வெனிசுலா என்னும் நரகம்

உலகிலேயே மிக அதிக எண்ணை வளம் கொண்ட நாடு வெனிசுலா. ஆம், சவுதி அரேபியாவை விட அதிக எண்ணை வளம் கொண்டது வெனிசுலா. தென் அமெரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, கடந்த சில ஆண்டுகளாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடிகளை, மிக கடுமையான விலைவாசி உயர்வை, அத்தியாவிச பண்டங்களுக்கு கடும் தட்டுப்பாடுகளை சந்தித்து வருகிறது.

சாவேஸ் என்ற சோசியலிச தலைவரின் ஆட்சியில், சந்தை பொருளியல் கொள்கைகளுக்கு முரணான, சோசியலிச பாணி கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியது வெனிசுலா. ஏழ்மையை வெகுவாக குறைத்து, ஏற்ற தாழ்வுகளை குறைத்த மகத்தான மக்கள் தலைவர் என்று போற்றபட்டார். அமெரிக்க ‘ஏகாதிபத்தியைத்தை’ எதிர்த்து போராடியவர் என்றும் அறியபட்டார்.

வறுமை மற்றும் ஏற்ற தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதை அடைய எந்த வழியை பின்பற்றினால், விளைவுகள் நிலையாக எக்காலத்திலும் இருக்கும் என்பதே முக்கியம். வெனிசுலாவின் அண்டை நாடான சிலேவில் எண்ணை வளம் இல்லை. தாமிர கனிம வளங்கள் உண்டு. கடந்த 40 வருடங்களாக சந்தை பொருளியல் கொள்கைகளை மிக கவனமான, சரியாக பயன்படுத்தி, வறுமையை வெகுவாக குறைத்து, இன்று தென் அமெரிக்க கண்டத்திலேயே மிக வளமான, நிலையான நாடாக திகழ்கிறது.

ஆனால் மாற்றாக வெனிசுலா சோசியலிசம் பேசி, தனியார் துறைகள் பலவற்றையும் அரசுடைமையாக்கி, வரி விகிதங்களை மிக உயர்த்து, அன்னிய செலவாணி விகித்தை செயற்கையாக நிர்ணியத்து பெரும் சிக்கலில் மாட்டியது. கச்சா எண்ணை விலை 150 டாலரில் இருந்த காலங்களில் அரசுக்கு மிக அதிக வருமானம் வந்தது போது, இந்த சிக்கல்கள் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவை உள்ளுக்குள் வளர்ந்து கொண்டிருந்தன. கச்ச எண்ணையின் விலை குறைய குறைய, அதன் ஏற்றுமதியை மட்டும் நம்பி பெரும் அளவிலான நலத்திடங்களை உருவாக்கியிருந்த வெனிசுலா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளும் கச்சா எண்ணை ஏற்றுமதியை நம்பியே இருப்பவை தான். ஆனால் அங்கு வெனிசுலா போல் ‘சோசியலிச’ பாணி பொருளியல் கொள்கைகளை அமல்படுத்தாமல், சந்தை பொருளியல் கொள்கைகளை செயல்படுத்தி, அதே நேரத்தில், எண்ணை உற்பத்தியில் ஈட்டிய ராயல்ட்டி மூலம் பெரும் நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, நிலையாக செயல்படுகின்றன. அங்கு ஜனனாயகம் இல்லை என்பது தான் குறை. அது வேறு விசியம். மலேசியாவும் எண்ணை ஏற்றுமதியை நம்பி உள்ள நாடுதான். அங்கு நிலைமை நன்றாகவே உள்ளது.

வெனிசுலாவின் கரன்சியான பொலிவரின் மதிப்பு செயற்கையாக அரசினால் நிர்ணியக்கப்ட்டு இன்று ஒரு டாலருக்கு சுமார் 7 பொலிவர் என்று நிர்ணியக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கருப்பு சந்தையில் (இதில் தான் உண்மையான மதிப்பு வெளிப்படும்) ஒரு டாலருக்கு சுமார் 200 பொலிவர்கள் என்ற அளவில் பரிமாறப்படுகிறது. கரன்சியின் ’மதிப்பை’ சந்தையை கொண்டு நிர்ணியம் செய்ய அனுமதிக்காமல், செயற்க்கையாக கட்டுபடுத்தி, மிகை மதிப்பை (over valuation) ஏற்படுத்தினால், பல சிக்கல்கள், தட்டுபாடுகள் உருவாகும் என்பதற்க்கு வெனிசுலாவெ சரியான உதாரணம். எண்ணை வளம் மிக மிக அதிகம் இருந்தும், டாலர் பற்றாகுறையினால், இன்று அத்தியாவிச பண்டங்களை இறக்குமதி செய்ய முடியாமல் கடும் தட்டுபாடுகள். உணவுக்கும் தட்டுபாடு. டிபார்ட்மெண்ட் ஸ்டோரிகளில் பெரும் கூட்டம், வரிசைகள், அடிதடிகள், ரகளைகள். ஆண்டுக்கு 46 சதவீத பண வீக்கம் / விலைவாசி உயர்வு. பாட்டாளி மக்களின் நிலை மிக மிக கொடுமையாக, போராட்டமாக மாறிவிட்டது. எல்லோரும் இன்று சாவெசை திட்டுகிறார்கள். அண்டை நாடான சிலேவில் நிலைமை இப்படி இல்லை என்பதையும், எண்ணை வளத்தை நம்பியிருக்கும் வளைகுடா நாடுகள் இப்படி சீரழியவில்லை என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வெண்டும்.


சாவேஸின் சிஸ்யரான மாடேரா தான் இன்றைய வெனிசுலாவின் அதிபர். முட்டாள்தனமான பொருளியல் கொள்கைகளின் விளைவுகளே இவை என்பதை இன்றும் உணர்ந்து கொள்ளாமல் (அப்படி ’ஞானம்’ பெற அவரின் மார்க்சிய பார்வை தடுக்கிறது) இத்தனை அழிவுக்கும் அமெரிக்க ’ஏகாதிப்பத்தியமும்’, பதுக்கலும், வியாபாரிகளும் தான் காரண்ம் என்று தொடர்ந்து பேசி, கேலிக்குள்ளாகி, நம்பகதன்மையை இழந்து வருகிறார்.

உலகிலேயே மிக அதிக எண்ணை வளங்களை வைத்து கொண்டு, இன்று மிக மிக மிக மோசமான வாழ்க்கை தரத்தில் சிக்கி, சீரழியும் வெனிசுலா மார்க்சியம் பேசுபவர்களுக்கு ஒரு பெரிய பாடத்தை தருகிறது. எவ்வகை பொருளியல் கொள்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

இந்தியாவில் 1991 வரை இன்றைய வெனிசுலா போல், ‘’சோசியலிச’ பாணி கொள்கைகளை அமல்படுத்தி சீரழிந்தோம். 1991இல் திவால் நிலைக்கு தள்ளபட்டோம். பிறகு புத்தி வந்து ‘நவ தாரள’ கொள்கைகளை அமல்படுத்தி, மீண்டு வந்து வளர்ந்து கொ?ண்டிருக்கிறோம். நவ தாராள கொள்கைகளை (அவை என்ன என்றே சரியாக புரிந்து கொள்ளாமல்) காய்ந்து கொண்டு, பழைய சோசியலிச பாணி தான் சரியானது என்று இன்றும் பேசி கொண்டிருப்பவர்கள் வெனிசுலா சென்று வர வேண்டும்.

http://www.businessinsider.com.au/why-venezuela-is-most-miserable-country-2015-1


1 comments:

K.R.அதியமான் said...

the current troubles of Venezuella are self inflicted :

Venezuela’s Currency Circus
http://www.nytimes.com/2015/03/07/opinion/francisco-toro-dorothy-kronick-venezuelas-currency-circus.html?ref=topics&_r=0