஜெட்டுககள்
இல்லாமலேயே, சில ஆண்டுகளில் அது தானாகவே சரியாவிடும்.
ஆனால் கடன் சுமையும், விலைவாசி உயர்வும் அதிகரிக்கும்
பற்றாக்குறை பட்ஜெடுகள் நம் சாபக்கேடுகள்.
மேலும், இந்த ஆண்டு ராணுவச் செலவு : 1,41,703 கோடிகள். சென்ற
ஆண்டை விட சுமார் 36,000 கோடிகள் அதிகம். அக்கிரமமான தண்டச்
செலவு. நமக்கு சிறிதும் கட்டுபடியாகாத வெட்டி வீராப்பு .ஆடப்பரம்.
இது போல் பல துறைகளிலும் வெட்டிச் செலவுகள். அதை குறைக்க
வேண்டும் முதலில்.
இவ்வளவு செலவுகளும் கடன் வாங்கித்தான் செய்கிறோம். கடன் வாங்கி
செலவு செய்தால் எதிர்காலம் என்ன ஆகும் ? தனி மனிதன் இது போல்
கடன் வாங்கினால் என்ன ஆவானோ, அதே தான் அரசிற்க்கு ஏற்படும்
என்பதே அடிப்படை பொருளாதார விதி. அது பலருக்கும் புரிவதில்லை.