சுதந்திர சந்தை பொருளாதாரமும் ஜனனாயகமும்

சுதந்திர சந்தை பொருளாதாரமும் ஜனனாயகமும்

ஜனனாயகத்திற்க்கும், சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கும் உள்ள
தொடர்புகள் பற்றி பார்ப்போம். இரண்டிற்க்கும் அதிக தொடர்பில்லை என்ற
தவறான கருத்தாக்கம் இன்னும் பரவலாக உள்ளது. ஆனால் சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்டுத்தினால் தான் அடிப்படை ஜனனாயகம் மற்றும்
மனித உரிமைகளை நிலை நாட்ட முடியும் என்பதே வரலாறு தரும் பாடம். மாற்றாக
சோசியலிசம் (அது ஜனனாயக பாணி சோசியலிசமானலும் சரி, கம்யூனிச பாணி
சோசியலிசமானாலும் சரி) சர்வாதிகாரத்திற்க்கு தான் இட்டு செல்லும்
என்பதையும் பார்போம்.

சுதந்திர சந்தை பொருளாதாரத்தின் மூலவேர் சொத்துரிமை தான். 1948இல் உருவான
சர்வதேச மனித உரிமைகள் பற்றிய அய்.நா பிரகடனத்தில், சொத்துரிமையும் ஒரு
முக்கிய அம்சம். லிப்ரல் ஜனனாயகம் என்பது இந்த வரலாற்று முக்கியம்
வாய்ந்த பிரகடனதின் அடிப்படையில் தான் அமைக்க முடியும். சொத்துரிமையை
பலவீனப்படுத்தும் முயற்ச்சி மற்ற அனைத்து அடிப்படை உரிமைகளயிம் நசுக்க
வழி வகை செய்யும் என்பதையும் பார்க்கலாம்.

உதாரணமாக சுதந்திர இந்தியாவில் பெரு நிறுவனங்களை அரசுடைமையாக்க நடந்த
முயற்சிகளுக்கும், நில உச்ச வரம் சட்டத்திற்க்கும் உச்ச நீதி மன்றம்
'பிற்போக்குதனமாக' தடையாக இருப்பதாக கருதிய, இடதுசாரிகளால்
நிரம்பியிருந்த, அன்றைய காங்கிரஸ் அரசு, பாரளுமன்ற நடவடிக்கைகள் மூலம்
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகளை பலவீனப்படுத்த சட்டம் இயற்றியது.
சமத்துவம் என்ற லட்சியவாத நோக்குடன், ஏழைகளுக்கு பயன் அளிக்கும் என்ற
எண்ணத்தின் உருவாக்கப்பட்ட சட்டங்கள் உண்மையில் ஏழைகளில் நலன்களுக்கு
எதிராக, அரசு எந்திரம் சர்வாதிகாரத்தனமாக பயன்படுத்தவே
பயன்படுத்தப்பட்டது. இன்றைய நந்திகிராம் மற்றும் சிங்கூர் பிரச்சனைகளே
உதாரணம். தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்த சிறு
விவசாயிகள் கொடூரமாக நசுக்கப்பட்டனர். தனியார் நிறுவனங்களுக்காக அரசே
நிலங்களை விவசாயிகளிடம் இருந்து கட்டாயமாக பிடுங்க இச்சட்டங்கள் வழிவகை
செய்தது. லிப்ரல் ஜனனாயக நாடுகளில் இது சாத்தியமில்லை. மேற்க்கு
அய்ரோப்பாவில் இப்படி தனியார் நிலங்களை அரசு பிடுங்க முடியாது. எனென்றால்
அங்கு சொத்துரிமை பலமாக பேணப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு
தேவைபடும் நிலங்களை விவசாயிகள் மற்றும் இதர உரிமையாளர்களிடும் இருந்து
நேரடியாக, பேரம் மூலம் தான் வாங்க இயலும். இங்கு சிறப்பு பொருளாதார
மண்டலம் என்ற பெயரில் நில மாஃபியாவும், அரசு எந்திரமும் கூட்டாக நிலங்களை
சட்டப்படி 'கொள்ளையடிக்கும்' நிலை !

சோசியலிச கொள்கைகள் என்ற பெயரில் சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான
எந்த ஒரு செயல் திட்டமும் அரசு எந்திரத்தை மிக பலப்படுத்தி,
சர்வாதிகாரத்திற்க்கு இட்டு செல்லும் என்பதை 'Road to Serfdom' என்ற
நூலில் ஃப்ரெட்ரிக் ஹயக் 1944இல் விவரித்துள்ளார். இந்தியாவில் 60கள்,
70களில் சோசியலிச கோசங்கள் உச்சமடைந்து, தனியார் துறையே நசுக்கப்பட்டது.
லைசென்ஸ், பெர்மிட், கோட்ட ராஜ்ஜியம் உருவாகி, அரசு எந்திரமும்,,
காங்கிரஸ் கட்சியும் மிக மிக பலம் பெற்று, சர்வாதிகாரத்தை நோக்கி
பயணித்தது. ஊழலும், பொருளாதார தேக்கமும், வேலையின்மை மற்றும் வறுமை
அதிகரிக்க காரணமாகியது. (நகசல்பாரி எழுச்சிக்கு இதுவே காரணம்). பெரும்
தொழில் அதிபர்கள் அனைவரும் புது டில்லிக்கு பணிந்து லஞ்சம் அளித்தே தன்
தொழில்களை நடத்த, விரிவாக்க முடிந்தது. புது டில்லியில் 'லையாசன்
அதிகாரிகள்' என்ற அதுவரை இல்லாத ஒரு புதிய 'வேலைவாய்ப்பு' உருவானது.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சர்வ வல்லமை படைத்த சக்கரவர்த்தி போல்
கோலோச்சினார். அவரை கண்டு பெரும்பாலனவர்கள் பயம் கலந்த மரியாதை கொண்டனர்.
1972இல் நிகழ்ந்த நகர்வாலா ஊழல் தான் சரியான உதாரணம். நகர்வாலா என்ற
நபர், டில்லி பாராளுமன்ற சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின்
மேலாளலரிடம் தொலைபேசி மூலம், பிரதமர் போல் குரலை மாற்றி பேசி, தான்
அனுப்பும் நபரிடம் 60 லச்ச ரூபாய் (இன்றைய மதிப்பில் சுமார் 15 கோடி
இருக்கும்) அளிக்க 'கட்டளையிட்டார்'. வங்கிகள் தேசியமயகாகப்பட்ட காலம்
அது. பிரதமருக்கு அந்த வங்கியில் வங்கி கணக்கு கூட இல்லை. ஆனால் அந்த
வங்கி மேலாளர் பயபக்தியுடன் நகர்வாலாவிடம் 60 லச்சத்தை ஒப்படைத்துவிட்டு
பிறகு அடுத்த நாள், ஒரு வங்கி ச்லானை எடுத்து கொண்டு பிரதமர் அலுவலகம்
சென்று பின் தான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இன்று 2013இல் அதே
வங்கி கிளையின் இன்றைய மேலாளலரை நமது பிரதமர் நேரில் அழைத்து, பணம்
கேட்டாலும் இந்த மேலாளர் மறுத்துவிடுவார். மேலும் தனியார் ஊடகங்கள் பெரிய
அமர்களப்படுத்தி, பிரதமர் பதவி விலக நேரிடும். 1972அய் விட இன்று
பிரதம்ரின் அதிகாரம் மிக மிக குறைக்கப்பட்டுளது. ஒரே காரணம் இன்று
தாரளமயமாக்கல் மற்றும் கூட்டாட்சி முறை.

ஊடகங்கள் அன்று அரசின் சர்வாதிகார்த்திற்க்கு மிக பணிந்தே இயங்க
முடிந்தது. முக்கியமாக வானொலி மற்றும் தொலைகாட்சியில் தனியார்
நிறுவனங்களுக்கு அனமதி இல்லை. எனவே அன்று தூர்தர்சனும், அகில இந்திய
வானொலியும் அரசின் பிரச்சார பீரங்கிகளாக மட்டுமே செயல்பட்டன. இது 1975-77
அவசர நிலை காலத்தில் உச்சபட்டச நிலையை எட்டியது. அன்று 'ஜனனாயக சோசியலிச
பாணி' கோலோச்சியது தான் காரணம். 90களில் தொலைகாட்சி துறையில் தனியார்களை
அனுமதித்த பின் தான் இன்று பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம்
பெரும் அளவில் முன்னேறியுள்ளது. 24 மணி நேர செய்தி சேன்ல்களில்
உடனுக்குடன் அரசுக்கு எதிரான எந்த ஒரு செய்தியும் சுடச்சுட, காணொளியுடன்
மக்கள் பெற இயலும் நிலை இன்று. அமைச்சர்களும், அதிகாரிகளும் தனியார்
தொலைகாட்சி நிறுவங்களை கண்டு பயப்படும் நிலை இன்று. தூர்தர்சன் மட்டும்
கோலோச்சிய காலங்களில் கற்பனை கூட செய்ய முடியாது இதை. இந்த அருமையான
மாற்றத்திற்க்கு அடிப்படை காரணம், தனியார் நிறுவனங்களை தாரளமாக
அனுமதிக்கும் சந்தை பொருளாதார கொள்கைகள் தான். இணையம் மற்றும் செல்பேசி
துறையின் அசுர வளர்சிக்கும் இதே காரணிகள் தான். அரசு நிறுவனமான
பி.எஸ்.என்.எல் மட்டும் தான் அன்று செயல்பட அனுமதி. 90களில் தனியார்களை
இத்துறையில் அனுமதித்த பின் தான் தொலைதொடர்பு துறையில் மிகப் பெரும்
வளர்சி மற்றும் மலிவான, விரிவான சேவைகள். சோசியலிசம் என்ற பெயரில்
தனியார்களை அனுமதிக்காமலே இருந்திருந்தால், இந்த அருமையான மற்றம்
சாத்தியமில்லை. இதன் மூலம் உருவான பெரும் கருத்து சுத்ந்திரமும்,
பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகியிருக்காது.

தேர்தல் கமிசன், உச்ச நீதி மன்றம், சி.ஏ.ஜி போன்ற அமைப்புகள் இன்று மிக
பலம் பெற்று, அரசின் எதேச்சாதிகார போக்கிற்க்கு நல்ல தடையாக செயல்பட
முடிகிறது. அன்று உச்ச நீதி மன்றம் பிரதமரை 'சக்ரவர்த்தியாக' ஏற்று அடிமை
போல் செயல்பட வேண்டிய நிலை. அவசர நிலை காலகட்டத்தில் இது மிக மோசமான
நிலையை எட்டியது. இன்று ஜுடீசியல் செய்ல்பாடு மிக நன்றாக
முன்னேறியுள்ளது. தேர்த்ல் கமிசன் இன்று சுதந்திரமாக செயல்பட முடிகிறது.

மாநில சுயாட்சி இன்று ஓரளவு சாத்தியமாகி உள்ளது. மாநில அரசுகளை
ஏதாச்சாதிகார முறையில், நியாமில்லாத காரணங்களை காட்டி, ஆர்டிக்கிள்
356அய் பயன்படுத்தி கலைக்க அன்று மத்திய அரசால் முடிந்தது. உச்ச நீதி
மன்றத்தின், 1993 எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பின் பிறகு கடந்த 20 வருட்ங்களாக
இது முடியாமல் போனது. 90களுக்கு பிறகு உருவான புதிய அலைகள், உச்ச
நீதிமன்றத்தின் சுயேட்சையான போக்கையும், அரசாங்கத்தின் கட்டுப்பாடில்
இருந்து ஓரளவு விடுபடவும் வகை செய்ததே இது போன்ற தீர்ப்புகள்
சாத்தியமானதிற்க்கு அடிப்படை காரணம்.

'புது டெல்லி' என்ற சொல்லாடலுக்கு அன்று மிக அதிக பயங்கலந்த மரியாதையும்,
சில நேரங்களில் அச்சத்தையும் பரவலாக ஏற்படுத்தியது. செய்திதாள்களில்
அடிக்கடி தலைப்பு செய்தியாக 'புது டில்லி இதை சொல்கிறது' , 'புது டெல்லி
அதை கருதுகிறது' என்று இருக்கும். காரணம் அன்று பொருளாதாரம் மிக மிக
அதிகமாக புது டில்லியில் இருந்தே கட்டுப்படுத்தப்பட்டது. பொருளாதார
அதிகாரம் ஒரு முனையில் குவிந்தது ; அது அரசியல் அதிகாரத்தையும் அதே
முனையில் குவிய வழிவகை செய்தது. இன்றய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. ஊழல்
தான் பிரச்சனை. அதிகார துஸ்பிரயோகம் வெகுவாக குறைந்துள்ளது. பிரதமர்,
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அன்று சர்வாதிகாரிகள் போல் செயல்பட
முடிந்தது. இன்று நிலைமை அத்தனை மோசமில்லை. காட்சி ஊடங்களில் அமைச்சர்களை
சர்வசாதாரணமாக கேள்வி கேட்ட இயல்கிறது. கடுமையான மாற்று கருத்துக்கள்,
விவாதங்கள் சாத்தியமாகியுள்ளன.

சந்தை பொருளாதாரமும் சர்வாதிகாரமும் ஒருங்கே உருவான வலதுசாரி சர்வாதிகார
நாடுகளை பற்றி பார்க்கலாம். கம்யூனிச பரவலை எதிர்க்க முனைந்த நாடுகள்
படிப்படியாக வலதுசாரி சர்வாதிகாரங்களாக உருமாறின. தென் கொரியா, தைவான்,
சிலி போன்ற நாடுகள் 40 வருடங்களுக்கு முன்பு அப்படி தான் இருந்தன. ஆனால்
சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை நடைமுறைபடுத்தும் போது, சர்வாதிகாரம்
படிப்படியாக வலுவிலந்து, ஜனனாயகத்தை நோக்கிய பயணம் துவங்கியது. சந்தை
பொருளாதாரம் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, வறுமையை
வெகுவாக குறைத்து, ஒரு புதிய நடுத்தர வர்கம் உருவாக வகை செய்தது. பெரும்
எண்ணிகையிலான இந்த புதிய நடுத்தர வர்க்கம் உருவாக்கிய புதிய சக்திகள்
(டைனமிக்ஸ்) நாட்டின் அரசியலை வெகுவாக மாற்றியது. சிலி நாட்டில் 1973இல்
உருவான வலதுசாரி சர்வாதிகாரம் மேற்கூறிய வழிமுறையில் படிப்படியாக மாறி,
லிபரல் ஜனனாயகமாக இன்று உருவெடுத்து உள்ளது. அன்று சிலி அரசுக்கு ஆலோசகரக
செயல்பட்ட மில்ட்டன் ஃபீரிட்மென் என்ற சந்தை பொருளாதார அறிஞர்
(நோபல்பரிசு பெற்றவர்) இதை அன்றே கணித்து சொல்லியிருந்தார். ஆனாலும்
அன்று அவரை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்றே தூற்றினார்கள். அவர்
கணித்தபடியே இன்று சிலி மற்றும் பல மூன்றாம் உலக நாடுகள் உருமாறியுள்ளன.
தென் கொரியாவும், தைவானும் இன்று அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் மாற்றம்
பிரமிக்க தக்கதது. சுதந்திர பொருளாதாரம் வறுமையை அழித்து, லிபரல்
ஜனனாயகத்திற்க்கு இட்டு செல்லும் என்பதற்கு இந்நாடுகளே சாட்சி. மாற்றாக
சோசியலிசம் என்ற பெயரில், அரசு எந்திரத்தை மிக மிக பலப்படுத்திய வட
கொரியா போன்ற நாடுகள் இன்று பட்டினியிலும், கடும் வறுமையில்ம்,
சர்வாதிகாரத்தாலும் சீரழிந்து போயுள்ளன. வட மற்றும் தென் கொரியாவை
ஒப்பிட்டாலே போது. இலங்கையில் இன்று உள்ள சர்வாதிகார போக்குகள்
படிப்படியாக, இதே முறையில், இன்னும் 25 ஆண்டுகளில் மாறி, ஒரு லிபரல்
ஜனனாயகமாக, வளமான நாடாக உருமாறும் என்றே நம்புகிறேன்.

இந்தியா இன்னும் செல்ல வேண்டிய பாதை வெகுதூரம். ஆனால் சரியான பதையில்
தான் பயணிக்கிறோம். பின் நவீனத்துவம் பேசும் முன்னாள் மார்க்சியர்களை
இக்கட்டுரை பற்றி விவாதிக்க அழைக்கிறேன். அதிகார மையங்களை அழிக்க
வழிவகைகள், மனித உரிமைகள், பன்மைதன்மை ; இவைகளுக்கும் சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசலாம்...

உலக பொருளாதார மந்தம் – காரணிகளும் தீர்வுகளும்


கடந்த நான்கு ஆண்டுகளாக தொடரும் உலக பொருளாதார மந்தம் இன்னும் முடிந்தபாடில்லை. இவ்வகையான மந்தங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நிகழ்ந்தாலும், இந்த முறை மிக மோசமான மந்தம். இவ்வகை மந்தங்களுக்கான மூலக்காரணிகள் பற்றி பல வகை பொருளாதார கோட்ப்பாடுகள், சிந்த்தாந்த ரீதியான நிலைபாடுகள் உள்ளன. மார்க்சிய கோட்பாடு, கீனிசியன் கோட்பாடு மற்றும் ஆஸ்டிரியன் பள்ளி கோட்டுபாடுகள் சில முக்கியமானவை. இதில் ஆஸ்ட்ரிய பள்ளி கோட்பாடு பற்றி பார்ப்போம்.

சந்தை பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் விலை சமிக்கைகள் ஒரு பண்டத்திற்க்கு தட்டுபாடு உருவாகும் போது (அல்லது உற்பத்தி – தேவை சமன்பாடு மாறுபடும் போது) அதற்கான சந்தை விலை உயரும். எனவே அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் லாபம் விகிதமும் அதே விகிதத்தில் உயரும். அதிக லாபம் கிடைப்பதை காணும் இதர முதலீட்டாளர்கள், அந்த பண்டத்தை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களில் அதிக முதலீடு செய்ய முனைவார்கள். படிப்படியாக உற்பத்தி பெருகி, அப்பண்ட்டத்தின் சந்தை விலை உயர்வது தடுக்கப்பட்டு, பிறகு சம நிலை அடையும். இதில் முக்கியமானது சந்தை விலை. அது ஒரு வகை சமிக்கைகளை அளிக்கிறது. (price signals). ஒரு தூய சந்தை பொருளாதார அமைப்பில், இந்த சமிக்கைகள் சிதைவடையாமல், மாறுபடாமல் அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்கவிடாமல் பல வகையான சக்திகள் (அரசு மற்றும் இதர வகை) தடுத்து குழப்பங்களை விளைவிக்கின்றன. (distortion of price signals)

விலை நிர்ணியத்திற்க்கு மூன்று அடிப்படை கூறுகள் : தேவை, அளிப்பு மற்றும் medium of exchange எனப்படும் பணம். இந்த மூன்றில் எந்த ஒன்றின் அளவு மாறுபட்டாலும், விலையின் அளவும் மாறுபடும்.

பொதுவாக விலை உயர்வுக்கு இரு வகை காரணிகள் உண்டு : 1. தேவை –அளிப்பு விகிதங்களில் ஏற்படும் மாறுபாடுகள் ; 2. பணவிக்கத்தினால் உருவாகும் விலைவாசி உயர்வுகள்.  முதல் காரணி குறிப்பிட்ட சில பணடங்களில், துறைகளில் மட்டும் உருவாகும். ஆனால் இரண்டாவது காரணி அனைத்து துறைகளிலிலும் பொதுவான விலை உயர்வை உருவாக்கும். பண வீக்கம் உருவாக ஒரே காரணம் அரசுகளின் பற்றாகுறை பட்ஜெட்டுகள் தான். அதாவது தங்களின் நிகர வருவாயை விட அதிகம் செலவு செய்யும் போது உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க, புதிய கரண்சி நோட்டுகளை (ரிசர்வ் வங்கிகள் மூலம்) உருவாக்கி செலவு செய்யும் முறை. (deficit financing . இவ்வகையான பணவீக்கத்தினால் உருவாகும் விலைவாசி உயர்வு அனைத்து வகை ‘விலை சமிக்கைகளையும்’ (price signals) சிதைத்து, பண்டங்களில் விலை உயர்வுக்கு காரணம் அவற்றிற்கான உண்மையான பற்றாக்குறையா அல்லது பணவிக்கம் தான் காரணமா என்பதை உற்பத்தியாளர்களும், முதலீட்ட்டளர்களும் அறிய முடியாமல் குழப்பி விடும். எனவே புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்தி, ‘நிஜமான’ தேவையை விட அதிகமாக உருவாகி, பின்பு உச்ச நிலையை எட்டி, அதன் பின்பு பொருளாதார மந்தம் உருவாகும்.  

ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகுதங்களை நிஜ வட்டி விகிதங்களை விட மிக குறைப்பதும் இதே போன்ற விளைவைதான் உருவாக்கும். சந்தை நிர்ணியக்கும் வட்டி விகிதங்களை விட மிக குறைவாக அரசின் மைய வங்கி கடன் அளிப்பதும், பணவிக்கத்தையும், கடன் வளர்ச்சியையும் உருவாக்கும். (credit boom)

நிஜமான வட்டி விகிதங்கள் பொதுவாக விலைவாசி உயர்வு விகிதங்களை ஒட்டியே இருக்கும். அதாவது ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு குறையும் விகித்தற்க்கு ஏற்றார் போல் இருக்கும். உதாரணமாக மேற்கு ஜெர்மனியில் 60களில் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 2 சதம் அளவில் இருந்த்தால், அன்று அங்கு வங்கி மற்றும் இதர வட்டி விகிதங்கள் சுமார் 3 சதம் அளவில் தான் இருந்தன. ஆனால் அதே கால கட்டத்தில் இந்தியாவில் பணவீக்கம் சுமார் 18 சதம் இருந்த்தால், வங்கி மற்றும் இதர வட்டி விகிதங்கள் 24 சதம் அளவில் இருந்தன. ஆனால் பொருளாதாரத்தை ‘மேம்படுத்துவதாக’ கருதி, அரசுகள் (முக்கியமாக அமெரிக்க அரசின் மைய வங்கியான ஃபெட் எனப்படும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி) வட்டி விகிதத்தை செயற்கையாக குறைக்கும் போது, இதர வங்கிகள் சந்தை நிர்ணியக்கும் வட்டி விகுத்த்தை விட மிக குறைந்த விகுதத்தில் ரிசர்வ் வங்களிடம் கடன் பெற்று, அதை வெளி நிறுவங்களுக்கு (தங்களின் லாப விகிதத்தை சேர்த்து) அளிக்கும். இதனால் சந்தை நிர்ணியக்கும் வட்டி விகுத்த்தை (real interest rates) விட குறைந்த விகித்த்தில் செயற்க்கையாக கடன் பெரும் அளவில், தாரளமாக கிடைக்கும். இது ஒரு மாபெரும் கடன் வெள்ளத்தை (credit boom) உருவாக்கி, தூய சந்தை பொருதார அம்சமான சமிக்கைகளை சிதைக்கும். (distortion of price signals). எனென்றால் வட்டி என்பதும் ஒரு வகையான ‘விலைதான்’ ; அதாவது பணத்தின் விலை. (money costs). இந்த ‘விலை’ செயற்க்கையாக சிதைக்கப்படும் போது, தவறான சமிக்கைகளை சந்தைக்கு செலுத்தும். இவ்வகையான கடன் வெள்ளங்களும் இறுதியில் பொருளாதர மந்தங்களுக்கு இட்டு செல்லும்.  

அன்னிய செலவாணி சந்தையில், ஒரு நாட்டின் கரண்சியின் சந்தை மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார பலம் / பலவீனத்தின் அடிப்படையில் தான் பொதுவாக அமையும். ஆனால் இப்படி அமையாமல் ஒரு கரண்சியின் மதிப்பு பலவேறு இதர காரணிகளால் நிர்ணியிக்கப்படும் போதும் price signal distortions எனப்படும் தவறான சமிக்கைகளை வெளிப்படுத்தும். அமெரிக்க டாலரின் மதிப்பு இப்படி தான் செயற்க்கையாக மிக அதிகமாக உள்ளது. ஒரு உண்மையான ‘சுதந்திர’ சந்தையில் அரசுகள் தலையிடாமல் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை. கரன்சி சந்தையில், ஏற்றுமதியை நம்பி வாழும் பல நாடுகளின் அரசுகள் தலையிடுவாதால் குழப்பங்கள் (distortions) உருவாகுகின்றன. முக்கியமாக சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுமதி ஈட்டும் டாலர்களை அந்நாடுகளின் ரிசர்வ் வங்கிகளிடம் ஏற்றுமதியாளர்கள் கட்டாயமாக ‘விற்க’ வேண்டும். (இதில் சில வகை விதிவிலக்குகள் உள்ளன). ட்ரில்லன் கணக்கான டாலர்களை அந்த நாடுகள், மீண்டும் அமெரிக்க அரசுக்கே கடனாக அளிக்கின்றன. அதன் மூலம் தங்கள் நாட்டு கரன்சிக்களின் சந்தை மதிப்பை (டாலருக்கு எதிராக) செயற்க்கையான குறைத்து வைத்திருக்கின்றன. (over valuation of US dollar against currencies of exporting nations). ஏனென்றால் தங்கள் நாட்டின் கரன்சியின் மதிப்பு உயரும் போது, அமெரிக்காவிற்க்கும், பிற மேலை நாடுகளுக்கும் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பண்டங்களின் டாலர் விலை உயர்ந்து, ஏற்றுமதியை பாதிக்கும். அதை தடுக்கவே செயற்க்கையாக டாலரை உயர்த்தி பிடிப்பது. உலக வர்த்தம் இன்று பெரும்பாலும் டாலரில் நடைபெறுவதும் ஒரு பெரிய சிக்கலை, சமனிலையற்ற நிலையை உருவாக்கி உள்ளது.

மேற்கூறிய மூன்று காரணிகளினால், அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பண வெள்ளம் உருவாகி, பொருளாதார வளர்ச்சி (economic boom) செயற்க்கையாக உருவானது. மேலும் வீடில்லாதவர்களுக்கு வீடு கிடைக்கும் லட்சியவாதத்தினால், வீட்டு கடன்களை, ‘தகுதியிள்ளாதவர்களுக்கும்’ தாரளமாக அளிக்க தனியார் வங்களும், நிறுவனங்களும் அமெரிக்க அரசினால ஊக்குவிக்கப்பட்டனர். இப்படி தனியார்களால் அளிக்கப்படும் கடன் பத்திரங்களை மூன்று அமெரிக்க அரசு துறை சார்ந்த பெரு நிறுவனங்கள் தொடர்ந்து வாங்கின. வீட்டு கடன் அளிக்கும் நிறுவங்களுக்கு அரசு பல வரி சலுகைகளையும் அளித்தது. வட்டி விகதமும் ஏறக்குறைய சுழி அருகில் ஃபெட்டினால் தொடர்ந்து நிர்ணியக்கப்பட்டது. டாலரின் மதிப்பும் தொடர்ந்து செய்ற்க்கையாக தூக்கி நிறுத்தப்பட்டிருந்தால், இயல்பாக உருவாகும் சமநிலை நோக்கிய மாற்றங்கள் (corrections in imbalances and world markets) உருவாக வாய்ப்பில்லாமல் போனது.

இவை அனைத்தும் சேர்த்தால், 2003 இருந்து 2008 வரை உலக பொருளாதரமே செயற்க்கையாக ‘வளர்ந்தது’ ; ஒரு பலூனில் தொடர்து காற்றை செலுத்துவது போல் ஊதி பொருகியது. முடிவு பெரும் வீழ்ச்சி மற்றும் மந்தம். சுதந்திர சந்தை பொருளாதாரம் இப்படிதான் தோல்வியடையும் என்பது தவறான வாதம். எனென்றால் ‘சுதந்திர’ சந்தை பொருளாதார அமைப்பே உருவாகாமல், அரசுகளின் தலையிடுகளினால், ’சுதந்திரமற்ற’ சந்தை பொருளாதாரம் தான் இன்றளவும். ஆஸ்த்திரியன் பள்ளி பொருளாதார கோட்பாடு இதுதான். இதன் முக்கிய பொருளாதார நிபுணர் 1949இல் ’Human Action’ என்ற பெரும் படைப்பை உருவாக்கிய ஃப்ரெட்ரிக்க் வான் மிஸசஸ்.

பொருளாதார மந்தங்களை தவிர்க்க தேவையானவை :

11.   உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் பட்ஜெட் பற்றாக்குறைகளை முடிந்த வரை குறைக்க வேண்டும். தேவையில்லத வெட்டி செலவுகளை, முக்கியமாக ராணுவ செலவுகளை குறைக்க வேண்டும்.
22.   அமெரிக்க அரசு தனது ராணுவ செலவுகளையும், இதர வெட்டி செலவுகளையும் குறைத்து, ஃபெட்டின் வட்டி விகிதங்களை யாதார்த்த அளவை ஒட்டி நிர்ணியிக்க முன் வரவேண்டும். வீட்டு கடன் துறையில் அரசின் தலையிட்டை தவிர்க்க வேண்டும்.
33.   ஏற்றுமதி மிக அதிகம் செய்து பிழைக்கும் நாடுகள் (முக்கியமாக சீனா) அமெரிக்க டாலரை செய்ற்கையாக உயர்த்தி பிடிக்கும் மிக அபாயகரமான முறையை கைவிட வேண்டும்.
44.   அய்ரோப்பிய ஒன்றியத்தில் யூரோ கரண்சி உருவானதும் ஒரு தேவையில்லாத, எதிர்மறையான செயல். இதனாலும் உருவான சிக்கல்களை தவிர்க்க, இந்த பொது கரன்சியை கைவிட்டு, தேசிய கரன்சிகளுக்கு திரும்ப வேண்டும்.