' தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல்' இவை பற்றிய தெளிவான , சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் 'தாரளமயமாக்கல்' பற்றி புரிந்து கொள்வோம்.
.
சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசியலிச கொள்கைகளின் முக்கிய அம்சம் ' திட்டமிடல்' (centralised planning ) ; அதாவது நாட்டிலுள்ள இயற்கை மற்றும் மனித வளங்களை எவ்வாறு உபயோகப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மட்டுமே 'திட்ட கமிசன்' மூலம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு நேர் எதிரான சித்தாந்தம். பொதுத் துறை நிறுவனங்களுகே முக்கியத்துவம். தனியார்கள் பல முக்கிய துறைகளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்பத்தி) நுழைய தடை. ஏற்கனவே இருக்கும் துறைகளில் தொழிலை விரிவுபடுத்த , குறைக்க பல பல கட்டுப்பாடுகள். உற்பத்தியை பெருக்க தடைகள் பல. இக்கட்டுப்பாடுகளை (controls and licenses) அமல்படுத்த ஒரு மிகப் பலமான , பூதகரமான அரசு எந்திரம் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த எந்திரம் ஊழல் மயமானது. ஒரு தொழிலதிபர் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவ வேண்டுமானால் பல அதிகாரிகளின் தயவும் , 'கருணையும்', அரசியல்வாதிகளின் (பெரும்பாலும் காங்கிரசஸ் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள்) 'ஆதரவும்' தேவையாக இருந்தது. தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வளவே பரவாயில்லை.
.
உதராணமாக கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை. சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும் பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! 'concentration of economic power ' என்ற ஒரு மூடத்தனமான சிந்தனை நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான தட்டுப்பாடுகள் , பதுக்கல் , கள்ளமார்க்கட், லஞ்சம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல் செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 களில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் போன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!
.
Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும் , மிகப்பெரிய அளவில் 'வளரக்கூடாது '. இதற்கான அளவுகோள்கள் 'percentage of market share' அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி , தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.
.
இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். 'பணக்கார்கள்' மீது மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ' செலவு' செய்யவதாக சொல்லப்பட்டது. அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 95 % ஆனது. விளைவு வரி ஏய்ப்பு , கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான விலைவாசி உய்ர்வும் , வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.
.
1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி , சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.
.
விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி , மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமே அன்னிய செலவாணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.
.
இந்த 'தாரளமயமாக்கலை' செய்யாமல் இருந்திருதால், இன்னேரம் நாடே திவாலாகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னும் அதிகரித்திருக்கும்...