முதலீட்டியத்தின் அடிப்படைகள் - 3

லாபம் என்பது பாவமா ?

Functions of profit மற்றும் price theory பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

முதலாளி, சுரண்டல், லாப வேட்டை என்ற் சொல்லாடல்கள், ஒரு எதிர் மறையான,
வில்லத்தனமான அர்த்ததில் மட்டும் இங்கு பொது புத்தியில் ஏற்றப்பட்டு
உள்ளது. ’உபரி மதிப்பை’ தான் சுரண்டி, லாபம் என்று மாற்றி, பிறகு அதுவே
மூலதனம் ஆகிறது என்ற மார்க்சிய பார்வை பழுதுபட்டது. இதை பற்றி எமது
முக்கிய பதிவு இது :

http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
'உபரி மதிப்பு என்னும் மாயயை'

லாபம் இல்லாமல் யாரும் எந்த காரியத்தையும் எங்கும் செய்வதில்லை. சமூக
சேவை, கலைச்சேவை போன்றவை விதிவிலக்குகள். பொதுவாக சொல்கிறேன்.

ஒரு புதிய தொழில்துறை முதன் முதலில் உருவாகும் போது, போட்டிகள் மிக
குறைவாக இருக்கும். புதிய தொழில் நுட்ப்பம் அல்லது idea / concept அய்
கண்டுபிடித்தவர் அல்லது நிறுவனம், போட்டி இல்லாத ஆரம்ப காலங்களில், மிக
மிக அதிக லாபம் பார்க்கும். காப்பிரைட் சட்டங்கள் சில ஆண்டுகளுக்கு அதை
உறுதி செய்யும். ஆனால் போக போக போட்டிகள் உருவாகி, அதனால் விற்பனை

விலையை படிப்படியாக குறைக்க வேண்டியிருக்கும். லாபமும் அதற்க்கு ஏற்ப
குறைய ஆரம்பிக்கும். (கம்யூட்டர் மற்று செல்பேசி துறைகள் நல்ல உதாரணம்).
ஒரு கட்டத்தில் உற்பத்தில் விலைகே விற்க்க வேண்டிய கட்டாயம் உருவக வாய்ப்பு
உண்டு. இதனால் பெரும் பயன் அடைபவர்கள் வாடிக்கையளார்கள் தான்.
பண்டங்கள் / சேவைகளின் விலை மிக மிக குறைந்து, தரம் மிக மிக உயர்ந்து,
பற்றாக்குறையே இல்லாமல் தாரளமாக கிடைக்கும்.

இதில் முக்கிய அம்சம், புதிய போட்டியாளர்கள் உருவாகுவது. புதிய
முதலீடுகள் மற்றும் போட்டி நிறுவனங்கள் எப்படி சரியான துறை அல்லது
product / services தேர்ந்தெடுப்பார்கள் ? அந்த துறையில் உள்ள ‘ஏகபோக’
நிற்வனத்தில் அப்ரிதமான லாபத்தை பார்த்துதான். இந்த ‘தகவலை’
(price signals) சரியான முறையில் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
கொண்டு செல்லுவதே, லாபத்தின் முக்கிய பணி. Information asymmetry
முடிந்த வரை குறைவாக உள்ள சந்தைகளே mature markets எனப்படுவது.

இன்று மிக மிக மலிவாக சந்தையில் கிடைக்கு அனைத்து பொருட்கள் / சேவைகளும்
இப்படி, இதே வழியில் வந்தவைதான். உப்பு கூட நல்ல உதாரணம். Salary என்ற
சொல், salt இல் இருந்துதான் உருவானது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்,
உட்பிரதேசங்களில் உப்பு மிக அரிதான பண்டம். ஒரு கலாத்தில் ’பணமாக’ அது
பயன்படுத்தப்படும் அளவிற்க்கு மதிப்பு இருந்தது. தொழில் புரட்சிக்கு
பின், மேலே சொன்ன முறையில் தான் இன்று உலகெங்கிலும், தாரளமாக, மலிவாக
கிடைக்கிறது. அதன் கடை பற்றி விரிவாக பேச முடியும்

சரி, ஏற்கெனவே பல ஆயிரம் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் ஒரே துறையில்,
ஒரே வகையான பண்டங்களை / சேவைகள் உற்பத்தி செய்து, சந்தையில் கடும் போட்டி
நிலவும் சூழல் பற்றி பார்ப்போம். திடிரென பற்றாக்குறை உருவாகிறது என்று
வைத்துக்கொள்வோம். (அதற்க்கு பல காரணிகள் இருக்கலாம் : மூலப் பொருட்கள்
தட்டுப்பாடு, மின் தடை, போதிய தொழிலாளர்கள்(skilled labour) இல்லாமை,
போன்றவை). உடனே சந்தையில் அந்த பண்டத்தை வாங்க பலரும் போட்டி போடுவர்.
ஆனால் விற்பனைக்கு குறைந்த அளவே கிடைப்பதால், உற்பத்தியாளார்கள் மற்றும்
வியாபரிகள் முடிந்த வரை விலையே எற்றி நல்ல லாபம் பார்ப்பார்கள். இந்த
விலை உயர்வு, உடனடியாக ஒரு முக்கிய தகவலை அனைத்து playersக்கும்
அறிவிக்கும். இந்த பண்டம் உற்பத்தி செய்தால், லாபம் மிக அதிகம்
கிடைக்கும் என்பதை. எனவே பலரும் அதே பண்டத்தை மிக அதிகமாக உற்பத்தி
செய்ய முனைவார்கள். பிறகு படிப்படியாக போட்டி அதிகமாகி, தேவையை
விட சப்பளை அதிகாமாக்கும் சூழல் உருவாகி, விலை குறைய ஆரம்பிக்கும்.

இது ஒரு வகையான see-saw விளையாட்டு போல் தன்னைதானே சமன்(balance) செய்து
கொள்ளும் mechanism. இதற்க்கு இணையான வேறு ஒரு மெக்கானிசமும் இதுவரை
மனிதன் கண்டுபிடிக்கவில்லை. இதற்க்கு பெயர் தான் ’சந்தை’. இதில் சுதந்திர
சந்தை தான் முக்கிய சூட்சமம். அதாவது அரசுகளின் கட்டுப்பாடுகள் மற்றும்
அதிக வரிவிதிப்பு, மூலம் எந்த ஒரு தடையும் (அல்லது distortionகளும்)
இல்லாத நிலை வேண்டும். இல்லாவிட்டால் அது சுதந்திர சந்தையாக இருக்காது.
போட்டிகள் உருவாகி விலையை குறைக்க முடியாது. இந்தியாவில் 1991வரை
அதுதான் நடந்தது.

நஸ்டம் பற்றி பேசலாம். இதற்க்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. மேலே
கண்தற்க்கு நேர் எதிரான விளைவுகள், செயல்பாடுகளை உருவாக்கும். ஒரு துறை
அல்லது பண்ட உற்பத்தியில் ஈடுபடும் நிறவனங்கள் தொடர்ந்து நஸ்டம் அடையும்
சூழலில், இந்த நஸ்டம் பற்றிய தகவல் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
சென்றடையும். புதிதாக முதலீடு செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே அதே துறையில்
உள்ளவர்கள் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பர். காரண்ம், நஸ்டம் பற்றிய
தகவல். படிப்படியாக புதிய முதலீடுகள் உருவாகவது நின்று போகும். ஆனால் ஒரு
கட்டத்தில், உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டு, பற்றாக்குறை உருவாகும்.
லாபம் கிடைக்க ஆரம்பித்து, பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க, லாபமும் உயர
ஆரம்பிக்கும். முன்னர் நாம் பார்த்த நிகழ்வுகள் மறுபடியும் உருவாகும். It
is a perfectly self correcting and self regulating mechanism, provided
there are no distortions caused by govt regulations.

ஏகபோகம், அதாவது monopoly என்று ஒரு பயங்காட்டல், இடதுசாரிகளால் பல
ஆண்டுகளாக செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம், ஒரு குறிப்பிட பொருளுக்கான
சந்தையின் பெரும் பகுதியை கைப்பற்றி, பிறகு தங்கள் இஸ்டபடி மிக மிக அதிக
விலை வைத்து, கொழுத்த லாபம் ஈட்டி, மக்களை முழுவதும் அதன்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்ற ‘கருத்து’ ; இதற்க்கு மாற்று
போட்டிகள் தான். வேறு வழிகளான அரசின் கட்டுபாடுகள், தடைகள் மிக
எதிர்மறையாகத்தான் வேலை செய்துள்ளன. புதிய போட்டிகள் சுலபமாக உருவாக
தடை செய்யாமல் இருந்தாலே போதும். விலை குறையும். அதுதான் 1991க்கு பின்
இந்தியாவிலும், கடந்த 150 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளிலும் நடந்தது...


2 comments:

K.R.அதியமான் said...

http://www.economicshelp.org/blog/business/the-role-of-profit-in-an-economy/

மனு - தமிழ்ப் புதிர்கள் said...

Are Govt regulations are the only distorting factors in a free market. Monopoly is a too small a factor compared to cartel and lobbying.