வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிறது.

1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.

1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிறது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. மத்திய அரசின் நிகர வரி வருமானம், 1995ல் 1,10,354 லச்சம் கோடியில் இருந்து 2007ல், 5.48,122 லச்சம் கோடியாக ஆக உயர்ந்தது. 1991இல், இரண்டு வார இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பே இருந்தது. இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து, 8,64,000 கோடி ரூபாய் மதிப்பிற்க்கு டாலர் கையிருப்பு சேர்ந்துள்ளது. அந்நிய செலவாணிக்காக் I.M.F / World Bank இடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை.

ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.

இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.

10 comments:

சதுக்க பூதம் said...

You forget one fact.Population of those countries are very less and size of the country also small.

K.R.அதியமான் said...

Population is a huge inhibiting factor, i agree. but countries with more population density like Japan have performed very well. and China is emerging fast with its huge population.

If population in India is say half of our present size, then things would have been much much better.
but for that proper implementation of market economic polices and stringent plugging of leackages and corruption would be a basic condition.

ஜீவி said...

அதியமான் அவர்களே,
"நதி நீர் இணைப்பு"(சமூகம் பிரிவில்)
என்னும் என் பதிவில், ஒரு மாறுபட்ட
அரசியல் மாற்றத்தைப் பற்றி யோசித்திருக்கிறேன்.
பரிட்சார்த்த ரீதியில் ஒரு மாறுபட்டப் பார்வை.
ஆனால் எல்லா மாற்றங்களுக்கும் நெடுந்தூரம்தான் போக வேண்டி இருக்கிறது.
பல நெருப்பாற்றைத் தாண்டவேண்டித் தான் இருக்கிறது. என்னசெய்வது?
தங்களுக்கு ஆர்வமிருப்பின், என் பதிவிற்கு வந்துபார்க்கவும்.

இளைய நிலா said...

ஆயுதம் வாங்கிற பணத்தின் பகுதியை பிரித்து விவசாயம் செய்ய மக்களுக்கு உதவினால்
நம் நாடு உணவு உற்பத்தியில் உலகில் முதன்மை பெற்று நாம்
அண்டை நாடுகளுக்கும் சாப்பாடு போடலம்.

சதுக்க பூதம் said...

Please check this one.
http://tamilfuser.blogspot.com/2008/01/blog-post.html

ஆ.ஞானசேகரன் said...

//ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.//

உண்மைதான் நண்பா... ஆனாலும் முதலாளித்துவ கொள்கைகளிலும் சில குறைபாடுகள் உள்ளது. அதன் விளைவே இன்று நாம் சந்திக்க்கு பொருளியல் மந்த நிலை.. அரசு கொடுக்கும் சலுகைகளை தவறாக பயன் படுத்தும் நிறுவாகம்.

Anonymous said...

அதியமான்,
நீங்கள் தனியார்மயத்தை ஆதரிப்பவர். தனியார் முதலாளிகளே திறம்பட செயல்படுவர் என்பதும், தனியார் முதலாளிகளிடம் ஊழலும் இருக்காது என்பதும் உங்கள் கருத்து. ஊழல்மயமான அரசு எந்திரம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பதும் உங்கள் கருத்து. அப்படியென்றால் அரசையும், அரசு எந்திரத்தையும் ஒரு சிறந்த தனியார் முதலாளியிடம் ஒப்படைத்துவிடலாமா? என்பது என் கேள்வி. உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

K.R.அதியமான் said...

கலை,

தனியார் முதலாளிகளிடம் ஊழல் இருக்காது என்று சொல்லவில்லை. ஊழலுக்கான விலையை அரசும், மக்களும் சுமக்க வேண்டியிருக்காது. Only shareholders, investors and
Creditors தான் ஏற்க வேண்டும். மேலும் இந்தியாவை அளவுகோளாக வைக்க கூடாது.
நம் சீரழிவிற்க்கு காரணிகள் பற்றிய எமது முக்கிய பதிவு இது :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

ஃபின்லாந்த நாடுதான் ஊழல் மிக மிக குறைவான நாடு என்கிறார்கள். அங்கு சுதந்திர சந்தை பொருளாதாரம், செழுமை, மிக மிக குறைந்த வறுமை. மேலும் பார்க்கவும் :

http://athiyaman.blogspot.com/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

Anonymous said...

அதியமான் நான் கேட்டது பிரச்சினைக்குரிய அரசையும் அரசு எந்திரத்தையும் என்ன செய்வது என்று. ஊழல்மயமான அரசு எந்திரத்திற்கு மாற்று என்ன? தனியார் முதலாளிகள் திற்ம்பட தொழில் முனைந்தாலும் அவர்களிடமிருந்து வரி வசூல் செய்வதும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதும் அரசுதான். அரசு எந்திரம்தான்.

ஒரு மக்கள் நல அரசு, உங்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என மக்களிடம் ஓட்டு வாங்கி அதிகாரத்தில் அமரும் அரசு, அம்மக்களின் கல்வி,வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதான அரசாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டினது அரசும் தம் நாட்டின்,தம் மக்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்கும்போது அந்நாடுகள் பன்னாட்டு பொருட்களுக்கான சந்தைகளாக இராது. நீங்கள் கை நீட்டும் ஜப்பானும், ஜெர்மனியும் தத்தமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் அது மூன்றாம் உலக நாட்டு மக்களைச் சுரண்டியதிலிருந்து பெறப்பட்டது. அது மூன்றாம் உலக நாட்டு மக்களின் வறுமையிலிருந்து உருவானது.

K.R.அதியமான் said...

///பிரச்சினைக்குரிய அரசையும் அரசு எந்திரத்தையும் என்ன செய்வது என்று. ஊழல்மயமான அரசு எந்திரத்திற்கு மாற்று என்ன?///

உண்மையில் ஒன்றும் செய்ய முடியாது நிலைக்கு சென்றுவிட்டோம். Point of no return. எனக்கு பதில் தெரியவில்லை. நீங்கதான் சொல்லுங்களேன். உடனே செம்புரட்சி தான் தீர்வு என்று சொல்லாதீங்க. அது சாத்தியமும் இல்லை. அப்படியே உருவானாலும் கொடிய விளைவுகளை தான் உருவாக்கும். ஊழலை ஒழிக்கவும் செய்யாது. தலைவலி போய், திருகுவலி வந்த கதையாகும்.

//ஒவ்வொரு நாட்டினது அரசும் தம் நாட்டின்,தம் மக்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்கும்போது அந்நாடுகள் பன்னாட்டு பொருட்களுக்கான சந்தைகளாக இராது. ///

இல்லை. தவறு. பல நல்ல அரசுகள் அமைந்த நாடுகளில் பன்னாட்டு பொருட்களும் பரவலாக விற்க்கப்படுகின்றன. Free markets and free trade had improved the standard of living of well governed nations across the world.
The miracle of chile, Bostwana, Japan, Taiwan, etc prove this.


////நீங்கள் கை நீட்டும் ஜப்பானும், ஜெர்மனியும் தத்தமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் அது மூன்றாம் உலக நாட்டு மக்களைச் சுரண்டியதிலிருந்து பெறப்பட்டது. அது மூன்றாம் உலக நாட்டு மக்களின் வறுமையிலிருந்து உருவானது.
///

இல்லை. அது உங்கள் கோணம். முக்கியமாக ஜப்பான் முன்பு ஒரு மூண்றாம் உலக நாடாகத்தான் இருந்தது. 1945க்கு பின் காலனியாதிக்கம் படிப்படியாக ஒழிந்தது. அதன் பின் முன்னேறிய ஜெர்மனி, சந்தை பொருளாதார கொள்கைகள், கடும் உழைப்பு, ஊக்கம் போன்றவைகளால் மீண்டது.
சிலே என்ற தெ.அமெரிக்க நாட்டின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றை படிக்கவும்.

சுரண்டல் என்று ஒன்றும் இல்லை என்பதே அடிப்படை. ஏனெனில் உபரி மதிப்பு என்பது உண்மையில் இல்லை. இருந்திருந்தால், மார்க்ஸின்
hypothesis படி இன்னேறம் முதலாளித்துவம் தானே அழிந்திருக்கும். தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் படிப்படியாக மிக குறைந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.