கருப்பு பணத்தின் லீலைகள்

வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்..

மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?

4 comments:

K.R.அதியமான் said...

test

தமிழ்மணி said...

நடக்கிற காரியம்தான்.

டிமாண்ட் அண்ட் சப்ளை விஷயம் இதிலும் வேலை செய்யும்.

அதிகமாக வரி விதித்தால் குறைவான பணமே அரசாங்கத்துக்கு கிடைக்கும். ஏனெனில் குறைவான மனிதர்களே உண்மையில் வரி கட்டுவார்கள்.

குறைவான வரி விதித்தால், நிறைய பணம் அரசாங்கத்துக்கு கிடைக்கும். ஏனெனில் நிறைய மனிதர்கள் குறைவான வரியை கட்டிவிட்டு நேர்மையாக இருக்கவே முயல்வார்கள்.

கம்யூனிஸ சோசலிஸ சிந்தனை வழியாக அதிக பணம் வைத்திருப்பவர்களை மிக அதிகமாக வரி போட்டு ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனையால் இந்திரா காந்தி 105 சதவீத வருமான வரி கட்ட சொன்னது ஞாபகமிருக்கலாம். அதாவது 10 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால், 95 சத வீத வருமான வரி, அத்தோடு கூட 10 சதவீத உபரி வரி என்று விதித்து சாதனை படைத்தது இந்திராகாந்தியின் கீழ் பிரணாப் முகர்ஜி என்ற புத்திசாலி.

அதனால், லஞ்சம் ஊழல் பெருக்கெடுத்து, அதிகார வர்க்கம் தலைவிரித்து ஆடியதுதான் மிச்சம். அதனை வைத்துக்கொண்டு மேலும் கம்யூனிஸ கும்பல்கள் அரசாங்கத்தையே ஒழிப்பேன் என்று கும்மி அடித்ததும் நாம் பார்த்தது.

ஏன் கம்யூனிஸ கும்பல்களில் ஆட்கள் நிறைய சேர்ந்ததுக்கு காரணமே அரசாங்கம் கொண்டு வந்த செயற்கை வேலையில்லா திண்டாட்டமே. யாரும் தொழில் துவங்கக்கூடாது. தனியார் தொழில் துவங்க ஏராளமான கட்டுப்பாடுகள். அதனால் வேலையை உருவாக்க எந்த தொழில்முனைவரும் முன்வராததால் ஏராளமான வேலையில்லா திண்டாட்டம். அதனால் அரசாங்கமே வேலை கொடு என்று படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஊர்வலம்.. என்று நாறியது நாடு.

ராஜாஜி கூறிய காலத்திலேயே பொருளாதார சீர்திருத்ததை கொண்டுவந்து லைசன்ஸ் கோட்டா சாம்ராஜ்ஜியம் உருவாக்காமல் தவிர்த்திருந்தால், இன்று உலகின் மிகவும் வளமையான நாடுகளில் ஒன்றாக, ஏழ்மையே இல்லாத நாடாக இந்தியா ஆகியிருக்கும்

காலம் தாழ்ந்தாலும், இப்போதும் அதனை நோக்கி முன்னேறும் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்

Muthu said...

VDIS நல்ல பலன்களை தரவில்லையா ? அதுபோன்ற வேறு திட்டங்கள் ஏதும் செயல்படுத்த இயலாதா ? (அரசின் செயல் திட்டங்களில் கறுப்புப்பணம் வைத்திருப்போர் தமது கறுப்புப்பணத்தை முதலீடு செய்யவைப்பது போன்று)

அதுபற்றி சற்று விளக்கமாக எழுதுங்களேன்.

அன்புடன்
முத்துக்குமார்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சார்,
செலவை குறைக்க வேண்டாம் . ஒழுங்காக வரியினை வசூலித்தாலே இந்நாடு மிக செழிப்பாக மாறும் . யார் இந்த வேலையை செய்யப்போகிறார்களோ ?
கலாம் தான் பதில் சொல்ல வேண்டும் !
அன்புடன்
பாஸ்கர்