சுதந்திர சந்தை பொருளாதாரமும் ஜனனாயகமும்
ஜனனாயகத்திற்க்கும், சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கும் உள்ள
தொடர்புகள் பற்றி பார்ப்போம். இரண்டிற்க்கும் அதிக தொடர்பில்லை என்ற
தவறான கருத்தாக்கம் இன்னும் பரவலாக உள்ளது. ஆனால் சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்டுத்தினால் தான் அடிப்படை ஜனனாயகம் மற்றும்
மனித உரிமைகளை நிலை நாட்ட முடியும் என்பதே வரலாறு தரும் பாடம். மாற்றாக
சோசியலிசம் (அது ஜனனாயக பாணி சோசியலிசமானலும் சரி, கம்யூனிச பாணி
சோசியலிசமானாலும் சரி) சர்வாதிகாரத்திற்க்கு தான் இட்டு செல்லும்
என்பதையும் பார்போம்.
சுதந்திர சந்தை பொருளாதாரத்தின் மூலவேர் சொத்துரிமை தான். 1948இல் உருவான
சர்வதேச மனித உரிமைகள் பற்றிய அய்.நா பிரகடனத்தில், சொத்துரிமையும் ஒரு
முக்கிய அம்சம். லிப்ரல் ஜனனாயகம் என்பது இந்த வரலாற்று முக்கியம்
வாய்ந்த பிரகடனதின் அடிப்படையில் தான் அமைக்க முடியும். சொத்துரிமையை
பலவீனப்படுத்தும் முயற்ச்சி மற்ற அனைத்து அடிப்படை உரிமைகளயிம் நசுக்க
வழி வகை செய்யும் என்பதையும் பார்க்கலாம்.
உதாரணமாக சுதந்திர இந்தியாவில் பெரு நிறுவனங்களை அரசுடைமையாக்க நடந்த
முயற்சிகளுக்கும், நில உச்ச வரம் சட்டத்திற்க்கும் உச்ச நீதி மன்றம்
'பிற்போக்குதனமாக' தடையாக இருப்பதாக கருதிய, இடதுசாரிகளால்
நிரம்பியிருந்த, அன்றைய காங்கிரஸ் அரசு, பாரளுமன்ற நடவடிக்கைகள் மூலம்
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகளை பலவீனப்படுத்த சட்டம் இயற்றியது.
சமத்துவம் என்ற லட்சியவாத நோக்குடன், ஏழைகளுக்கு பயன் அளிக்கும் என்ற
எண்ணத்தின் உருவாக்கப்பட்ட சட்டங்கள் உண்மையில் ஏழைகளில் நலன்களுக்கு
எதிராக, அரசு எந்திரம் சர்வாதிகாரத்தனமாக பயன்படுத்தவே
பயன்படுத்தப்பட்டது. இன்றைய நந்திகிராம் மற்றும் சிங்கூர் பிரச்சனைகளே
உதாரணம். தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்த சிறு
விவசாயிகள் கொடூரமாக நசுக்கப்பட்டனர். தனியார் நிறுவனங்களுக்காக அரசே
நிலங்களை விவசாயிகளிடம் இருந்து கட்டாயமாக பிடுங்க இச்சட்டங்கள் வழிவகை
செய்தது. லிப்ரல் ஜனனாயக நாடுகளில் இது சாத்தியமில்லை. மேற்க்கு
அய்ரோப்பாவில் இப்படி தனியார் நிலங்களை அரசு பிடுங்க முடியாது. எனென்றால்
அங்கு சொத்துரிமை பலமாக பேணப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு
தேவைபடும் நிலங்களை விவசாயிகள் மற்றும் இதர உரிமையாளர்களிடும் இருந்து
நேரடியாக, பேரம் மூலம் தான் வாங்க இயலும். இங்கு சிறப்பு பொருளாதார
மண்டலம் என்ற பெயரில் நில மாஃபியாவும், அரசு எந்திரமும் கூட்டாக நிலங்களை
சட்டப்படி 'கொள்ளையடிக்கும்' நிலை !
சோசியலிச கொள்கைகள் என்ற பெயரில் சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான
எந்த ஒரு செயல் திட்டமும் அரசு எந்திரத்தை மிக பலப்படுத்தி,
சர்வாதிகாரத்திற்க்கு இட்டு செல்லும் என்பதை 'Road to Serfdom' என்ற
நூலில் ஃப்ரெட்ரிக் ஹயக் 1944இல் விவரித்துள்ளார். இந்தியாவில் 60கள்,
70களில் சோசியலிச கோசங்கள் உச்சமடைந்து, தனியார் துறையே நசுக்கப்பட்டது.
லைசென்ஸ், பெர்மிட், கோட்ட ராஜ்ஜியம் உருவாகி, அரசு எந்திரமும்,,
காங்கிரஸ் கட்சியும் மிக மிக பலம் பெற்று, சர்வாதிகாரத்தை நோக்கி
பயணித்தது. ஊழலும், பொருளாதார தேக்கமும், வேலையின்மை மற்றும் வறுமை
அதிகரிக்க காரணமாகியது. (நகசல்பாரி எழுச்சிக்கு இதுவே காரணம்). பெரும்
தொழில் அதிபர்கள் அனைவரும் புது டில்லிக்கு பணிந்து லஞ்சம் அளித்தே தன்
தொழில்களை நடத்த, விரிவாக்க முடிந்தது. புது டில்லியில் 'லையாசன்
அதிகாரிகள்' என்ற அதுவரை இல்லாத ஒரு புதிய 'வேலைவாய்ப்பு' உருவானது.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சர்வ வல்லமை படைத்த சக்கரவர்த்தி போல்
கோலோச்சினார். அவரை கண்டு பெரும்பாலனவர்கள் பயம் கலந்த மரியாதை கொண்டனர்.
1972இல் நிகழ்ந்த நகர்வாலா ஊழல் தான் சரியான உதாரணம். நகர்வாலா என்ற
நபர், டில்லி பாராளுமன்ற சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின்
மேலாளலரிடம் தொலைபேசி மூலம், பிரதமர் போல் குரலை மாற்றி பேசி, தான்
அனுப்பும் நபரிடம் 60 லச்ச ரூபாய் (இன்றைய மதிப்பில் சுமார் 15 கோடி
இருக்கும்) அளிக்க 'கட்டளையிட்டார்'. வங்கிகள் தேசியமயகாகப்பட்ட காலம்
அது. பிரதமருக்கு அந்த வங்கியில் வங்கி கணக்கு கூட இல்லை. ஆனால் அந்த
வங்கி மேலாளர் பயபக்தியுடன் நகர்வாலாவிடம் 60 லச்சத்தை ஒப்படைத்துவிட்டு
பிறகு அடுத்த நாள், ஒரு வங்கி ச்லானை எடுத்து கொண்டு பிரதமர் அலுவலகம்
சென்று பின் தான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இன்று 2013இல் அதே
வங்கி கிளையின் இன்றைய மேலாளலரை நமது பிரதமர் நேரில் அழைத்து, பணம்
கேட்டாலும் இந்த மேலாளர் மறுத்துவிடுவார். மேலும் தனியார் ஊடகங்கள் பெரிய
அமர்களப்படுத்தி, பிரதமர் பதவி விலக நேரிடும். 1972அய் விட இன்று
பிரதம்ரின் அதிகாரம் மிக மிக குறைக்கப்பட்டுளது. ஒரே காரணம் இன்று
தாரளமயமாக்கல் மற்றும் கூட்டாட்சி முறை.
ஊடகங்கள் அன்று அரசின் சர்வாதிகார்த்திற்க்கு மிக பணிந்தே இயங்க
முடிந்தது. முக்கியமாக வானொலி மற்றும் தொலைகாட்சியில் தனியார்
நிறுவனங்களுக்கு அனமதி இல்லை. எனவே அன்று தூர்தர்சனும், அகில இந்திய
வானொலியும் அரசின் பிரச்சார பீரங்கிகளாக மட்டுமே செயல்பட்டன. இது 1975-77
அவசர நிலை காலத்தில் உச்சபட்டச நிலையை எட்டியது. அன்று 'ஜனனாயக சோசியலிச
பாணி' கோலோச்சியது தான் காரணம். 90களில் தொலைகாட்சி துறையில் தனியார்களை
அனுமதித்த பின் தான் இன்று பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம்
பெரும் அளவில் முன்னேறியுள்ளது. 24 மணி நேர செய்தி சேன்ல்களில்
உடனுக்குடன் அரசுக்கு எதிரான எந்த ஒரு செய்தியும் சுடச்சுட, காணொளியுடன்
மக்கள் பெற இயலும் நிலை இன்று. அமைச்சர்களும், அதிகாரிகளும் தனியார்
தொலைகாட்சி நிறுவங்களை கண்டு பயப்படும் நிலை இன்று. தூர்தர்சன் மட்டும்
கோலோச்சிய காலங்களில் கற்பனை கூட செய்ய முடியாது இதை. இந்த அருமையான
மாற்றத்திற்க்கு அடிப்படை காரணம், தனியார் நிறுவனங்களை தாரளமாக
அனுமதிக்கும் சந்தை பொருளாதார கொள்கைகள் தான். இணையம் மற்றும் செல்பேசி
துறையின் அசுர வளர்சிக்கும் இதே காரணிகள் தான். அரசு நிறுவனமான
பி.எஸ்.என்.எல் மட்டும் தான் அன்று செயல்பட அனுமதி. 90களில் தனியார்களை
இத்துறையில் அனுமதித்த பின் தான் தொலைதொடர்பு துறையில் மிகப் பெரும்
வளர்சி மற்றும் மலிவான, விரிவான சேவைகள். சோசியலிசம் என்ற பெயரில்
தனியார்களை அனுமதிக்காமலே இருந்திருந்தால், இந்த அருமையான மற்றம்
சாத்தியமில்லை. இதன் மூலம் உருவான பெரும் கருத்து சுத்ந்திரமும்,
பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகியிருக்காது.
தேர்தல் கமிசன், உச்ச நீதி மன்றம், சி.ஏ.ஜி போன்ற அமைப்புகள் இன்று மிக
பலம் பெற்று, அரசின் எதேச்சாதிகார போக்கிற்க்கு நல்ல தடையாக செயல்பட
முடிகிறது. அன்று உச்ச நீதி மன்றம் பிரதமரை 'சக்ரவர்த்தியாக' ஏற்று அடிமை
போல் செயல்பட வேண்டிய நிலை. அவசர நிலை காலகட்டத்தில் இது மிக மோசமான
நிலையை எட்டியது. இன்று ஜுடீசியல் செய்ல்பாடு மிக நன்றாக
முன்னேறியுள்ளது. தேர்த்ல் கமிசன் இன்று சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
மாநில சுயாட்சி இன்று ஓரளவு சாத்தியமாகி உள்ளது. மாநில அரசுகளை
ஏதாச்சாதிகார முறையில், நியாமில்லாத காரணங்களை காட்டி, ஆர்டிக்கிள்
356அய் பயன்படுத்தி கலைக்க அன்று மத்திய அரசால் முடிந்தது. உச்ச நீதி
மன்றத்தின், 1993 எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பின் பிறகு கடந்த 20 வருட்ங்களாக
இது முடியாமல் போனது. 90களுக்கு பிறகு உருவான புதிய அலைகள், உச்ச
நீதிமன்றத்தின் சுயேட்சையான போக்கையும், அரசாங்கத்தின் கட்டுப்பாடில்
இருந்து ஓரளவு விடுபடவும் வகை செய்ததே இது போன்ற தீர்ப்புகள்
சாத்தியமானதிற்க்கு அடிப்படை காரணம்.
'புது டெல்லி' என்ற சொல்லாடலுக்கு அன்று மிக அதிக பயங்கலந்த மரியாதையும்,
சில நேரங்களில் அச்சத்தையும் பரவலாக ஏற்படுத்தியது. செய்திதாள்களில்
அடிக்கடி தலைப்பு செய்தியாக 'புது டில்லி இதை சொல்கிறது' , 'புது டெல்லி
அதை கருதுகிறது' என்று இருக்கும். காரணம் அன்று பொருளாதாரம் மிக மிக
அதிகமாக புது டில்லியில் இருந்தே கட்டுப்படுத்தப்பட்டது. பொருளாதார
அதிகாரம் ஒரு முனையில் குவிந்தது ; அது அரசியல் அதிகாரத்தையும் அதே
முனையில் குவிய வழிவகை செய்தது. இன்றய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. ஊழல்
தான் பிரச்சனை. அதிகார துஸ்பிரயோகம் வெகுவாக குறைந்துள்ளது. பிரதமர்,
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அன்று சர்வாதிகாரிகள் போல் செயல்பட
முடிந்தது. இன்று நிலைமை அத்தனை மோசமில்லை. காட்சி ஊடங்களில் அமைச்சர்களை
சர்வசாதாரணமாக கேள்வி கேட்ட இயல்கிறது. கடுமையான மாற்று கருத்துக்கள்,
விவாதங்கள் சாத்தியமாகியுள்ளன.
சந்தை பொருளாதாரமும் சர்வாதிகாரமும் ஒருங்கே உருவான வலதுசாரி சர்வாதிகார
நாடுகளை பற்றி பார்க்கலாம். கம்யூனிச பரவலை எதிர்க்க முனைந்த நாடுகள்
படிப்படியாக வலதுசாரி சர்வாதிகாரங்களாக உருமாறின. தென் கொரியா, தைவான்,
சிலி போன்ற நாடுகள் 40 வருடங்களுக்கு முன்பு அப்படி தான் இருந்தன. ஆனால்
சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை நடைமுறைபடுத்தும் போது, சர்வாதிகாரம்
படிப்படியாக வலுவிலந்து, ஜனனாயகத்தை நோக்கிய பயணம் துவங்கியது. சந்தை
பொருளாதாரம் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, வறுமையை
வெகுவாக குறைத்து, ஒரு புதிய நடுத்தர வர்கம் உருவாக வகை செய்தது. பெரும்
எண்ணிகையிலான இந்த புதிய நடுத்தர வர்க்கம் உருவாக்கிய புதிய சக்திகள்
(டைனமிக்ஸ்) நாட்டின் அரசியலை வெகுவாக மாற்றியது. சிலி நாட்டில் 1973இல்
உருவான வலதுசாரி சர்வாதிகாரம் மேற்கூறிய வழிமுறையில் படிப்படியாக மாறி,
லிபரல் ஜனனாயகமாக இன்று உருவெடுத்து உள்ளது. அன்று சிலி அரசுக்கு ஆலோசகரக
செயல்பட்ட மில்ட்டன் ஃபீரிட்மென் என்ற சந்தை பொருளாதார அறிஞர்
(நோபல்பரிசு பெற்றவர்) இதை அன்றே கணித்து சொல்லியிருந்தார். ஆனாலும்
அன்று அவரை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்றே தூற்றினார்கள். அவர்
கணித்தபடியே இன்று சிலி மற்றும் பல மூன்றாம் உலக நாடுகள் உருமாறியுள்ளன.
தென் கொரியாவும், தைவானும் இன்று அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் மாற்றம்
பிரமிக்க தக்கதது. சுதந்திர பொருளாதாரம் வறுமையை அழித்து, லிபரல்
ஜனனாயகத்திற்க்கு இட்டு செல்லும் என்பதற்கு இந்நாடுகளே சாட்சி. மாற்றாக
சோசியலிசம் என்ற பெயரில், அரசு எந்திரத்தை மிக மிக பலப்படுத்திய வட
கொரியா போன்ற நாடுகள் இன்று பட்டினியிலும், கடும் வறுமையில்ம்,
சர்வாதிகாரத்தாலும் சீரழிந்து போயுள்ளன. வட மற்றும் தென் கொரியாவை
ஒப்பிட்டாலே போது. இலங்கையில் இன்று உள்ள சர்வாதிகார போக்குகள்
படிப்படியாக, இதே முறையில், இன்னும் 25 ஆண்டுகளில் மாறி, ஒரு லிபரல்
ஜனனாயகமாக, வளமான நாடாக உருமாறும் என்றே நம்புகிறேன்.
இந்தியா இன்னும் செல்ல வேண்டிய பாதை வெகுதூரம். ஆனால் சரியான பதையில்
தான் பயணிக்கிறோம். பின் நவீனத்துவம் பேசும் முன்னாள் மார்க்சியர்களை
இக்கட்டுரை பற்றி விவாதிக்க அழைக்கிறேன். அதிகார மையங்களை அழிக்க
வழிவகைகள், மனித உரிமைகள், பன்மைதன்மை ; இவைகளுக்கும் சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசலாம்...
சுதந்திர சந்தை பொருளாதாரமும் ஜனனாயகமும்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Good article.
இதற்கு பின்னூட்டம் இடுவதைவிட தனியாக ஒரு இடுகை இடுவதே மேல் / இடுகை இடுவதிலிருந்து ஒதுங்கியிருந்த என்னை எழுத தூண்டிய நண்பர் அதியமான் அவர்களுக்கு நன்றி. இடுகை ஒன்றிரண்டு தினங்களில்
எஸ்.சம்பத்
நல்ல பதிவு ஜெயமோகன் லிங்க் கு நன்றி
Thank you sir...
Post a Comment