கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

பொருளாதார‌ ஏற்றதாழ்வுக‌ளை ச‌ரி செய்வ‌தே
நோக்க‌மாக‌ கொண்ட‌ க‌ம்யூனிச‌ சித்தாந்த‌ம், அத‌ற்க்கு
விலையாக‌ அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌ உரிமைக‌ளை
ப‌லியாக் கேட்கிற‌து என்ற‌ விசிய‌ம் ப‌ல‌ருக்கும்
தெரிவ‌தில்லை.

அதாவ‌து க‌ருத்துச் சுத‌ந்திர‌ம், பேச்சுரிமை, ப‌த்திரிக்கை
சுத்ந்திர‌ம், வெளிப‌டையான‌, நியாமான‌ நீதி ம‌ன்ற‌ங்க‌ள், விசாரைனை
இன்றி, அப்பீல் இன்றி யாரையும்
சிறைப‌டுத்த‌ முடியாத‌ ச‌ட்ட‌ உரிமைக‌ள், ம‌த‌
உரிமைக‌ள், சொத்துரிமை போன்ற‌ அனைத்து
அடிப‌டை உரிமைக‌ளும் புர‌ட்சி அர‌சு ர‌த்து
செய்யும் என்ப‌தே வ‌ர‌லாறு. All fundamental rights,
including right to life are suspended and suppresed.

தொழிற்ச‌ங்க‌ள், ம‌ற்றும் ஸ்ரைக்குக‌ள் க‌ம்யூனிச‌
நாடுக‌ளில் அனும‌திக்க‌ ப‌ட‌ மாட்டா. இந்த‌
bloggerஇல் ந‌ட‌க்கும் சுந்திர‌மான‌ விவாத‌ங்க‌ள்,
மாற்றுக்க‌ருத்துக்க‌ளை அனும‌திப்ப‌து போன்ற‌வை
சிறிதும் இருக்காது.

வ‌ர்க‌ எதிரி, எதிர் புர‌ட்சியாள‌ர், அல்ல‌து ம‌க்க‌ளின்
எதிரி என்று யாரை வேண்டுமானாலும் முத்திரை
குத்தி எந்த‌ நேர‌த்திலும் ரகசியமாக கைது
செய்ய‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப‌ட‌லாம் ; வ‌தை
முகாம்க‌ளில் அடைக்க‌ ப‌ட‌லாம். கொல்ல‌ப்ப‌ட‌லாம்.
விசாரனை ம‌ற்றும் வெளிப‌டையான நீதி ம‌ன்ற‌
வ‌ழ‌க்குக‌ள் கிடையாது. ஹிட்ட‌ல‌ரின் நாசிப்ப‌டைக‌ள்,
யூத‌ர்க‌ளையும் பிற‌ ம‌க்க‌ளையும் எப்ப‌டி வ‌தை
முகாம்க‌ளில் அடைத்து கொன்ற‌ன‌ரோ அதே போல்
ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ர‌ஸ்ஸியாவிலும், சைன‌விலும்
கொல்ல‌ப‌ட்ட‌ன‌ர். பார்க்க‌ :

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part3

கொடுங்கோல‌ன் ம‌வோவின் ஆட்சியில் திட்ட‌மிட்டு
கொல்ல‌ப‌ட்ட‌ ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ப‌ற்றி அறிய‌ :

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part7

சோவிய‌த் யூனிய‌னை ஸ்டாலின் ஆண்ட‌ கால‌த்தில்,
1930க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் உக்ரேன் பிர‌தேச‌த்தில்
செய‌ற்கையாக‌, திட்ட‌மிட்டு உருவாக்க‌ப் ப‌ட்ட‌
பெரும் ப‌ஞ்ச‌த்தில் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் மாண்ட‌ன‌ர்.
அதை இன்றும் உக்ரேன் நாட்டின் பெரும்
ஹோல்ட்ம‌ர் என்று அழைத்து, அதை அங்கு
ம‌றுப்ப‌து குற்ற‌ம் என்று அறிவிக்க‌ப‌ட்டுள்ள‌து.

அதை ப‌ற்றி அறிய‌ :

http://en.wikipedia.org/wiki/Holodomor

விக்கிபீடிய‌வில் விவ‌ரிக்க‌ப‌ட்டுள்ள‌தாலேயெ அந்த‌
கொடுமையான‌ விவ‌ர‌ங்க‌ள‌ அன‌த்தும் பொய்
என்று ஒற்றை வ‌ரியில் அதை சில‌ 'மேதைக‌ள்'
ம‌றுக்க‌க் கூடும். விஞ்ஞான ரீதியாக‌ வ‌ர‌லாறை க‌ற்ப‌தாக
வேறு அவ‌ர்க‌ள் க‌தைப்ப‌ர் !! இந்த‌ விவ‌ர‌ங்க‌ளை
உல‌கின் உள்ள‌ அனைத்து ஆய்வ‌ள‌ர்க‌ளும் ஏற்றுக்க் கொண்டுள்ள‌ன‌ர்.
சந்தேகம் இருந்தால் உக்ரேன்
நாட்டில் விசாரிக்க‌வும்.

புர‌ட்சி ம‌ற்றும் க‌ம்யூனிச‌ம் ப‌ற்றி பேசுவோர், த‌ங்க‌ள்
அடிப்ப‌டை உரிமைக‌ளை இழ‌க்க‌ த‌யாரா ?

பொருளாதார‌ ஏற்ற த‌ழ்வுக‌ளை ச‌ந்தை பொருளாதார‌ம் மூல‌மாக‌வே அனைத்து
முன்னேறிய‌ நாடுகளும்
அடைந்த‌ன‌. முக்கிய‌மாக‌ இர‌ண்டாம் உல‌க்போரில்
க‌டும் அழிவை ச‌ந்தித்த‌ ஜ‌ப்பான், 35 ஆண்டுக‌ளில்
உல‌கின் இர‌ண்ட‌வ‌து ப‌ண‌க்கார‌ நாடாக‌ வ‌ள‌ர்ந்தது
ச‌ந்தை பொருளாதார‌த்தை பின் ப‌ற்றிதான்.

வ‌றுமை கொடுமைக‌ளை ஒழிக்க‌ க‌ம்யுனிச‌ம்
காட்டும் வ‌ழி வெறும் மாயை. வ‌றுமையும்
ஒழிய‌வில்லை, ப‌ல் கோடி ம‌க்க‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தே
வ‌ர‌லாறு. திரிபுவாதிக‌ளின் ச‌தி, சில‌ வ‌ர‌லாற்றுத்
த‌வ‌றுக‌ள் என்று ச‌ப்பை க‌ட்டுவ‌ர் இன்றைய‌
க‌ம்யூனிச்ட்டுக‌ள். உண்மைக‌ளை உண‌ராத‌வ‌ர்க‌ளின்
பேச்சு அது.

This post is addresed to all those who have 'vague' Marxist
beliefs with little knowldge about the terrible human rights
violations that is inseparable from communist regimes.

Communism is incompatible with basic democracy and
human rights. Nor can communism solve the problems
it tries to address, as history proves.

"One who refuses histroy is condemned to repeat it."

உபரி மதிப்பு, சுரண்டல், வர்கப் போர், எகாதிபத்தியம்,
பூர்ஷ்வா போன்ற சில வார்த்தைகளை மட்டும்
வைத்துகொண்டு 100 வருடமாக அதையே அனைத்து சூழ்னிலைகளுக்கும்
திரும்பத்திரும்ப ஜல்லி அடிப்பர்....

உபரி மதிப்பு என்பது விஞ்ஞானபூர்வமாக மறுக்கபட்டு
வெகு நாளாச்சு. suprlus value of a worker (working with same
machineary and same hours) varies with nations, and other factors.
how ? and if there is no market for his output, there is no question of
surplus value.and what about the surplus value of the organiser /
motviator / boss ?

1960களில் இந்தியாவில் உணவு பஞ்சம், கடும்
விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம்.
அப்போது தாரளமயமாக்கல் இல்லை ; நேர் எதிராக‌
அரசு கட்டுபாடுகள், சோசியலிச பாணியி‌ல்..

அன்றும் காம்ரேடுகள் இதே பல்லவியை தான் பாடினர்.
இன்றும், என்றும் அதே தான்.

திரிபுவாதிக‌ள் என்று ஒரு க‌தை. திரிபுவாதிக‌ள‌
அனைத்து க‌ம்யூனிஸ்ட் நாடுக‌ளிலுமே எப்ப‌டி
தோன்றி, க‌ம்யூனிஸ‌த்தை அழித்த‌ன‌ராம் ? இதிலிருந்தே
புர‌ட்சி அர‌சு உல‌கெங்கிலும் சில‌ கால‌ங்க‌ளில்
திரிபுவாதிக‌ளிட‌ம் ம‌ட்டும் என்று புரிகிற‌தா ?
திரிபுவாதிக‌ள் ஏன், எப்ப‌டி தோன்றுகின்ற‌ன‌ர் ?
அவ‌ர்க‌ள் என்ன‌ அயோக்கிய‌ர்க‌ளா அல்ல‌து
மூட‌ர்க‌ளா ? ந‌டைமுறை வாழ்க்கை ம‌ற்றும்
ம‌னித‌ சுபாவ‌த்தை புரிந்து கொள்ள‌
முடியாத‌வ‌ர்க‌ள்தாம் திரிபுவாதிக‌ள் ஏன்
தோன்றுகின்ற‌ன‌ர் என்று புரியாம‌ல் த‌விப்ப‌ர்...