அன்னிய செலவாணி கையிருப்பு பற்றி பலருக்கும் சரியான புரிதல்
இல்லை. ஏற்றுமது / ஈரக்குமதி மற்றும் உலக வர்தகம், பெரும்பாலும்
அமெரிக்க டாலர்களில்தான் பல காலமாக நடக்கிறது. டால்ர் தான்
உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.
நமது மொத்த இறக்குமதியின் டாலர் மதிப்பில், நம் ஏற்றுமதியை
விட மிக மிக அதிகம். முக்கியமாக பெட்ரோலியப் பொருட்க்கள்,
கச்சா எண்ணை போன்றவைகளின் தேவைகள் மிக அதிக அளவில்
இறக்குமதியை நம்பி இருக்கிறது. இறக்குமதி செய்ய டாலர்கள்
மட்டுமே பயன்படும். நமது இந்திய ரூபாயை பெரும்பான்மையான
நாடுகள் ஏற்க்க மாட்டார்கள். (பழைய சோவியத் ரஸ்ஸியா மட்டும்
விதி விலக்கு, பல காரணங்களுக்காக).
டாலர் பற்றாக்குறையை சமாளிக்க மூன்று வழிகள்தான் உள்ளன :
(1) ஏற்றுமதியை மிக அதிகரித்தல்
(2) அன்னிய முத்லீடுகளை 'தாராளமாக' அனுமதித்தல்
(3) அய்.எம்.எஃப் வங்கியிடம் டாலர் கடன் வாங்குதல்
'சோசியலிச', 'சுதேசி' கொள்கைகளாஇ 1947 முதல் 1991 வரை இந்திய அரசு
மேற்கொண்டதால், முதல் இரண்டு வழிகளும் சாத்தியமில்லாமல் போனது.
சுதந்திரம் பெற்ற போது சுமார் 500 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை
ஆங்கிலேய அரசு, நிகர கையிருப்பாக விட்டுவிட்டுச் சென்றது. நமது
மடத்தனமான, 'மூடப்பட்ட' பொருளாதார கொள்கைகளால், அந்த இருப்பு
விரைவில் கரைந்து, பிறகு அய்.எம்.எஃப் இடம் வருடந்தோரும் கடன்
வாங்கி இறக்குமதிகளுக்கான டாலர்களை பெற்றோம்.(உலக வங்கி
கடன்கள் வேறு வகை ; அவை project specific and are not for dollar needs of govt.
இந்திய ரூபாயின் மதிப்பு, செயற்கையாக டாலருடன் ஒரு குறிப்பிட்ட
விகிதத்தில் அரசால் நிர்ணியக்கப்பட்டு, அதுவே அனைத்து வர்தகங்களுக்கும்,
பேரங்கலுக்கும் அடிப்படையாக கொள்ளப்பட்டது. நமது பற்றாகுறை
பட்ஜெட்டுகளால் பண வீக்கம் மிக மிக அதிகமாகி, அரசின் மொத்த
கடன் மிக அதிகமாகி, ரூபாயின் நிகர மதிப்பு படிபடியாக பல மடங்கு
குறைந்தது. ஆனால் அரசு 'நிர்ணியத்த' ரூபாய் (டாலர்) மதிப்பு,
ரூபாயின் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகம்.
இதன் மொத்த விளைவு, கடும் டாலர் பற்றாக்குறை. இறக்குமதி செய்ய
லைசென்ஸ்கள் 'வேண்டியவர்களுக்கு' மட்டும் வழங்கப்பட்டது.
இறக்குமதி லைசென்ஸுகளை, அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
'புண்ணியத்தில்' அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.
கருப்பு பணாமும், கள்ளச் சந்தையும், கடத்தலும், டாலர்களை
கள்ளத்தனமாக பெற ஹவாலா முறைகளும் தோன்றின.
வேண்டிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் போனதால்,
தங்கம், எலெக்ட்ரானிக் பொருட்க்கள் போன்ற 'ஆடம்பர'
பொருட்கக்களை கடத்தர்கார்கள் கடத்தி விற்றனர். கடத்தல்
ஒரு முக்கிய உப தொழிலாக சுதந்திர இந்தியாவில் உருவெடுத்தது.
வருடங்கள் செல்ல செல்ல, டாலர் பற்றாக்குறையின் அளாவு மிக
மிக அதிகமாகி, அய்.எம்.எஃப் இடம் டாலர் கடன் மேலும் மேலும்
வாங்கி, திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டோம். 1990களில் ஒரு
பட்ஜெட் உரையில் நம் நிதியமைச்சர் பா.சிதம்பரம், தாயுமானவர்
பாசுரத்தை சற்றே மாற்றி, '...என் பணி கடன் செய்து கிடைப்பதே !'
என்று பாடினார் !!!
1991இன் ஆரம்பத்தில், இரண்டு வார காலத்திற்க்கு மட்டுமே
தேவையான டாலர் இருப்பு இருந்த, மிக மிக அபாயகரமான
நிலையில் நமது நிதியமைச்சர், அரசின் தங்கத்தை விமானத்தில்
லண்டன் அனுப்பி, அங்கு அடமானம் வைத்து, இறக்குமதிக்கு
தேவையான டாலர்களை அவசரமாக புரட்டினார். 1991இன்
மத்தியில் தேர்தல் ; நரசிம்ம ராவ் பிரதமரானார். மன்மோகன் சிங்
அவர்களை நிதியமைச்சராக்கி, சுதந்திரமாம செயல்பட
அனுமதித்தார்.
மன்மோகன் சிங் அவர்கள் உடனடியாக 'தாரளமயமாக்கல்'
கொள்கைகளை அமல்படுத்த தொடங்கினார். அன்னிய முதலீடுகள்
பல துறைகளில் 'தாரளமாக' அனுமதிக்கபட்டன. பங்கு வணிகம்,
வங்கி மற்றும் நிதித் துறைகளைலும் படிப்படியாக அன்னிய
முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. உற்பத்தி துறையை அதுவரை
கட்டி போட்டிருந்த லைசென்ஸ் முறை அடியோடு ரத்து
செய்யப்பட்டது. அனைத்து வரி விகிதங்களும் படிப்படியாக
குறைக்கப்ட்டன. தொழில் துறைகள் ஊக்குவிக்கபட்டன.
கரண்ட் அக்கவுண்ட் கணாக்கில் ரூபாய் / டாலர் அன்னிய
செலவாணி வர்தகம் முதன் முறையாக அனுமதிக்க பட்டது.
ஏற்றுமதியாளர்களுக்கும் வருமான வரி முற்றாக ரத்து
செய்யப்பட்டது. கணனி மற்றும் மென்பொருள் ஏற்றுமதி
துறை மிக வேகமாக வளார்ந்துமேலும் அன்னிய செலவாணி
ஈட்டியது.
மடை திறந்த வெள்ளம் போல் பல ஆயிரம் கோடி டாலர்
மதிப்பிலான அன்னிய முதலீடுகள், இந்தியாவினுல் பாய்ந்தது.
(ஆனால் சைனாவை ஒப்பிட்டால் மிக குறைவான அளாவுதான்).
அன்னிய முத்லீட்டாளர்கள் தங்கள் டாலர்களை ரிசர்வ் வங்கி
மூலம் இந்திய ரூபாய்களாக மாற்றி, இங்கு புதிய முதலீடுகளை
செய்தனர் / செய்கின்றனர்.
இவற்றின் மொத்த விளைவு : நமது டாலர் இருப்பு படிபடியாக
உயர்ந்து இன்று சுமார் 1,00,000 கோடி ரூபாய் அளவை கடந்து
விட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக அய்.எம்.எஃப் வங்கியிடம்
இருந்து டாலர் கடன் வாங்கவில்லை !! ரூபாயின் மதிப்பு கடந்த
50 ஆண்டுகளில் முதன்முறையாக டாலருக்கு எதிராக உயர்ந்தது.
இதுவரை வாங்கிய அன்னிய செலவாணி கடன்களை திருப்பி
செலுத்த வழி பிறந்தது !!
மேலும் அன்னிய முதலீடுகளால் உருவான நிறுவனங்களினால்
பல லச்சம் பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ; அரசிற்க்கோ
பல ஆயிரம் கோடி புதிய வரிவசூல் மழை. அரசின் மொத்த வரி
வசூல் பல பல மடங்கு இந்த 17 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.
அதைகொண்டு நலத்திட்டங்களை அமலாக்க நிதி கிடைத்து.
அன்னிய முதலீடுகளை, உலகமயமாக்கலை 'எதிர்ப்பவர்கள்'.
1991இல் திவால் நிலையில் இருந்த, மிக மிக மிக அபாயகரமான
நம் நிலைமையினை வேறு எந்த 'வழிகளில்' கையாண்டிருப்பர்கள் ?
மாற்றுவழி இருந்தால் விவாதிக்கலாமே...
20 comments:
test
//அன்னிய முதலீடுகளை, உலகமயமாக்கலை 'எதிர்ப்பவர்கள்'.
1991இல் திவால் நிலையில் இருந்த, மிக மிக மிக அபாயகரமான
நம் நிலைமையினை வேறு எந்த 'வழிகளில்' கையாண்டிருப்பர்கள் ?
மாற்றுவழி இருந்தால் விவாதிக்கலாமே...//
மாற்று வழிகளா? எந்த ஊரில் இருக்கிறீர்கள்? உலகம் முழுதுமே முன்னேறிய எல்லா நாடுகளும் பொருளாதார சுதந்திரம் மூலம்தான் முன்னேறியுள்ளன. சோவியத் யூனியனின் ராட்சச வளர்ச்சியை விதந்தோதுபவர்கள் அது எடுத்து கொண்ட விலை என்ன என்பதை காண மறுக்கின்றனர். ரஷ்ய மக்களின் உழைப்புக்கு அவர்கள் இன்னும் எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டும். அதன்றி ஸ்டாலின் என்னும் சைக்கோவின் கொடுங்கோன்மையால் லட்சக்கணக்கானவர்கள் செத்தனர் சைபீரிய அடிமை முகாம்களில். மனித இயற்கைக்கு புறம்பான கம்யூனிசத்தால் நாடே திவாலானது 1991-ல். நல்ல வேளை இந்தியா அந்த நிலை வரும் முன்னரே காப்பாற்றப்பட்டு விட்டது.
இந்த அழகில் 1990 நிலைக்காக ஏங்குகின்றனர் இங்கு சிலர். நிஜமாகவே தாங்கள் கேட்பது என்ன என்பதை அவர்கள் உணரவில்லை.
விட்டு தள்ளுங்கள் அதியமான். இவர்களுடன் விவாதிப்பதே வீண்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல கட்டுரை அதியமான்,
தொடர்ந்து எழுதுங்கள்.
கம்யூனிஸம் என்பது கோடிக்கணக்கான முதலாளிகள் இருப்பதை ஒழித்து, ஒரே ஒரு ஆளை நாட்டுக்கு ஒரே சொந்தக்காரராகவும் முதலாளியாகவும் ஆக்குவதுதான். அப்படி இருப்பவன் எல்லோரையும் அடிமை மாதிரி வேலைவாங்கி ஆகாய விமானம் விட்டால் அதில் என்ன பெருமை இருக்கிறது? ஒரு பக்கம் ரொட்டிக்கு நீண்ட வரிசை மற்றொரு புறம் யூரி ககாரின் பூமியை சுற்றி வந்தார் என்று பம்மாத்து.
இன்றும் கூட புளோரிடாவிலிருந்து முன்னாள் கியுபர்கள் கியூபாவுக்கு அமெரிக்க டாலரை அனுப்பவில்லை என்றால் கியூபா இரண்டே நாளில் திவால் ஆகிவிடும்.
கோடிக்கணக்கான முதலாளிகளும், முதலாளிகளாக உரிமை உள்ள தொழிலாளிகளும் இருப்பதால்தான் எந்த விதமான மைய திட்டமிடுதலும் இல்லாமலேயே கோடிக்கணக்கான மக்கள் சென்னையில் வேண்டியவற்றை வாங்க முடிகிறது.
மீண்டும் லைசன்ஸ் கோட்டா சாம்ராஜ்யம் வந்து நம்மை அதிகார வர்க்கத்தின் அடிமைகளாக ஆக்காமல் இருக்க நாம் கடுமையாக இந்த கம்யூனிஸ்டுகளை எதிர்கொள்ள வேண்டும்.
Hi,
Congrats. Very Good Article. u keep it short and simple. please keep it up.
//நரசிம்ம ராவ் பிரதமரானார். மன்மோகன் சிங்
அவர்களை நிதியமைச்சராக்கி, சுதந்திரமாம செயல்பட
அனுமதித்தார்.
//
இப்பவும் இவரை சொந்தமாக செயல்படவிட்டால் பல அற்புதங்களை செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்தியா திவாலகவில்லை இப்போதுக்கு.
உண்மை.ஆனால் படிப்படியாக நமது இந்திய கம்பெனிகளின் 74 % பங்குகளை தனதாக்கி மீண்டும் இந்தியாவை ஒரு மெக்சிகோ ஆக்க பன்னாட்டு வர்த்தக சூதாடிகள் முயலுவதை தடுக்க முடியுமா?
நமது இடங்களயும்,கட்டிடங்களையும் வளைத்து போடும் போக்கு ஏங்கே கொண்டு போகும்.தெரியலல்லை சார்.
கச்சா எண்ணெய் வியாபரிகளின் தந்திரத்தால் பேரல் 200 டாலர் ஆகட்டும் உலமே திவலாய் விடும்(இப்பவே உங்கள் அமெரிக்கா சகோத்ரர்கள் பெட்ரோல் விலை பார்த்து கலங்கி பஸ்ஸில் போக ஆரம்பித்துவிட்டார்களாம்)
"தனியார் மயம்,தாராள மயம், உலக மயம்"
ஒருகுடி கெடுக்கும் சூலாயுதம் . பகட்டாய் தெரிவதல்லாம்.ஒரு கானல் நீர்,காகிதப் பூ(பல நாடுகளின் வீழ்ச்சி அதன் புண்ணியத்தால் உலகம் அறிந்த உண்மை)
கிராமங்களில் அம்மன் கோவில் கொடையில் வெட்டப் படும் ஆடுகள் போல் எமது பாரத தேசத்தில் 70 % மக்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் சொல்வது உண்மையில்லையா( தினக் கூலி 1 லாலருக்கு குறைவாக பெறும் அபாக்கிய மனித ஜீவன்கள்)
அது சரி ஏழை,எளியவர்கள் பற்றிய சிந்தனை எங்களுக்கு எதற்கு?
இதற்கு டோண்டு ராகவன் ஜி வேற சப்போர்ட்
வருமான இழப்பு மற்றும் அதீத விலை வாசி ஏற்றம் (60-70 %)ஆகியவற்றால் பாதிக்கப் படப் போகும் 60 கோடி மக்களின் கோபம்.............
'1991-ல் இந்தியா திவாலாகியிருந்தால்?' அப்படி ஆகியிருக்காது.
அதாவது வருவாய் இல்லாத குடும்பத் தலைவர் தன் வீட்டிலிருக்கும் பொருள்களை அடகு வைப்பது போன்ற நிலையில் இருந்தது இந்தியா.
மிகப் பெரிய நுகர்வு சந்தை இருந்தது. மனித வளம் இருந்தது. கனிம வளம் இருந்தது. அதனால் IMF, வளர்ந்த நாடுகள் இதைக் குறி வைத்துதான் காய் நகர்த்தினார்கள். Win-Win ஒப்பந்தம்தான்.
ஆனால் பக்க விளைவுகளை தடுக்க முனைந்திருக்கிறோமா?
டாலர் டாலராக முதலீடுகள் கொட்டினால் - அதனுடைய பக்க விளைவுகள் என்ன? இன்றைய பணவீக்கம். இது மிகவும் சிக்கலானது.
அதிக முதலீட்டை சமாளிக்கும் நிலையில் இருக்கிறோமா? பன்னாட்டு நிறுவனங்கள் கேட்டால் எல்லா கதவையும் திறந்து விட தயாராக இருக்கும் அரசாங்கம், அதிகார வர்க்கம் இருக்கும் வரையில் இது அபாயகரமானதாகத்தான் இருக்கும். இன்றைய வளர்ச்சிக்கு பின்? வீழ்ச்சியா? நமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்வது பாதுகாப்பான பொருளாதாரமா?
1991-ல் மாற்று வழி இல்லை. ஆனால் இந்த 17 வருடங்களில் வளர்ச்சியை பரவலாக்க பல வழிகளில் செய்திருக்கலாம். உள் கட்டமைப்பு வேலைகளை பல படிகள் பின் தங்கியிருக்கிறோம்.
இன்னொரு 1991 கூட சாத்தியம்தான். ஸ்பீடு பிரேக்கர் இல்லாத சரிவில் போகும் வண்டி கூட வேகமாகத்தான் போகும். தெரியவில்லை.
ஸ்ரீதர் நாரயணன்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. பணவீக்கத்திற்க்கு அடிப்படை காரணம் அரசின் பற்றாக்குறை பட்ஜெட்களே. மொத்த பண இருப்பு : 22 % நிகர அதிகரிப்பு. இதெல்லாம் விலைவாசி உயர்வை மிக மிக அதிகரிக்கரிக்கிறது. பற்றாக்குறை பண்டஙகளான உணவு தானியம்க்கள், பெர்ட்ரோல், ரியல் எஸ்டேட் போன்றவை மற்ற பண்டங்களை விட மிக மிக அதிக விகிதத்தில் விலை ஏற இது ஒரு அடிப்ப்டை காரணி.
இன்றைய ஸிம்பாவே நாட்டின் நிலைமையை பாருங்கள். பண்வீக்கம் 65,000 மடங்கு தற்போது. நாடே திவால். 1991இல் இது போல் இந்தியாவில் நடந்திருக்கலாம்....
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
டால்ர் தான்உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.// யூரோ அதற்கு போட்டியாக இருக்கிறது - டாலர் மாற்றவே முடியாத இடத்தில ஒன்றும் இல்லை இல்லை
நமது மொத்த இறக்குமதியின் டாலர் மதிப்பில், நம் ஏற்றுமதியை விட மிக மிக அதிகம். //
ஆம் உண்மை தான் இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம்
உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125
பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம்.
ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம்
181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர்
மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி
துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா
முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான்.
டாலர் பற்றாக்குறையை சமாளிக்க மூன்று வழிகள்தான ///
நீங்கள் சொல்லு இந்த மூன்று வழிகளும் மீண்டும் dolor சேற்றில் போய் விழுந்து மண்ணைக் கவ்வுவதர்க்குதான் உதவும் - அதற்கு பதிலாக மற்று திட்டம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் ..
நமது இறக்குமதியில்
பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல்
தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை
பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க
முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர
குறைய போவதில்லை.
இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது?
இதற்க்கு இரண்டு வழிகள் உள்ளன
# மாற்று எரிபொருள் பக்கம் போவது
# மின்சார சக்தியை அதிகப் படுத்துவது.
மாற்று எரிபொருளாக தர்ப்போது பரிந்துரைக்கப்படும் எத்தனோல் தயாரிப்பது செலவு குறைவான பாதுகாப்பான விஷயம்.
ஒரே கல்லில் பலமாங்க்காய் போல இதில் நமக்கு லாபங்கள் அதிகம்
எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு,
மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள்
வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்
மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள்
மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார்
தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு
கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி
பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து
எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
டோலோரும் மிச்சமாகும்.
மின் சக்தியை அதிகப் படுத்துவதன் மூலம் கணிசமான எரிவாயு செலவுகளை மின் அடுப்புகள் பயன் படுத்த பரிந்துரை செய்வதன் மூலம் தவிர்க்கலாம்.
'சோசியலிச', 'சுதேசி' கொள்கைகளாஇ 1947 முதல் 1991 வரை இந்திய அரசு
மேற்கொண்டதால்,//
1981 இல் இந்தியா வாங்கிய 5000ம் dolor கடன் வட்டி போட்டு குட்டி போட்டது அது வளர்ந்து -- 1991 ல் நிதிப் பற்றாக்குறைக்கு வழி வகை செய்தது. இந்திரா காலத்திலிருந்தே நம் தேசம் சுதேசிக் கொள்கை கலை கைவிடத் தொடங்கி விட்டது - எனவே தவறான தகவல்களை புள்ளி விபரமாகத் தராதீர்கள்.
நமது பற்றாகுறை பட்ஜெட்டுகளால் பண வீக்கம் மிக மிக அதிகமாகி, அரசின் மொத்த
கடன் மிக அதிகமாகி, ரூபாயின் நிகர மதிப்பு படிபடியாக பல மடங்குகுறைந்தது. ஆனால் அரசு 'நிர்ணியத்த' ரூபாய் (டாலர்) மதிப்பு, ரூபாயின் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகம்...அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
'புண்ணியத்தில்' அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.///
மன்மோகன் சிங் அவர்கள் உடனடியாக 'தாரளமயமாக்கல்' கொள்கைகளை அமல்படுத்த தொடங்கினார். அன்னிய முதலீடுகள் பல த................கரண்ட் அக்கவுண்ட் கணாக்கில் ரூபாய் / டாலர் அன்னிய
செலவாணி வர்தகம் முதன் முறையாக அனுமதிக்க பட்டது.///
கையாலாகாத இந்த ஆட்சியாளர்கள் - லட்சக் கணக்கான கோடி ரூபாய் வரிபாக்கிகளை வசூலிக்க திராணியில்லாமல் நம்மை உலக கடன் வலையில் சிக்க வைத்து - இப்போது நமை பொருளாஆதார அடிமைகளாக - பொருளாதார காலனி நாடாக வழிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான சாட்சியே மேலிருக்கும் பத்திக்கான விளக்கம்.
அடேங்கப்பா என்ன ஓர் சாதுரியம் ? லட்சக்கணக்கான கொடிகளை குவித்துவிட்டார் மனமோகன சிங்கி !!!
நமது குளத்தின் நீர் எல்லாம் கோகோகோலா குடித்து உரிஞ்சியத்தை வேடிக்கை தானே பார்க்க முடிந்தது ?
அளவுக்கு மீறி - சரியான திட்டமிடல் இல்லாமல் இது போன்ற கொலைக் காரர்களை அனுமதித்ததன் விளைவாக -
என்றான் போன்ற கம்பெனி-கள் மின்சாரத்தை கொள்ளை விலைக்கு விற்றதை பார்த்துக் கொண்டிருந்தைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்?
இன்றும் - சிறு வணிகம் கூட நான்தான் செய்வேன் என்று கூவிக் கொண்டு வலமர்ட் கம்பெனியும் இன்னும் பலரும் தேசத்தின் பொருளாதார ஸ்திரத் தன்மையை கலக்க கட்டியம் கட்டுவதும் இங்கெ தானே நடக்கிறது?
--------------------------------------------------------------------------------------------------------------------
கடைசியாக 1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? ஒன்றும் ஆகியிருக்காது - மக்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள். திறமையான கொள்ளைக் கூட்டத்தின் கையில் ஆட்சியை கொடுத்ததின் விளைவை உணர்ந்திருப்பார்கள். மீண்டும் ஒரு சுதந்திரப் போர் வெடித்திருக்கும். இன்று - வகுப்புவாதமும் கொள்ளை கூட்டமும் இணைந்த ப.ஜா.க வா? - கொள்ளைகாரர்களும் அரசியல் பூசலும் நிறைந்த காங்கிரஸா ?
மேலே அழுகிய பழமா? - கீழே அழுகிய பழமா? எது வேண்டும் என்ற கேவலாமான கேள்விஇலிருந்து மக்கள் தப்பித்திருப்பார்கள்
சோசியலிச', 'சுதேசி' கொள்கைகள் உருப்படியாக பின்பற்றப் பட்டிருந்தால் இந்த நிலையே வந்திருக்காது அதியமான்
GGG @ Pulesi420 @ Sidhan,
Very easy for you to say that. all your alternatives are impractial and not enough to say the least. Alternative bio-fuels for petro products. fine in theory. but how much time and effort will be needed to totally get rid of our need for petro imports ? and until then ?
You talk casually about India being bankrupt in 1991. If we had not opened up, then rupee would have sunk very easily to Rs.1000 per USD nd petro prices risen many hundred times with terrible shortage and chaos. See the terrible condition of Zimbawe now.
And this converstaion on blogger would not be taking place now.
All this talk about mortaging our nation to MNCs, US was always there right from 50s from people like you. You havn't answered how
Swadhesi polices could have been implemented more 'effectively' ;
mere rhetoric and practical reality is totally different.
In is my humble opinion, you do not know what your are talking about...
http://gulzar05.blogspot.com/
yes - we do not know
actually athiyamaan - you are telling all my alternates are impractical. ok
I am not blindly supporting bio-fuel - bio fuel is a simple alternate what i (a single man) can find. but India is a government which has thousands of intellectuals - and man power. If they tried - every dreams will come true - but they do not
i am telling you - don't support them blindly.
don't support their selfishness. and don't tell that it is the fate.
If we can not able to be free with dolor - why don't we look at alternate options
the economic "will power" of our indian govern bodies are very poor when are we comparing it to the small nations like Cuba and Japan.
we are having the largest amount of wealth as Black money our politicians failed to collect them
when are we started to allow foreign companies into our market - we forgot to make check points - that leads us to the economic unstable state.
jai hindh
சொரணையே இல்லையாடா நமக்கு என்று கம்யூனிஸ்டுகள் எழுதியதற்கு பதிலாக
மூளையே இல்லையாடா உங்களுக்கு?
என்று பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்
//but India is a government which has thousands of intellectuals - and man power. If they tried - every dreams will come true - but they do not//
sindhan why do you assume govt can achieve all the dreams while it is failing to fulfill its basic duties
like
1. law and order
2. basic infrastructure
3. rule of law etc.
sindhan please read this essay.
The Use of Knowledge in Society by Hayek, F. A.
http://www.econlib.org/Library/Essays/hykKnw1.html
Edition: American Economic Review, XXXV, No. 4; September, 1945,
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அதியமான்
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அதியமான்
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அதியமான்
அதியமான் மேலே உள்ள அத்தனை தலைப்புகளையும் படித்து விட்டேன்.
உண்மையிலே இந்த தளம் புரிந்து அக்கறையுடன் படிப்பவர்களுக்கு
பொக்கிஷம்
ஆசிரியர்
பொருளாதார ஆலோசர்.
வாழ்த்துகள் தலைவரே.
நன்றி ஜோதிஜி.
I would prefer counter arguments based on logic and data here.
Post a Comment