முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1

முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1

 

சில காலம் முன்பு, வேதியலில் முனைவர் பட்டம் பெற்று, உயர் அரசு பதவியில் இருக்கும் குடும்ப நண்பர் ஒருவருடன் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னது :"….ஏழ்மையை ஒழிக்க, அரசு அதிகம் ரூபாய்களை அச்சடித்து, ஏழைகளுக்கு அளிக்க முடியாதா ?" ; அது வறுமையை குறைப்பதிற்க்கு பதிலாக, விலைவாசியை மட்டும் உயர்த்தும் என்பது அவருக்கு புரியவில்லை. பகுதி நேரம் பேராசியராக இருக்கும் இவருக்கே, அடிப்படை பொருளாதார விதிகள் புரியவில்லை. அறியாமை. இது போன்ற அடிப்படை விசியங்கள் பற்றி எளிமையாக விளக்க முயல்கிறேன்.

 

முதலீட்டியம் என்று சொல் சமீப காலமாக உபயோகிக்கப்படுகிறது. முதலாளித்துவம் என்ற சொல்தான் அதிகம் பிரயோகிக்கப்படும் சொல். அதைவிட முதலீட்டியம் என்ற சொல் Capitalism என்பதற்க்கு சரியான தமிழாக்கமாக உள்ளது. முதலாளி, முதலாளித்துவம் என்ற சொற்கள் வில்லத்தனமான, எதிர்மறையான அர்த்தங்களுடன் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. ஆகவே முதலீட்டியம் என்ற சொல் எமக்கு உவப்பாக இருக்கிறது !!

 

தொழிற் புரட்சி துவங்கிய பிறகுதான் முதலீட்டியம் உருவானது. அதற்க்கு முன் உலகெங்கும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நிலப்பிரவுத்துவம் தான். நவீன வடிவ ஜனனாயகமும், தொழில் புரட்சியுடன் சேர்ந்தே வளர்ந்தது. அய்ரோப்பாவில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 

முதலீட்டியம் பல வகைகள், பாணிகள் கொண்டது. மார்க்சியம் போன்ற ஒற்றைபடை தன்மை கொண்ட definition கிடையாது. ஒவ்வொறு நாட்டிலும் ஒவ்வொறு பாணிகள். அதை பற்றி பிறகு விரிவாக பார்போம்.

 

பாசிசம், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் : இவைகள் முதலீட்டியத்தோடு சேர்ந்தே பார்க்கப்படும் கோணம் உள்ளது. முதலீட்டியத்தை இரு வகைகளாக பிரிக்கலாம் : லிபரல் ஜனனாயகத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம், பாசிசத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம். இரண்டு வகைகளையும் 'முதலீட்டியம்' என்ற சொல்லிற்க்கு கீழ் அடைத்து, குழப்பிக்கொள்ளும் தன்மை அதிகம். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் லிபரல் ஜனனாயக பாணி முதலீட்டியம் பரவலாகியது. அதுவரை பாசிச பாணியிலான, ஏகாதிபத்திய தன்மை கொண்ட முதலீட்டியம் கோலோச்சியது.

காலனியாதிக்கம் செலுத்திய அய்ர்ப்ப்பிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கிய முதலீட்டிய பாணி இது.

 

1948இல் அய்.நா சபை பிரகடனமான : Universal Declaration of Human rights. http://www.un.org/en/documents/udhr/  இதுதான மிக மிக முக்கியமான, அடிப்படையான கொள்கை விளக்கம். மீற கூடாத 'புனித பசு' என்றும் கொள்ளளாம். சொத்துரிமை இதில் ஒரு பகுதி. அவ்வளவுதான். இந்த சொத்துரிமை தான் முதலீட்டியத்தின் ஆணி வேர். அதாவது பொது உடைமை கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை.

 

மேலோட்டமாக பார்த்தால், சொத்துரிமை என்பது பணக்காரர்கள், பண்னையார்கள், பெரு முதலாளிகளின் நலன்களை பாதுக்காக்க, ஏழைகளை 'சுரண்ட' உருவாக்கப்பட்ட கொள்கை போல தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏழைகளில் பலரும் கடின உழைப்பில் முன்னேறி தொழில் அதிபர்களாக, பெரு விவசாயிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், இன்று பெரும் நிறுவனங்களின் 'முதலாளிகள்' அல்லது பங்குதாரகள் அனைவரும் தங்கள் 'தனி உடைமையை' சுயமாக உழைத்து பெற்றவர்கள். அல்லது அவர்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, பண்னைகளை வாரிசு அடிப்படையில் பெற்று, அதை பெருக்கி, நிர்வாகிப்பவர்கள்.

தொடர்ந்து 1000 வருடங்களாக 'பணக்காரகளாக' இருக்கும் குடும்பம் அல்லது குழு எதுவும் இல்லை. இருப்பதாக நான் அறியவில்லை.

 

ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கும் ஒருவர், தம் உழைப்பினாலும், ஊக்கத்தாலும், திறமையாலும், ஒரு சிறு நிறுவனத்தை துவக்கி, படிப்படியாக வளர்த்தி, மேம்மட்ட வரலாறுகள் பல உண்டு. தாம் பாடுபட்டு உழைத்து, உருவாக்கிய நிறுவனம் அல்லது பண்ணையை, ஒரு சோசியலிச அரசோ அல்லது 'கொள்ளையர்களோ' கைப்பற்றும் சூழல் உருவானால், தொழில் முனைவோர்கள் ஊக்கமாக 'உழைக்க' மாட்டார்கள். தன்னால் உருவாக்கப்பட்ட அல்லது முன்னோர்களாக தமக்கு அளிக்கப்பட்ட சொத்துகள் / நிறுவனங்கள் / பண்னைகள், இவைகளுக்கு 'பாதுகாப்பில்லை' என்றால் அவற்றை பேணவோ, விரிவுபடுத்தவோ ஊக்கம் இருக்காது. இது அடிப்படை மனித இயல்பு. 'சோசியலிச' கொள்கைகளை அமலாக்கும் நோக்கத்தில் பெரு நிறுவனங்களை தேசியமயமாக்கும் 'அபாயம்' தொடர்ந்த காலங்களில் இருந்த ஊக்கத்தைவிட, இன்று தாரளமயமாக்கல் காலத்தில் வெளிப்படும் ஊக்கம் மிக அதிகம். Unleashed potential of Indian entrepreuneship and energy. பார்க்கவும் : http://www.heritage.org/index/pdf/2006/index2006_chapter3.pdf  இதை புரிந்து கொள்ள கடந்த காலத்தில், 1991க்கு முன் இருந்த சூழல் பற்றி அனுபவ அறிவோ அல்லது வாசிப்பனுபவமோ தேவை.

 

நிறுவனங்கள், வணிக அங்காடிகளுக்கு பாதுகாப்பில்லாத பகுதிகளிலும் விளைவுகள் இதே போல் தான். பீகார் போன்ற பகுதிகளில் தொழில் துவங்க பலரும் தயங்குவது இதனால் தான். மாஃபியா போன்ற அமைப்புகள், தீவிரவாதிகள் மாதந்தோரும் 'protection money' (அதாவது மாமுல்) கேட்டும் அச்சுருத்தும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகுவது மிக கடினம். புதிய தொழில்கள் அல்லது முதலீடுகள் உருவாகாவிட்டால், வேலை வாய்புகளும், வரி வசூலும் பெருகாமல், வறுமை தான் அதிகரிக்கும். பீகார், ஒரிஸா, மே.வங்க ஏழை மக்கள் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் வேலை தேடி வரும் அவலம் இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். கங்கை பாயும் செழிப்பான பகுதி, கனிம வளங்கள் அதிகம். ஆனாலும் கடும் வறுமை. வேலை இல்லாத் திண்டாட்டம். காரணம் அங்கு சொத்துகளுக்கு போதிய 'பாதுகாப்பு' இல்லை.

 

சொத்துரிமையின் முக்கியம் பற்றி வேறு விதமாக பார்ப்போம். எழுத்தாளர்கள் மற்றும் படைப்பளிகள் உருவாக்கும் ஆக்கங்களை வணிக ரீதியாக பாதுக்க காபிரைட் சட்டங்கள் உள்ளன். ஆக்கங்களும் ஒரு வகையான சொத்துக்கள் தாம். அவற்றை விற்று பணமாக்க அரசு கொள்கைகள் தடை செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் ? அதாவது அவை பொது உடைமையாக்கப்பட்டு, எழுதாளர்கள், படைப்பளிகளுக்கு மாத சம்பளம் மட்டும் அளிக்கும் ஒரு முறை உருவானால் எப்படி இருக்கும் ?

புதிய ஆக்கங்களை உருவாக ஊக்கம் குறையும். ஒரு துறை பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூலகள் போன்றவற்றிக்கு காபிரைட் பாதுகாப்பு இல்லாமால், பலரும் அதை அப்படியே காபி அடித்து வெளியிட்டாலும், ஊக்கம் குறையும். சினிமா துறையில் அதிக நஸ்டம் வர இந்த வீடியோ பைரசி ஒரு முக்கிய காரணம் என்பதை இங்கு பார்க்க வேண்டும்.

 

இந்தியாவில் சொத்திரிமையின் நிலை மற்றும் சட்ட விதிகளில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றி ஒரு விரிவான சுட்டி : http://www.ccsindia.org/ccsindia/policy/rule/studies/wp0041.pdf

 

சொத்துரிமையை அடிப்படை உரிமையாக (Right to property as a 'Fundamental Right') ஏற்க்கபட்ட நாடுகள் தான் கடந்த நூற்றாண்டில் வறுமை அளவை மிக மிக குறைத்து, முன்னேறிய நாடுகளாக மாறின. சொத்துரிமையை பல விதங்களில் முடக்கிய, வலிமை இல்லாமல் dilute செய்த நாடுகளால் அந்த அளவு முன்னேற முடியாமல், இன்றும் வறுமையில் தத்தளிக்கின்றன. இதை பற்றி மிக விரிவான ஆய்வுகள், தரவுகள் உள்ளன. மிக எளிமையாக இதை புரிந்து கொள்ள, இன்றைய வட கொரியாவையும், தென் கொரியாவையும் ஒப்பிட்டாலே போதும்.

 

மேலும்..

15 comments:

K.R.அதியமான் said...

test mail

K.R.அதியமான் said...

நண்பர் அதியமானுக்கு,

உங்கள் கட்டுரையையும், சுட்டப்பட்ட தளங்களையும் உன்னிப்பாக படித்து, கருத்து தெரிவிக்க நேரம் பிடித்தது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு உங்கள் கூற்றுடன் உடன்பாடு அறவே கிடையாது. பொருளியலும் (பொருளாதாரம் என்று ஒரு துறை இல்லை), நிர்வாகமும், வணிகமும் அறிந்தவன் என்பதால் தான், இந்த நிலை.


சுருங்கச்சொல்லின், நீங்கள் சுட்டிய ஹெரிடேஜ் ஃபெளண்டேஷன், ஒரு அமெரிக்க முதலாளித்துவ, பத்தாம் பசலி, ரிபப்ளிகன் தளம். நடுநிலை என்றால், வீசை என்ன விலை என்று கேட்பார்கள். ஸி.ஸி.எஸ் இந்தியாவும், கொழுத்த செல்வந்தர்களின் இடம். அது போகட்டும்.


"...ஏழைகளில் பலரும் கடின உழைப்பில் முன்னேறி தொழில் அதிபர்களாக, பெரு விவசாயிகளாக மாறியுள்ளனர்.." என்பதற்கு சில ஆதாரங்கள் கொடுத்தால், நல்லது. எதற்கும், 'Stop, Listen Proceed II மீது ஒரு கண்ணோட்டம் வைக்கவும்; புள்ளி விவரங்களுடன் பி.சாயினாத் எழுதிய கட்டுரைகளை நோக்கவும்.


'சொத்துரிமையை அடிப்படை உரிமையாக (Right to property as a ‘Fundamental Right’) ஏற்க்கபட்ட நாடுகளின் தலைவன், யூ.எஸ்.ஏ. இங்கு ஏழைகள் படு பாடு
சொல்லி மாளாது. சொத்துரிமை அளித்தும், மக்களை பேணும் நாடு களில் யூகே ஒன்று. அங்கு நிலை பரவாயில்லை.


ஒரு உதாரணத்துக்கு கேட்கிறேன். அம்பானி சகோதரர்களின் சொத்து சம்பாதித்து வந்ததா? அல்லது, திருப்பூர் தினக்கூலிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறதா?

நட்புடன்,
இன்னம்பூரான்

K.R.அதியமான் said...

நண்பர் இன்னம்பூரான்,

ஹெரிடேஜ் ஃப்வுண்டேசன் பற்றி உங்கள் கருத்து வேறு விசியம். அந்த சுட்டியில் உள்ள கட்டுரையை எழுதியவர் பருன் மித்ரா என்ற இந்தியர். அக்கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்ட தகவல்கள், கருத்துகள் மற்றும் முடிவுகள் பற்றி தர்க்க ரீதியாக மறுப்பதே சரி. அவை பொய்கள் அல்லது தர்க்க ரீதியாக தவறான கருத்துகள் என்று நிருபியுங்களேன்.

////"...ஏழைகளில் பலரும் கடின உழைப்பில் முன்னேறி தொழில் அதிபர்களாக, பெரு விவசாயிகளாக மாறியுள்ளனர்.." என்பதற்கு சில ஆதாரங்கள் கொடுத்தால், நல்லது.////\

எங்கள் ஊரான் கரூரில் நூற்றுகணக்கானவர்களை சொல்ல முடியும். கூலி வேலைக்கு வந்து, பிறகு தொழில் கற்று, சிறி தொழிலாக துவங்கி, 30 ஆண்டுகளில் பெரும் நிறுவனங்களாக உருவாக்கிய முன்னோடிகள் பலர். எமது குடும்பத்திலேயே அப்படி பலர் உள்ளனர். 90 ஆண்டுகளுக்கு முன் பஞ்சம் பிழைக்க இடம் பெயர்ந்தவர்களில், விவசாயக் கூலியாக துவங்கி, சிறு நிலத்தை முதலில் வாங்கி, பிறகு கடின் உழைப்பிலும், ஊக்கதினாலும், அவற்றை பல பத்து ஏக்கர்களாக மாற்றிய முன்னோர்கள் எமக்கு உண்டு.

திருபாய் அம்பானி ஒரு நல்ல் உதாரணம். அவர் செய்த பித்தலாட்டங்கள், ஊழல்கள் வேறு விசியம். ஆனாலும் சாதனையாளர் தான். சுனில் பாரதி மிட்டல் 25 ஆண்டுகளுக்கு முன் சிறிய தொழில் முனைவோர்தான். இன்று ஏர்டெல் நிறுவனத்தில் வளர்ச்சி பிரம்மாண்டமானது. அமெரிக்காவில் 160 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாண்டர் ஆயில் நிறுவனத்தை துவக்கிய ராக்ஃபெல்லர், தமது 16 வயதில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் வாழ்க்கையை துவக்கியவர். அனைத்து பெரு நிறுவனங்களிலன் ஆரம்பங்களும் இப்படிதான். தொடர்ந்து 500 ஆண்டுகளாக செலவந்தராக இருக்கும் குடும்பம் எனக்கு தெரிந்து இல்லை.

////'சொத்துரிமையை அடிப்படை உரிமையாக (Right to property as a ‘Fundamental Right’) ஏற்க்கபட்ட நாடுகளின் தலைவன், யூ.எஸ்.ஏ. இங்கு ஏழைகள் படு பாடு
சொல்லி மாளாது. சொத்துரிமை அளித்தும், மக்களை பேணும் நாடு களில் யூகே ஒன்று. அங்கு நிலை பரவாயில்லை.///

ஆம். அமெரிகாவில் ஏழ்மை உள்ளது தான். 45 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட இன்று அங்கு வாழ்க்கை தரம் குறைவு அல்லது cost of living அதிகம் தான். பல முட்டாளதனங்களை செய்தால் அப்படிதான் ஆகும். The cumulative costs of cold war, aid to many nations, huge defence budget till date, etc. Mismanagement of the economy பற்றியும் விரிவாக எழுத உள்ளேன். ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஏழ்மை அந்நாடுகளில் குறைவு. அன்று mass poverty. இன்று மாறுதல் எப்படி ?

////அம்பானி சகோதரர்களின் சொத்து சம்பாதித்து வந்ததா?//// உழைத்து சம்பாதித்தது தான். (கூடவே பல பித்தலாட்டங்களும் தான்.) ஆனால் லைசென்ஸ் ராஜிய காலங்கள் அளவு இன்று பித்தலாட்டங்கள் சாத்தியமில்லை / தேவையில்லை. 1990களுக்கு முன் நிலவிய சூழல் பற்றி பெரும் அறியாமை நிலவுகிறது. அம்பானி ஒரு தொழிலாளியாகத்தான் வாழ்க்கையை துவங்கினார் என்பதையும் மறக்க வேண்டாம்.

///அல்லது, திருப்பூர் தினக்கூலிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறதா?///

கிடைக்கிறதுதான். நான் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு ஒரு சாதாரண வேலையில் இருந்தேன். ஒரு டைலருக்கு, தமிழக்த்தில் மிக அதிகம் கூலி அல்லது சம்பாத்தியம் திருப்ப்பூரில் தான் உள்ளது. கோவில்பட்டி அல்லது தர்மபுரி போன்ற ஊர்களை விட திருப்பூரில் சம்பளம் அதிகம். பல முன்னாள் தொழிகாளர்கள் இன்று தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். வாங்கின சம்பளத்தை ஒழுங்காக சேமித்து, சிக்கனமாக வாழ்ந்து, சில ஆண்டுகள் கழித்து, நல்ல் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறிய அளவில் துவக்கப்பட்ட கம்பெனிகள், ஸ்டிச்சிங் யூனிட்டுகள் அங்கு உள்ளன.

சரி, உழைப்பிற்கேற்ற ஊதியம் எப்படி நிர்னியப்பது ?

/////பொருளியலும் (பொருளாதாரம் என்று ஒரு துறை இல்லை), நிர்வாகமும், வணிகமும் அறிந்தவன் என்பதால் தான், இந்த நிலை. ///

அப்படியா ? அப்படி என்றால் தொழில்முனைவோரின் பங்களிப்பு பற்றி அறிந்திருக்க வேண்டுமே ? also about the economic history of the world too..

எனது பிள்க்கில் பல பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றையும் பாருங்களேன் : http://nellikkani.blogspot.com/

pichaikaaran said...

பாஸ், ஏழை உழைத்து பணக்காரன் ஆகா வேண்டும் என்றால், அதற்கேற்ற சமுக அமைப்பு வேண்டும்...

இந்திய போன்ற நாடுகளில், ஒரு ஏழை விவசாயி, பன்னாட்டு நிறுவனத்துடன் மோத முடியாது... மோதி ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை...

K.R.அதியமான் said...

பார்வையாளன்,

ஏழை விவசாயியே இருந்திருக்காமல் செய்திருக்கலாம் என்பதுதான் விசியம். உலகில் பெரிம்பாலான நாடுகளில் நில உச்ச வரம்பு சட்டம் இல்லை. அதனால் பண்ணைகள் evolved into economic sizes unlike India. படிப்படியாக பெரும் பான்மையான மக்கள் விவசாயத்தில் இருந்து உற்பத்தி துறைக்கு மாறினார்கள். செஞ்சீனாவிலும் இதேதான். ஆனால் நாம் மாறத்தவறியடதால் இன்றும் விவசாயத்தில் பெரும் சிக்கல். இதை பற்றி முன்பு ஒரு தனிபதிவு எழுதியுள்ளேன்..

ரவி said...

good work...

K.R.அதியமான் said...

Thanks Ravi.

Of all the people, you must be knowing better about the two Koreas from your frequent visits to S.Korea. Why don't you write about them from your experiences ?

and the second part of this series is at :

http://nellikkani.blogspot.com/2010/04/2.html

pichaikaaran said...

முதலாளித்துவ நாடுகளில் வேலை இன்மை என்பது உண்டு என்பதும், அதனால்தான், அவுட் சோர்சிங் போன்ற்டவற்றை எதிர்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல...

ஆனால், கம்யுனிச நாடுகளில், நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, உங்களுக்கு வேலையும் சம்பளமும், உண்டு...

manjoorraja said...

பயனுள்ள நல்லதொரு கட்டுரை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

தொடர்ந்து 500 ஆண்டுகளாக செலவந்தராக இருக்கும் குடும்பம் எனக்கு தெரிந்து இல்லை.

பொதுவா ஊர்ல மூணு தலைமுறைன்னு சொல்வாங்க தலைவரே.

120 வருடம். நானே பார்த்துருக்கேன்.

மூணாவது தலமுறை ஒன்னு பிச்ச எடுக்குது அல்லது மொத இரண்டையும் விட உச்சத்துல இருக்குது.

அப்புறம் நீங்க புக் இல்லாம எழுதிய விசயங்கள் என்னால இன்னமும் நம்ப முடியவில்லை தலைவா,

சிகே ன்னு சொல்லிக்கொடுத்த வாத்தியார் போலவே இருக்கு.

Ram Kameswaran said...

Dear Athiyaman,

Interesting blog. Bye the way I commented about comments on the issue of Water- Human rights issue in Vinavu.com

I am also writing a series about Economic History (Adam Smith muthal Amarthya Sen varai) in a tamil magazine called Paadam. You can read them at the following link
http://paadam.in/

I was also a staunch pro capitalist,till few years ago, and the increasing disparity between the rich and poor and the widening gap between the poor and basic amenities of life is constantly pushing me away from capitalism. I am aware that the so called "communism" is not a solution to the problem and along with the economists, politicians,and philanthropists I am also looking for viable solution.

K.R.அதியமான் said...

Dear Ramnath,

Pls try my english post about this 'inequality' at :

http://athiyaman.blogspot.com/2009/07/bogey-of-inequality.html

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

ஜோதிஜி said...

வாழ்த்துகள் நண்பா.

K.R.அதியமான் said...

நன்றி ரவி மற்றும் ஜோதிஜி.