பொருளாதார மந்தங்கள் பற்றி..

பொருளாதார மந்தங்கள் பற்றி..

'முதலாளித்துவ' பாணி பொருளாதார அமைப்பில், சில ஆண்டுகளுக்கு ஒரு
முறை பொருளாதார மந்தம் தொடர்ந்து உருவாகி வந்து கொண்டே இருக்கிறது.
இதற்க்கு காரணம் பற்றி இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.

Monetarists என்று ஒரு பிரிவு பொருளாதார அறிஞர்களில் உண்டு. நான் அவர்கள்
வாதத்தையே முன் மொழிகிறேன். சுருக்கமாக சொன்னால், பண 'சப்பளை'
தான் மூலக்காரணி. பணத்தை 'உருவாக்கும்' அதிகாரம் அல்லது உரிமை
'தேசியமயமாக்கப்பட்டு' நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. பணத்தை
அரசுகள், தம் நாட்டின் மைய்ய வங்கி (reserve bank or central bank) மூலமே
உருவாக்கும் நிலை கடந்து 150 ஆண்டுகளாக.

பணத்தின் பயன்பாடுகள் பல உண்டு, அதில் சில :

1. பண்ட மாற்றுக்கான மீடியம். (medium of exchange)
2. மதிப்பை அளக்க அலகு  (measure of value)
3. மதிப்பை சேமித்து வைக்க. (store of value)

ஒரு நாட்டிற்க்குள் இருக்கும் நிகர பண சப்பளையில் அளவு
நியயமற்ற அல்லது 'சரியான' முறையில் மாறாமல், அரசுகளின்
இஸ்டதுக்கு மாறினால், உருவாகும் விளைவுகளே பொருளாதார
சுழற்சிகள்.

அரசு தன் செலவுகளுக்குகான நிதி ஆதாரங்களை இரு வழியில் பெறும் :
வரி விதிப்பு மூலம் ஒன்று. இரண்டாவது கடன் வாங்குவது மூலம். தம்
கடன் பத்திரங்களை ரிஸர்வ் வங்கியிடம் 'விற்று' அதற்க்கு பதிலாக legal
tender money எனப்படும் பணத்தை பெற்று செலவு செய்வது. சந்தையில்
தனியார்களிடமும் அரசு கடன் பத்திரங்களை விற்று பணம் ஈட்டும்.

பொதுகாவே அரசுகளின் செலவுகள், வரவை விட அதிகமாகவே இருக்கும்.
பற்றாகுறையை ஈடு கட்ட, கடன் வாங்கி சமாளிப்பதே வாடிக்கை. இங்கு
கடன் என்பது மக்களிடம் இருந்து மறைமுகமாக வாங்குவது. அதாவது
நோட்டடித்து வருமானம் ஈட்டுவது.

வட்டி விகிதங்கள் எப்போதும், பணவீக்க விகுதத்திற்க்கு நேர்விகிதத்தில்
தான் இருக்கும். எங்கு விலைவாசி உயர்வு விகிதம் அதிகமாக இருக்கிறதோ
அந்நாடுகளில் தான் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். எனெனில் வட்டி
என்பது பணத்திற்கான 'விலை' அல்லது 'வாடகை' ; money costs. பணத்தின்
மதிப்பு, விலைவாசி உயர்வு எத்தனை சதம் உள்ளதோ அதே அளவில்
'தேயும்'. depreciation of value of currency. எனவே வட்டி விகிதம் இந்த தேய்மான
அளவை விட அதிகமாகவே இருக்கும். இது அடிப்படை பொருளாதார விதி.

ஆனால் அரசுகளின் ரிசர்வ் வங்கிகள் இந்த வட்டி விகுதத்தை செயற்கையாக
குறைத்து அல்லது அதிகரித்து வைக்க்கும் நடைமுறை இருக்குறது. அதாவது
தம் ரிசர்வ் வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைகளுக்கான
வட்டியின் அளவை செயற்கையாக நிர்ணியத்து, அதன் மூலமும் பண சப்பளையின்
அளவை கட்டுபடுத்த முயலும். இதன் மூலம் நிஜ சந்தை நிர்ணியக்கும் வட்டி
விகுத்தை (real rate of interests) விட குறைவான விகிதத்தில் கடன் அளித்து,
negative rates of interest அய் உருவாக்கும் முறை உள்ளது. முக்கியமாக அமெரிகாவின்
ரிசர்வ் வங்கியான ஃபெட்ரல் ரிஸவர் இப்படி தான் பல காலமாக செய்கிறது.

இதற்க்கு காரணம் : அமெரிக்க அரசின் தொடர்ந்து பெருக்கும் பற்றாக்குறை
பட்ஜெட்டுகள். பற்றாகுறைய நிரப்ப ஃபெட் இடம் தொடர்ந்து 'கடன்' வாங்கும்.
அதற்க்கு ஈடாக தம் கடன் பத்திரங்களை அளிக்கும். ஃபெட் நோட்டடித்து
கடன் வழங்கும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரும் பட்சத்தில், அதன் வளர்ச்சி விகிதம்
எத்தனை சதமோ, அதே சதவீதத்தில் நிகர பண சப்ப்ளையும் அதிகரித்தால்,
விலைவாசி உயர்வு மிக மிக குறைவாக ஒரு சதத்திற்க்கு கீழே இருக்கும்.
தியரி படி. ஜெர்மனியில் இது பல ஆண்டுகளாக முன்பு சாத்தியமானது.
பெரும்பாலான நாடுகளில் அப்படி நடப்பதில்லை. பண சப்பளை (M-3)
பெரும் விகிதம், நாட்டின் ஜி.டி.பி வளரும் விகித்தை விட மிக அதிகான
விகிதத்தில் தான் இருக்கிறது. ராணுவ செலவு, நிர்வாக செலவு, இதர
வெட்டி செலவுகள் என்று அரசுகள் இஸ்டத்துக்கு, பொறுப்பில்லாமல்
செலவு செய்யும் போது, இப்படி தான் ஆகும்.

இதன் விளைவுகள் தான் தொடர் பொருளாதார சுழற்சிகள். பண சப்பளை
அதிரிக்கும் போது பல price signals எனப்படும் 'விலைகள் அளிக்கும்
தகவல்கள்' இயல்புக்கு மாறாக, உருமாறி, distort ஆகி, தவறான
'சமிக்கைகளை' உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்,
நுகர்வோர்களுக்கும் அளிக்கும். செயற்கையாக பண்டங்கள் மற்றும்
சொத்துகளில் விலை உயரும் போது, உற்பத்தியாளர்கள் தம்
உற்பத்தியை அதிகரிக்க முயல்வர். நல்ல விலை கிடைக்கிறது என்று
'சமிக்கை' (தவறாக, மாயை போல்) கிடைப்பதால் இது நிகழும். நுகர்வோர்களும்
கடன் அதிகம் வாங்கி, பொருட்களை அதிகம் வாங்குவர். எனெனில்
அரசின் தலையீட்டால் வட்டி விகிதங்கள் செயற்கையாக குறைந்த
அளவில் இருப்பதால். எதிர்காலத்தில் தொடர்ந்து இந்த boom இருக்கும்
என்ற மாயையில் பலரும் தவறான முடிவுகள் எடுப்பர்.

ஆனால் இயற்கைக்கு மாறான இந்த boomகள் அதிக காலம் நிற்காமல்,
நீர் குமிழி வெடிப்பதை போல் நொறுங்கும். பொருளாதார மந்தம்
உருவாக்கும். அதை தீர்க்க அரசுகள் மேலும் பண சப்பளையை அதிகரித்து,
வட்டி விகிதங்களை குறைத்து, நிலைமையை 'சரி செய்ய' முயலும்.
மீண்டும் ஒரு boom உருவாகி சுழற்சி தொடரும். இது தான் கடந்த கால
வரலாறு. இதற்க்கு விதிவிலகான நாடுகள் உண்டு, முக்கியமாக ஜெர்மனி.

Foreign exchange ratesகளும் பல நாடுகளில் செயற்கையாக கட்டுப்படுத்தப்படிருப்பது
மேலும் ஒரு சிக்கல். உலக பொது கரண்டியாக ஆகிவிட்ட அமெரிக்க டாலரை
ஏற்றுமதி செய்யும் நாடுகள் செயற்கையாக தூக்கி பிடித்திருப்பதும் ஒரு
பெரிய distortion and imbalance creating phenomenon.

இன்னும் விரிவாக, ஆழமாக பேசப்பட வேண்டிய விசியம் இது. மேலும்..

http://en.wikipedia.org/wiki/Monetarism
http://en.wikipedia.org/wiki/Austrian_business_cycle_theory

6 comments:

IndianHayek said...

Mr. Adhiyaman, I was surprised to see your comments supporting my view in that vinavu samacheer kalvi post. Now seeing this blog, I know why. Kudos to you. I know we are outnumbered vastly in the largely leftist TN & india. Seeing blogs like yours gives me the hope that future is going to be better.

K.R.அதியமான் said...

thanks mate.

சார்வாகன் said...

follow up

சமன் மாறாது said...

பணம் அச்சடிக்கும் தேசிய அரசுகளின் உரிமையில் இருந்து பிரச்சனையைத் தொடங்குகிறீர்கள். பணத்திற்கும், மனித உழைப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

சமன் மாறாது said...

பணத்தை அச்சடிக்கும் தேசிய அரசுகள் பற்றி கூறினீர்கள். பணத்திற்கும் உழைப்புக்கும் உரிய தொடர்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

thiagu1973 said...

//ஒரு நாட்டிற்க்குள் இருக்கும் நிகர பண சப்பளையில் அளவு
நியயமற்ற அல்லது 'சரியான' முறையில் மாறாமல், அரசுகளின்
இஸ்டதுக்கு மாறினால், உருவாகும் விளைவுகளே பொருளாதார
சுழற்சிகள்.//

என்றால் என்ன