கடந்த நான்கு ஆண்டுகளாக தொடரும் உலக பொருளாதார மந்தம் இன்னும் முடிந்தபாடில்லை.
இவ்வகையான மந்தங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நிகழ்ந்தாலும், இந்த முறை
மிக மோசமான மந்தம். இவ்வகை மந்தங்களுக்கான மூலக்காரணிகள் பற்றி பல வகை பொருளாதார கோட்ப்பாடுகள்,
சிந்த்தாந்த ரீதியான நிலைபாடுகள் உள்ளன. மார்க்சிய கோட்பாடு, கீனிசியன் கோட்பாடு மற்றும்
ஆஸ்டிரியன் பள்ளி கோட்டுபாடுகள் சில முக்கியமானவை. இதில் ஆஸ்ட்ரிய பள்ளி கோட்பாடு பற்றி
பார்ப்போம்.
சந்தை பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் விலை சமிக்கைகள் ஒரு பண்டத்திற்க்கு தட்டுபாடு
உருவாகும் போது (அல்லது உற்பத்தி – தேவை சமன்பாடு மாறுபடும் போது) அதற்கான சந்தை விலை
உயரும். எனவே அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் லாபம் விகிதமும் அதே விகிதத்தில்
உயரும். அதிக லாபம் கிடைப்பதை காணும் இதர முதலீட்டாளர்கள், அந்த பண்டத்தை உற்பத்தி
செய்யும் புதிய நிறுவனங்களில் அதிக முதலீடு செய்ய முனைவார்கள். படிப்படியாக உற்பத்தி
பெருகி, அப்பண்ட்டத்தின் சந்தை விலை உயர்வது தடுக்கப்பட்டு, பிறகு சம நிலை அடையும்.
இதில் முக்கியமானது சந்தை விலை. அது ஒரு வகை சமிக்கைகளை அளிக்கிறது. (price
signals). ஒரு தூய சந்தை பொருளாதார அமைப்பில், இந்த சமிக்கைகள் சிதைவடையாமல், மாறுபடாமல்
அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்கவிடாமல் பல வகையான சக்திகள்
(அரசு மற்றும் இதர வகை) தடுத்து குழப்பங்களை விளைவிக்கின்றன. (distortion of price
signals)
விலை நிர்ணியத்திற்க்கு மூன்று அடிப்படை கூறுகள் : தேவை, அளிப்பு மற்றும்
medium of exchange எனப்படும் பணம். இந்த மூன்றில் எந்த ஒன்றின் அளவு மாறுபட்டாலும்,
விலையின் அளவும் மாறுபடும்.
பொதுவாக விலை உயர்வுக்கு இரு வகை காரணிகள் உண்டு : 1. தேவை –அளிப்பு விகிதங்களில்
ஏற்படும் மாறுபாடுகள் ; 2. பணவிக்கத்தினால் உருவாகும் விலைவாசி உயர்வுகள். முதல் காரணி குறிப்பிட்ட சில பணடங்களில், துறைகளில்
மட்டும் உருவாகும். ஆனால் இரண்டாவது காரணி அனைத்து துறைகளிலிலும் பொதுவான விலை உயர்வை
உருவாக்கும். பண வீக்கம் உருவாக ஒரே காரணம் அரசுகளின் பற்றாகுறை பட்ஜெட்டுகள் தான்.
அதாவது தங்களின் நிகர வருவாயை விட அதிகம் செலவு செய்யும் போது உருவாகும் பற்றாக்குறையை
சமாளிக்க, புதிய கரண்சி நோட்டுகளை (ரிசர்வ் வங்கிகள் மூலம்) உருவாக்கி செலவு செய்யும்
முறை. (deficit financing . இவ்வகையான பணவீக்கத்தினால் உருவாகும் விலைவாசி உயர்வு அனைத்து
வகை ‘விலை சமிக்கைகளையும்’ (price signals) சிதைத்து, பண்டங்களில் விலை உயர்வுக்கு
காரணம் அவற்றிற்கான உண்மையான பற்றாக்குறையா அல்லது பணவிக்கம் தான் காரணமா என்பதை உற்பத்தியாளர்களும்,
முதலீட்ட்டளர்களும் அறிய முடியாமல் குழப்பி விடும். எனவே புதிய முதலீடுகள் மற்றும்
உற்பத்தி, ‘நிஜமான’ தேவையை விட அதிகமாக உருவாகி, பின்பு உச்ச நிலையை எட்டி, அதன் பின்பு
பொருளாதார மந்தம் உருவாகும்.
ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகுதங்களை நிஜ வட்டி விகிதங்களை விட மிக குறைப்பதும்
இதே போன்ற விளைவைதான் உருவாக்கும். சந்தை நிர்ணியக்கும் வட்டி விகிதங்களை விட மிக குறைவாக
அரசின் மைய வங்கி கடன் அளிப்பதும், பணவிக்கத்தையும், கடன் வளர்ச்சியையும் உருவாக்கும்.
(credit boom)
நிஜமான வட்டி விகிதங்கள் பொதுவாக விலைவாசி உயர்வு விகிதங்களை ஒட்டியே இருக்கும்.
அதாவது ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு குறையும் விகித்தற்க்கு ஏற்றார் போல் இருக்கும்.
உதாரணமாக மேற்கு ஜெர்மனியில் 60களில் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 2 சதம் அளவில் இருந்த்தால்,
அன்று அங்கு வங்கி மற்றும் இதர வட்டி விகிதங்கள் சுமார் 3 சதம் அளவில் தான் இருந்தன.
ஆனால் அதே கால கட்டத்தில் இந்தியாவில் பணவீக்கம் சுமார் 18 சதம் இருந்த்தால், வங்கி
மற்றும் இதர வட்டி விகிதங்கள் 24 சதம் அளவில் இருந்தன. ஆனால் பொருளாதாரத்தை ‘மேம்படுத்துவதாக’
கருதி, அரசுகள் (முக்கியமாக அமெரிக்க அரசின் மைய வங்கியான ஃபெட் எனப்படும் ஃபெடரல்
ரிசர்வ் வங்கி) வட்டி விகிதத்தை செயற்கையாக குறைக்கும் போது, இதர வங்கிகள் சந்தை நிர்ணியக்கும்
வட்டி விகுத்த்தை விட மிக குறைந்த விகுதத்தில் ரிசர்வ் வங்களிடம் கடன் பெற்று, அதை
வெளி நிறுவங்களுக்கு (தங்களின் லாப விகிதத்தை சேர்த்து) அளிக்கும். இதனால் சந்தை நிர்ணியக்கும்
வட்டி விகுத்த்தை (real interest rates) விட குறைந்த விகித்த்தில் செயற்க்கையாக கடன்
பெரும் அளவில், தாரளமாக கிடைக்கும். இது ஒரு மாபெரும் கடன் வெள்ளத்தை (credit
boom) உருவாக்கி, தூய சந்தை பொருதார அம்சமான சமிக்கைகளை சிதைக்கும். (distortion of
price signals). எனென்றால் வட்டி என்பதும் ஒரு வகையான ‘விலைதான்’ ; அதாவது பணத்தின்
விலை. (money costs). இந்த ‘விலை’ செயற்க்கையாக சிதைக்கப்படும் போது, தவறான சமிக்கைகளை
சந்தைக்கு செலுத்தும். இவ்வகையான கடன் வெள்ளங்களும் இறுதியில் பொருளாதர மந்தங்களுக்கு
இட்டு செல்லும்.
அன்னிய செலவாணி சந்தையில், ஒரு நாட்டின் கரண்சியின் சந்தை மதிப்பு அந்நாட்டின்
அடிப்படை பொருளாதார பலம் / பலவீனத்தின் அடிப்படையில் தான் பொதுவாக அமையும். ஆனால் இப்படி
அமையாமல் ஒரு கரண்சியின் மதிப்பு பலவேறு இதர காரணிகளால் நிர்ணியிக்கப்படும் போதும்
price signal distortions எனப்படும் தவறான சமிக்கைகளை வெளிப்படுத்தும். அமெரிக்க டாலரின்
மதிப்பு இப்படி தான் செயற்க்கையாக மிக அதிகமாக உள்ளது. ஒரு உண்மையான ‘சுதந்திர’ சந்தையில்
அரசுகள் தலையிடாமல் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை. கரன்சி
சந்தையில், ஏற்றுமதியை நம்பி வாழும் பல நாடுகளின் அரசுகள் தலையிடுவாதால் குழப்பங்கள்
(distortions) உருவாகுகின்றன. முக்கியமாக சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுமதி
ஈட்டும் டாலர்களை அந்நாடுகளின் ரிசர்வ் வங்கிகளிடம் ஏற்றுமதியாளர்கள் கட்டாயமாக ‘விற்க’
வேண்டும். (இதில் சில வகை விதிவிலக்குகள் உள்ளன). ட்ரில்லன் கணக்கான டாலர்களை அந்த
நாடுகள், மீண்டும் அமெரிக்க அரசுக்கே கடனாக அளிக்கின்றன. அதன் மூலம் தங்கள் நாட்டு
கரன்சிக்களின் சந்தை மதிப்பை (டாலருக்கு எதிராக) செயற்க்கையான குறைத்து வைத்திருக்கின்றன.
(over valuation of US dollar against currencies of exporting nations). ஏனென்றால்
தங்கள் நாட்டின் கரன்சியின் மதிப்பு உயரும் போது, அமெரிக்காவிற்க்கும், பிற மேலை நாடுகளுக்கும்
தாங்கள் ஏற்றுமதி செய்யும் பண்டங்களின் டாலர் விலை உயர்ந்து, ஏற்றுமதியை பாதிக்கும்.
அதை தடுக்கவே செயற்க்கையாக டாலரை உயர்த்தி பிடிப்பது. உலக வர்த்தம் இன்று பெரும்பாலும்
டாலரில் நடைபெறுவதும் ஒரு பெரிய சிக்கலை, சமனிலையற்ற நிலையை உருவாக்கி உள்ளது.
மேற்கூறிய மூன்று காரணிகளினால், அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக
பெரும் பண வெள்ளம் உருவாகி, பொருளாதார வளர்ச்சி (economic boom) செயற்க்கையாக உருவானது.
மேலும் வீடில்லாதவர்களுக்கு வீடு கிடைக்கும் லட்சியவாதத்தினால், வீட்டு கடன்களை, ‘தகுதியிள்ளாதவர்களுக்கும்’
தாரளமாக அளிக்க தனியார் வங்களும், நிறுவனங்களும் அமெரிக்க அரசினால ஊக்குவிக்கப்பட்டனர்.
இப்படி தனியார்களால் அளிக்கப்படும் கடன் பத்திரங்களை மூன்று அமெரிக்க அரசு துறை சார்ந்த
பெரு நிறுவனங்கள் தொடர்ந்து வாங்கின. வீட்டு கடன் அளிக்கும் நிறுவங்களுக்கு அரசு பல
வரி சலுகைகளையும் அளித்தது. வட்டி விகதமும் ஏறக்குறைய சுழி அருகில் ஃபெட்டினால் தொடர்ந்து
நிர்ணியக்கப்பட்டது. டாலரின் மதிப்பும் தொடர்ந்து செய்ற்க்கையாக தூக்கி நிறுத்தப்பட்டிருந்தால்,
இயல்பாக உருவாகும் சமநிலை நோக்கிய மாற்றங்கள் (corrections in imbalances and
world markets) உருவாக வாய்ப்பில்லாமல் போனது.
இவை அனைத்தும் சேர்த்தால், 2003 இருந்து 2008 வரை உலக பொருளாதரமே செயற்க்கையாக
‘வளர்ந்தது’ ; ஒரு பலூனில் தொடர்து காற்றை செலுத்துவது போல் ஊதி பொருகியது. முடிவு
பெரும் வீழ்ச்சி மற்றும் மந்தம். சுதந்திர சந்தை பொருளாதாரம் இப்படிதான் தோல்வியடையும்
என்பது தவறான வாதம். எனென்றால் ‘சுதந்திர’ சந்தை பொருளாதார அமைப்பே உருவாகாமல், அரசுகளின்
தலையிடுகளினால், ’சுதந்திரமற்ற’ சந்தை பொருளாதாரம் தான் இன்றளவும். ஆஸ்த்திரியன் பள்ளி
பொருளாதார கோட்பாடு இதுதான். இதன் முக்கிய பொருளாதார நிபுணர் 1949இல் ’Human
Action’ என்ற பெரும் படைப்பை உருவாக்கிய ஃப்ரெட்ரிக்க் வான் மிஸசஸ்.
பொருளாதார மந்தங்களை தவிர்க்க தேவையானவை :
11. உலகின் அனைத்து
நாட்டு அரசுகளும் தங்கள் பட்ஜெட் பற்றாக்குறைகளை முடிந்த வரை குறைக்க வேண்டும். தேவையில்லத
வெட்டி செலவுகளை, முக்கியமாக ராணுவ செலவுகளை குறைக்க வேண்டும்.
22. அமெரிக்க அரசு தனது
ராணுவ செலவுகளையும், இதர வெட்டி செலவுகளையும் குறைத்து, ஃபெட்டின் வட்டி விகிதங்களை
யாதார்த்த அளவை ஒட்டி நிர்ணியிக்க முன் வரவேண்டும். வீட்டு கடன் துறையில் அரசின் தலையிட்டை
தவிர்க்க வேண்டும்.
33. ஏற்றுமதி மிக அதிகம்
செய்து பிழைக்கும் நாடுகள் (முக்கியமாக சீனா) அமெரிக்க டாலரை செய்ற்கையாக உயர்த்தி
பிடிக்கும் மிக அபாயகரமான முறையை கைவிட வேண்டும்.
44. அய்ரோப்பிய ஒன்றியத்தில்
யூரோ கரண்சி உருவானதும் ஒரு தேவையில்லாத, எதிர்மறையான செயல். இதனாலும் உருவான சிக்கல்களை
தவிர்க்க, இந்த பொது கரன்சியை கைவிட்டு, தேசிய கரன்சிகளுக்கு திரும்ப வேண்டும்.
0 comments:
Post a Comment