புதிய மாவட்டங்கள் தேவையா ?

புதிய மாவட்டங்கள் தேவையா ?

திருப்பூரை தலைமையாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் சமீபத்தில், தமிழக அரசால்
உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்கள் 35 ஆக உயர்கிறது.
 
ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க கூறப்படும் காரணிகள் : வளர்ச்சி பணிகளை அதிக
அளவில் செயலாக்க முடியம், மாவட்ட ஆட்சியர் மற்றும் போலிஸ் கண்காணிப்பாளரை
சந்திக்க ஒரு பெரிய மாவட்டத்தில் விளிம்பில் வாழும் மக்கள் அதிக தொலைவு பயணம்
செய்ய வேண்டியுள்ளாது, 'decentalisation ' போன்றவை.
 
ஆனால் ஒரு புதிய மாவட்டம் உருவாக்க ஆகும் புதிய செலவுகள் (fixed costs and recurring costs) மிக
மிக அதிகம் என்பது பல‌ருக்கும் தெரிவதில்லை. மாவட்ட நிர்வாகத்திற்க்காக 100 கோடி செலவழித்து,
20 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை செயல்படுத்தும் முட்டாள்தனம் இது.
 
அய்.யே.எஸ் மற்றும் அய்.பி.எஸ் ஆபிஸர்களுக்கு புதிய வேலை வாய்புகளுக்கு வகை செய்ய
இது ஒரு வழி !!!  எங்கள் ஊரான கரூர், 90களில் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரக்கப்பட்டு தனி
மாவட்டமாக்கப்பட்டது. ஆனால் பழைய கரூர் தாலுக்கவை விட சிறிய நிலப்பரப்புதான். பழைய
கரூர் தாலுக்காவில் பணியாற்றிய ஒரு சார் ஆட்சியர் மற்றும் ஏ.எஸ்.பி களுக்கும் பதிலாக
புதிய கலக்டர், எஸ்.பி, மற்றும் பல பல புதிய ஆஃபிஸர்கள். ஆனால் கீழ்மட்டத்தில்
பணியிடங்கள் அதே விகிதத்தில் அதிகரிக்கப்படவில்லை. கான்ஸ்டபள்கள் மற்றும் இதர
நிர்வாக பணியாளர்களில் எண்ணிக்கை அதிகமாக்கப்படவில்லை. நிர்வாக முறை. ஊழலுக்கும்,
வெட்டிசெலவுகளுக்கும், அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் அதிகம் வழி வகுத்தன.
 
இருக்கும் மாவட்டங்களில் புதிய தாலுக்காக்களை உருவாக்கி, தாசில்தார்களுக்கு, அதிக
அதிகாரங்களை அளிப்பதே சிக்கனமான‌ மாற்று வழி.  ஒரு புதிய மாவட்டத்தை
உருவாக்க ஆகும் புதிய செலவுகள் அனைத்தையும், அந்த பகுதியில் வளர்ச்சிகாக
தாசிலதார் அளவில் பகிர்ந்தளித்து, திட்டங்கள் ஊழலிலாமல், செம்மயாக செயல்படுத்தப்பட்டாலே
போதும். கண்டிப்பாக அதுதான் உண்மையான‌ de-centralisation.
 
மாவட்டத்திலிருந்து வரும் வருமானம் (revenue) அதே அளவில் இருக்க, நிர்வாக
வெட்டிச்செலவுகளை மட்டும் பல மடங்கு அதிகரிப்பது, மாநில அரசின் பட்ஜெட்டில் விழும்
துண்டு / பெட்ஷீட்டுகளை மிக அதிகரிக்கும். அதானல் அரசின் கடன் அதிர்கரித்து, பண வீக்கம்
அதிகரித்து, விலைவாசி தான் உயரும். இதன் சூட்சமம புரியாமல், விலைவாசி உயர்கிறதே
என்ற கூக்குரல் மட்டும் மக்களிடம் எழுதம்.  மேலும் பார்க்க :
 

 

5 comments:

K.R.அதியமான் said...

http://www.tn.gov.in/budget/afs/Budget_at_a_glance.pdf

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

K.R.அதியமான் said...

Strength of Collector,Tahsildar etc must come down. PRIs must be empowered to handle
all matters.

The lesser the bureaucracy, better will be the public.

Sankaranarayanan,
Orissa

K.R.அதியமான் said...

அட்மினிஸ்ட்ரேஸனை மேம்படுத்த இதை விட சிக்கனமான, நல்ல வழிகள் உள்ளன.
2006இல் தி.மு.க அரசு பதிவியேற்ற போது இருந்த மொத்த அரசு கடன் : ரூ.56,000 கோடிகள்
இன்று அது ரூ.83,000 கோடிகள். பட்ஜெட்டில் சுமார் 52 % ஊழியர்களுன் சம்பளம் மற்றும் பென்ஸன்களுக்கே செலவாகிறது. கடன் தினமும் அதிகாமாகிறது. வட்டி சுமையும் கூடும்.
முட்டாள்தனத்திற்க்கும், பொறுப்பற்ற பாபுலிஸத்திற்க்கும் அளவே இல்லையா ?

K.R.அதியமான் said...

மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் வருவாய்த்துறை மட்டுமல்லவே
தாசில்தார்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க

மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்டத்தின்

ஆதி திராவிடர் நலம்

பிற்படுத்தப்பட்டோர் நலம்

கூட்டுறவு , உணவு வழங்கல்

வனத்துறை

கைத்தறி

சுகாதரத் துறை

கல்வி

நெடுஞ்சாலை

பொதுப்பணித் துறை

சட்டம் , ஒழுங்கு

சிறைத் துறை

நீதி நிர்வாகம்

தொழிலாளர் நலம்

வருவாய்த் துறை

ஊரக வளர்ச்சி

போக்குவரத்து

இது மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் மீதும்
கட்டுப்பாடு செலுத்த அதிகாரம் கொண்டவர்

எல்லாத் துறைகளிலும் அதிகாரப் பகிர்வு நடந்தாக வேண்டும்

நபெ

- Hide quoted text -


--~--~---------~--~----~------------~-------~--~----~
This message is part of the topic "புதிய மாவட்டங்கள் தேவையா ?" in the Google Group "முத்தமிழ்"
for which you requested email updates.
To stop receiving email updates for this topic, please visit the topic
at http://groups.google.com/group/muththamiz/t/756ae579e76d085b
-~----------~----~----~----~------~----~------~--~---