'உபரி மதிப்பு என்னும் மாயை'
உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value
தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் 'சரியான மதிப்பை' விட) மிக மிக
குறைவானது, அந்த 'கொடுக்கப்படாத' சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
'சுரண்டப்பட்டு', லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
'போலி' விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.
மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
'மதிப்பு'. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.
உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த 'உபரியை' 'சுரண்டி' லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், 'தொழில்
முனைவோன்' என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :
1.தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?
2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் 'உபரி மதிப்பு' எங்கு சென்றது ?
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?
3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் 'உபரி மதிப்பு'
எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?
மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் 'விஞ்ஞானப்படி' ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் 'சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.
இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று
world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.
மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.
42 comments:
***
இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.
***
அப்படியா ?
அரசு ஊழியர்களையும், அரசு நடத்தும் தொழிற்சாலைகளையும் குறை சொல்லி உள்ள நீங்கள் அரசாங்கம் அளித்த trillions of டாலர் உதவித்தொகை பெற்றுள்ள தனியார் நிறுவனங்களை பற்றி கூற மறந்தது ஏன் ?
உண்மைகளை சொன்னா ஏன் இப்படி ‘குறை’ என்று எடுத்துகுறீங்க. ஆதரபூர்வமாக அவற்றை மறுக்க பாருங்களேன் !!
govt's polices of defict financing
and subsidising home loans in US created this mess. Of course the 'animal instincts' of the finanical marker players too were a reason. read more about this at :
http://athiyaman.blogspot.com/2009/08/financial-crisis-no-capitalism-as-usual.html
anyway this post is about the fallacy of marxism and surplus value.
அன்பான நண்பர் திரு அதியமான்,
Excellent!
கண்டிப்பாக சொல்கிறேன், உங்களை தாக்கும் சிவப்பு நண்பர்களுக்கும், தமிழ் வலை உலகில் வலம் வரும் ஏனைய பல பல அறிவுஜீவிகளுக்கும் நீங்கள் சொல்லவந்தது உடனே புரியாது! ஒன்று சுத்தமாக புரியாது, or the maximum அறையும் குறையுமாக புரிந்துகொண்டு அதாவது சம்மந்தமில்லாமல் பதில் கொடுப்பார்கள்!
Of course, Iam not including Mr Mani in this as he is not half baked for all I know, but even people of his understanding have been fed with so much marxist and pseudo sociallist nonsense, they simply think that you talking capaitalism is politically incorrect and that they might be branded as opressors if they indeed show any sort of understanding on this!!!
Phew... thats one power of Stalinist propaganda which unfortunately is still working in India!!!
இவர்களுக்கெல்லாம் சினிமாவைப்பற்றியும், சாதாரண நிகழ்வுகளைப்பற்றியும் ஆயிரம் அர்த்தங்கள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதச்சொனால் எழுதுவார்கள்! இவர்களின் Levels of Intellect are so shallow that the Ship of intellect that is crafted by modern science, economics, contemporary documented history will never get to sail!!!!
தரைதட்டி நின்றுவிடும்.............
அதுவும் தமிழகத்தில் இந்த போலி அறிவுஜீவிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. ஒரே நல்ல விடயம், majority of தமிழர்கள் இந்த முட்டாள்தனத்திர்க்கெல்லாம் அடிபணியாமல் முன்னேற்ற பாதையில் தங்களை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்!!!
வலையுலகில் உள்ள சில உண்மையான விடயம் தெரிந்த பதிவர்கள் என்ற முறையில் உங்களுக்கு ஒரு சபாஷ் .....keep it up!!!
நன்றி
No,
thank you very much.
athiyaman, I work for a mnc so truthfully, i can't be someone who can be against capitalism. But at the same point of time, your writing the following paragraph made me to comment.
****
மார்க்ஸியவாதிகள் இன்று world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்
****
One does not need to be a marxist or stalinist to criticize the flaws of capitalism. To be frank, i don't know a lot about marxism or stalinism.
From my personal experience, i don't think capitalism and its top down approach alone would be able to lift the society.
There is no financial discipline in private sector too. When it is booming, you spend spend & spend.
(even if i have to do some small work in korea, i just call up my travel agent, book the flights in business class and justify my expenses in an excel sheet - there won't be any murmur of disapproval)
And when the bubble is bursting, cut cut & cut. Even when you are absolutely needed to be in a different place, you can't travel. And the industries are interlinked and if someone fails to spend, it creates a ripple and kills several other industries and so on. So, the well being of the industry depends on stupid spending and financial indiscipline.
It is the same with job recruitments and the security too. And this is the case in 99% of big companies.
So, if the govt has not intervened and gave trillions of dollars to these companies and banks(socialism ??), market would have busted and the society could have become chaotic.
And in a year or two, there would be usual cat calls for lesser government intervention and fatter bonus too. And if it works, let it work !
this is a reply from my economics professor about this post :
Dear Athiyaman,
Value determination is looked at by Adam Smith from the demand and supply angles. From the demand side, it is the estimation of the person who wants the good which determines value. From the supply side, in the primitive economy, where there was no property rights, it was the amount of labour which determined the value. After property rights entered the scene, he concluded that cost of production would determine the value. Since cost of production consisted of prices for the use of land, labour and capital, the conclusion that prices are determined by other prices was challenged by Ricardo. Marx was trying for the elusive measure of value, like a metre, which is having unvarying quality at all times and tried to locate it in abstract labour. He did not succeed. Piero Shraffa did attempt another route to arrive at the solution and partially succeeded.
Your critique of Marx on the empirical plane is certainly valid.
However, the quest for an unvarying measure of value would continue to haunt the minds of people in the future, as it did in the past. IMHO, Marx would continue to remain an enigma and would be relevant then also.
S.Neelakantan.
from panbudan google group :
2009/11/6 தியாகு said :
///////இது ஒரு கேலிக்கூத்தான கருத்து டிமாண்டு சப்ளை என்பதே
பொருட்களின் நடமாட்டத்துக்கு காரணம் என்ற அடிப்படையில் சொல்லப்படுவது
பாலைவனத்தில் இருப்பவனுக்கு மேசை தேவைப்படாது என்பதால்
மேசையை தயாரிப்பு செலவைவிட குறைவாக கொடுக்க எந்த
முதலாளியும் முன்வரமாட்டான் . //////
உற்பத்தி விலையை விட சந்தை விலை குறைவாக இருந்தால் மேஜையை குடோனில் வைத்துகொள்ளலாம்.உடனே விற்கவேண்டும் என அவசியம் இல்லை.ஆனால் வரும்காலத்தில் விலை இன்னமும் குறையும் என்று பயம் வந்தால் டக்கென்று வந்த விலைக்கு விற்பதுதான் புத்திசாலிதனம்.தக்காளி மாதிரி கெட்டுபோகும், குடோனில் வைக்க முடியாத பொருட்களை அசலுக்கும் குறைவாக வியாபாரிகள் சாயந்திரமானால் விற்பார்கள்.
/////எப்பொழுது ஒரு பொருளுக்கு தயாரிப்பு செலவு கிடைக்கவில்லை
அந்த பொருளை தயாரிப்பதை முதலாளிகள் நிறுத்தும் அதன் தேவை
எந்த அளவில் இருந்தாலும் சரி .///////
அதைதான் லா ஆஃப் டிமாண்டில் சப்ளை குறைப்பு(contraction in supply) என்கிறோம்.விலை குறைந்தால் சப்ளை குறையும்.சப்ளை குறைவதால் விலை அதிகரிக்கும்.
/////////
தொழில் முனைவோரின் உபரி மதிப்பா உபரி என்றால் என்னவென தெரிந்தால்
இப்படி லூசுத்தனமா கேட்டு இருக்க மாட்டீர்கள்
ஒரு தொழிலாளின் கூலி கொடுப்படாத உழைப்பே உபரி மதிப்பு
இதில் தொழில் முனைவோனின் உழைப்பு எங்கு வரும் அவனுக்கு
யார் கூலி கொடுக்காமல் விட்டார்கள்//////
தொழில் முனைவோனுக்கு கூலி என்பதே கிடையாது.லாபம் தான் அவரது கூலி.நஷ்டம் வந்தால் அவருக்கு கூலி இல்லை
////
இந்த மாதிரி கற்பனைக்கு நாம் பதில் சொல்ல முடியுமா சொல்லுங்கள்
மார்க்ஸ் அனேக விதமான ஆதாரங்களை எடுத்து காட்டி ஒரு நூல்
எழுதி இருக்கிறார் அதாவது டேட்டா எதுவும் இல்லாமல் ஒரு குறையை
எப்படி சொல்ல முடியும் அந்த நூலுக்கு எதிராக /////
அந்த நூலை செயல்முறைக்கு கொண்டுவந்த ரஷ்ய பேரரசு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அடைந்த வீழ்ச்சியை பார்த்தபின்னருமா இந்த கேள்வி?:-)
///////////////////////
பொறுப்பில்லாமல் இருந்தால் எந்த நிறுவனமும் லாபத்தில் ஓடாது
அந்த பொறுப்பற்ற தனத்தில் முதலே காணமல் போகும்போது உபரி
மட்டும் ஒட்டிகொண்டா இருக்கும்////////////////
எந்த அரசு நிறுவனமும் பொறுப்புடன் இயங்காது.காரணம் அங்கே யாருக்கும் வேலை போகும் அபாயம் இல்லை.அடுத்த வேளை சோறின்றீ போகும் அபாயம் இல்லை.இந்த அபாயங்கள் இருக்கும் தனியார் நிறூவனங்கள் தான் பொறுப்புடன் செயல்படும்
/////////////////////////
உலகின் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் அதுவென மார்க்ஸ்
சொல்லவில்லை அதிக உற்பத்தி சந்தையில் அதிகளவிலான
பொருள்களை தேங்க வைக்கும் பிறகு அந்த தேக்கம் சரியாக
நாளாகும் என்பதுதான் இதுதான் நடந்து வந்து இருக்கிறது
உதாரணமாக செருப்பின் தேவையை விட அதிகமான செருப்புகள்
உற்பத்தி செய்யப்படால் செருப்பு விலை குறைந்து விடும்
இப்படியாக ஏறத்தாழ அனைத்து பொருட்களும் அதிகளவில்
சேரும் போது ஒரு தேக்க நிலை உருவாகும் அதைத்தான் சொல்கிறார்
எனவே லாபநோக்கில் இல்லாமல் சந்தை உற்பத்தி இல்லாமல்
தேவை கருதி உற்பத்தி செய்யுங்கள் என்றார் அதுதா சோசலிச உற்பத்தி
புரிந்ததா///////////////////
லாபநோக்கில் இல்லாமல் உற்பத்தியை செய்த அரசு நிறுவனங்கள் என்ன கதியை அடைந்தன?இந்தியாவிலும், உலகெங்கிலும்???
தூர்தர்சனில் லாபநோக்கம் இன்றி தான் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.நிகழ்ச்சியின் தரம் எப்படி இருந்தது?இன்று தியாகு வீட்டிலாவது தூர்தர்சன் ஓடுகிறதா?
ரேசன் கடையில் லாப நோக்கம் இன்றிதான் பொருட்களை விற்கிறார்கள்.வேறு வழியற்ற ஏழைகளை தவிர அங்கே யாரும் பொருட்களை வாங்குவது கிடையாது.மிடில்க்ளாசு அங்கே என்னதான் விலைகுறைவாக பொருட்கள் கிடைத்தாலும் போவதில்லை....மிடில் க்ளாஸ் காம்ரேடுகள் கூட அங்கே பொருட்களை வாங்குவதில்லை
--
செல்வன்
www.holyox.tk
"This is America.We don't redistribute wealth.You earn it"
—Popular tee-shirt slogan in USA
This message is part of the topic "’உபரி மதிப்பு’ என்னும் மாயயை" in the
Google Group "பண்புடன்" for which you requested email updates.
To stop receiving email updates for this topic, please visit the topic at http://groups.google.com/group/panbudan/t/5a290d461c3e2a5a
-~----------~----~----~----~------~----~------~--~---
http://en.wikipedia.org/wiki/Marx#Marx.27s_thought
Marx argued that capitalism was prone to periodic crises. He suggested that over time, capitalists would invest more and more in new technologies, and less and less in labor. Since Marx believed that surplus value appropriated from labor is the source of profits, he concluded that the rate of profit would fall even as the economy grew. When the rate of profit falls below a certain point, the result would be a recession or depression in which certain sectors of the economy would collapse. Marx thought that during such an economic crisis the price of labor would also fall, and eventually make possible the investment in new technologies and the growth of new sectors of the economy.
Marx believed that increasingly severe crises would punctuate this cycle of growth, collapse, and more growth. Moreover, he believed that in the long-term this process would necessarily enrich and empower the capitalist class and impoverish the proletariat. He believed that if the proletariat were to seize the means of production, they would encourage social relations that would benefit everyone equally, and a system of production less vulnerable to periodic crises...
---------------------
http://www.economictheories.org/2009/06/evalution-of-marxian-theory.html
Very nicely written article. Came to your site today only. Will come hereafter.
Pl continue to write this kind of articles in future also.
http://nonono-no-no.blogspot.com/
அருமையாக எழுதியிருகிறீர்கள்.. ஆனால் அடிக்கடி எழுதுங்கள்..
வாழ்த்துகள்.
நன்றி சூர்யா.
முயற்சிக்கிறேன்.
//உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த 'உபரியை' 'சுரண்டி' லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், 'தொழில்
முனைவோன்' என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் ://
பொருள்களின் அத்யாவசிய தேவையின் போது நடைபெறும் பதுக்கல்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள். உதாரணத்திற்கு நாளைக்கு உயரப் போவதாகத் தெரியும் பெட்ரோல் விலை. இன்றைய கையிருப்பை மறைத்துவிடும்.
இன்றைய மதிப்பை நாளைய விலை நிர்ணயம் செய்து மதிப்பை மாற்றிக் கொள்வதும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உபரி இல்லையா ?
டைம்டு மார்கெட் என்பது விற்பனை உத்தி என்றாலும் அந்த டைம் எது என்பதை முடிவு செய்வது முதலாளிகளின் கையில் தானே உள்ளது.
//மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது. ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது//
இதுவும் ஆதாரமற்ற வாதம். ஊக்கத் தொகை கொடுக்கலாம் என்கிற நடைமுறை வந்ததே மார்கிசியம் செய்த கலகத்தால் ஏற்பட்ட நன்மை. இல்லை என்றால் முதலாளிகள் லாபத்தில் ஒரு பகுதியை ஊக்கத் தொகையாகக் கொடுக்கவே மாட்டார்கள், அது எப்போதும் அவர்கள் பாக்கெட்டையே சேரும்.
வாங்க கோவி,
///பொருள்களின் அத்யாவசிய தேவையின் போது நடைபெறும் பதுக்கல்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள். உதாரணத்திற்கு நாளைக்கு உயரப் போவதாகத் தெரியும் பெட்ரோல் விலை. இன்றைய கையிருப்பை மறைத்துவிடும்.
///
இவையும் pricing இல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 160 டாலர் வரை உயர்ந்த கச்சா எண்னை, பிறகு பாதியாக குறைந்தது. இதெல்லாம் future trading, speculation ; இதற்க்கும் உபரி மதிப்பு என்னும் conceptக்கும் சம்பந்தம் இல்லை.
/////மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது. ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது//
இதுவும் ஆதாரமற்ற வாதம். ஊக்கத் தொகை கொடுக்கலாம் என்கிற நடைமுறை வந்ததே மார்கிசியம் செய்த கலகத்தால் ஏற்பட்ட நன்மை. இல்லை என்றால் முதலாளிகள் லாபத்தில் ஒரு பகுதியை ஊக்கத் தொகையாகக் கொடுக்கவே மாட்டார்கள், அது எப்போதும் அவர்கள் பாக்கெட்டையே சேரும்.
////
இல்லை கோவி. கூலியின் அளவு always depends on Demand and supply for labour ; கம்யூனிச சித்தாந்தங்களை எதிர்க்கும் தொழிற்சங்கங்கள் பல உண்டு. முக்கியமாக அமெரிக்காவில், ஜப்பானில். அவை collective bargaining methodகளில் கூலி உயர்வை வேண்டு போராடுகின்றன.
இதற்க்கு மார்கிசம் தேவையில்லை.
மார்கிஸம் ஒரு pseudo-science என்பதற்க்கு முக்கிய காரணம் : மார்க்ஸ் predict செய்த decay of capitalism due to progressive decrease in the 'net suprlus value' of the system வரவேயில்லை. அவரின் projection of recurring cycles of business cycles, with each new cycle being worse than the previous one while the standard of living of the workers decrease in due course : இவை நடக்கவில்லை. மாற்றாக, தொழிலாளர்களின் standard of living improved over the decades, esp in developed nations.
///அதன் தாக்கத்தால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது. ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது///
இப்படி நான் சொன்னதற்கானா ஆதார சுட்டிகள் :
கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)
http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்
http://nellikkani.blogspot.com/2009/03/blog-post_19.html
///டைம்டு மார்கெட் என்பது விற்பனை உத்தி என்றாலும் அந்த டைம் எது என்பதை முடிவு செய்வது முதலாளிகளின் கையில் தானே உள்ளது.
//
இல்லை. அப்படி என்றால் இன்று பொருளாதார மந்தம் மற்றும் விலை வீழ்ச்சி ஏன் ? demand and supply usually determines the price ; also the volume of moeny stock (whcih is the medium of exchange) acts as a determinent of the price.
that is price rise is also a function of rate of increase in money supply (M-4).
அதியமான், சரியான அரைவேக்காட்டுத்தனமான கட்டுரை! உபரி மதிப்பு என்பது முன்பே இருப்பதில்லை. அது உபரியாக விற்கப்பட்டபின்பே அல்லது சுரண்டப்பட்ட கணிக்கப்படவேண்டியது! இன்னும் சொல்லப்போனால் லாபம் என்று ஒன்று இருக்கிறதே அதுதான் உபரி மதிப்பு! ஒரு கால்செண்டரில் ஆயிரம் பேரை வேலைக்கு வைத்துவிட்டு 10000 ரூபாய் கூலி கொடுத்துவிட்டு அவர்களின் உழைப்பை 15000க்கு விற்கும் ஒரு முதலாளிதான் இங்கே 1000 X 5000 = 5000000 - less other expenses = PROFIT . அதுதான் சர்ப்ளஸ் வேல்யூ என்று நான் சொல்லமாட்டேன்! காரணம் நீங்கள் இன்னும் தனியார் பஸ்;ஐ தாண்டி சிந்திப்பவராகத்தெரியவில்லை! மேற்கத்தியர்களே கூட இந்த உபரிமதிப்பை மறுப்பதில்லை. அது தொழில்முனைவோரின் சாமர்த்தியத்துக்கு/ ரிஸ்க் எடுத்ததற்கு கிடைத்த பரிசு என்று சொல்கிறார்கள்!
//இன்னும் சொல்லப்போனால் லாபம் என்று ஒன்று இருக்கிறதே அதுதான் உபரி மதிப்பு!//
அப்படியா ? அப்ப நஸ்டம் என்பது என்ன ? உபரி மதிப்பு எங்கு போனது அப்ப ?
//சரியான அரைவேக்காட்டுத்தனமான கட்டுரை!//
மிக்க நன்றி. எமது பொருளாதார பேராசிரயர் அப்படி கருதவில்லை. அவரின் ஆங்கில மடலை பின்னூட்டமாக இட்டிருக்கிறேன். பார்க்கவும்.
/// உபரி மதிப்பு என்பது முன்பே இருப்பதில்லை. அது உபரியாக விற்கப்பட்டபின்பே அல்லது சுரண்டப்பட்ட கணிக்கப்படவேண்டியது//
மார்க்சியவாதிகள் அப்ப்டி சொல்வதில்லை. விற்பனை விலை அல்லது விற்பனை மதிப்பு பற்றி பேச்சே அவர்களிடம் இல்லை.
உபரி மதிப்பு is certainly not equal to profit. then what about loss ?
and the different values of profit for similar companies employing similar labout and machinery ?
and most importantly, try to answer the point about the projection of Karl Marx about the ultimate demise of capitalism in course of time as total 'suplus value' available declines slowly.
if Marx's idea about surplus value is tru, then his subsequent projection of capitalism, using the concept of surplus value should also have been true and happened in the past 150 years. but the opposite of that happened. how and why ? what happened to the surplus value, according to Marx, then ?
தனியார் பஸ்கள் மற்றும் பற்றாகுறை பற்றி தர்க்க பூர்வமாக, ஆதாரத்துடன் வாதடுங்களேன். இப்படி one-liner comment அளிக்காமல் !!
அய்யா சாமி... உங்க வாத்தியார் கொடுத்தது சர்டிபிகேட்னா கார்ல் மார்க்ஸ் அவர்களின் முதாலாளித்துவம் பற்றிய புத்தகத்தை உலகெங்கும் படிக்கும் ஆயிரக்கணக்கான பொருளாதார அறிஞர்கள் எல்லாம் கேணைகளா?
About the Course
A close reading of the text of Karl Marx's Capital Volume I in 13 video lectures by David Harvey. Start here
David Harvey is a Distinguished Professor at the City University of New York (CUNY), Director of The Center for Place, Culture and Politics, and author of various books, articles, and lectures. He has been teaching Karl Marx's Capital for nearly 40 years.
அப்ப அமெரிக்கா யுனிவர்சிட்டில 40 வருசமா ஒரு கேணக்க்கிறுக்குப்பய அவரோட புத்தகத்தை பாடமா சொல்லிக்கொடுக்குறானா! நான் இது வரைக்கும் உங்களை அரைவேக்காடு முதலாளித்துவவாதின்னுதான் நினைச்சேன்! இப்பத்தான் புரியுது நீங்க ஒரு பக்க பிளாக் போஸ்ட் எழுதி மார்க்ஸ் ஒரு போலின்னு புரூப் பண்ணுற அளவுக்கு அதி பயங்கரமான அறிவாளியாக போதி மரத்திலிருந்து நேரா வலைப்பூவுக்கு வந்திட்டேங்கன்னு! பச்சையா சொன்னா.. உங்ககிட்ட வாதிடும் அளவுக்கு எனக்கு (அஞ்)ஞானம் பத்தாது! பொறுமையும் இல்ல!
செல்லா,
நான் எழுப்பிய வினாக்களுக்கும், சந்தேகங்களுக்கும் ஒரு பதிலும் சொல்லாமல், இப்படி பொதுப்படையான பதில் தந்தா எப்படி ? முக்கியமாக, தாஸ் கேபிடலில் விவரிக்கப்பட்டுள்ள ultimate demise of capitalism due to the progressive dwindling of the net 'surplus value' available over a course of time ; about each business cycle being worser than the next, while the standard of living of the workers getting worser thru the progression of business cycles.; இவை பற்றி பேசுங்களேன்.
your emotional outburst confirms the impression that you are rash, immature and have little knowledge about Das Capital and Marxism.
இங்க பாருங்க அதியமான்.. ஆரம்பத்துலயே “உபரி மதிப்பு” என்ற மையக்கருத்தைக்கொண்டதுதான் மார்க்சிசம்னு சொல்லீட்டீங்களா இல்லையா. அதை மாயை ந்னு உங்க ஒரு பக்க கட்டுரையில நிரூபிச்சிட்டீங்களா இல்லையா? அப்புறம் என்ன.. மையமே தகர்ந்துச்சா இல்லையா... மையம் தகர்ந்துச்சுன்னா.. அப்புறம் இருக்கிற சைடை இன்னும் ஒரு பாராகிராப் எழுதி தகர்க்கறது உங்களுக்கு தம்மாத்துண்டு நேரம் கூட ஆகாதுன்னு எனக்கு தெரியாதா?! ஆனா.. அதை இங்கன நாலு அப்பாவிக படிக்கற வலைப்பூவுல எழுதுறத விட்டுட்டு உங்க மெக்காவோ மதினாவோ..இல்ல.. இல்ல.. அந்த அமெரிக்கா.. அதோட சூப்பர் நகரம்.. நியூயார்க.. அதுல இருக்கிற ஒரு சூப்பர் பல்கலைக்கழகம்.. அங்கன இருக்கிற .. நான் அதிகம் ரசிக்கிற ஒரு “மாயையை ஆராய்கிற” ஒரு பெரிசு.. நேரா அவருகிட்டயே போயி உங்க “லா(லூ)சா போன பேக்டரி இருக்கு.. அங்கன நோ உபரி மதிப்பு.... சோ.. கம்யூனிசம் பூட்டுக்கிச்சுனு” ந்னு உங்க சூப்பர் தியரிய அவுத்து விட்டீங்கன்னு வைங்க .. நீங்க அமெரிக்காவுலயே பெரீய ஆளாகிடுவீங்க! அமர்தியா சென்னுக்கு அப்புறம் இந்தியாவின் அதியமான்.. அப்புடின்னு பத்து மைக்கை வச்சு ஒலக மீடியாவெல்லாம் உங்கள பேட்டியெடுப்பாங்கன்னேன்! அந்த நல்லெண்ணத்துலதான் நானும் சொல்லுறேன்.. இங்கன ஆப் பாயில் சுடறது வுட்டுட்டு.. அமெர்க்காவுக்கு ஜூட் வுடுங்கன்னு!
இல்லை செல்லா. மார்கிச conceptஆன உபரி மதிப்பு உண்மை என்று வைத்துக்கொண்டால், அதன் மூலம் மார்க்ஸ் உருவாக்கிய hypothesis of ultimate demise of capitalsim உண்மையாக இருந்திருக்க வேண்டுமே ? Das Capital இன் பெரும் பகுதி இந்த doom of capitalism பற்றி தான் மிக விரிவாக பேசுகிறது. ஆனால் இதுவரை அதற்க்கு நேர் மாறாக தான் நடந்து வருகிறது. இதிலிருந்து ஒரு logical deduction about the validity of the surplus value which is the core of Marxisim. ok. a kind of reverse engineering, etc.
மார்க்ஸை யாராலும் ignore செய்ய முடியாது. நியு யார்க் பல்கலை மட்டுமல்ல, அனைத்து பல்கலைகழக பொருளியள் துறைகளிலும் மார்கிசம் பற்றிய பாடங்கள் உண்டு. ஆராய்ச்சிகள், விவாதங்கள் தொடர்கின்றன. எம் ஆசிரியர் மார்க்ஸ் பற்றி சொன்னதை முழுசா படியும். no one can ignore Karl Marx while learning economic histroy. he was a giant, no doubt.
but still his theoritical basis is being questioned in the empirical plane.
செல்லா, இது பேராசியரின் கடிததில் இருந்து :
//Marx was trying for the elusive measure of value, like a metre, which is having unvarying quality at all times and tried to locate it in abstract labour. He did not succeed. Piero Shraffa did attempt another route to arrive at the solution and partially succeeded.
Your critique of Marx on the empirical plane is certainly valid.
However, the quest for an unvarying measure of value would continue to haunt the minds of people in the future, as it did in the past. IMHO, Marx would continue to remain an enigma and would be relevant then also.
S.Neelakantan.
//
// IMHO, Marx would continue to remain an enigma and would be relevant then also.
S.Neelakantan. //
இதுக்கு மேலேயும் மார்க்ஸ் ஒரு லூசுப்பய.. அவரு தியரி..டுமீல்.. இப்படியெல்லாம் எழுதாம ... “உபரி மதிப்பு ஒரு மாற்றுப்பார்வை” அப்படின்னு சொல்லியிருந்தா “மார்கெட்டின் மரணம் என்னும் எனது தொடரிலிருந்து உங்களுக்கும் சில எதிர்கருத்துக்கள் சொல்லியிருப்பேன்! சும்மா ஓவர் பில்டப் குடுக்கறது.. அப்புறம் பிலா விடுறது.. (உ-ம்} எல்லாம் சமமா இருக்கிற இரண்டு பேக்டரில ஒண்ணு நஷ்டமாம்.. அதெப்படி ஐயா சாத்தியம்.. சரி அப்படியே ஆச்சுன்னா .. அதுக்கு என்ன காரணமா இருக்க முடியும்? எவனாவது நியூட்டர் அடிச்சுட்டானா.. பணம்/பொருள் மாயையாச்சா? ;-) அதெல்லாம் மார்க்ஸ் மைக்ரோ எக்கனாமிக்ஸ் மதிரி கூட இல்லாமல் ஒரு இண்டர்னல் ஆடிட்டர் , அக்கவுண்டட் ரேன்சுக்கு எழுதனுமா? சீ!
இந்த மாதிரி ஆப்பாயில் லாஜிக் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.. அதுனால தான் அந்த நக்கல் பதில்கள்! சீக்கிரம் அமெரிக்கா செல்ல வாழ்த்துக்கள்!
ஆனாலும் பாருங்க.. உங்கல மாதிரி சுருங்கச்சொல்லி விளங்க வைக்கத்தெரியாம மார்க்ஸ் பெரிசு ... இப்படியெல்லாம் விளாவாரியா எழுதிநேரத்தை வீணடிச்சிருக்கு!!
அப்படியே பொருளுள்ள அமெரிக்க “முதலாளித்துவ மாயை” யிலிருந்து விடுபட்ட அமெரிக்கர்கள் சொல்லும் கருத்து என்ன என்று பாருங்கள் Look at this video
நீங்கள் Polarisation of Class ஐ எடுத்துக்கொண்டிருந்தால் அதுதான் சரி. Surplus Value theory ஐ அல்ல. மற்றபடி தீர்க்கமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை மேம்போன போக்கில் விமர்சிப்பது சரியில்லை. இதில் பலர் எதையோ புரிந்து கொண்டது போல் மகிழ்ச்சி வேறு அடைகிறார்கள். மேற்கத்தைய சமூகம் காலம் காலமாய் எதை கண்டித்து வந்ததோ அதை நடை முறைப்படுத்தி இருக்கிறது.Partial Nationalization of Banks தான் சொல்கிறேன். மேலும் Entrepreneur(தொழில் முனைவோர்) க்கும் Capitalist க்கும் உள்ள வேறுபாடுகளை Peter drucker அருமையாக சொல்லி இருப்பார். Management டிலும் தங்கள் கருத்து தவறு.
neengal ellam eppadi arivu jeevigalatum pesuvadhai vitu vitu chennaiyel ulla cherikum delhiyel nadaipathaiyel thangiulla elaigaliyum patri sindiyungal india marum
இந்த டெரிவேடிவ் டெரிவேடிவ் என்று அடிக்கடி ஷேர் மார்க்கெட்டில் சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன ?
தொழில்முனைவுத்துவம் (capitalism = முதலாளித்துவம் என்று சொல்ல மனம் வரவில்லை!) இருக்கவேண்டும் என்றால் போட்டி உள்ள சந்தை இருக்கவேண்டும். அதை அழிக்க நினைக்கும் பழைய "தொழில் முனைந்தோர்" களை எப்படி சமாளிப்பது.
மோனோபலி வந்தால் தொழில் முனைவோர் காலி!
உபரி மதிப்பு என்பது சரியான சொல்லாடலா என்பது தெரியவில்லை.அது மிகை மதிப்பு அதாவது மிகைபடுத்தப் பட்ட மதிப்பு என்பது தான் பாடங்களில் சொல்லப் பட்டுள்ளது உபரி மதிப்பு என்பது excess value என்பது ஆகத் தானே வருகிறது
அன்புள்ள அதியமான்,
நீங்கள் முகப்புத்தகத்தில் இந்த வலைப்பூவை சுட்டியதற்கு நன்றி. நீங்கள் மார்க்ஸின் எழுத்துக்களை நேரடியாகப் படித்தீர்களா என்று தெரியவில்லை. ரொம்பவும் அவசரப்படுகிறமாதிரி தோன்றுகிறது; வரிக்கு வரி மறுப்புத்தருவதில் ஆர்வமில்லை என்பதுடன் எனக்கு science, pseudo science என்றெல்லாம் வகைப்படுத்துவதில் விருப்பமில்லை. நான் மார்க்ஸை ஒரு speculative philosopher ஆக அணுக விரும்புபவன். அவருடைய எழுத்தில் பல புதிய சிந்தனைகளை தர்க்கங்களை உருவாக்கும் ஆற்றல் இருப்பதால்தான் அவர் இன்றும் தொடர்ந்து கற்கப் படுகிறார். உங்கள் பேராசிரியர் நீலகண்டன் சொன்னதைப்போல மதிப்பு (value) குறித்த விசாரணை முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுவதால், மார்க்ஸும் தேவைப்படுகிறார் என்று சமீபத்திய காட்சிப்பிழை திரை இதழில் எழுதியுள்ளேன். தொழிலாளிக்கு "உரிய" சம்பளத்தைக் கொடுத்தாலும் உபரி மதிப்பு உருவாகும். ஏனெனில் பரிமாற்றத்தின் தர்க்கம், உற்பத்தியின் தர்க்கத்திலிருந்து துண்டுபட்டிருப்பது. உபரி மதிப்பின் பெருக்கம் என்பது இன்றைய முதலீட்டிய அமைப்பில் என்ன உருவில் இருக்கிறது, இதனால் விளையும் சிக்கல்கள் என்ன என்பதையும் கூட நாம் மார்க்ஸை தொடர்ந்து சிந்திக்க முடியும். இதற்கு மேலும் எழுதினால் கட்டுரை ஆகிவிடும் - நானும் பொருளாதாரத்தை பொறுத்தவரை மாணவன் மட்டுமே என்றாலும் கூட வேறு இடங்களில் அறிந்தவரை விரிவாக எழுதுவேன். சந்தர்ப்பமிருந்தால் படித்துப் பாருங்கள். ஓசை செல்லா சுட்டிக் காட்டிய டேவிட் ஹார்வி, ஜியோவானி அர்ரிகி போன்ற சிந்தனையாளர்களையும் படித்துப் பார்க்கலாம். Predictions, Postulations மட்டும் பார்க்காமல் premise என்பதை கவனிப்பது பயன் தரும்.
அன்புடன், ராஜன் குறை
அன்புள்ள அதியமான்,
நீங்கள் முகப்புத்தகத்தில் இந்த வலைப்பூவை சுட்டியதற்கு நன்றி. நீங்கள் மார்க்ஸின் எழுத்துக்களை நேரடியாகப் படித்தீர்களா என்று தெரியவில்லை. ரொம்பவும் அவசரப்படுகிறமாதிரி தோன்றுகிறது; வரிக்கு வரி மறுப்புத்தருவதில் ஆர்வமில்லை என்பதுடன் எனக்கு science, pseudo science என்றெல்லாம் வகைப்படுத்துவதில் விருப்பமில்லை. நான் மார்க்ஸை ஒரு speculative philosopher ஆக அணுக விரும்புபவன். அவருடைய எழுத்தில் பல புதிய சிந்தனைகளை தர்க்கங்களை உருவாக்கும் ஆற்றல் இருப்பதால்தான் அவர் இன்றும் தொடர்ந்து கற்கப் படுகிறார். உங்கள் பேராசிரியர் நீலகண்டன் சொன்னதைப்போல மதிப்பு (value) குறித்த விசாரணை முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுவதால், மார்க்ஸும் தேவைப்படுகிறார் என்று சமீபத்திய காட்சிப்பிழை திரை இதழில் எழுதியுள்ளேன்.
(பின்னூட்டம் தொடர்கிறது)
தொழிலாளிக்கு "உரிய" சம்பளத்தைக் கொடுத்தாலும் உபரி மதிப்பு உருவாகும். ஏனெனில் பரிமாற்றத்தின் தர்க்கம், உற்பத்தியின் தர்க்கத்திலிருந்து துண்டுபட்டிருப்பது. உபரி மதிப்பின் பெருக்கம் என்பது இன்றைய முதலீட்டிய அமைப்பில் என்ன உருவில் இருக்கிறது, இதனால் விளையும் சிக்கல்கள் என்ன என்பதையும் கூட நாம் மார்க்ஸை தொடர்ந்து சிந்திக்க முடியும். இதற்கு மேலும் எழுதினால் கட்டுரை ஆகிவிடும் - நானும் பொருளாதாரத்தை பொறுத்தவரை மாணவன் மட்டுமே என்றாலும் கூட வேறு இடங்களில் அறிந்தவரை விரிவாக எழுதுவேன். சந்தர்ப்பமிருந்தால் படித்துப் பாருங்கள். ஓசை செல்லா சுட்டிக் காட்டிய டேவிட் ஹார்வி, ஜியோவானி அர்ரிகி போன்ற சிந்தனையாளர்களையும் படித்துப் பார்க்கலாம். Predictions, Postulations மட்டும் பார்க்காமல் premise என்பதை கவனிப்பது பயன் தரும்.
அன்புடன்
ராஜன் குறை
///தொழிலாளிக்கு "உரிய" சம்பளத்தைக் கொடுத்தாலும் உபரி மதிப்பு உருவாகும்.//
கண்டிப்பாக சரி. ஆனால் அந்த உபரி மதிப்பு யாரால் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதுதான் விவாதம். மற்படி மார்க்ஸை ஒரு speculative philosopher ஆக அணுக உடன்படுகிறேன்.
இந்த சுரண்டல், வர்க போர் என்ற மாயை வார்த்தைகள் தாம் எத்தனை கோடி மக்களை கொன்று, ஃபாசிசமாக உருமாறி, சீரழித்திக்கிறது ? மதவாதத்தை விட அதிக அழிவை விளைவித்திக்கிறது. எமது இதர பதிவுகளையும், ஆங்கில பதிவுகளையும், நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
http://www.facebook.com/karur.athiyaman/posts/180902765274120
சிந்திக்க தூண்டுகிறது. ... நன்றி
சிந்திக்க தூண்டுகிறது....நன்றி
http://www.bloomberg.com/news/2011-09-26/manchester-gave-human-form-to-marx-s-theories-commentary-by-mary-gabriel.html
They also spent time in the workers’ residential area, where low cottages consisting of two rooms, a cellar and a garret housed an average of 20 people each, with one outdoor toilet for every 120 residents.
Death Over Injury
In this desperate world, family life disintegrated. Mothers gave their infants opium to keep them sedated until they returned from work. Girls as young as 12 were “married” off to ease the family’s financial burden, and boys as young as 6 began their lives on the street. Sickness was one more luxury the poor could not afford; death was considered preferable and more merciful than injury or disease.
Before this trip Marx had never witnessed proletarian life. Although he had long criticized those who led with theory, the truth was that he had done the same. No longer.
The two friends left Manchester after about a month and a half and traveled to the capital. In Manchester the workers’ districts spread like weeds along the length of the river, but in London the slums were vertical, and the poor crammed the four-story houses from cellar to garret. Every inch, including the staircase, was occupied. Some people rented only a place in a bed, not even the whole bed. Others rented space on a rope strung along the wall, where they could sleep sitting up.
அப்போ விவசாயி தயாரிக்கும் பொருளுக்கு மட்டும் சரியான விலை கிடைக்க கூடாதா என்ன மேசைக்கு கிடைக்கலாம். நீங்கள் இன்னும் ஆழமாக மார்சியத்தை படிங்கள். உங்களுக்கு ஒரு வேலை உணவு கிடைக்காமல் இருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்.
K..R..அதியமான் அவர்களின் “’உபரி மதிப்பு” என்னும் மாயை” (http://nellikkani.blogspot.in/2009/11/blog-post.html) என்பதைப் படித்து எனது எதிர்வினையை பதிவுசெய்துள்ளேன்.
எனது வலைபூவில் பார்க்கவும்
K..R..அதியமான் அவர்களின் “"உபரி மதிப்பு” என்னும் மாயை” என்ற கருத்தின் மீதான எனது எதிர்வினை:-
http://marxistpoliticaleconomy.blogspot.in/2014/05/kr.html
https://marxistpoliticaleconomy.blogspot.com/2014/05/kr.html
Post a Comment