கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை. சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளில் சோசியலிச அரசு அமைக்கப்பட்டு, படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கி நகரும் காலங்களில், திரிபுவாதிகள் தோன்றி, சீரழித்துவிட்டார்கள். இதுதான் தோழர்களின் version of history.

கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்க்கு (சமூகத்திற்க்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சமளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs..

இதில்தான் சிக்கலே. மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.

தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.

பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கத்திற்க்கா வேலை செய்யும் ஊழியர்கள். தனியார் நிறுவனங்கள் அறவே இருக்காத அமைப்பு. பிரதமர் முதல் கடைனிலை ஊழியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். (இங்கு அரசு எனபடுவதற்க்கு அர்த்தம் வேறு). அவர்களுக்கான சம்பளம், அவர்களின் வேலை மற்றும் தகுதிக்கேற்ப ஆரம்ப காலங்களில் வழங்கப்படும். பிறகு உண்மையான கம்யூனிசம் உருவாகும் போது, தேவைக்கேற்ற ஊதியம் மட்டும் வழங்கப்படும்.

ஒரு தொழிற்சாலை அல்லது கூட்டு பண்னையில் ஒரே வகை வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருக்கும். இதன் விளவு, திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல், சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்கும் நிலை. இது நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தை குறைக்கும். அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும். மொத்த விளைவு : உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைவாகவே இருக்கும். மிக முக்கியமாக மூளை உழைப்பை செய்யும் நிர்வாகிகளின்
திறன் ஒழுங்காக வெளிப்படாது.

தொழில்முனைவோர் என்படும் entrepreneuers, இவர்களின் முழு திறமையும் வெளிபட வாய்பிருக்காது. ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எந்த பாணியில் அமைக்கப்படிருந்தாலும், அதை நிர்வாக்கிக திறமையான, ஊக்கமான, நிர்வாகிகள் மிக அவசியம் தேவை. Managerial and entrepreunarl talent. இதை பொது உடமைசமூகத்தில் இழக்க நேரிடுவதால், உற்பத்தி மற்றும் efficiency மிக குறைவாகவே இருக்கும்.

தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செழுத்த ஊக்குவிக்கும். இதற்க்கு விதிவிலக்குகள் இருக்கலாம். பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகளும் அப்படி இருப்பர். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான். பெருவாரியானவர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே மனித இயல்பு. லாப நோக்கு மறுக்கப்ட்டு, தனியுடைமையின் அடிப்படையான சொத்துர்மை ரத்து செய்யப்படும் அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையாக, போதுமானதாக இருக்காது.

சோவியத் ரஸ்ஸியாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்க்கான காரணிகளை தோழர்கள் விரிவாக விவாதித்து, மிக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளனர். அதாவது திரிபுவாதிகள், ஏகாதிபத்திய சதி போன்றவை தான் காரணம் என்று சொல்வர். ஆனால் இது மனித இயல்பு என்பதே உண்மை. ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற முடியாது. ஒரு தலைமுறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினரை மட்டும்தான் உண்மையான கம்யுனிஸ்ட்களாக மாற்ற முடியும். பெரும்பான்மையோர் தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் நடிப்பார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்வார்கள். அவர்களை ‘திருத்தி’, re-training and educating about communism செய்ய அரசும், கட்சியும் முயலும். அதற்க்காக பல மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக புரிய வேண்டி வரும்.

எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை. இதை தான் வரலாறு நிறுபிக்கிறது. செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக போக உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். முக்கியமாக விவசாயத்தை திடிரென பொது உடைமை பாணியில், கூட்டுபண்னைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. இது செம்புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் ஆரம்ப வருடங்களில் நடந்தது. விதிவிலக்கே இல்லை. ஏன் என்று யோசிக்க வேண்டும். 80களி ஒரு சோவியத் ரஸ்ஸிய கூட்டுபண்ணை தொழிலாளர் சொன்னது : “We pretended to work while they pretended to pay”

இன்று உலகில் எங்கும் சோசியலிச பாணி கம்யூனிச அமைப்புடைய நாடே இல்லை. கூபாவையும் சொல்ல முடியாது. 50 ஆண்டுகளில் பெரும் மாற்றம். வரும் காலங்களில் செம்புரட்சி உருவாக வாய்புள்ள நாடு என்று ஒரு நாட்டையும் சொல்ல முடியவில்லை. (60களில் அப்படி இல்லை). மொத்த தென் அமெரிக்காவும் பொது உடைமையை நோக்கிய பாதையை கைவிட்டுவிட்டன. சீலே மற்றும் பெரு போன்ற நாடுகளின் மாற்றம் வியக்க வைக்கும். 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு புரட்சி பற்றிய சிந்தனைகள் இன்று இல்லை. ஒரு முன்னாள் மார்க்ஸிய போராளியும், இன்று ஜனாதிபதியுமான
ஒருவரின் பேட்டி இது :

A new beginning : The emerging democratic paradigm in Latin America
http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

இந்தியா இன்று ஊழல்மயமாக உள்ளது. சராசரி இந்தியானின் நேர்மை மற்றும் ஊழலுக்கு துணை போகாத ஒழுக்கம் குறைவுதான். எதோ ஒரு வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் மிக பரவலாக வேறூண்றிவிட்டது. அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் உற்பத்தி திறன் பற்றி சொல்லவே வேண்டாம். மொத்த மக்களும் செம்புரட்சியின் மூலம் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே கொடுமையாக உள்ளது.

இதற்க்கு மாற்றாக, தனிநபர்வாதத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர சந்தை பொருளாதாரத்தை, ஜனனாயக முறையில், முறையாக பின்பற்றிய பல நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று, வறுமையில் அளவை மிக மிக குறைத்து, இன்று செழிப்பான வளர்ந்த நாடுகளாக மாறின. மே.அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற பல நாடுகளின் economic history அய் பார்த்தாலே புரியும்.

கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து, அதை நம்ப வைத்து, முழுமையாக ஏற்க்க வைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதையே வரலாறு நிருபிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் இச்சித்தாந்தம் இன்று காலாவதியானதாக கருதப்படுகிறது.

மேலும் உபரி மதிப்பு மற்றும் சுரண்டல் தான் இதற்க்கு ஆதாராமான விசியங்கள். ஆனால் அவை உண்மை அல்ல என்பதை எமது முந்திய பதிவில் எழுதியுள்ளேன்.

31 comments:

Rettaival's Blog said...

கம்யூனிசத்தை மிகவும் பலவீனமாக தாக்கியுள்ளீர்கள். கம்யூனிசம் வீழ்ந்தது சித்தாந்ததால் அல்ல கம்யூனிஸ்டுகளால் என்பது எனது கருத்து. தவறிருந்தால் தயவு செய்து புரிய வைக்கவும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

திரு.அதியமான்,

இன்றே முதன் முறை. இதுதான் உங்கள் பிளாகில் நான் படித்த முதல் இடுகை. இதுவே என் முதல் பின்னூட்டம்.

'கம்யூனிசம் என்றால் என்ன' என்று சிறுபிள்ளைக்கும் புரியும் வண்ணம் மிகத்தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். இதைத்தான் பலமுறை நான் பல கம்யூனிச தளங்களில் தேடிஇருக்கிறேன். கிடைக்காது. கேட்டிருக்கிறேன். மறைப்பார்கள். மழுப்புவார்கள். வசைபாடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமை தூற்றுவார்கள்.கடைசியாக எந்த மறுமொழியும் வராது.

நன்றி.

K.R.அதியமான் said...

A Senஒரு முக்கிய விசியத்தை விட்டுவிட்டேன். சொத்துரிமை. Only a sense of ownership produces a sense of responsibltiy. அதாவது தனது உடமை என்ற எண்ணம் இருந்தால் தான்
அதை நன்கு பேண வேண்டும் என்ற பொறுப்புணர்வு உருவாகும். தனது பொருள், வாகனம், நிறுவனம், வீடு என்று இருந்தால் தான், அவற்றை அதன் ‘உரிமையாளர்’
பொறுப்பாக பேணுவார். முக்கியமாக தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இது
அவசியம். அதனால் தான் பொது உடமையாக்கப்பட்ட அரசு தொழில் நிறுவனங்களில் பொறுப்புணர்வு மிக குறைவாக இருக்கும். அலட்சியமும், மெத்தனமும், ஊழலும் உருவாகும். பொது சொத்துதானே, நமகெக்கன்ன என்ற எண்ணம்..

தொழிற்சாலையை நிர்வாகிப்பவர் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயல் பட அவருக்கு incentives of ownership or bonus, etc தேவை. இல்லாவிட்டால் சீரழியும். இதை வரலாறு மீண்டும் மீண்டும் நிறுபிக்கிறது. இந்தியாவில் ஏராளமான உதாரணங்கள் சொல்லாம்.

bala said...

அதியமான் அய்யா, வெற்றி பெறாமாலேயே இத்தனை நாச வேலை செய்யறாங்களே வினவு,கேள்விக்குறி,ஏகலைவன்,டாக்டர்ருத்ரன் போன்ற மாவோயிஸ்ட் தீவிரவாத போலி கம்யூனிஸ்ட்கள்;வெற்றியடைந்து விட்டால்....நினைக்கவே குலை நடுங்குதே.

K.R.அதியமான் said...

லெனினில் ‘புதிய பொருளாதார கொள்கை’ இதை வேறு ஒரு முறையில் சொன்னது :

http://en.wikipedia.org/wiki/New_Economic_Policy

It tried to motivate the small farmers into producing more with their small land holdings and a rudiementary market system. More details at :

http://www.icer.it/docs/wp2006/ICERwp22-06.pdf
Lenin and the Currency Competition

தோழர்கள் இந்த புதிய பொருளாதார கொள்கைகள் பற்றி அதிகம் பேசமாட்டாங்க. ஆனால் 1921இல் லெனின் இதை முயன்றதற்க்கு அடிப்படை காரணி, சித்தாந்தம் என்பதை விட நடைமுறை எதார்த்தம் என்பதே. Pragmatisim over Marxist dogma..

70 ஆண்டுகளை வீண் செய்து, பெரும் அழிவிற்க்கு பின் மீண்டும் அந்த யாதர்த்தவாத சந்தை பொருளாதாரத்தை பின் பற்றிய துன்பயில் நாடகம்...

Ragztar said...

போன பதிவுக்கு இது தேவலம்.

நண்பர் முகம்மதுவுக்கு,
வலை மனைகளில் கம்யூனிச சித்தாந்தத்தை தேடினால், அது குழந்தைகளுக்கு புரியுமாறு சொல்லும் பதிவுகள்தான் கிடைக்கும். நிறைய தேடிப்படியுங்கள். முற்சாய்வு இல்லாமல். குழந்த்யாகவே இருப்பது நல்லதல்ல.

K.R.அதியமான் said...

ஒவியன்,

உபரி மதிப்பு பற்றிய எமது முந்தைய பதிவு தான், நான் இதுவரை எழுதியவைகளில் மிக சிறந்தாக கருதுகிறேன். நண்பர்கள் பலரும் அதை உறுதிபடுத்துகின்றனர். முக்கியமாக எமது பொருளாதார பேராசியர் எழுதிய மடலை அதில் பின்னூட்டமாக இட்டிருக்கிறேன்.

Unknown said...

Dear Mr.Athiyaman,

One understands that while generally communists are fake human beings i.e;duplicats,maoists are special;they are so pathologically insane and rabid and full of homicidal tendencies that loony doctors esp loony docs with huge beard,start loving these specimens..

While this may be so, a few questions arise.
1)is it morally alright for people like Vinavu and co to work and earn money from half capitalists,broker capitalists or neocolonits
2) is it alright for loony doctors with big beard to keep making money from medicine a science promoted by western imperialists and make enormous sums of money from patients who are themselves slaves or agents of half capitalists and land lords.

bala said...

//loony docs with huge beard,start loving these specimens..//

Dear chinnappenn2000,
While I can get the drift of what you are trying to say, I need clarifications for a couple of questions.
1)When you say " are you implying that the doctor is a lunatic or that he is a doctor who treats lunatics like maoists.I am in disagrement with the adjective loony being attributed to maoists.I believe that maoists are more in the hard core terrorist class rivalling the jihadis like the bin laden gang.Lunatics are a relatively harmless class of people.

2) What is the significance of "beard" which ia a parameter of description for the loony doc?Does beard imply that the doc is a periyarist and therefore a born lunatic cum terrorist?What is the connection between periyarism and naxalism..where do the two deadly ideologies meet and integrate into one mosaic?

K.R.அதியமான் said...

Bala and Chinnapen, pls argue to the point relavant to the post. and pls stop personal references. I am of two minds about deleting or refusing to publish this kind of comments.

Robin said...

மிகவும் எளிமையாக கம்யுனிசத்தை பற்றி எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
கம்யுனிசம் தோல்வியடைந்து விட்டது என்பது உண்மைதான்.
அதேநேரம் கட்டுப்பாடில்லாத முதலாளித்துவமும் ஆபத்தானதுதான்.

bala said...

Dear Mr Athiyaman,

You are correct.Your article talks about the compulsive reasons as to why communism cannot succeed.While maoism is s dubious form of communisam I thought that since chinnappeen2000 raised points about the low moral fibre of maoists like Vinavu and some loony doc that i donot know about,a certain amount of digression into character analysis of tyical maoist sympathisers was in order.Sorry about this digression.

புதிய பறவைகள் said...

முதலாளித்துவம் (அ) உங்கள் மொழியில் சந்தைபொருளாதாரத்தின் கொடூரத்தால் பாதிக்கப்படுகிறவன் நான். அதேசமயம் கம்யூனிசத்தை நடைமுறைபடுத்துவதில் உள்ள பெரும்சிக்கலையும் உணர்கிறேன்.இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அதியமான் அவர்களே?

புதிய பறவைகள் said...

முதலாளித்துவம் (அ) உங்கள் மொழியில் சந்தைபொருளாதாரத்தின் கொடூரத்தால் பாதிக்கப்படுகிறவன் நான். அதேசமயம் கம்யூனிசத்தை நடைமுறைபடுத்துவதில் உள்ள பெரும்சிக்கலையும் உணர்கிறேன்.இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அதியமான் அவர்களே?

NO said...

அன்பான நண்பர் திரு அதியமான்,

இப்பொழுதுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்!

Excellent!!

ஆனால், கம்யூனிஸ்ட் சித்தாந்த்தவாதிகளின் முதல் கோட்பாட்டை நீங்கள் மீறிவிட்டீர்கள்! அதாவது, ஒரு நிகழ்விற்கு எவ்வளவு கடினமான complicated ஆன
விளக்கங்களை மற்றும் திரிபுகளை சொல்லி, லெனின் பெயரையும் மார்க்ஸ் பெயரையும் அதற்குள் சேர்த்து சொல்லுகிறீர்களோ, அப்பொழுதுதான் சொல்லவந்தது வலிமை பெரும்! இதுதான் இவர்களின் தர்க்க முறை!! நீங்கள் இவ்வளவு எளிமையாக சொன்ன விடயம் பலரை நோகடிக்கும்! அவர்களை பொறுத்தவரையில், Its not complicated enough and hence plain nonsense!!!

நீங்கள் சொல்லவருவது ஒரு அருமையான, யாவரும் உணரக்கூடிய basics!!

உண்மையை சொல்லவேண்டும் என்றால், மார்க்ஸ் முதலில் கம்யூனிஸ்சம் தோன்றும் நாடுகளாக கருதியது, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளைதான்! ஏறக்குறைய அவரின் நினைப்பானது , மக்கள் உணர்ந்து கம்யூனிஸ்சத்திற்கு வித்திடுவார்கள் என்பதுதான்! வர்க்க போராட்ட வழிமுறைகள் பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் அவர் அடித்து கூறினாலும், வரப்போகும் முதல் கம்யூனிஸ்ட் கூட்டமைப்புகள், மக்களால் உணர்ந்து அமல் படுத்தப்படும் ஒன்றாகவே அவர் நினைத்தார்!!

அது நடக்கவில்லை, நடந்த இடங்களிலும் தலைகீழாக சரிந்து மாண்டது, மேலும் இனியும் அது நடக்கப்போவது இல்லை!!! நீங்கள் கூறிய காரணங்கள் அதற்க்கு ஆதாரம்!!

நன்றி

NO said...

அன்பான நண்பர் திரு அதியமான்,

இப்பொழுதுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்!

Excellent!!

ஆனால், கம்யூனிஸ்ட் சித்தாந்த்தவாதிகளின் முதல் கோட்பாட்டை நீங்கள் மீறிவிட்டீர்கள்! அதாவது, ஒரு நிகழ்விற்கு எவ்வளவு கடினமான complicated ஆன
விளக்கங்களை மற்றும் திரிபுகளை சொல்லி, லெனின் பெயரையும் மார்க்ஸ் பெயரையும் அதற்குள் சேர்த்து சொல்லுகிறீர்களோ, அப்பொழுதுதான் சொல்லவந்தது வலிமை பெரும்! இதுதான் இவர்களின் தர்க்க முறை!! நீங்கள் இவ்வளவு எளிமையாக சொன்ன விடயம் பலரை நோகடிக்கும்! அவர்களை பொறுத்தவரையில், Its not complicated enough and hence plain nonsense!!!

நீங்கள் சொல்லவருவது ஒரு அருமையான, யாவரும் உணரக்கூடிய basics!!

உண்மையை சொல்லவேண்டும் என்றால், மார்க்ஸ் முதலில் கம்யூனிஸ்சம் தோன்றும் நாடுகளாக கருதியது, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளைதான்! ஏறக்குறைய அவரின் நினைப்பானது , மக்கள் உணர்ந்து கம்யூனிஸ்சத்திற்கு வித்திடுவார்கள் என்பதுதான்! வர்க்க போராட்ட வழிமுறைகள் பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் அவர் அடித்து கூறினாலும், வரப்போகும் முதல் கம்யூனிஸ்ட் கூட்டமைப்புகள், மக்களால் உணர்ந்து அமல் படுத்தப்படும் ஒன்றாகவே அவர் நினைத்தார்!!

அது நடக்கவில்லை, நடந்த இடங்களிலும் தலைகீழாக சரிந்து மாண்டது, மேலும் இனியும் அது நடக்கப்போவது இல்லை!!! நீங்கள் கூறிய காரணங்கள் அதற்க்கு ஆதாரம்!!

நன்றி

MILTON said...

you are judging the human beings atitute by his activities of nowadays.... that does n't mean the attitude of human being is never going to change .... Do you agree “Except change, every is subject to change”.? please go back to ancient history of mankind... is the discoveries of fire, cooking, hunting, tilling,dress,cattling made for the personal profit of any man ?...do you know who is working hard every day…? poor farmers, industrial labours, many house wives are working hard every day with out having any expectation of their perks and emoluments?….. do you think the attitude, life, morality, values are not changing though out the history of evolution of human being....?

MILTON said...

ownership is not made when man come in to existence........ it come in the mids of his life span.. need not to exist till end..

ச.தமிழ்ச்செல்வன் said...

நண்பர் அதியமான் அவர்களுக்கு இப்போதுதான் முதன் முறையாக உங்கள் எழுத்தை -இக்கட்டுரையை மட்டும் - வாசித்தேன்.கம்யூனிசம் பற்றி இவ்வளவு தவறாகக்கூட புரிந்து கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பவர்களும் இருக்கிறார்களே என்று அறிய ஆச்சரியமாக இருந்தது.உங்கள் கட்டுரையைப் படித்து விட்டு இதுதான் கம்யூனிசம் என்று வேறு சில நண்பர்கள் புரிந்து கொள்கிறார்களே என்று வருத்தமாகவும் இருந்தது.இது என்னுடைய உடனடி எதிர்வினை மட்டுமே.விரிவாக ஒரு பின்னூட்டம் இட முயற்சிப்பேன்.ரொம்பத் தப்புத் தப்பாக எல்லாவற்றையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வெளிப்படையாக வலதுசாரி என்று உங்களை அறிவித்துக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.அதை வரவேற்கிறேன்.

vasu said...
This comment has been removed by the author.
vasu said...
This comment has been removed by the author.
vasu said...
This comment has been removed by the author.
/ˈjib(ə)riSH/ said...

இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன். விரைவில் மற்றவற்றையும் படித்துவிடுவேன்.

இவற்றை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி!!!

Jayaprakashvel said...

அதியமான் அவர்களின் இந்தக் கட்டுரை மேம்போக்காக பார்த்தால் நல்லா எழுதப்பட்டது போல் தெரியும். எழுத்து நல்லா தான் இருக்கு . இங்கே நே பிரச்சனைன்ன கம்யூனிஸ்டுகள் யார் என்பதும் கம்யூனிசம் என்ன என்பதும் தெளிவாக்கப் படவில்லை. அப்படியான சூழலில் அதியமான் எழுதுவது உண்மையாக தோன்றும். பலரது பின்னூட்டங்களும் கம்யூனிசம் மீதான தங்கள் வெறுப்பை கிண்டலாக வெளிப்படித்தியிருக்க கண்டேன். அது பரிதாபத்துக்குரியதே. இந்தக் கட்டுரையின் மிதான என் விமர்சனக்களை ஒரு கட்டுரையாக எழுதி விரைவில் இங்கே தெரியப்படுத்துகிறேன். அதன் பின் விரிவாக விவாதிப்போம்.

Jayaprakashvel said...

ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.


இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள அதியமான் என்ற வார்த்தை நேரடியாக அதியமான் என்ற தனிநபரை குறிக்கவில்லை. அந்தப் பெயரைக் குறியீடாக்கி அப்படியான எண்ணம் கொண்ட எல்லோரையும் சொல்லி இருக்கிறேன். அதியமான் நம் மதிப்புக்குரிய எதிரி என்பதால் அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை. இருந்தாலும் மேலே சொன்னது பொதுவான வாசகர்களுக்காக.


வேலிக்குட்பட்ட அங்கேயும்

திரிய விடப்பட்ட இங்கேயும்

மழை இல்லை.

எதனாலும் தடுக்க இயலா

இடியின் குமுறல் தாங்கி

எங்கும் நீக்கமற

சீக்கிரமே பெய்யக்கூடும்

செம்மழை.

புலியூர் முருகேசன்

Jayaprakashvel said...

ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.


வேலிக்குட்பட்ட அங்கேயும்

திரிய விடப்பட்ட இங்கேயும்

மழை இல்லை.

எதனாலும் தடுக்க இயலா

இடியின் குமுறல் தாங்கி

எங்கும் நீக்கமற

சீக்கிரமே பெய்யக்கூடும்

செம்மழை.

புலியூர் முருகேசன்

Jayaprakashvel said...

ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.

Jayaprakashvel said...

அதியமான்
சீக்கிரமே பெய்யக்கூடும் செம்மழை
என்ற தலைப்பில் உங்களின் இந்தக் கட்டுரைக்கு பதில் சொல்லும் விதமாக என் பிளாக்கில் எழுதியுள்ளேன். படித்து விட்டு மேலும் பேசுங்கள். கட்டுரையை இங்கு பதிய முடியாத அளவுக்கு நீளமாக போய்விட்டது

VJR said...

திரு.அதியமான், கம்யூனிசம் படித்ததில்லை. ஆனால் புரிந்து கொண்டிருக்கிறேன். கம்யூனிசம் தோற்க்கவில்லை. போலி கம்யூனிஸ்ட்டுகள்தான் தோற்றிருக்கின்றனர். அடுத்து கம்யூனிசம் ஒன்றும் மதமில்லையே, மாற்றமே காணாமல் போக. உங்களுக்குத் தோன்றும் நல்ல விசயங்களைப் புகுத்தி ஏன் புது கம்யூனிசம் வரக்கூடாது.அதற்கு என்ன பெயராவதும் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஏன் முனையக்கூடாது. அதற்காக கட்டுப்பாடில்லா முதலாளித்துவத்தை ஆதரித்தால்,...?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இப்பொழுது தமிழக நிலப்பரப்புகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பணக்காரர்கள் கையில் அடக்கமாகிவிட்டது.

உதாரணத்திற்கு நடிகர் சிம்புவுக்கு 3000 ஏக்கர் நிலம், மதுரைக்கு அருகில் என்று கேள்வி. தேனி சுற்றுவட்டாரம் முழுவதும் தனியார் நூற்பாலைகளின் வசம். பெரியகுளம் நடிகர் வடிவேலும், ஒரு தயாரிப்பளரும் வளைப்பதாகக் கேள்வி.

இதற்கெல்லாம் ஒரு எல்லை வேண்டாமா? அந்த எல்லைக்குப் பேர் கம்யூனிசம் என்றால், அது நமக்குத் தேவை.

கட்டுபாடில்லா முதலாளித்துவம், வெகு சீக்கிரமாக இந்தியா முழுமையும் டாட்டா,பிர்லா,அம்பானிக்கு மட்டுமே சொந்தமாக்காது என்பதை விளக்க இயலுமா?

K.R.அதியமான் said...

http://www.thefreemanonline.org/columns/soviet-admissions-communism-doesnt-work/

Soviet Admissions: Communism Doesnt Work

Bukharin’s work on NEP which argued for the necessity of market relations of production for economic development, are found in such volumes as Building up Socialism (1926) and in the collection of essays edited by Richard Day, Selected Writings on the State and the Transition to Socialism (1982). In his work on NEP Bukharin force-fully argued against the bureaucratization of the economy and for the importance of incentives in economic activity. In fact, in perhaps his most famous essay of this period, “Concerning the New Economic Policy and Our Tasks,” written in 1925, besides encouraging the peasants to “enrich themselves,” Bukharin explicitly acknowledged Ludwig von Mises’s criticism of socialist planning and argued that Mises was “one of the most learned critics of communism.” Bukharin went so far as to admit that Mises’s criticism of Communism was correct—at least for the historical epoch in which he wrote.

mazing as this admission is, Bukharin was not the only Bolshevik to recognize the problem confronting economic planning. Even Lenin had to admit the serious problems the Bolsheviks encountered in their attempt to implement socialism. In a speech to the Political Education Department on October 17, 1921, for example, Lenin admitted that “In attempting to go over straight to communism we, in the spring of 1921, sustained a more serious defeat on the economic front than any defeat inflicted upon us by Kolchak, Deniken or Pilsudski. This defeat was much more serious, significant and dangerous. It was expressed in the isolation of the higher administrators of our economic policy from the lower and their failure to produce that development of the productive forces which the Programme of our Party regards as vital and urgent.” Moreover, in a secret letter on February 19, 1921, he wrote, “The greatest danger is that the work of planning the state economy may be bureaucratized . . . . A complete, integrated, real plan for us at present equals ‘a bureaucratic utopia.’ Don’t chase it.” Trotsky also would write, in his stinging criticism of Stalinist planning, The Revolution Betrayed (1937), that while “the obedient professors managed to create an entire theory according to which the Soviet price, in contrast to the market price, has an exclusively planning or directive character . . . . The professors forgot to explain how you can ‘guide’ a price without knowing real costs, and how you can estimate real costs if all prices express the will of the bureaucracy . . . .”

///It is common practice today to criticize the deformed, barracks-style, egalitarian socialism built in the 1930s. But that criticism diligently sidesteps the structural reasons for our barracks-style approach. And it avoids the central question: Can a nonbarracks-type, democratic socialism be built on a noncommodity, nonmarket foundation? That question is central not only for those who are thinking about the future but also for those seeking to understand the past. Why is it that in all cases without exception and in all countries . . . efforts to combat the market and commodity-money relations have always led to authoritarianism, to encroachments on the rights and dignity of the individual, and to an all-powerful administration and bureaucratic apparatus?

Marx never saw that difficult question, since he lacked appropriate historical experience. Lenin sensed it at the end of his life All this bespeaks an urgent need for a serious and open “self-audit” of Marx’s teachings on the economic bases of the future society, on how the theoretical forecast relates to the real results of its implementation in real life.//

Unknown said...

கம்யூனிசம் வெல்லும்