அன்னிய செலவாணி கையிருப்பு பற்றி பலருக்கும் சரியான புரிதல்
இல்லை. ஏற்றுமது / ஈரக்குமதி மற்றும் உலக வர்தகம், பெரும்பாலும்
அமெரிக்க டாலர்களில்தான் பல காலமாக நடக்கிறது. டால்ர் தான்
உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.
நமது மொத்த இறக்குமதியின் டாலர் மதிப்பில், நம் ஏற்றுமதியை
விட மிக மிக அதிகம். முக்கியமாக பெட்ரோலியப் பொருட்க்கள்,
கச்சா எண்ணை போன்றவைகளின் தேவைகள் மிக அதிக அளவில்
இறக்குமதியை நம்பி இருக்கிறது. இறக்குமதி செய்ய டாலர்கள்
மட்டுமே பயன்படும். நமது இந்திய ரூபாயை பெரும்பான்மையான
நாடுகள் ஏற்க்க மாட்டார்கள். (பழைய சோவியத் ரஸ்ஸியா மட்டும்
விதி விலக்கு, பல காரணங்களுக்காக).
டாலர் பற்றாக்குறையை சமாளிக்க மூன்று வழிகள்தான் உள்ளன :
(1) ஏற்றுமதியை மிக அதிகரித்தல்
(2) அன்னிய முத்லீடுகளை 'தாராளமாக' அனுமதித்தல்
(3) அய்.எம்.எஃப் வங்கியிடம் டாலர் கடன் வாங்குதல்
'சோசியலிச', 'சுதேசி' கொள்கைகளாஇ 1947 முதல் 1991 வரை இந்திய அரசு
மேற்கொண்டதால், முதல் இரண்டு வழிகளும் சாத்தியமில்லாமல் போனது.
சுதந்திரம் பெற்ற போது சுமார் 500 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை
ஆங்கிலேய அரசு, நிகர கையிருப்பாக விட்டுவிட்டுச் சென்றது. நமது
மடத்தனமான, 'மூடப்பட்ட' பொருளாதார கொள்கைகளால், அந்த இருப்பு
விரைவில் கரைந்து, பிறகு அய்.எம்.எஃப் இடம் வருடந்தோரும் கடன்
வாங்கி இறக்குமதிகளுக்கான டாலர்களை பெற்றோம்.(உலக வங்கி
கடன்கள் வேறு வகை ; அவை project specific and are not for dollar needs of govt.
இந்திய ரூபாயின் மதிப்பு, செயற்கையாக டாலருடன் ஒரு குறிப்பிட்ட
விகிதத்தில் அரசால் நிர்ணியக்கப்பட்டு, அதுவே அனைத்து வர்தகங்களுக்கும்,
பேரங்கலுக்கும் அடிப்படையாக கொள்ளப்பட்டது. நமது பற்றாகுறை
பட்ஜெட்டுகளால் பண வீக்கம் மிக மிக அதிகமாகி, அரசின் மொத்த
கடன் மிக அதிகமாகி, ரூபாயின் நிகர மதிப்பு படிபடியாக பல மடங்கு
குறைந்தது. ஆனால் அரசு 'நிர்ணியத்த' ரூபாய் (டாலர்) மதிப்பு,
ரூபாயின் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகம்.
இதன் மொத்த விளைவு, கடும் டாலர் பற்றாக்குறை. இறக்குமதி செய்ய
லைசென்ஸ்கள் 'வேண்டியவர்களுக்கு' மட்டும் வழங்கப்பட்டது.
இறக்குமதி லைசென்ஸுகளை, அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
'புண்ணியத்தில்' அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.
கருப்பு பணாமும், கள்ளச் சந்தையும், கடத்தலும், டாலர்களை
கள்ளத்தனமாக பெற ஹவாலா முறைகளும் தோன்றின.
வேண்டிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் போனதால்,
தங்கம், எலெக்ட்ரானிக் பொருட்க்கள் போன்ற 'ஆடம்பர'
பொருட்கக்களை கடத்தர்கார்கள் கடத்தி விற்றனர். கடத்தல்
ஒரு முக்கிய உப தொழிலாக சுதந்திர இந்தியாவில் உருவெடுத்தது.
வருடங்கள் செல்ல செல்ல, டாலர் பற்றாக்குறையின் அளாவு மிக
மிக அதிகமாகி, அய்.எம்.எஃப் இடம் டாலர் கடன் மேலும் மேலும்
வாங்கி, திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டோம். 1990களில் ஒரு
பட்ஜெட் உரையில் நம் நிதியமைச்சர் பா.சிதம்பரம், தாயுமானவர்
பாசுரத்தை சற்றே மாற்றி, '...என் பணி கடன் செய்து கிடைப்பதே !'
என்று பாடினார் !!!
1991இன் ஆரம்பத்தில், இரண்டு வார காலத்திற்க்கு மட்டுமே
தேவையான டாலர் இருப்பு இருந்த, மிக மிக அபாயகரமான
நிலையில் நமது நிதியமைச்சர், அரசின் தங்கத்தை விமானத்தில்
லண்டன் அனுப்பி, அங்கு அடமானம் வைத்து, இறக்குமதிக்கு
தேவையான டாலர்களை அவசரமாக புரட்டினார். 1991இன்
மத்தியில் தேர்தல் ; நரசிம்ம ராவ் பிரதமரானார். மன்மோகன் சிங்
அவர்களை நிதியமைச்சராக்கி, சுதந்திரமாம செயல்பட
அனுமதித்தார்.
மன்மோகன் சிங் அவர்கள் உடனடியாக 'தாரளமயமாக்கல்'
கொள்கைகளை அமல்படுத்த தொடங்கினார். அன்னிய முதலீடுகள்
பல துறைகளில் 'தாரளமாக' அனுமதிக்கபட்டன. பங்கு வணிகம்,
வங்கி மற்றும் நிதித் துறைகளைலும் படிப்படியாக அன்னிய
முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. உற்பத்தி துறையை அதுவரை
கட்டி போட்டிருந்த லைசென்ஸ் முறை அடியோடு ரத்து
செய்யப்பட்டது. அனைத்து வரி விகிதங்களும் படிப்படியாக
குறைக்கப்ட்டன. தொழில் துறைகள் ஊக்குவிக்கபட்டன.
கரண்ட் அக்கவுண்ட் கணாக்கில் ரூபாய் / டாலர் அன்னிய
செலவாணி வர்தகம் முதன் முறையாக அனுமதிக்க பட்டது.
ஏற்றுமதியாளர்களுக்கும் வருமான வரி முற்றாக ரத்து
செய்யப்பட்டது. கணனி மற்றும் மென்பொருள் ஏற்றுமதி
துறை மிக வேகமாக வளார்ந்துமேலும் அன்னிய செலவாணி
ஈட்டியது.
மடை திறந்த வெள்ளம் போல் பல ஆயிரம் கோடி டாலர்
மதிப்பிலான அன்னிய முதலீடுகள், இந்தியாவினுல் பாய்ந்தது.
(ஆனால் சைனாவை ஒப்பிட்டால் மிக குறைவான அளாவுதான்).
அன்னிய முத்லீட்டாளர்கள் தங்கள் டாலர்களை ரிசர்வ் வங்கி
மூலம் இந்திய ரூபாய்களாக மாற்றி, இங்கு புதிய முதலீடுகளை
செய்தனர் / செய்கின்றனர்.
இவற்றின் மொத்த விளைவு : நமது டாலர் இருப்பு படிபடியாக
உயர்ந்து இன்று சுமார் 1,00,000 கோடி ரூபாய் அளவை கடந்து
விட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக அய்.எம்.எஃப் வங்கியிடம்
இருந்து டாலர் கடன் வாங்கவில்லை !! ரூபாயின் மதிப்பு கடந்த
50 ஆண்டுகளில் முதன்முறையாக டாலருக்கு எதிராக உயர்ந்தது.
இதுவரை வாங்கிய அன்னிய செலவாணி கடன்களை திருப்பி
செலுத்த வழி பிறந்தது !!
மேலும் அன்னிய முதலீடுகளால் உருவான நிறுவனங்களினால்
பல லச்சம் பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ; அரசிற்க்கோ
பல ஆயிரம் கோடி புதிய வரிவசூல் மழை. அரசின் மொத்த வரி
வசூல் பல பல மடங்கு இந்த 17 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.
அதைகொண்டு நலத்திட்டங்களை அமலாக்க நிதி கிடைத்து.
அன்னிய முதலீடுகளை, உலகமயமாக்கலை 'எதிர்ப்பவர்கள்'.
1991இல் திவால் நிலையில் இருந்த, மிக மிக மிக அபாயகரமான
நம் நிலைமையினை வேறு எந்த 'வழிகளில்' கையாண்டிருப்பர்கள் ?
மாற்றுவழி இருந்தால் விவாதிக்கலாமே...