'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்

ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பேனியின் ஞாபகம் இன்னும் பலரையும் வாட்டுகிறது. சூழ்நிலைகளும், கால கட்டமும் பலவிதமாக மாறினாலும் இந்த பயம் இன்னும் பல இடது மற்றும் பிற சிந்தனைகளை இன்றும் பாதிக்கிறது.

'பன்னாட்டு நிறுவனங்களை இங்கு தொழில் தொடஙக அனுமதித்தால், அவை நம் வளங்களை சூறையாடும் ; ஏழை தொழிலாளிகளை சுரண்டும், சிறு தொழில்களை அழிக்கும், அரசின் கொள்கைகளை மறைமுகமாக கட்டுப்ப‌டுத்தும்' ; இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள், பயங்கள். 1950 முதல் 1991 வரை நமது பொருளாதார கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டன.

1955இல் யு.எஸ்.ஸ்டீல் என்னும் அமெர்க்க கம்பெனி, பிகார் / ஒரிசா பகுதிகலில் ஒருபெரிய எஃகு ஆலை அமைக்க விரும்பியது. ஆனால் நமது 'ஜனனாயக சோசியலிச' அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. அந்நிறுவனம் முதலீடு (டாலர்களில்), தனது தொழில்நுட்பம் மற்றும் (மேனெஜ்மென்ட்) நிர்வாக மேலான்மை போன்றவற்றை முழுவதும் இங்கு பயன்படுத்த தாயாராக இருந்தது. ஆனால் அரசு மிக அதிக செலவில், பொதுத் துறையில், பிலாய் எஃகு ஆலை அமைத்தது. அந்த‌ ஆலைக்கு தேவையான‌ ப‌ல‌ ஆயிர‌ம் கோடி முத‌லீட்டை நாம் க‌ட‌ன் வாங்கியும், ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்திலிருந்தும் செல‌வ‌ளித்தோம். ப‌ல‌ ஆண்டுக‌ள் ந‌ஷ்ட‌த்திலும், ல‌ஞ்ச‌ ஊழ்ல்க‌ளிலும், நிர்வாக‌ சீர்கேடுக‌ளிலும் அது ந‌ம‌க்கு மிக‌ப் பெரிய‌ சுமையாக‌ இருந்த‌து. அதே ச‌ம‌ய‌ம் எஃகு தேவை மிக‌ அதிக‌ரித்த‌தால், ப‌ற்றாக்குறைக‌ள், க‌ருப்பு மார்க்கெட் உருவான‌து. சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின்ப‌டி, எந்த‌ ஒரு தனியார் நிறுவ‌ன‌மும் த‌ன‌து இஷ்ட்ட‌ம் போல் த‌ன்து உற்ப‌த்தியை பெருக்க‌ அனும‌தி இல்லை. அத‌னால் டாடா ஸ்டீல் நிறுவ‌ன‌மும் உற்ப‌த்தி திற‌னை (புதிய‌ ஆலைக‌ள் அமைத்து) அதிக‌ப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை. க‌டுமையான‌ ப‌ற்றாக்குறை, விலை உய‌ர்வு, க‌ள்ள‌ ச‌ந்தை, ஊழ‌ல் உருவாகின‌.

சிம‌ன்ட், ச‌ர்க‌ரை, உர‌ம், ம‌ருந்து, பொறியிய‌ல் எந்திர‌ங்க‌ள், ஜவுளி ஆலைகள் ம‌ற்றும் அனைத்து துறைக‌ளிலும் இதே க‌தைதான். செய‌ற்கையான‌ ப‌ற்றாக்குறை, உல‌க‌ ச‌ந்தையை விட‌ மிக‌ அதிக‌ விலை, தரக்குறைவான பொருள்கள், க‌ள்ள‌ மார்க்கெட், ல‌ஞ்ச‌ம், ப‌துக்க‌ல், க‌ட‌த்த‌ல், போன்ற‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ளே உருவாகின‌. விலைவாசி இத‌ன் மூல‌ம் க‌டுமையாக‌ உய‌ர்ந்த‌தால் வ‌றுமை மிக‌ அதிக‌மான‌து.
வ‌ரி விதிப்பும் மிக‌ மிக‌ அதிக‌மாக்க‌ப்ப‌ட‌தால் புதிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் உருவாக்க‌ தொழில் முனைவோர் விரும்ப‌வில்லை. அர‌சாங்க‌ வேலைக்கு செல்ல‌வே பெரும்பாலான‌ இளைஞ்ர்க‌ள் விருப்பின‌ர். ஆனால் எல்லேருக்கும் அர‌சு வேலை த‌ர‌ எந்த‌ கால‌த்திலும் இய‌லாது. ஆக‌வே வேலை இல்லா திண்டாட‌ம் மிக மிக அதிக‌மான‌து.

1977இல் அய்.பி.எம் நிறுவனத்தை ஜனதா அரசு நாட்டை விட்டே துரத்தியது. அவர்கள்தாய்லாந்திலும், சைனாவிலும் தங்கள் ஃபெக்ட்ரிகளை அமைத்தனர். நாம் ப‌ல‌ ஆண்டுக‌ளை வீணடித்தோம். இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லாததால், உலக வங்கி (ஐ.எம்.எஃப்) இடமிருந்து பல‌ ஆயிர‌ம் கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. இவ்வாறு திவால் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்ட‌தால், வேறு வ‌ழியின்றி க‌ட்டுப்பாடுக‌ளை த‌ள‌ர்தி, அந்ந்திய‌ முத‌லீடுக‌ளையும், ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங‌க‌ளையும் 1991க்கு பின் தாராள‌மாக‌ அனும‌தித்தோம்.

இன்று ப‌ல‌ நூறு ப‌ன்னாட்டு நிறுவ‌ங்க‌ள் இங்கு சுத‌ந்திர‌மாக‌ தொழிறசாலைக‌ள் அமைத்து மிக‌ அருமையான‌, ம‌லிவான‌ பொருட்க்க‌ளை உற்ப‌த்து செய்கின்ற‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர்க‌ளுக்கு நேர‌டியாக‌வும், ம‌றைமுகமாக‌வும் வேலை வாய்ப்பு, அர‌சுக்கு மிக‌ அதிக‌ வ‌ரி வ‌சூல், ம‌ற்றும் ம‌க்க‌ளுக்கு ம‌லிவான‌, தர‌மான பொருள்க‌ள் கிடைக்கின்ற‌ன‌. உதார‌ண‌மாக‌ : நோக்கியா செல் போன் நிறுவ‌ன்ம் சென்னை அருகே உருவான‌வுட‌ன், 1500 ரூபாய்க்கு ந‌ல்ல‌ செல்போன் கிடைக்கிற‌து. இன்டெல், அய்.பி.எம், மைக்ரோசாஃப்ட்,ஜி.ஈ., அல்ஸ்தோம், ஹுன்டாய், போர்ட், எ.பி.பி., ஹோன்டா, மிட்ஷுபிஷி, ம‌ற்றும் பல நிறுவனங்கள் வந்து உள்ளன. அன்னிய செலாவானி இருப்பும் மிக,மிக அதிகமாகி இன்று அய்.எம்.எஃப் வங்கியிடம் கடனே வாங்க அவசியமில்லா நிலை !!!

புதிய போட்டியினால், இதுவரை ஏகபோகத்தில் சுகமாக வளர்ந்த இந்திய நிறுவன‌ங்கள் (உ.ம் : பி.ஸ்.என்.எல், பஜாஜ் ஆட்டோ, அய்.டி.அய், எஸ்.பி.அய் போன்றவை) தஙக‌ளின் மெத்தன‌ போக்கிலிருந்து மீண்டு, தரத்தை உயர்த்தி, உற்பத்தி செலவை குறைத்து, நவீன தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.

பன்னாட்டு நிறுவ‌ன‌ங்கள், எதோ ஹைடெக் பொருட்க்க‌ளை 'ப‌ண‌க்கா‌ர‌' வ‌ர்க‌த்திற்க்காக‌ ம‌ட்டும், ஏழை தொழிலாளர்க‌ளை 'சுர‌ண்டி', த‌யாரிக்கின‌ற‌ன‌ என்ற‌ பொய்யான‌ வாத‌த்தை, பிர‌மையை இட‌துசாரிக‌ள் உருவாக்குகின்ற‌ன‌ர். இந்தியாவை மீண்டும் கால‌னியாக்குகின்ற‌ன‌ இவை,என்றும் கதைக்கிறார்க‌ள். முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள். மக்களுக்கு மிக நல்ல சேவைகள்/பொருட்க்கள். அரசாஙக்திற்க்கு நல்ல வரி வசூல் (அதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்களை அமல் படுத்த வாய்ப்பு). நாட்டின் பொருளாதாரம் முன்னேற‌ வாய்ப்பு.

1991க்கு முன் இருந்த நிலைமையே ப‌ர‌வாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்க‌ள். அனேகமாக‌ இதை ப‌டிக்கும் அனைவ‌ருமே ஏதோ ஒரு வ‌கையில் ப‌ன்னாட்டு நிருவ‌ன‌ங்க‌ளினால் ப‌ய‌ன்டைந்திருப்பீர்க‌ள். அல்ல‌து வேலை வாய்பை பெற்றிருப்பீர்க‌ள். யோசியுங்க‌ள் ந‌ண‌ப‌ர்க‌ளே.

12 comments:

தமிழ்மணி said...

நல்ல பதிவு.

மறுகாலனியாதிக்கம் என்று அமெரிக்காவை குற்றம் சொல்லும் கம்யூனிஸ்டுகள் விரிப்பதோ சீன காலனியாதிக்கத்துக்கு பட்டு கம்பளம்.

இதனை தனி பதிவாக எழுதுகிறேன்

இந்த பதிவுக்கு நன்றி

வால்பையன் said...

வலது சாரி, இடது சாரி என்றால் என்ன? அவர்கள் கொள்கைகள் என்ன என்று கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா? டோண்டு சார் சொன்னது எனக்கு புரியவில்லை!

வால்பையன்

கால்கரி சிவா said...

வாவ்...

Anonymous said...

// வால்பையன் said...
வலது சாரி, இடது சாரி என்றால் என்ன? அவர்கள் கொள்கைகள் என்ன என்று கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா? டோண்டு சார் சொன்னது எனக்கு புரியவில்லை!

வால்பையன்
வலதுசாரி மனப் பான்மை:முதலாளிகளுக்கு வால் பிடிப்பது
சுரண்டும் கும்பபலுக்கு துனைபோவது.
அமெரிக்காவுக்கு சலாம் போடுவது,
பணக்கரர்களை மேலும் கொழுத்த பணக்காரார்களாய் ஆக்கி ஜென்ம சால்பம் அடைவது இப்படி சொல்லி கொண்டிக் கொண்டே போகாலாம்.
இடது சாரி மனப் பான்மை:
வல்லான் பொருள் குவிக்கும் தனிஉடைமை தவித்து
எல்லோரும் எல்லாம் பெறவேண்டும்
இங்கு இல்லமை இல்லா நிலை வேண்டும்.

(பொது உடைமை சிந்தாந்தம் பேசும் கட்சிகளின் கூட்டங்களுக்கு சென்றால் முழு விளக்கம் கிடைக்கும் வால் பையன் சார்)

vizhivendhan said...

இயக்கவியல் விதிகளை,
1. இயற்கை
2. மனித சமூகம்
3. மனித சிந்தனை
இந்த மூன்றுக்கும் பொருத்தி பார்க்க வேண்டும்.

நீங்கள் மனித சிந்தனைக்கு அதை பொருத்தி பார்க்க தவறிவிட்டீர்கள். அதனால்தான் "சொத்து என்பது பொதுவாக இருந்தால் அதில் யாருக்கும் பொறுப்பு இருக்காது" என்ற ரீதியில் "லஞ்சம், ஊழல்" என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளீர்கள்.

Anonymous said...

nanraga americavirku salaam podugiriirgal ungalaku enadhu anbarandha paratukal

Jayaprakashvel said...

@@@
முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள்.
@@@
ஆமாம் . சங்கம் வைக்க முடியாது. எதாவது பிரச்சனை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும். உயிரிசப்புகளும் நடக்கின்றன. எந்த கேள்வி கேப்பாடும் இலலை. நல்ல சலுகைகள் தான்.

Jayaprakashvel said...

மறுகாலணியாதிக்கம் என்பது புரட்டல்ல. உண்மைதான்.


மறுகாலணியாதிக்கம் என்பது ஒரு மாயை என்றும் புரட்டென்றும் அதியமான் அவர்கள் எழுதி இருக்கிறார். இப்போது பல வெளி நாட்டு நிறுவனங்களால் - பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் உருவாகி இருக்கும் அதிக சம்பளத்துடன் கூடியதான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, அவை கொண்டு வரும் அன்னிய செலாவணியையும் கணக்கில் கொண்டு அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என அறிகிறேன். இந்த நிறுவனங்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை என்ற என் வாதத்துக்கு தொழிற்சங்கங்கள் இருந்து கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கேட்பார்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்றும் பதில் வைத்திருக்கிறார். ஆனால் அவரின் வாதங்கள் மிகப் பழையன. பலர் கேட்டு பலர் பதில் சொல்லி புளித்துப்போனவை. என்றாலும் முதலாளி தொழிலாளி என்ற வர்க்கங்கள் இருக்கும் வரை இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும். பொருளீட்டும் வெறிகொண்ட சுரண்டல்வாதிகளான முதலாளிகளிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு இப்படியான கடமை - உரிமை கதைகள் எந்த நாளும் பேசப்படும்.

I have made an elaborate post in my blog. http://mjayaprakashvel.blogspot.com/2010/12/blog-post.html

Jayaprakashvel said...

அதியமான்
இங்கே நான் எழுதி இருப்பது மறுகாலணியாதிக்கம் குறித்த உங்கள் கட்டுரைக்கு எனது கருத்துக்களையும் உங்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தும். அடிப்படையான என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன். சங்கம் குறித்த உங்களின் வாதத்தை அதன் பின் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Jayaprakashvel said...

மறு காலனியாதிக்கம் புரட்டு என்று சொல்லி இருக்கும் நீங்கள் அதன் விளக்கத்தைக் கொடுத்தால் மிகவும் நல்லா இருக்கும். இந்த MNC இதெல்லாம் ஒரு வகைதான். அது மட்டுமே காலனியாதிக்கம் இலலை. இப்போது அணு உலை பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்களே அதுவும் புதிய காலனியாதிக்க வகைதான். எப்படியெல்லாம் மற்ற நாட்டை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என இந்திய உள்பட எல்லா நாடுகளும் முனைந்து வருகின்றன. இந்தியாவின் குஜராத்திய முதலாளிகள் ஆப்ரிக்காவில் சுரண்டுவதும் அங்கே அடி வாங்குவது இதே வகையில் தான் வரும். வெறும் MNC என்ற சின்ன குடையில் இந்தப் பிரச்சனையை அடக்கப் பார்த்தால் உங்கள் அரசியல் அறிவு சந்தேகத்துக் குரியது. பெப்சிக்காரன் கொடுத்த பிரிட்ஜ் இருக்கும் கடைகளில் நீங்கள் வேறு எந்த பானத்தையும் வாங்க முடியாது. இதெல்லாம் என்ன?

Jayaprakashvel said...

அதியமான்
மறுபடியும் கேள்வியை உங்களுக்கே திருப்ப வைத்துள்ளீர்கள். மறுகாலணியாக்கம் இல்லை என்றால் ஏன் அதை பற்றி எழுத வேண்டும்? பேசறவங்க பேசட்டுமே?

இருந்தாலும் நீங்கள் எனது ஆதாரமான கேள்விககளுக்கும் உங்களின் மூல பதிவினை ஒட்டிய எனது கருத்துக்களையும் விட்டு விட்டு மறுபடியும் கேள்வியே கேட்டாலும் பதில் சொல்லலாம். ஒன்னும் தப்பில்லை.

ன் நீங்க 123யையும் அணு உலை பாதுகாப்பு மசோதாவையும் குழப்பிக்கொண்டு இருக்கீங்க. நான் சொல்ற பாதுகாப்பு ஒப்பந்தத்துல அணு உலையில் விபத்து ஏற்பட்டா அதுக்கு உலைகட்டிய நிறுவனம் பொறுப்பு அல்ல. அதுக்கான இழப்பீட்டை மத்திய அரசு கொடுக்குமாம். என்ன கதை இது? இதன் பெயர் தான் மறுகாலணியாதிக்கம். அவர்களின் தலையசைப்புக்கேற்ப்ப நம்ம தலைவிதி. இதுதான் காலணி ஆதிக்கம். வெறும் கிழக்கிந்திய கம்பெனி மட்டும் நம்மை காலணியாக்கியது போல உங்க முந்தைய பின்னூட்டத்துல எழுதி இருக்கிங்க. ரொம்ப தப்பு அது.
அதே போலத்தான் இப்போ இந்த நிறுவனங்கள் கம்பெனிகள் எல்லாம் தங்களின் சவுகர்யத்துக்கேற்ப நமது விதிமுறைகள் நடைமுறைகளை மாற்றி வைக்கின்றன. ஏகென்ட் ஆரஞ்ச் செய்த, நபாம் செய்த ஒரு நிறுவனம் தனது தவறுக்கு நிவாரணம் தரமுடியாது செய்த தப்பை திருத்தவும் முஇட்யாது என்கிரது. டந் கெமிகல்ஸ். போபால் ஆஅலியில் இன்னும் நச்சுக் கலன்கள் உள்ளன. அதை சரி செய்ய பணமாகும் முடியாது என்கிறது டவ். சிதம்பரமும் டாட்டாவும் அதை நாமே செய்து கொள்ளலாம் என்கிறார்கள். போபாலின் மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. இன்னும் ஆபத்தும் முழுதாக விலகவில்லை.

கம்ப்யூட்டர் கம்பெனி பற்றி சொல்ரீங்க. நான் அதுக்கெல்லாம் என் பதிவில் விலாவரியாக எழுதியும் நீங்க கேட்பது விசித்திரமாக உள்ளது. இங்கே அடிப்படை வாசதி கூட இல்லை. மருத்துவ வசதி எல்லோருக்கும் இல்லை. இப்படி இருக்கற ஊர்ல இன்டெர்னெட் என்ன வேண்டிக் கிடக்கிரது? பாம்புக் கடிக்கு மருந்து இல்லாத நாய்க்கடிக்கு மருந்து இல்லாத ஊரில் கம்ப்யூட்டர் கம்பெனி எதுக்கு? எல்லாம் எழுதி இருக்கேன். படிச்சுட்டு வந்து பதில் எழுதரீங்களா? சந்தேகமா இருக்கு.
ஒரு பி ஸி ஜி வாக்சின் செய்யத் துப்பில்லாத சென்னை மானகரில் ஐ. பி. எம் வந்தால் என்ன மைக்ரொசாfட் நோக்கியா வந்தாலென்ன?

8 டிசம்பர், 2010 8:19 pm
நீக்கு
பிளாகர் Jayaprakashvel கூறியது...

இப்படி பேசிக்கிட்டு ஏண்டா இன்டெர்னெட்லஎழுதறீங்கன்னு அடுத்து கேட்பீங்க. இப்படி எழுதுவதும் இருக்கும் அத்தனை தளங்களையும் சமூக முன்னேற்றத்துக்கு சமூக விடுதலைக்கு பயண்படுத்திக் கொள்வது ஒரு மனிதனின் சமூகக் கடமை. இது இல்லாவிட்டாலும் என்னால் இருக்க முடியும். நான் செய்ய விரும்புவதை செய்ய முடியும்.

8 டிசம்பர், 2010 8:23 pm

ஆறாம்பூதம் said...

Mr Adhiyaman .. The questions are open...Please reply to Jayaprakashv's argumentel.. y silent...