1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

அன்னிய செலவாணி கையிருப்பு பற்றி பலருக்கும் சரியான புரிதல்
இல்லை. ஏற்றுமது / ஈரக்குமதி மற்றும் உலக வர்தகம், பெரும்பாலும்
அமெரிக்க டாலர்களில்தான் பல காலமாக நடக்கிறது. டால்ர் தான்
உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.

ந‌ம‌து மொத்த இற‌க்குமதியின் டாலர் மதிப்பில், ந‌ம் ஏற்றும‌தியை
விட‌ மிக‌ மிக‌ அதிக‌ம். முக்கிய‌மாக‌ பெட்ரோலிய‌ப் பொருட்க்கள்,
கச்சா எண்ணை போன்ற‌வை‌க‌ளின் தேவைகள் மிக‌ அதிக‌ அளவில்
இற‌க்கும‌தியை ந‌ம்பி இருக்கிற‌து. இற‌க்கும‌தி செய்ய‌ டால‌ர்க‌ள்
ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும். ந‌ம‌து இந்திய‌ ரூபாயை பெரும்பான்மையான‌
நாடுக‌ள் ஏற்க்க‌ மாட்டார்க‌ள். (ப‌ழைய‌ சோவிய‌த் ர‌ஸ்ஸியா ம‌ட்டும்
விதி வில‌க்கு, பல காரண‌ங்களுக்காக‌).

டால‌ர் ப‌ற்றாக்குறையை ச‌மாளிக்க‌ மூன்று வ‌ழிக‌ள்தான் உள்ள‌ன‌ :

(1) ஏற்றும‌தியை மிக‌ அதிக‌ரித்த‌ல்
(2) அன்னிய முத்லீடுக‌ளை 'தாராள‌மாக‌' அனும‌தித்த‌ல்
(3) அய்.எம்.எஃப் வ‌ங்கியிட‌ம் டால‌ர் க‌ட‌ன் வாங்குதல்

'சோசிய‌லிச‌', 'சுதேசி' கொள்கைக‌ளாஇ 1947 முத‌ல் 1991 வ‌ரை இந்திய‌ அர‌சு
மேற்கொண்ட‌தால், முத‌ல் இர‌ண்டு வ‌ழிக‌ளும் சாத்திய‌மில்லாம‌ல் போன‌து.
சுத‌ந்திர‌ம் பெற்ற போது சுமார் 500 மில்லிய‌ன் ஸ்டெர்லிங் ப‌வுண்டுக‌ளை
ஆங்கிலேய‌ அர‌சு, நிக‌ர‌ கையிருப்பாக‌ விட்டுவிட்டுச் சென்ற‌து. ந‌ம‌து
ம‌ட‌த்த‌ன‌மான‌, 'மூட‌ப்ப‌ட்ட‌' பொருளாதார‌ கொள்கைக‌ளால், அந்த‌ இருப்பு
விரைவில் க‌ரைந்து, பிற‌கு அய்.எம்.எஃப் இட‌ம் வ‌ருட‌ந்தோரும் க‌ட‌ன்
வாங்கி இறக்கும‌திக‌ளுக்கான‌ டால‌ர்க‌ளை பெற்றோம்.(உலக வங்கி
கடன்கள் வேறு வகை ; அவை project specific and are not for dollar needs of govt.

இந்திய‌ ரூபாயின் ம‌திப்பு, செய‌ற்கையாக‌ டால‌ருட‌ன் ஒரு குறிப்பிட்ட‌
விகித‌த்தில் அர‌சால் நிர்ணிய‌க்க‌ப்ப‌ட்டு, அதுவே அனைத்து வ‌ர்த‌க‌ங்க‌ளுக்கும்,
பேர‌ங்கலுக்கும் அடிப்ப‌டையாக‌ கொள்ள‌ப்ப‌ட்ட‌து. ந‌ம‌து ப‌ற்றாகுறை
ப‌ட்ஜெட்டுக‌ளால் ப‌ண‌ வீக்க‌ம் மிக‌ மிக‌ அதிக‌மாகி, அர‌சின் மொத்த‌
க‌ட‌ன் மிக‌ அதிக‌மாகி, ரூபாயின் நிக‌ர‌ ம‌திப்பு ப‌டிப‌டியாக‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு
குறைந்த‌து. ஆனால் அர‌சு 'நிர்ணிய‌த்த‌' ரூபாய் (டால‌ர்) ம‌திப்பு,
ரூபாயின் உண்மையான‌ ச‌ந்தை ம‌திப்பை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்.

இத‌ன் மொத்த‌ விளைவு, க‌டும் டால‌ர் ப‌ற்றாக்குறை. இறக்கும‌தி செய்ய
லைசென்ஸ்க‌ள் 'வேண்டிய‌வ‌ர்க‌ளுக்கு' ம‌ட்டும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது.
இற‌க்கும‌தி லைசென்ஸுகளை, அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
'புண்ணியத்தில்' அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.

கருப்பு பணாமும், கள்ளச் சந்தையும், கடத்தலும், டாலர்களை
கள்ளத்தனமாக பெற ஹவாலா முறைகளும் தோன்றின.
வேண்டிய அளவு இற‌க்கும‌தி செய்ய‌ முடியாம‌ல் போன‌தால்,
த‌ங்க‌ம், எலெக்ட்ரானிக் பொருட்க்க‌ள் போன்ற‌ 'ஆட‌ம்ப‌ர‌'
பொருட்கக்க‌ளை க‌ட‌த்த‌ர்கார்க‌ள் க‌ட‌த்தி விற்ற‌ன‌ர். க‌ட‌த்த‌ல்
ஒரு முக்கிய‌ உப‌ தொழிலாக‌ சுத‌ந்திர‌ இந்தியாவில் உருவெடுத்தது.

வ‌ருட‌ங்க‌ள் செல்ல‌ செல்ல‌, டால‌ர் ப‌ற்றாக்குறையின் அளாவு மிக‌
மிக‌ அதிக‌மாகி, அய்.எம்.எஃப் இட‌ம் டால‌ர் க‌ட‌ன் மேலும் மேலும்
வாங்கி, திவால் நிலைமைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டோம். 1990க‌ளில் ஒரு
ப‌ட்ஜெட் உரையில் ந‌ம் நிதிய‌மைச்ச‌ர் பா.சித‌ம்ப‌ர‌ம், தாயுமான‌வ‌ர்
பாசுர‌த்தை ச‌ற்றே மாற்றி, '...என் ப‌ணி க‌ட‌ன் செய்து கிடைப்ப‌தே !'
என்று பாடினார் !!!

1991இன் ஆர‌ம்ப‌த்தில், இர‌ண்டு வார காலத்திற்க்கு ம‌ட்டுமே
தேவையான‌ டால‌ர் இருப்பு இருந்த‌, மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
நிலையில் ந‌ம‌து நிதிய‌மைச்ச‌ர், அர‌சின் த‌ங்க‌த்தை விமான‌த்தில்
ல‌ண்ட‌ன் அனுப்பி, அங்கு அட‌மான‌ம் வைத்து, இறக்கும‌திக்கு
தேவையான‌ டால‌ர்க‌ளை அவ‌ச‌ர‌மாக‌ புர‌ட்டினார். 1991இன்
ம‌த்தியில் தேர்த‌ல் ; ந‌ர‌சிம்ம‌ ராவ் பிர‌த‌மரானார். ம‌ன்மோக‌ன் சிங்
அவ‌ர்க‌ளை நிதிய‌மைச்ச‌ராக்கி, சுத‌ந்திர‌மாம‌ செய‌ல்ப‌ட‌
அனும‌தித்தார்.

ம‌ன்மோக‌ன் சிங் அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ 'தார‌ள‌ம‌ய‌மாக்க‌ல்'
கொள்கைக‌ளை அம‌ல்ப‌டுத்த‌ தொட‌ங்கினார். அன்னிய முத‌லீடுக‌ள்
ப‌ல‌ துறைக‌ளில் 'தார‌ள‌மாக‌' அனும‌திக்க‌ப‌ட்ட‌ன‌. ப‌ங்கு வ‌ணிக‌ம்,
வ‌ங்கி ம‌ற்றும் நிதித் துறைக‌ளைலும் ப‌டிப்ப‌டியாக‌ அன்னிய
முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ன. உற்பத்தி துறையை அதுவரை
கட்டி போட்டிருந்த லைசென்ஸ் முறை அடியோடு ரத்து
செய்யப்பட்டது. அனைத்து வ‌ரி விகித‌ங்க‌ளும் ப‌டிப்ப‌டியாக‌
குறைக்க‌ப்ட்ட‌ன‌. தொழில் துறைக‌ள் ஊக்குவிக்க‌ப‌ட்ட‌ன‌.
க‌ர‌ண்ட் அக்க‌வுண்ட் க‌ணாக்கில் ரூபாய் / டால‌ர் அன்னிய‌
செல‌வாணி வ‌ர்த‌க‌ம் முத‌ன் முறையாக‌ அனும‌திக்க‌ ப‌ட்ட‌து.
ஏற்றுமதியாளர்களுக்கும் வருமான வரி முற்றாக ரத்து
செய்யப்பட்டது. கணனி மற்றும் மென்பொருள் ஏற்றுமதி
துறை மிக வேகமாக வளார்ந்துமேலும் அன்னிய செலவாணி
ஈட்டியது.

ம‌டை திற‌ந்த‌ வெள்ள‌ம் போல் ப‌ல‌ ஆயிர‌ம் கோடி டால‌ர்
ம‌திப்பிலான‌ அன்னிய முத‌லீடுக‌ள், இந்தியாவினுல் பாய்ந்த‌து.
(ஆனால் சைனாவை ஒப்பிட்டால் மிக‌ குறைவான‌ அளாவுதான்).
அன்னிய முத்லீட்டாள‌ர்க‌ள் த‌ங்க‌ள் டால‌ர்க‌ளை ரிச‌ர்வ் வ‌ங்கி
மூல‌ம் இந்திய‌ ரூபாய்க‌ளாக‌ மாற்றி, இங்கு புதிய‌ முதலீடுக‌ளை
செய்த‌ன‌ர் / செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ற்றின் மொத்த‌ விளைவு : ந‌ம‌து டால‌ர் இருப்பு ப‌டிப‌டியாக‌
உய‌ர்ந்து இன்று சுமார் 1,00,000 கோடி ரூபாய் அளவை க‌ட‌ந்து
விட்ட‌து. க‌ட‌ந்த‌ ப‌த்து ஆண்டுக‌ளாக‌ அய்.எம்.எஃப் வ‌ங்கியிட‌ம்
இருந்து டால‌ர் க‌ட‌ன் வாங்க‌வில்லை !! ரூபாயின் ம‌திப்பு க‌ட‌ந்த‌
50 ஆண்டுக‌ளில் முத‌ன்முறையாக‌ டால‌ருக்கு எதிராக‌ உய‌ர்ந்த‌து.
இதுவ‌ரை வாங்கிய‌ அன்னிய‌ செல‌வாணி க‌ட‌ன்க‌ளை திருப்பி
செலுத்த‌ வ‌ழி பிற‌ந்த‌து !!

மேலும் அன்னிய‌ முத‌லீடுக‌ளால் உருவான‌ நிறுவ‌ன‌ங்க‌ளினால்
ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர்க‌ளுக்கு புதிய‌ வேலை வாய்ப்புக‌ள் ; அர‌சிற்க்கோ
ப‌ல‌ ஆயிர‌ம் கோடி புதிய‌ வ‌ரிவ‌சூல் ம‌ழை. அரசின் மொத்த‌ வ‌ரி
வ‌சூல் ப‌ல‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு இந்த‌ 17 ஆண்டுக‌ளில் உய‌ர்ந்துள்ள‌து.
அதைகொண்டு ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளை அம‌லாக்க‌ நிதி கிடைத்து.

அன்னிய முத‌லீடுக‌ளை, உல‌க‌ம‌ய‌மாக்க‌லை 'எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்'.
1991இல் திவால் நிலையில் இருந்த‌, மிக‌ மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
ந‌ம் நிலைமையினை வேறு எந்த‌ 'வ‌ழிக‌ளில்' கையாண்டிருப்ப‌ர்க‌ள் ?
மாற்றுவ‌ழி இருந்தால் விவாதிக்க‌லாமே...

உலகமயமாக்கல் பற்றி...

முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்.

இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!

சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)....

சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?

இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி.

விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

1. உலகெங்கும் பல பணகார நாடுகள் மிக மிக அதிகமாக தம் விவசாயிகளுக்கு
மான்யம் வழங்குவதால் விவசாய விலை பொருட்க்கள் விலை மற்ற பொது விலைவாசி
அளவுக்கு கூடவில்லை. முக்கியமாக பருத்தி. நம்மால் அந்த அளவிற்கு மானயம்
அளிக்க முடியவில்லை. ஊழல் வேறு பெரும் பகுதி மானியத்தை அபகரிக்கின்றது.

2.நில சீர்திருத்தம் என்ற பெயரில், பெரும் பண்ணைகள் இன்று துண்டு
துண்டாக்கப்பட்டு, ஒரு விவ‌சாயின் சராசரி நிலம் 2 ஏக்கருக்கும்
குறைவானது. முன்னேறிய நாடுகள், சைனாவிலும் இதற்க்கு நேர் எதிராக மிக
பெரிய பண்னைகள், நவீன தொழில்னுட்பம் பயன் படுத்தபடுகின்றன. economics of
scale and
minimum farm size..

3.இந்தியாவில் நாம் 1991 வரி கடைபிடித்த லைசென்ஸ், பெர்மிட் ராஜ்
பொருளாதார கொளகைகிளினால், தொழில்துறை முடக்கபட்டது. இல்லவிட்டால், பல
கோடி கிராம மக்கள், அந்தந்த பகுதிகளிலேயே உருவாகும் உற்பத்தி துறை வேலை
வாய்ப்பை பெற்று படிப்படியாக மாற்று வழி பெற்றிருப்பர். சீனாவில் அதுதான்
நடந்தது. The bulk of the population migrated gradually from farming to
manufacturing and finally to service sector, unlike India.

4.அர‌சின் பற்றாக்குறைகளால் ப‌ண‌வீக்கம் அதிகரித்து, அனைத்து
விலைவாசிகளும், கூலியும் மிக அதிகமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமை அதிகம்.

5.அரசு அளிக்கவேண்டிய அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள், ஊழல் மற்றும்
பொறுப்பற்ற அர‌சு ஊழிய‌ர்க‌ளினால் ச‌ரியாக‌ விவசாயிக‌ளுக்கும்
ஏழைக‌ளுக்கும் கிடைக்காத்தால், அவ‌ர்க‌ள் த‌னியார் துறைக‌ளை நாட‌
வேண்டிய‌ அவ‌ல‌ம். மேலும் செல‌வுக‌ள். சுமைக‌ள்.

6.இன்னும் ப‌ல‌ சிக்க‌லான‌ கார‌ணிக‌ள்....

கருப்பு பணத்தின் லீலைகள்

வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்..

மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?