'உபரி மதிப்பு என்னும் மாயை'
உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value
தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் 'சரியான மதிப்பை' விட) மிக மிக
குறைவானது, அந்த 'கொடுக்கப்படாத' சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
'சுரண்டப்பட்டு', லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
'போலி' விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.
மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
'மதிப்பு'. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.
உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த 'உபரியை' 'சுரண்டி' லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், 'தொழில்
முனைவோன்' என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :
1.தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?
2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் 'உபரி மதிப்பு' எங்கு சென்றது ?
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?
3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் 'உபரி மதிப்பு'
எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?
மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் 'விஞ்ஞானப்படி' ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் 'சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.
இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று
world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.
மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.