உணவும், உடையும்

இந்திய விவசாயம் சீரழிந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தொடர்ந்து அங்காலாய்ப்பு. இதற்கெல்லாம் காராணம் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகள் தான் என்று மிக எளிமைபடுத்தப்பட்ட வாதம் தொடர்ந்து ஒலிக்கிறது, உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சேவை, கல்வி என்று வரிசையக செல்லும் அடிப்படை தேவைகள். இதில் இரண்டாவது அடிப்படை தேவையான உடை பற்றி பெரிய சர்ச்சை, விவாதம், அறச்சீற்றம் எதுவும் இன்று தென்படுவதில்லை. இதர தேவைகள் பற்றி தான். ஏன் என்று பார்ப்போம்.
90கள் வரை இந்திய தொழில்துறை அரசின் கட்டுபாடுகள், லைசென்ஸ், பெர்மிட், கோட்டா ராஜ்ஜிய முறையால் கடுமையாக கட்டுபடுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தது. 1991இல் நடைமுறைபடுத்தப்பட்ட தாராளமயமாக்கல் இந்த கட்டுப்பாடுகளை பெருமளவில் ஒழித்தது. பார்க்கவும் :  'தாரளமயமாக்கல்' என்றால் என்ன ?

அதற்க்கு முன்பு வரை ஆடை என்பது பெரு வாரியான இந்திய மக்களுக்கு ஆடம்பர செலவு என்ற வகையில் தான் இருந்தது. இன்று சொன்னால நம்ப முடியாது. ஆனால் அன்று கந்தல் மற்றும் கிழிந்த ஆடைகள் சர்வ சாதாரணம். மிக குறைந்த எண்ணிக்கையில் தான் பெரு வாரியான மக்க்ள வைத்திருந்தனர். முக்கியமாக ஏழைகளும், கூலி தொழிலாளர்களும், அனாதை குழந்தைகளும், பிச்சை எடுப்பவர்களும் அன்று உடுத்த போதுமான, மலிவான ஆடைகள் இல்லாமல் பெரும் துன்பத்தில் திளைத்தனர். (இன்று உணவு, இருப்பிடம் போல் அன்று ஆடையும் பற்றாக்குறை மற்றும் கடும் விலை). பழைய கருப்பு வெள்ளை படங்கள், 70களில் வெளி வந்த கலர் படங்களை பார்த்தால் தெரியும்.

1991 வரை புதிய நூற்பாலைகள், பஞ்சாலைகள் துவங்க லைசென்ஸ் தேவை பட்டது. உற்பத்தியை பெருக்க பெரும் தடைகள். வரி விகிதங்களும் மிக மிக அதிகம். உற்பத்தி வரி, சுங்க வரி, விற்பனை வரி, ஆக்ட்ராய் என்று பெரும் சுமை. எனவே அனைத்து உற்பத்தியும் நசுக்கப்பட்டு, விலை அதிகமாக, பற்றாக்குறை இருந்த காலங்கள். தாரளமயமாக்கல் வந்தவுடன் தான் உற்பத்தி துறைக்கு புத்த்யுர் பிறந்து, பெரு வெள்ளம் போல் பெருகியது. ஆடை மிக மலிவாக, தாரளமாக கிடைக்க துவங்கியது. இன்று ஒரு அடிமட்ட கூலி தொழிலாளி, தன் ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்க முடியும். People are better clothed now than ever before. பிச்சைகாரர்கள் கூட தான்.

இதே மாற்றம் ஏன் விவசாயத்தில் சாத்தியமாகவில்லை ? வளர்ந்த நாடுகளில், முக்கியமாக அமெரிகாவில் வறுமை என்பது உணவு கிடைக்காத பட்டினி அல்ல. இருப்பிடம், மருத்துவ வசதி இல்லா நிலை தான் அங்கு வறுமை. உணவு விலை அங்கு மிக மிக மலிவு. காரணம் விவசாய உற்பத்தி முறை முற்றாக ‘முதலாளித்துவ’ பாணியில், பெரும் பண்ணைகளில், நவீன வேளான்மை முறைகள், எந்திரங்கள் கொண்டு பயிரடப்படுகிறது. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் மக்கள் படிப்படியாக விவசாயத்தில் இருந்து உற்பத்தி துறைக்கும், பிறகு சேவை துறைக்கும் மாறினர். இன்று அங்கு விவசாயத்தில் மிக குறைந்த எண்ணிகையிலான மக்களே உள்ளனர். (10 சதத்திற்க்கும் குறைவானவர்கள்). இந்தியாவில் இதை அனுமதிக்காமல், முட்டாள்தனமான ‘நில சீர்திருத சட்டங்கள்’, ‘நில உச்ச வரம்பு சட்டங்கள்’ போன்றவையினால், சராசரி பண்ணையின் அளவு இன்று 2 ஏக்கருக்கும் குறைவு. ஆனால் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு இன்னும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். Two thirds of the population are still trapped in agriculture.


Economics of scale என்று ஒரு முக்கிய விசியம் உண்டு, பெரும் அளவில், நவீன முறையில் உற்பத்தி செய்யப்படும் பண்டத்தின் விலை மிக மிக குறையும். (ஆடையில் இது இந்தியாவில் நிகழ்ந்தது). முதலாளித்துவ, கம்யூனிச முறை எதுவாகினும் இது பொருந்தும். பழைய சோவியத் ரஸ்ஸியாவில், கூட்டு பண்னைகளில் அளவு பல ஆயிர்ம் ஏக்கர்களின் இருந்தது. இன்று உள்ள ரஸ்ஸியாவிலும் தான். வளர்ந்த நாடுகல் அனைத்திலும் இதே போல் தான். ஆப்ரிக்காவில், தென் அமெரிகாவில் கூட இந்தியா போல் நில உச்ச வரம்பு தடைகள் இல்லை. 500 ஏக்கர் பண்ணைகள் சர்வ சாதாரணம். இங்கு இப்ப சாத்தியமில்லை. எனவே உற்பத்தி செலவு மிக மிக அதிகம். புதிய முதலீடுகள் விவசாயத்தினுள், பங்கு மற்றும் நிதி சந்தை மூலம் செல்வது மிக மிக குறைவே. எனவே சிறு விவசாயிகள் மிக அதிக வட்டிக்கு, தனியார்களிடம் கடன் வாங்கி திவாலுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆந்திரா, மகாராஸ்ட்ரா பகுதிகளில், பருத்தி விவசாயிகள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். பல காரணிகள். கடன் சுமை முக்கிய காரணம். தாரளமயமாக்கல் தான் காரணம் என்றால் இந்தியா முழுவதும், அனைத்து வ்கை விவசாயிகளும் ஒரே விகிதத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லை.

காப்பி, டீ, ரப்பர் எஸ்டேடுகளுக்கு இந்த நில உச்ச வரம்பு சட்டம் கிடையாது. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் ஒரே எஸ்டேட்டில் இருக்கும். ஏன் என்று யாரும் யோசிப்பதில்லை. ஏனைய விவசாயம் போல் இதிலும் துண்டு துண்டான சிறு விவசாயிகளின் நிலம் போல் இருந்தால், கட்டுபடியாகது. பெரும் அளவில் உற்பத்தி, குறைந்த செலவில் செய்யவே முடியாது. எல்லாம் விவசாயம் தான். ஆனால் அரசின் சட்ட திட்டங்களால தான் இத்தனை குளருபடி.

உடனடியாக நில உச்ச வரம்பு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. படிப்படியாக செய்யலாம். இதை பற்றி முதலில் பொது விவாதம் தேவை. கார்பரேட் பண்ணைகளை அனுமதிப்பது பற்றியும் விவாதம் தேவை.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு.
கரும்பு விவசாயத்தில் ஒருவகை கார்பரேட் பண்ணி இருக்கிறது, அதுவும் சிறப்பாக செயல் படுகிறது
எனவே நெல், வாழை, காய்கறிகள், மலர்கள் விவசாயத்திலும் தனியார் மயமாக்கலைக் கொண்டு வரலாம்

manjoorraja said...

சரியான பதிவு.

நீங்கள் சொல்வது உண்மை தான் 90 களில் புதுத் துணி எடுப்பது என்பது ஒரு விசேஷமாகவே கருதப்பட்டது. ஆனால் இப்போது அப்படியல்ல.

தேயிலை காப்பிதோட்டங்கள் ஏக்கர் கணக்கில் வைத்திருப்பவர்களைவிட சிறு அளவில் அதாவது ஒரு ஏக்கர், 2 ஏக்கர் என வைத்திருக்கும் விவசாயிகள் தான் நீலகிரியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது சொந்த அனுபவம்.

K.R.அதியமான் said...

இதே விசியம் பற்றிய எமது ஆங்கில பதிவு : http://athiyaman.blogspot.com/2010/09/food-vs-clothing-in-india.html

ரிஷி said...

கார்ப்பரேட் பண்ணைகளை அதிகரிக்கும் நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதற்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு உற்பத்தியும் லாபமும் மட்டுமே முக்கியமாகக் கருதி செயல்படக்கூடிய அபாயமிருக்கிறது. மக்கள் நலச்சார்பும் அவசியம். மரபணு மாற்றப்பட்ட விளைபொருட்களை விளைவிக்காமல் இயற்கையான தாவர, தானிய வகைகளையே பயிரிட வேண்டும்.

(தற்போது சந்தையில் நான் காணும் நாவல்பழங்களில் ஒரிஜினல் டேஸ்டே இல்லை. சைஸும் நல்ல கோள வடிவில் இருக்கவேண்டியவை சற்று நீட்சியான உருளையாக இருக்கின்றன. ஒரிஜினல் நாவல்பழங்களை சாப்பிடும்போது கைகளின் அந்த நிறம் ஒட்டும். சுவையாகவும் இருக்கும். தற்போது மார்க்கெட்டுக்கு வருபவை அப்படி இல்லையே??!!)

ரிஷி said...

கார்ப்பரேட் பண்ணைகளை அதிகரிக்கும் நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதற்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு உற்பத்தியும் லாபமும் மட்டுமே முக்கியமாகக் கருதி செயல்படக்கூடிய அபாயமிருக்கிறது. மக்கள் நலச்சார்பும் அவசியம். மரபணு மாற்றப்பட்ட விளைபொருட்களை விளைவிக்காமல் இயற்கையான தாவர, தானிய வகைகளையே பயிரிட வேண்டும்.

(தற்போது சந்தையில் நான் காணும் நாவல்பழங்களில் ஒரிஜினல் டேஸ்டே இல்லை. சைஸும் நல்ல கோள வடிவில் இருக்கவேண்டியவை சற்று நீட்சியான உருளையாக இருக்கின்றன. ஒரிஜினல் நாவல்பழங்களை சாப்பிடும்போது கைகளின் அந்த நிறம் ஒட்டும். சுவையாகவும் இருக்கும். தற்போது மார்க்கெட்டுக்கு வருபவை அப்படி இல்லையே??!!)

Unknown said...

நல்ல பதிவு, உங்கள் சிந்தனைகள் நிறைய செய்திகளை அறியத்தருகின்றன. ஆழமான பதிவுகளை எழுதுகின்றீர்கள். நன்றி

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் காலம் காலமாக நிலத்தை மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் என்ன செய்யும் என்றுநினைக்கின்றீர்கள்?