உலகமயமாக்கல் பற்றி...

முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்.

இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!

சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)....

சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?

இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி.

12 comments:

வால்பையன் said...

உலகமயமாக்கலை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் தவறு தான்,
அதே போல் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தவறு தான்,
உள்நாட்டில் நம்மாலேயே தயாரிக்ககூடிய பொருள்களை வெளிநாட்டினர் மூலம் தயாரிப்பது, நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் தானே.
மேலும் அணுமின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு, மிக அதிகம் என்றும் நிரூபிக்க பட்டுள்ளது, அதை நிறுத்தி வைப்பதிலும் தவறில்லை என்று நினைக்கிறேன்

வால்பையன்

K.R.அதியமான் said...

வாங்க வால்பையன்,

ஈரோட்டல வெய்யல் எப்படி இருக்கு இப்ப ? இங்க கொளுத்துகிறது.

////உள்நாட்டில் நம்மாலேயே தயாரிக்ககூடிய பொருள்களை வெளிநாட்டினர் மூலம் தயாரிப்பது, நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் தானே.
மேலும் /////

அதை யார், எப்படி தீர்மானிப்பது ? அரசா ? அல்லது ?

சுதந்திர பொருளாதார சந்தை, உற்பத்தி செலவு மற்றும் தொழில்நுட்பங்கள், போன்றைவையே இயல்பாக முடிவு செய்யும். அதுதான் மீறல்கள் இல்லாமல் சரியான முறை. 1960, 70களில் இருந்த நிலை உங்களுக்கு தெரியாது.

வால்பையன் said...

//ஈரோட்டல வெய்யல் எப்படி இருக்கு இப்ப ? இங்க கொளுத்துகிறது.//

அடுப்பிலாம ஆம்லெட் போடுமளவுக்கு வெயில் காயுது!
மண்டை சூடாகி நைட்டெல்லாம் தூக்கம் வரமாட்டேன்க்குது

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

ஜ்யோவ்ராம் சுந்தர் உங்களது இப்பதிவை எதிர்த்துப் போட்ட பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.

"வலைப்பதிவர் மீட்டிங்கில் நீங்கள் எல்லோரும் அதியமானுடன் தர்க்கம் புரிந்ததைக் கண்டு நானும் அதில் வந்தேன். அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன்.

உலகமயமாக்கல் நல்லதா கெடுதலா என்று பேசுவதே வெறும் அகாடெமிக் செய்கைதான். அது வந்துவிட்டது. அதை நீங்கள் எப்படி எதிர்க்கொண்டு உங்களை முன்னேற்றிக் கொள்ளப்போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவன் வந்துவிடுவான். அதை விடுத்து பேசிப் பேசி அலுப்பது சக்தி விரயம்தான்.

வேலை வாய்ப்புகள் பல நூறு மடங்கானது உலகமயமாக்கலால்தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பாதகங்கள் உண்டா என்றால் உண்டுதான். எதில்தான் பாதகம் இல்லை? விசைத்தறி வந்தபோது அதை உடைத்து எரிந்தவர்களெல்லாம் இப்போது எங்கே? கணினியே வங்கிகளில் வேண்டாம் என்ற யூனியன் தலைவர்கள் எல்லாம் வி.ஆர்.எஸ்.-ல் போய் விட்டார்கள்.

காலத்தின் கோலத்தில் எதிர்ப்புகள் அடிப்பட்டு போகும். புதிய எதிர்ப்புகள் வரும் அதுதான் வாழ்க்கை.

உலகமயமாக்குதலை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும், நான், ஜெயகமல்கள், அதியமான்கள் முன்னேறி விட்டு போகிறோம்.

உண்மை என்னவென்றால், நான் கூறுவதைத்தான் எல்லோரும் செய்கிறீர்கள், செய்யப் போகிறீர்கள். அவ்வப்போது டைம்பாசுக்காக இம்மாதிரி பேசவேண்டும் என பேசுகிறீர்கள். அதுகூடத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். அவ்வளவே".

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆ.கோகுலன் said...

//உலகமயமாக்கல் நல்லதா கெடுதலா என்று பேசுவதே வெறும் அகாடெமிக் செய்கைதான்// டோண்டு ராகவவனின் மிக யதார்த்தமான கருத்து.
ஏனெனில் விவாதித்து முடிவு செய்யும் நிலையில் உலகமயமாக்கல் இல்லை.
சங்கிலித்தொடர்களாக பல தேவைகளும் காரணிகளும் உலகமயமாக்கலில் பின்னிப்பிணைந்துள்ளன.
1945ல் உலகப்போர் எப்படி உலகில் ஒரு புதிய ஒழுங்கை ஏற்படுத்தியதோ அதைப்போலவே உலகமயமாக்கலிலாலான தேவைகளும் உலகை இன்னொரு ஒழுங்கிற்கு இட்டுச்செல்லும் அல்லது இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது.

manjoorraja said...

உலகமயமாக்கலுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்பதையும் இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் உலகமயமாக்கலின் மூலம் ஒரு சில சிறிய அளவு தீமைகள் இருந்தாலும் அதிகமான நன்மை ஏற்பட்டிருக்கிறது என்பது புரியும். மேலும் அனைத்து உலகநாடுகளும் உலகமயமாக்கலில் சங்கமித்திருக்கும் போது நாம் விலகியிருப்பது நல்லதல்ல.

தமிழ்மணி said...

உலகமயமாதல் - மறு பதிவு

உலகமயமாதல் பற்றி ரயாகரனுக்கு எழுதியதை மறு பதிவு செய்திருக்கிறேன்.

உங்கள் கருத்தையும் கூறுங்கள்

K.R.அதியமான் said...

டோண்டு சார்,

கூல் டவுன். உலகமயமாக்கலின் விளைவாகக உருவான இந்த அற்புதமான் இணையம், கூகுள் பிளாகர் போன்ற தளங்களை உபயோகப்படுத்தி 'உலகமயமாக்கலை எதிர்பதாக' கூறுவது ஒரு நகைமுரண்.

ம‌ஞ்சூர் அண்ணே,

வ‌ருக‌. நீங்க‌ சீனிய‌ர். 80க‌ளின் ஆர‌ம‌ப‌த்தில் சென்னையில் வேலை தேடி பிற‌கு வேலை பார்த்த‌ அனுப‌வம், உங்க‌ள் பார்வையை விசால‌மாக்கியுள்ளாது. இன்று, 30 வயதிற்க்குள் இருக்கும் இளைஞர்களுக்கு, அன்றைய நிலவரமும், வேலை வாய்ப்புகளும், சம்பளம் மற்றும் விலைவாசிகளும் தெரியாது, புரியாதுதான்.
அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.

Something is better than nothing.
and we had nothing before..
Prosperity will come only slowly and only if control population growth, corruption, leakages in public spending and more liberalisation in agriculture and all other fields.

Anonymous said...

நேற்றுதான் உங்கள் வலைப்பூவை படித்தேன் , இன்று எனக்கு www.storyofstuff.com என்ற தளம் நண்பர்கள் வாயிலாக அறிமுகம் ஆனது .
உங்களுடைய கருத்துகளுடன் நான் ஒத்துப்பொகும் வேளையில் , மேற்குறிப்பிட்ட தளம் தரும் விவரங்கள் , "மஞ்சூர் ராசா" குறிப்பிட்டது போல "சிறிய அளவு தீமைகளை" மட்டும் உருவாக்குவது போல தெரிவதில்லையே , ஒட்டுமொத்த மனித நாகரீகத்தையும் அல்லவா அது அரிக்க ஆரம்பிக்கிறது . அதேபோல , அத்தளம் அமெரிக்க நுகர்வோரை மனதில் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அவர்கள் அழிக்கும் இயற்கை வளங்கள் ஒட்டுமொத்த பூமியையும் அல்லவா பாதிக்கிறது .
இந்நிலையில்் உலகமயமாக்கல்/நுகர்வு கலாச்சாரத்தை ஆதரிப்பது , அல்லது அதன் மூலம் பிழைக்கும் பிழைப்பு , எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறதே . .

நீங்கள் குறிப்பிட்டது போல நான் 80 களின் பிற்பகுதியில் பிறந்தவன் , உங்களளவுக்கு எகனாமிக்ஸ் எல்லாம் தெரியாது , உங்கள் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன் . .

ரமணா said...

//பிளாட்ஃபார்ம் ஓரங்களில் வாழ்நாளை கடக்கும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் இதே சென்னையில்தான் வாழ்கின்றன. மாதம் 5,000 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்குபோவது..? பத்தாயிரம் சம்பாதிப்பவன் வீடு என்று சொல்லத்தக்க ஒரு இடத்தில் வாழ முடியுமா..? இந்த பெருநகரத்தில் நல்ல வீட்டில் வாழ்வதகு ஒருவன் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும். நுகர்வு கலாசாரம் பெருகிவழிகிற இக்காலத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் நிச்சயம் போதுமானதாக இருக்காது.

பேச்சுலராக இருந்து வீடுபார்க்கும்போது இத்தனை பாடு.. இதில் திருமணம் வேறு ஆகிவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா.. என்பதுதான் நாங்கள் மூவரும் வீடு தேடும்போது மனதில் நிழலாடியக் கேள்வி. முழுக்க, முழுக்க பெரும்பணக்காரர்களுக்கான வசிப்பிடமாக மாறிவிட்ட சென்னையில் இனி வலியவன் பிழைப்பான், எளியவன்..? ஆழிவாய்க்கால் பக்கம் போய்விட வேண்டியதுதான்.. வேறுவழி.?!
(courtesy:http://nadaivandi.blogspot.com/

தங்களின் பதில்?

K.R.அதியமான் said...

Ramana,

That info is about rising prices and hosing shortages in overcrowded chennai. suppose, if globalisation and new employments have not occured would those problems be worser or better ?

and pls see my older post for the reasons for price rise.

poverty can be reduced only thru trickle down policy of free markets as proved in developed nations, esp Japan.

There is better alternative that works well....

Anonymous said...

Do you have any answers to this ?


சிறுவணிகம், சிறுதொழில்கள் உயர்த்திப்பிடி!
சூறையாடும் ரிலையன்ஸைத் துரத்தியடி!!
மே 1 சென்னை

"ரிலையன்ஸ் ஃபிரஷ்' முற்றுகை

சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி
வியாபாரிகளை ஆதரிப்போம்!
டாடா, வால்மார்ட், அம்பானியை
புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
மாறி மாறி மக்களை ஏய்க்கும்
ஓட்டுக் கட்சியை நம்பாதே!
மக்கள் நலனே உயிரென வாழும்
நக்சல்பாரியே நம் பாதை!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
""தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு'' என்று வேகாத வெயிலில் கூவிச் செல்லும் கூடைக்காரப் பெண்கள், காய்கறிச் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் கூவி அழைக்கும் வியாபாரிகள், சிறுவயது முதலே நமக்கெல்லாம் அறிமுகமான மளிகைக் கடை அண்ணாச்சிகள், கண்முன்னே இறைச்சியை அறுத்து எடைபோட்டுத் தரும் கறிக்கடை பாய்கள்... இவர்கள் யாருமே இல்லாத நகரத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து ! ாருங்கள். ""அத்தனைப் பேரையும் ஒழித்துக் கட்டிவிட்டு இவர்களுடைய வருமானம் மொத்தத்தையும் நாமே சுருட்டிக் கொண்டால் என்ன?'' என்று நினைக்கும் ஒரு கொடூரமான முதலாளியைக் கற்பனை செய்து பாருங்கள்!
அவன்தான் ரிலையன்ஸ் அம்பானி. சென்னை நகரின் காய்கறி வியாபாரம் நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய். இறைச்சி, மளிகை வியாபாரமோ இன்னும் பல கோடி. இந்தச் சில்லறை வணிகத்தை நம்பித்தான் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தத் தொழில் முழுவதையுமே விழுங்குவதற்காகப் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் இந்நாட்டு முதலõளிகள். அமெரிக்க வால்மார்ட்டுடன் ஏர்டெல் ! ம்பெனி முதலாளி மிட்டல் கூட்டு, ரிலையன்ஸ் அம்பானி ஒரு பிரெஞ்சுக் கம்பெனியுடன் கூட்டு, டாடா ஒரு ஆஸ்திரேலியக் கம்பெனியுடன் கூட்டு. செல்போன் துறையில் ஏகபோகமாகக் கொள்ளையடிப்பதைப் போலவே காய்கனிமளிகை வியாபாரத்திலும் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து இறங்கியிருக்கிறார்கள் இந்த முதலாளிகள்.
ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் சென்னை நகரில் 14 இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. சென்னையில் மட்டும் 100 இடங்களில் கடை தொடங்கப் போவதாகவும் தமிழகம் முழுவதும் கடை திறக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது ரிலையன்ஸ். இன்னும் டாடா, வால்மார்ட் போன்ற நிறுவனங்களும் கடை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு விட்டன.
தமிழகத்தில் காய்கனி விளையும் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து அவற்றை சென்னையில் உள்ள குளிரூட்டப்பட்ட கிடங்கில் இறக்கி, அங்கிருந்து தன் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது ரிலையன்ஸ். "கொள்முதல் விலைக்கு மேல் இவ்வளவு சதவீதம் லாபம்' என்ற அடிப்படையில் காய்கனிகளின் விலையை ரிலையன்ஸ! தீர்மானிப்பதில்லை. சென்னை நகரில் 14 கடைகளிலும் "குறிப்பிட்ட காய்க்கு இன்ன விலை' என்றும் நிர்ணயம் செய்வதுமில்லை. மாறாக, தங்கள் கடைக்கு அருகாமையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் காலையிலேயே விலை விசாரித்து, அங்கே சிறு வியாபாரிகள் வைக்கும் விலையை விட 10, 20 காசுகள் குறைத்து விலையைத் தீர்மானிக்கிறது ரிலையன்ஸ். "சிறு வணிகர்களை விரைவாக ஒழித்துக் கட்டுவது' என்ற ஒரே நோக்கத! ்துடன் புதிது புதிதாக இலவ த் திட்டங்களை அறிவிப்பது, வாடிக்கையாளர்களை நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை உறுப்பினர்களாக்குவது போன்ற பல வழிமுறைகளைக் கையாள்கிறது.
சென்னையில் ரிலையன்ஸ் கடைகள் தொடங்கப்பட்ட இடங்களிலெல்லாம் மார்க்கெட்டுகளும் காய்கறிக் கடைகளும் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டன. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து, காய்கனிகள் விற்பனையாகாமல் அழுகி நட்டமாகி, கடனைக் கட்ட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு வணிகர்கள். கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையிலோ லாரிகளின் வரத்தே குறைந்து விட்டது. ! ங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வருவாய் குறைந்து விட்டது. விவசாயிகள் தற்கொலையைப் போல, "சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள் தற்கொலை' என்ற கொடுமையும் நம் கண் முன்னே அரங்கேறும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்தச் சிறுவணிகர்கள் என்பவர்கள் யார்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்... பரிதாபத்துக்குரிய இ! ந்த மக்களுடைய வயிற்றில் அடித்து சொத்து சேர்ப்பதற்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசாங்கம்.
அம்பானி காய்கறிக்கடை வைக்கவில்லை என்று எந்தத் தமிழன் அழுதான்? அரசாங்க ஆஸ்பத்திரியில் நாய்க் கடிக்கு மருந்தில்லை, அம்மைக்குத் தடுப்பூசி இல்லை, அரசாங்கப் பள்ளிக்கூடத்துக்கு கூரையே இல்லை, மீறிப் படித்து வந்தாலும் வேலையில்லை. காசில்லாதவனுக்கு கக்கூஸ் கூட இல்லை. இதற்கெல்லாம் வழி செய்யத் துப்பில்லாத அரசாங்கம், கையை ஊன்றிக் கரணம் போட்டு சொந்தமாக ஒரு தொழில் நடத்தி ம! னத்தோடு கஞ்சி குடித்தால், அதில் மண் அள்ளிப் போட அம்பானியை அழைத்துக் கொண்டு வருகிறது.
""அம்பானியைப் போன்ற முதலாளிகள் கையில் சில்லறை வணிகத்தை ஒப்படைத்தால்தான் அமெரிக்காவைப் போல இந்தியாவும் வல்லரசாக முடியும்'' என்கிறார் ப.சிதம்பரம். ""மண்டிக்காரர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்கும்'' என்கிறது அரசு. மண்டிக்காரர்கள் ஒழிந்தபின் என்ன நடக்கும்? நாடு முழுவதும் காய்கனிகளின் விலைகளை நான்கைந்து பன்னாட்டு நிறுவனங்கள் ! ீர்மானிக்கும். நவீன முறையில் காய்கனி உற்பத்தி செய்வதற்காக டாடாவும் ரிலையன்சும் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருப்பதால் சந்தையில் தங்கள் காய்கனிகளை இறக்கி விலையைப் படுபாதாளத்துக்குத் தள்ளவும் அவர்களால் முடியும்.
சில்லறை வணிகர்களை ஒழித்துவிட்டால் வாடிக்கையாளர்களும் அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும். "உற்பத்தி விற்பனை' என்ற இரண்டு முனைகளும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டால் அதன்பின் வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றாலும் அவனிடம்தான் வாங்கியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
இப்படி சில்லறை வணிகம், விவசாயம் முதல் விமான நிலையம் துறைமுகம் வரை எல்லாத் தொழில்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விடும் கொள்கைக்குப் பெயர்தான் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்'. அன்று வணிகம் செய்ய வந்து நாட்டையே அடிமையாக்கிய கிழக்கிந்தியக் கம்பெனியைப் போல இன்று பன்னாட்டுக் கம்பெனிகள் வந்திருக்கின்றன. உலக வங்கியும் உ! லக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளின்படி அவர்களைப் பாக்கு வைத்து அழைத்து எல்லாத் துறைகளையும் ஏகபோக முதலாளிகளிடம் ஒப்படைக்கின்றன மத்திய மாநில அரசுகள். நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கக் கொள்கையைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக எல்லா ஓட்டுக் கட்சிகளும் பின்பற்றி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பது போல நடித்து மக்கள! ை ஏமாற்றுகின்றனர். தாங்கள ஆட்சிக்கு வந்தவுடன் அதே கொள்கையை அமல்படுத்துகின்றனர்.
""ஒரு கோடீசுவரக் கொள்ளையனின் இலாபவெறிக்கு இலட்சக்கணக்கான ஏழை மக்களைக் காவு கொடுக்கிறார்களே, இவர்கள் ஒரு நியாய அநியாயத்துக்குக் கூட அஞ்ச மாட்டார்களா?'' என்று சிலர் அங்கலாய்க்கலாம். இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வங்கி, இன்சூரன்சு, தொலைபேசி ஆகிய அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கிறார்களே, அதில் ஏதாவது நியாயம் இ! ுக்கிறதா? நர்சரி பள்ளியா பத்தாயிரம், பொறியியல் பத்து இலட்சம், மருத்துவம் இருபது இலட்சம் என்று கல்வி வியாபாரத்தை அனுமதித்திருக்கிறார்களே அதில் நியாயமிருக்கிறதா? தொழிலாளர்களை 12 மணி நேரம், 14 மணி நேரம் வேலை வாங்க முதலாளிகளை அனுமதித்திருக்கிறார்களே அதில் நியாயமிருக்கிறதா? சிறப்புப் பொருளõதார மண்டலம் என்ற பெயரில் இந்தியச் சட்டங்கள் எதற்கும் கட்டுப்படாத தனிப் பிரா! ்தியங்களை இந்திய நாட்டுக குள்ளேயே உருவாக்கி அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் சுயாட்சி நடத்த அனுமதித்து இருக்கிறார்களே அதில்தான் நியாயமிருக்கிறதா? எதிலும் நியாயமில்லை.
இத்தகைய எல்லா அநீதிகளுக்கும் காரணமான எதிரிகள் ஓரணியாய் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளும் அவர்களுடைய கொள்ளை இலாபவெறிக்காக மக்களுடைய வாழ்க்கையைக் காவு கொடுக்கும் ஓட்டுக் கட்சிகளும்தான் நம்முடைய பொது எதிரிகள். சிறு வணிகர்களின் வாழ்க்கையைச் சூறையாடும் இவர்கள்தான் அரசாங்கத்தின் தானியக் கொள்முதலை நிறுத்தியவர்கள். வி! ளைபொருள்களுக்கு நியாயவிலை நிர்ணயம் செய்யவிடாமல் தடுத்து இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியவர்கள் இவர்கள்தான். கல்வியையும் மருத்துவத்தையும் கடைச்சரக்காக்கி ஏழைகளுக்கு அவற்றை எட்டாக்கனியாக்கியதும், பொதுத்துறையைத் தனியார்மயமாக்கி அரசுத்துறைக்கு ஆளெடுப்பை நிறுத்தியதும் இவர்கள்தான்.
எனவே இன்று சிறுவணிகத்தை விழுங்க வந்திருக்கும் ரிலையன்ஸ் அம்பானி என்பவன் அவர்களுக்கு மட்டும் எதிரி அல்ல. நம் அனைவருக்கும் அவன் பொது எதிரி. ஆகவே, சிறு வணிகர்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது நம் கடமை என்பதை உணர வேண்டும். ரிலையன்ஸ் கடையில் காய்கனி வாங்குவதென்பது எதிரியின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கவேண்டும்.
""என்ன விலை கொடுத்தாலும் ரிலையன்சுக்கு விற்கமாட்டோம்'' என்று விவசாயிகள் அவன் காய்கனிக் கொள்முதலையே நிறுத்த வேண்டும். ""எத்தனை இலவசம் கொடுத்தாலும் ரிலையன்சில் வாங்க மாட்டோம்'' என்று மக்கள் அனைவரும் அவன் விற்பனையை முடக்க வேண்டும். ரிலையன்சின் செல்போன், பெட்ரோல் பங்க், இன்சூரன்சு ஆகிய அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழிலாக, ஒவ்வொரு துறையாக நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறார்கள் எதிரிகள். பல்வேறு தொழில்களில் நட்டமடைந்தவர்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் முதியவர்களுக்கும் சோறு போடும் வடிகாலாக இருந்து வருகிறது சில்லறை வணிகம். இதையும் பறி கொடுத்து விட்டால் இனி மாறிக் கொள்வதற்கு வேறு எந்தத் தொழிலும் மிச்சமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம! நசிந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதைவிட அவனா நாமா என்று பார்த்துவிடுவதுதான் தீர்வு.
இந்த அரசாங்கமோ அல்லது பிற எதிர்க்கட்சிகளோ அம்பானியையும், டாடாவையும் விரட்டப் போவதில்லை. ஓட்டுக் கட்சிகளிடம் முறையிடுவதும், ""அவர்களே செய்யாத போது நாம் என்ன செய்து விட முடியும்'' என்று புலம்பிக் கொண்டு முடங்கி விடுவதும்தான் நாம் தொடர்ந்து தோல்வியடையக் காரணம். பதவியும் அதிகாரமும் கோடி கோடியாய் சொத்தும்தான் ஓட்டுக் கட்சிகளின் குறிக்கோள். அவர்கள் நம்மை நம்பவை! ்துக் கழுத்தறுக்கும் எதிரிகள்.
ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டிப் போராடுவதுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி. வேறு வழி எதுவும் இல்லை. சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டுவோம்! கோடீசுவரக் கொள்ளையன் அம்பானியை விரட்டுவோம்! ரிலையன்சுக்கு எதிரான போராட்டத் ! தீ தமிழகமெங்கும் பற்றிப் படரட்டும்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
-----------------------------


(தகவல்;-மூளையே இல்லையாடா

உங்களுக்கு? (119)

ம தமிழ்மணி
------------------------------

தங்களின் விரிவான பதில்/பதிவை எதிர்பார்க்கும்.
திருப்பூரான்