இந்தியாவில் பொது வாழ்க்கையில் நேர்மை இவ்வளவு தூரம் சீரழிந்தற்க்கு 1991 வரை இங்கு இருந்த ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகள் தான் அடிப்படை காரணம். அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. மேலும் பல பத்தாண்டுகளில் படிப்படியாக நம் நேர்மை அழிந்தது. 1966இல் பிராகசம் அவர்கள் தான் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று நொந்து பேசியதை பற்றி ராஜாஜி எழுதியது :
http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html
இந்த ’சோசியலிச எச்சங்கள்’ பற்றி ’சிசுபாலன்களுக்கு’ புரியாது. இதெல்லாம் போலி சோசியலிசம் அல்லது ’……’ என்று மட்டும் கதைப்பார்கள். அது என்ன எழவோ, அதன் விளைவை பற்றி சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தலைவர் சாக வேண்டும் என்று நொந்து புலம்பும் அளவிற்க்கு நிலைமை சீரழிய ஆரம்பித்துவிட்டது. இன்று உச்சமடைந்து உள்ளது. இதெல்லாம் புரிந்து கொள்ள ‘முன் முடிவுகளற்ற’ திறந்த மனம் வேண்டும்.
இறுதியாக அந்த கட்டுரையில் ராஜாஜி, நேருவின் கொள்கைகள் பற்றி எழுதியது :
Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early
indoctrination committed the blunder of taking India out of
the path of humility and put it in the race for industrialization,
and did all he could to transform our ideology into that of
Soviet Russia. This was the fatal step that brought us to the
present position out of which it requires not only wisdom but
indomitable courage to save India. Social justice and removal
of disparities of opportunity and equitably distributed welfare
are great and worthy ends. But the fatal mistake was the plan
to achieve this by the shortcut of heavy borrowing and central
planning and permit-license-regime which has brought in its
wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.
வினவு தளத்தில் இதை பற்றி நான் நிகழ்த்திய ஒரு உரையாடல் :
johny,
உமக்கான பதில் சுவாமிநாதன் அங்கலேஸ்வரைய அய்யர் எழுதிய கட்டுரையில் உள்ளது. இந்தியாவில் தான் எம்.பிக்கள் ஓட்டு போட பணம் வாங்கினால், அது சட்டபடி குற்றமல்ல. மேலை நாடுகளில் அப்படி இல்லை. கீழே நான் இட்ட பின்னூட்டத்தின் இறுதியில் மிக தெளிவாக அய்யர் எழுதுகிறார் :
..Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted.
When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it.
We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy.
//சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க.///
பிரகாசம்காரு, தான் இதையெல்லாம் பார்த்துகொண்டு வாழ்வதை விட சாக வேண்டும் என்று நொந்து போய் பேசியதை பற்றி, ராஜாஜி அன்று எழுதியதை (மேலே) படிக்கவே இல்லை போல. அல்லது புரியலையா ? அன்று விதைத்த வித்துக்கள் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளன. அந்த வித்துகள் ‘சோசியலிசம்’ என்ற பெயரால் தான் அன்று அழைக்கப்பட்டன. அதன் cumulative effects இன்றும் உள்ளது. ஒரே வருடத்த்தில், நூற்றாண்டில் சீராக முடியாது. மாசுபட்ட நிலத்தடி நீர் சரியாக எத்தனை வருடங்கள் பிடிக்கும் ? அல்லது நுற்றாண்டுகள் பிடிக்கும். அதே போல் தான் மனோபாவ மாசுகளும்.
//ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.//
இந்திய நலனை பற்றி யார் கவலை பட்டாங்க. மேலும் பலருக்கு இதன் அவசியம் புரியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி அக்கரை இல்லை. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை பாரளுமன்ற ஒப்புதல் பெற காங்கிரஸ் தனக்கு நன்கு பழக்கப் பட்ட ‘முறையில்’ வெற்றிகரமாக செயல்பட்டது. உண்மைய சொன்னால், இந்திய நலன் கருதிதான் மன்மோகன் சிங் இத்தனை பிடிவாதமாக அதை நிறைவேற முயன்றார். அவர் சூட்கேஸ் வாங்குபவர் அல்ல. அமெரிக்க கைக்கூலியும் அல்ல. he is a realist and visionary who know ground reality and the our follies in the past better than any of us here. He is the one who opened up India in 1991 and saved us from bankruptcy and disaster. but for his vision and determination, this chat here would not be happeining here. Indian rupees would have crumbled (like the Zimabwen dollar now) and our imports of petro products would have stopped in 1991 and India would have collapsed like USSR in 1992. difficult for you to picturise. nevertless that is the fact, which you refuse to look at.
///Libertarian,
இதுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்///
johnny,
மிக எளிமையாக சொல்கிறேன். 1947 வரை நம்மிடம் இருந்த நேர்மை, முக்கியமாக அரசியலில் இருந்த நேர்மை, போகப்போக குறைந்தது. அன்று ஒரு எம்.பி இப்படி லஞ்சம் வாங்குவது மிக மிக மிக அபூர்வம். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு தியாகிகளாலும், நேர்மையாளர்களாலும் நிரம்பியிருந்தது. இன்று மிக சீரழிந்துவிட்டது. இது சோசியலிச பாணி கொள்கைகளில் விளைவுகள். இதை பற்றி தான் ராஜாஜி எழுதியதை எடுத்துகாட்டியிருந்தேன்.
எம்.பிக்கள் பணம் வாங்கும் அளவிற்க்கு அவர்களின் நேர்மை கெட்டதற்க்கு இந்த சோசியலலிச பாணியில் நிகர விளைவுகளே காரணம். பொதுவாகவே சோசியலிசம் / கம்யூனிசம் என்ற பெயரில் அரசு எந்திரம் மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரம் மிக மிக அதிகமாக குவிந்த நாடுகளில், போக போக ஊழல் மலிந்து சீரழிவு உருவானது. பழைய USSR இல் இருந்த அனைத்து நாடுகளின் இன்றைய நிலை, சீனா, வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் அரசியல் நேர்மை மிக குறைந்து, லஞ்சம் விளையாடுகிறது. ஆனால் லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆரம்பத்தில் இருந்து அமலாக்கிய பல வளர்ந்த நாடுகளில் இத்தனை சீரழிவு இல்லை. ஜெர்மனி, ஃபின்லாந் போன்ற நாடுகளின் எம்.பிக்கள் இப்படி பணம் வாங்குவது சாத்தியமில்ல. விதிவிலக்காக யாராவது வாங்கினால், பிறகு வெளியே தெரிந்தால், அவ்வளவுதான். அவன் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். சட்டப்படி தண்டனை கிடைக்க பெரும் சாத்தியம்.
///Libertarian,
நேர்மையின்மை சோசியலிசத்தின் விளைவுகள் என்றால் சோசியலிசம் பேசப்பட்ட காலங்களில் இருந்ததைவிட சோசியலிசம் பேசப்படாத தற்போதுதான் ஒழுங்கீனம் அதிகமாக இருப்பது ஏன்? 1947ல் விதைத்த வித்துதான் இன்று ஆலமாமாகியிருக்கிறது இதை மாற்ற நூற்றாண்டாகலாம் ஆனால் சோசியலிசம் பேசிய உடனேயே சீரழிவு வந்துவிட்டதாக கூறிகிறீர்களே அது எப்படி சாத்தியமானது?
இந்தியாவை விடவும், ஜெர்மனி சோசியலிசம் பேசிய நாடு. மேலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பிராதனமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும் கிழக்கு ஜெர்மனி 1949 முதல் 1990 வரையிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடு.
பிரகாசம்காருவின் நொந்துபோன வார்த்தைகள் வெளிப்பட்ட தருணங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது வாக்குகளை பணத்திற்காக விற்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் பேசப்படாத இப்போதுதன் ஓட்டுக்காக பணம் வாங்குவதும் அதிகரித்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.///
ஜானி,
Long term effects, cumulative effects என்று சொல்வார்கள். அதுதான் இங்கு. ஓவர் நைட் மாற முடியாது. கிழக்கு ஜெர்மனியில் பின்னாட்களின் ஊழல் சீரழிந்தது. இணைந்த பிறகும் அதன் விளைவுகள் தொடர்ந்தன. ஆனால் மே.ஜெர்மனியின் பலம் மற்றும் இதர தன்மைகளால சமாளிக்க முடிந்தது. சரி, ஃபின்லாந் தான் உலகில், ஊழல் மிக மிக குறைவான நாடு என்று ட்ரான்ஸ்பாரன்ஸி இண்டெர்னேசனல் சொல்கிறது. எப்படி முடிந்தது ? வட கொரியாவையும் தென் கொரியாவையும் ஒப்பிடுங்கள்.
1966 வாக்குகளை விற்க்கவில்லை தான். ஊழல் கான்ஸர் போல அனைத்து துறைகளிலிம் பரவ ஆரம்பித்த காலங்கள் அவை. 20 ஆண்டுகளின் அன்று பெரும் மாற்றம் எப்படி ? அதற்க்கு முன்பு ஏன் அப்படி இல்லை. பல லச்சம் மக்கள் தன்னலமில்லாம்ல, விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்ய முடிந்த காலங்கள். 20 ஆண்டுகளில் அதே மக்களின் நேர்மை, அர்பணிப்பு, ஒழுக்கம் எப்படி கெட ஆரம்பித்தது ?