இதனால கள்ள சந்தை, கடத்தல், பதுக்கல் உருவாகி, நேர்மையை மேலும் சீரழித்தது.
ஊழலின் ஊற்றுகண் - 2
இதனால கள்ள சந்தை, கடத்தல், பதுக்கல் உருவாகி, நேர்மையை மேலும் சீரழித்தது.
ஊழலின் ஊற்றுகண்
இந்தியாவில் பொது வாழ்க்கையில் நேர்மை இவ்வளவு தூரம் சீரழிந்தற்க்கு 1991 வரை இங்கு இருந்த ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகள் தான் அடிப்படை காரணம். அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. மேலும் பல பத்தாண்டுகளில் படிப்படியாக நம் நேர்மை அழிந்தது. 1966இல் பிராகசம் அவர்கள் தான் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று நொந்து பேசியதை பற்றி ராஜாஜி எழுதியது : http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html இந்த ’சோசியலிச எச்சங்கள்’ பற்றி ’சிசுபாலன்களுக்கு’ புரியாது. இதெல்லாம் போலி சோசியலிசம் அல்லது ’……’ என்று மட்டும் கதைப்பார்கள். அது என்ன எழவோ, அதன் விளைவை பற்றி சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தலைவர் சாக வேண்டும் என்று நொந்து புலம்பும் அளவிற்க்கு நிலைமை சீரழிய ஆரம்பித்துவிட்டது. இன்று உச்சமடைந்து உள்ளது. இதெல்லாம் புரிந்து கொள்ள ‘முன் முடிவுகளற்ற’ திறந்த மனம் வேண்டும். இறுதியாக அந்த கட்டுரையில் ராஜாஜி, நேருவின் கொள்கைகள் பற்றி எழுதியது : Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early வினவு தளத்தில் இதை பற்றி நான் நிகழ்த்திய ஒரு உரையாடல் : johny, உமக்கான பதில் சுவாமிநாதன் அங்கலேஸ்வரைய அய்யர் எழுதிய கட்டுரையில் உள்ளது. இந்தியாவில் தான் எம்.பிக்கள் ஓட்டு போட பணம் வாங்கினால், அது சட்டபடி குற்றமல்ல. மேலை நாடுகளில் அப்படி இல்லை. கீழே நான் இட்ட பின்னூட்டத்தின் இறுதியில் மிக தெளிவாக அய்யர் எழுதுகிறார் : ..Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted. When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it. We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy. //சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க./// பிரகாசம்காரு, தான் இதையெல்லாம் பார்த்துகொண்டு வாழ்வதை விட சாக வேண்டும் என்று நொந்து போய் பேசியதை பற்றி, ராஜாஜி அன்று எழுதியதை (மேலே) படிக்கவே இல்லை போல. அல்லது புரியலையா ? அன்று விதைத்த வித்துக்கள் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளன. அந்த வித்துகள் ‘சோசியலிசம்’ என்ற பெயரால் தான் அன்று அழைக்கப்பட்டன. அதன் cumulative effects இன்றும் உள்ளது. ஒரே வருடத்த்தில், நூற்றாண்டில் சீராக முடியாது. மாசுபட்ட நிலத்தடி நீர் சரியாக எத்தனை வருடங்கள் பிடிக்கும் ? அல்லது நுற்றாண்டுகள் பிடிக்கும். அதே போல் தான் மனோபாவ மாசுகளும். //ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.// இந்திய நலனை பற்றி யார் கவலை பட்டாங்க. மேலும் பலருக்கு இதன் அவசியம் புரியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி அக்கரை இல்லை. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை பாரளுமன்ற ஒப்புதல் பெற காங்கிரஸ் தனக்கு நன்கு பழக்கப் பட்ட ‘முறையில்’ வெற்றிகரமாக செயல்பட்டது. உண்மைய சொன்னால், இந்திய நலன் கருதிதான் மன்மோகன் சிங் இத்தனை பிடிவாதமாக அதை நிறைவேற முயன்றார். அவர் சூட்கேஸ் வாங்குபவர் அல்ல. அமெரிக்க கைக்கூலியும் அல்ல. he is a realist and visionary who know ground reality and the our follies in the past better than any of us here. He is the one who opened up India in 1991 and saved us from bankruptcy and disaster. but for his vision and determination, this chat here would not be happeining here. Indian rupees would have crumbled (like the Zimabwen dollar now) and our imports of petro products would have stopped in 1991 and India would have collapsed like USSR in 1992. difficult for you to picturise. nevertless that is the fact, which you refuse to look at. ///Libertarian, இதுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்/// johnny, மிக எளிமையாக சொல்கிறேன். 1947 வரை நம்மிடம் இருந்த நேர்மை, முக்கியமாக அரசியலில் இருந்த நேர்மை, போகப்போக குறைந்தது. அன்று ஒரு எம்.பி இப்படி லஞ்சம் வாங்குவது மிக மிக மிக அபூர்வம். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு தியாகிகளாலும், நேர்மையாளர்களாலும் நிரம்பியிருந்தது. இன்று மிக சீரழிந்துவிட்டது. இது சோசியலிச பாணி கொள்கைகளில் விளைவுகள். இதை பற்றி தான் ராஜாஜி எழுதியதை எடுத்துகாட்டியிருந்தேன். எம்.பிக்கள் பணம் வாங்கும் அளவிற்க்கு அவர்களின் நேர்மை கெட்டதற்க்கு இந்த சோசியலலிச பாணியில் நிகர விளைவுகளே காரணம். பொதுவாகவே சோசியலிசம் / கம்யூனிசம் என்ற பெயரில் அரசு எந்திரம் மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரம் மிக மிக அதிகமாக குவிந்த நாடுகளில், போக போக ஊழல் மலிந்து சீரழிவு உருவானது. பழைய USSR இல் இருந்த அனைத்து நாடுகளின் இன்றைய நிலை, சீனா, வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் அரசியல் நேர்மை மிக குறைந்து, லஞ்சம் விளையாடுகிறது. ஆனால் லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆரம்பத்தில் இருந்து அமலாக்கிய பல வளர்ந்த நாடுகளில் இத்தனை சீரழிவு இல்லை. ஜெர்மனி, ஃபின்லாந் போன்ற நாடுகளின் எம்.பிக்கள் இப்படி பணம் வாங்குவது சாத்தியமில்ல. விதிவிலக்காக யாராவது வாங்கினால், பிறகு வெளியே தெரிந்தால், அவ்வளவுதான். அவன் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். சட்டப்படி தண்டனை கிடைக்க பெரும் சாத்தியம். ///Libertarian, நேர்மையின்மை சோசியலிசத்தின் விளைவுகள் என்றால் சோசியலிசம் பேசப்பட்ட காலங்களில் இருந்ததைவிட சோசியலிசம் பேசப்படாத தற்போதுதான் ஒழுங்கீனம் அதிகமாக இருப்பது ஏன்? 1947ல் விதைத்த வித்துதான் இன்று ஆலமாமாகியிருக்கிறது இதை மாற்ற நூற்றாண்டாகலாம் ஆனால் சோசியலிசம் பேசிய உடனேயே சீரழிவு வந்துவிட்டதாக கூறிகிறீர்களே அது எப்படி சாத்தியமானது? இந்தியாவை விடவும், ஜெர்மனி சோசியலிசம் பேசிய நாடு. மேலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பிராதனமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும் கிழக்கு ஜெர்மனி 1949 முதல் 1990 வரையிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடு. பிரகாசம்காருவின் நொந்துபோன வார்த்தைகள் வெளிப்பட்ட தருணங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது வாக்குகளை பணத்திற்காக விற்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் பேசப்படாத இப்போதுதன் ஓட்டுக்காக பணம் வாங்குவதும் அதிகரித்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்./// ஜானி, Long term effects, cumulative effects என்று சொல்வார்கள். அதுதான் இங்கு. ஓவர் நைட் மாற முடியாது. கிழக்கு ஜெர்மனியில் பின்னாட்களின் ஊழல் சீரழிந்தது. இணைந்த பிறகும் அதன் விளைவுகள் தொடர்ந்தன. ஆனால் மே.ஜெர்மனியின் பலம் மற்றும் இதர தன்மைகளால சமாளிக்க முடிந்தது. சரி, ஃபின்லாந் தான் உலகில், ஊழல் மிக மிக குறைவான நாடு என்று ட்ரான்ஸ்பாரன்ஸி இண்டெர்னேசனல் சொல்கிறது. எப்படி முடிந்தது ? வட கொரியாவையும் தென் கொரியாவையும் ஒப்பிடுங்கள். 1966 வாக்குகளை விற்க்கவில்லை தான். ஊழல் கான்ஸர் போல அனைத்து துறைகளிலிம் பரவ ஆரம்பித்த காலங்கள் அவை. 20 ஆண்டுகளின் அன்று பெரும் மாற்றம் எப்படி ? அதற்க்கு முன்பு ஏன் அப்படி இல்லை. பல லச்சம் மக்கள் தன்னலமில்லாம்ல, விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்ய முடிந்த காலங்கள். 20 ஆண்டுகளில் அதே மக்களின் நேர்மை, அர்பணிப்பு, ஒழுக்கம் எப்படி கெட ஆரம்பித்தது ?
indoctrination committed the blunder of taking India out of
the path of humility and put it in the race for industrialization,
and did all he could to transform our ideology into that of
Soviet Russia. This was the fatal step that brought us to the
present position out of which it requires not only wisdom but
indomitable courage to save India. Social justice and removal
of disparities of opportunity and equitably distributed welfare
are great and worthy ends. But the fatal mistake was the plan
to achieve this by the shortcut of heavy borrowing and central
planning and permit-license-regime which has brought in its
wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.
முதலீட்டியத்தின் அடிப்படைகள் - 3
லாபம் என்பது பாவமா ?
Functions of profit மற்றும் price theory பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
முதலாளி, சுரண்டல், லாப வேட்டை என்ற் சொல்லாடல்கள், ஒரு எதிர் மறையான,
வில்லத்தனமான அர்த்ததில் மட்டும் இங்கு பொது புத்தியில் ஏற்றப்பட்டு
உள்ளது. ’உபரி மதிப்பை’ தான் சுரண்டி, லாபம் என்று மாற்றி, பிறகு அதுவே
மூலதனம் ஆகிறது என்ற மார்க்சிய பார்வை பழுதுபட்டது. இதை பற்றி எமது
முக்கிய பதிவு இது :
http://nellikkani.blogspot.
'உபரி மதிப்பு என்னும் மாயயை'
லாபம் இல்லாமல் யாரும் எந்த காரியத்தையும் எங்கும் செய்வதில்லை. சமூக
சேவை, கலைச்சேவை போன்றவை விதிவிலக்குகள். பொதுவாக சொல்கிறேன்.
ஒரு புதிய தொழில்துறை முதன் முதலில் உருவாகும் போது, போட்டிகள் மிக
குறைவாக இருக்கும். புதிய தொழில் நுட்ப்பம் அல்லது idea / concept அய்
கண்டுபிடித்தவர் அல்லது நிறுவனம், போட்டி இல்லாத ஆரம்ப காலங்களில், மிக
மிக அதிக லாபம் பார்க்கும். காப்பிரைட் சட்டங்கள் சில ஆண்டுகளுக்கு அதை
உறுதி செய்யும். ஆனால் போக போக போட்டிகள் உருவாகி, அதனால் விற்பனை
உண்டு. இதனால் பெரும் பயன் அடைபவர்கள் வாடிக்கையளார்கள் தான்.
பற்றாக்குறையே இல்லாமல் தாரளமாக கிடைக்கும்.
இதில் முக்கிய அம்சம், புதிய போட்டியாளர்கள் உருவாகுவது. புதிய
முதலீடுகள் மற்றும் போட்டி நிறுவனங்கள் எப்படி சரியான துறை அல்லது
product / services தேர்ந்தெடுப்பார்கள் ? அந்த துறையில் உள்ள ‘ஏகபோக’
நிற்வனத்தில் அப்ரிதமான லாபத்தை பார்த்துதான். இந்த ‘தகவலை’
இன்று மிக மிக மலிவாக சந்தையில் கிடைக்கு அனைத்து பொருட்கள் / சேவைகளும்
இப்படி, இதே வழியில் வந்தவைதான். உப்பு கூட நல்ல உதாரணம். Salary என்ற
சொல், salt இல் இருந்துதான் உருவானது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்,
உட்பிரதேசங்களில் உப்பு மிக அரிதான பண்டம். ஒரு கலாத்தில் ’பணமாக’ அது
பயன்படுத்தப்படும் அளவிற்க்கு மதிப்பு இருந்தது. தொழில் புரட்சிக்கு
பின், மேலே சொன்ன முறையில் தான் இன்று உலகெங்கிலும், தாரளமாக, மலிவாக
கிடைக்கிறது. அதன் கடை பற்றி விரிவாக பேச முடியும்
சரி, ஏற்கெனவே பல ஆயிரம் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் ஒரே துறையில்,
ஒரே வகையான பண்டங்களை / சேவைகள் உற்பத்தி செய்து, சந்தையில் கடும் போட்டி
நிலவும் சூழல் பற்றி பார்ப்போம். திடிரென பற்றாக்குறை உருவாகிறது என்று
வைத்துக்கொள்வோம். (அதற்க்கு பல காரணிகள் இருக்கலாம் : மூலப் பொருட்கள்
தட்டுப்பாடு, மின் தடை, போதிய தொழிலாளர்கள்(skilled labour) இல்லாமை,
போன்றவை). உடனே சந்தையில் அந்த பண்டத்தை வாங்க பலரும் போட்டி போடுவர்.
ஆனால் விற்பனைக்கு குறைந்த அளவே கிடைப்பதால், உற்பத்தியாளார்கள் மற்றும்
வியாபரிகள் முடிந்த வரை விலையே எற்றி நல்ல லாபம் பார்ப்பார்கள். இந்த
விலை உயர்வு, உடனடியாக ஒரு முக்கிய தகவலை அனைத்து playersக்கும்
அறிவிக்கும். இந்த பண்டம் உற்பத்தி செய்தால், லாபம் மிக அதிகம்
கிடைக்கும் என்பதை. எனவே பலரும் அதே பண்டத்தை மிக அதிகமாக உற்பத்தி
இது ஒரு வகையான see-saw விளையாட்டு போல் தன்னைதானே சமன்(balance) செய்து
கொள்ளும் mechanism. இதற்க்கு இணையான வேறு ஒரு மெக்கானிசமும் இதுவரை
மனிதன் கண்டுபிடிக்கவில்லை. இதற்க்கு பெயர் தான் ’சந்தை’. இதில் சுதந்திர
சந்தை தான் முக்கிய சூட்சமம். அதாவது அரசுகளின் கட்டுப்பாடுகள் மற்றும்
அதிக வரிவிதிப்பு, மூலம் எந்த ஒரு தடையும் (அல்லது distortionகளும்)
இல்லாத நிலை வேண்டும். இல்லாவிட்டால் அது சுதந்திர சந்தையாக இருக்காது.
போட்டிகள் உருவாகி விலையை குறைக்க முடியாது. இந்தியாவில் 1991வரை
நஸ்டம் பற்றி பேசலாம். இதற்க்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. மேலே
கண்தற்க்கு நேர் எதிரான விளைவுகள், செயல்பாடுகளை உருவாக்கும். ஒரு துறை
அல்லது பண்ட உற்பத்தியில் ஈடுபடும் நிறவனங்கள் தொடர்ந்து நஸ்டம் அடையும்
சூழலில், இந்த நஸ்டம் பற்றிய தகவல் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
சென்றடையும். புதிதாக முதலீடு செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே அதே துறையில்
உள்ளவர்கள் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பர். காரண்ம், நஸ்டம் பற்றிய
தகவல். படிப்படியாக புதிய முதலீடுகள் உருவாகவது நின்று போகும். ஆனால் ஒரு
கட்டத்தில், உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டு, பற்றாக்குறை உருவாகும்.
லாபம் கிடைக்க ஆரம்பித்து, பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க, லாபமும் உயர
ஆரம்பிக்கும். முன்னர் நாம் பார்த்த நிகழ்வுகள் மறுபடியும் உருவாகும். It
is a perfectly self correcting and self regulating mechanism, provided
there are no distortions caused by govt regulations.
ஏகபோகம், அதாவது monopoly என்று ஒரு பயங்காட்டல், இடதுசாரிகளால் பல
ஆண்டுகளாக செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம், ஒரு குறிப்பிட பொருளுக்கான
சந்தையின் பெரும் பகுதியை கைப்பற்றி, பிறகு தங்கள் இஸ்டபடி மிக மிக அதிக
விலை வைத்து, கொழுத்த லாபம் ஈட்டி, மக்களை முழுவதும் அதன்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்ற ‘கருத்து’ ; இதற்க்கு மாற்று
போட்டிகள் தான். வேறு வழிகளான அரசின் கட்டுபாடுகள், தடைகள் மிக
எதிர்மறையாகத்தான் வேலை செய்துள்ளன. புதிய போட்டிகள் சுலபமாக உருவாக
இந்தியாவிலும், கடந்த 150 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளிலும் நடந்தது...
முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 2
நம்பிக்கை, நாணயம், கூட்டு முயற்சி : இவைதான் முதலீட்டியத்தின் அடிப்படை அம்சங்கள். இதை பற்றி சற்று பார்ப்போம்.
தொழில் நிறுவனங்கள் பல வகை வடிவங்களை கொண்டவை :
1.Sole Proprietorship (தனி நபர் உரிமை)
2.Partnership Firm (கூட்டாளிகள் கொண்ட சிறு நிறுவனம்)
3.Private Limited Company (இயக்குனர்கள், பங்குதாரர்கள் கொண்ட நிறுவனம்)
4.Public Limited Company (பங்குகளை வெளியிட்டு, பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்).
5.Venture Capital based companies (தொழில் முனைவோர்களை நம்பி முதலீடு செய்யப்பட்ட நிறுவனம்)
மிக குறைந்த முதலீட்டில், ஒரு தனிநபரால், தன் திறமை, உழைப்பின் மீது கொண்ட நம்பிக்கையால் உருவக்கப்படும் நிறுவனமே sole proprietorship நிறுவனம். அதன் வளர்ச்சி மற்றும் அளவு பொதுவாக பெரிய அளவில் இருக்காது. முதலீட்டிய அமைப்பில், இவைதான் முதல் படி.
இரண்டாவது வகையான கூட்டாளிகளை கொண்ட partnership firm : இவைதான மிக முக்கியமானவை. Building blocks of capitalism and prosperity. கூட்டாளிகளில் ஒருவரிடம் அதிக முதலீடு இருக்கும். ஒருவரிடம் தொழில் திறமை இருக்கும். ஒருவரிடம் உழைக்கும் திறன் அதிகமிருக்கும். நிர்வாகத்திறன், மார்கெட்டிங் திறன் என்றும் பிறருக்கு திறமைகள் இருக்கும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்டால் தான் நிறுவனத்தை துவக்க முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை (mutual trust and faith) தான் மிக முக்கியமான அம்சம். சில பகுதிகளில் இந்த நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி மிக அதிகம் இருக்கும். அப்பகுதிகளே துரிதமாக வளம் பெறும். (இதில் சாதிய, குடும்ப உறவுகளின் பங்கும் உண்டு.) உதராணமாக கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இத்தகைய கூட்டாளி நிறுவனங்கள் மிக மிக அதிகம். அதனால் தான் அப்பகுதிகளில் தொழில் வளர்சியும் அதிகம். வறுமை அளவும் குறைவு. (in relative terms). பொதுவாக நிர்வாக கூட்டாளி என்று ஒருவரோ அல்லது இருவரோ இருப்பர். மற்றவர் sleeping partners என்று முதலீடு மட்டும் செய்யும் கூட்டாளிகள். நிர்வாக கூட்டாளி(கள்), மற்ற கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிறுவனத்தை நிர்வாகிக்க முனையும் தன்மை கொண்டவரகளாக இருப்பது மிக அவசியம். ஏமாற்றும் தன்மை கொண்டவரகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற நிறுவனங்கள் உருவாகுவது அரிது. சக மனிதர்களை அதிகம் நம்பாமள், குறுகிய மனோபாவம் கொண்ட பகுதிகளில் உருவாகாது.
இன்று பெரும் பன்னாட்டு நிறுவனமாக திகழும் Infosys நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப முதலீட்டில் ஒரு partnership firm ஆகவே துவக்கபட்டது ! இன்று பெரு நிறுவனங்களாக திகழும் பல புகழ் பெற்ற நிறுவனங்களுல் பல பத்தாண்டுகளுக்கு முன் அல்லது நூற்றாண்டுகளுக்கு முன் இது போன்ற partnership firmகளாகவே துவக்கப்ட்டன.
சக கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிருவனத்தை நிர்வாக்கிக்கும் குண நலனே மிக மிக அடிப்படை. ஊரில் உள்ள அனைத்து 'திறமையாளர்களும்' பிராடு பயலுகளாகவே இருந்தால், யாரும் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள். தொழில் வளர்ச்சி இல்லாமல், அந்த பகுதி வறுமையிலேயே தேங்கி கிடக்கும். யாரும் கடனும் அளிக்க மாட்டாரக்ள். எனவே இந்த அடிப்படை நேர்மை என்பது மிக முக்கியமானது. Business ethics and morals..
Private Limited Company என்பது அடுத்த கட்டம். இதுவும் partnership firmஅய் போன்றதுதான். ஆனால் சில அடிப்படை வித்தியாசங்கள். முதலீடு சற்று பெரிய அளவில் இருக்கும். இந்த லிமிட்ட என்பது, நஸ்டமடைந்து திவாலாகும் போது, கூட்டாளிகளின் தனிபட்ட சொத்துகளை கடன் கொடுத்தவர்கள் ஏலத்திற்க்கு கொண்டு வர முடியாது. நிறுவனத்தின் சொத்துக்களை மட்டுமே attach செய்ய முடியும். Limited Liability partnership (LLC) நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. To reduce risks and to encourage entrepreunership.
Public Limited Company அடுத்த நிலை. இவை பங்குகளை / கடன் பத்திரங்களை (shares and debentures) பொது மக்களுக்கு வெளியிட்டு / விற்று பெரும் மூலதனம் சேகரித்து, பெரிய projectகளை ஆரம்பிக்க ஏதுவானவை. பங்கு சந்தை மற்றும் ஆன்லைன் வர்தகம் பற்றி பல தவறான, மேலோட்டமான தகவல்கள் தான் பொது புத்தியில் அதிகம். அவற்றின் மிக அடிப்படை நோக்கங்கள் (functions) பற்றிய தெளிவு குறைவு. பொது மக்களின் சேமிப்பை ஆக்கபூர்வமான, லாபகரமான, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழிகளில் செலுத்த மிக இன்றியமையாத பணிகளை செய்வதே பங்கு சந்தையின் அடிப்படை. பங்கு சந்தை அதிகம் develop ஆகாத காலங்களில், நம் மக்களின் சேமிப்பு, பயனற்ற, unproductive முறைகளில் முடங்கியிருந்தன. பல நூற்றாண்டுகளாக தங்கத்திலும், நிலத்திலும் மட்டும் சேமிப்புகளை முடக்கும் தன்மை தொடர்ந்தது. (இன்றும் இத்தகைய 'பாதுகாப்பான' வழிகளை நாடுபவர்களே அதிகம்).
மக்களின் சேமிப்புகள் சரியான முறையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் நாடுகளில் தான் பொருளாதார வளர்சி மற்றும் முன்னேற்றம் அதிகம் இருக்கும். இந்தியாவில், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பங்கு சந்தை வளர்ச்சி அடையாமல், முடங்கி போய் இருந்தது. இன்று ஓரளவு வளர்ந்து, விரிவடைந்து விட்டது. இதுவும் ஆரம்ப நிலை தான். இன்னும் matured markets ஆக இங்கு உருவாமாறவில்லை.
ஒரு நிறுவனம் புதிய தொழிற்சாலையை அமைக்க அல்லது விரிவுபடுத்த வங்கி கடன் ஒரளவிற்க்குதான் பெற முடியும். புதிய பங்குகளை வெளியிட்டு, பெரும் தொகைகளை திரட்டுவதுதான் வழி. நிறுவனங்களின் வரலாற்றையும், நன்னம்பிக்கையையும் (goodwill)அய்யும் பொறுத்தே மக்கள் அதன் பங்குகளை வாங்குவர். முதலீட்டாளர்களை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்களே, மேலும் மூலதனத்தை திரட்ட முடியும். Goodwill and past track record எத்தனை முக்கியம் என்பதே இங்கு அடிப்படையான அம்சம்.
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல முறையில், தரமான பொருட்களை, சேவைகளை, மலிவான விலையில் அளித்தால் தான் சந்தையிலும் நன்மதிப்பை (Goodwill) பெற முடியும். இதை கட்டமைக்க பல பத்தாண்டுகள் ஆகும். (இழக்க சில நாட்களே போதும் !) உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்களில் Sony நிறுவன பொருள் என்றால் உடனே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தான் நமக்கு நினைவிற்க்கு வரும். அதுதான் அதன் சந்தைக்கு அடிப்படை. Brand building என்று சொல்வார்கள். வெறும் பொய்யான விளம்பரங்களினால் அதை கட்டமைக்க முடியாது. "பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோறையும் எல்லா காலங்களுக்கும் ஏமாற்ற முடியாது." என்ற முதுமொழி இங்கு மிக பொருந்தும். தரம் மற்றும் விலை : இவை மூலம் தான் சந்தையில் வெற்றி பெற முடியும். சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை அம்சம் இது.
நம்பிக்கை, நாணயம் மற்றும் Goodwillஇன் முக்கியத்துவத்தை சுருக்கமாக பார்த்தோம். தொழில் நிறுவனங்களில் இறுதி வடிவமான Ventute Capital based companies பற்றி பார்ப்போம். பில் கேட்ஸ் போன்ற திறமையான தொழில் முனைவோர்களை சரியாக கண்டறிந்து, அவர்களின் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு, எந்தவிதமான செக்யூரிட்டி (அடமானம்) இல்லாமல், பெரிய அளவில் நிதியை முதலீடாக அளிக்கும் முறை. பல புதிய கண்டுபிடிப்புகள் அல்லது செயல் திட்டங்களுக்கு போதுமான முதலீடும், வங்கி கடன்களுக்கு கிடைக்காத நிலை எப்போதும் உண்டு. அந்த வகை கண்டுபிடிப்புகளுக்கும், தொழில் முனைவோர்க்களுக்கும் தாரளமாக முதலீடு அளிக்க மிக அதிகம் ரிஸ்க் எடுத்து செயல்படும் நிதி நிறுவனங்களே Venture Capital Funds. அவை முதலீடு செய்யும் நிறுவனங்கள் / திட்டங்களில் பெரும் பகுதி work out ஆகாமல் நட்டத்தில் முடியும். ஆனால் பத்தில் ஒரு திட்டம் வெற்றி பெற்றாலே போதும். மீதி ஒன்பது நிறுவன முதலீட்டிழப்பை சரிகட்டி, அதற்க்கு மேலும் பல மடங்கு லாபத்தை ஈட்டித்தரும். மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன், கம்யூட்டரை சிறிய அளவில் உருவாக்கி தனி மனித பி.சிகளாக்க வடிவமைக்க முடியும் என்று யாரும் நம்பாத போது, ரிஸ்க் எடுத்து பில் கேட்ஸுக்கு உதவிய Venture capital நிறுவனம், பின்னர் மிக பெரிய லாபத்தை வென்றிருக்கும். இதே போல பல் நூறு புதிய முயற்சிகளுக்கு பிறகு உதவ வழி பிறந்திருக்கும். Venture Capital Funds are the greatest and noblest form of capitalism. அவை எந்த நாடுகளில் அதிகம் தழைக்கிறதோ, அந்நாடுகள் தாம் மிக பெரும் வளர்ச்சி அடைந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் பாக்கியத்தை அடைகின்றன.
மேலும்..
முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1
முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1
சில காலம் முன்பு, வேதியலில் முனைவர் பட்டம் பெற்று, உயர் அரசு பதவியில் இருக்கும் குடும்ப நண்பர் ஒருவருடன் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னது :"….ஏழ்மையை ஒழிக்க, அரசு அதிகம் ரூபாய்களை அச்சடித்து, ஏழைகளுக்கு அளிக்க முடியாதா ?" ; அது வறுமையை குறைப்பதிற்க்கு பதிலாக, விலைவாசியை மட்டும் உயர்த்தும் என்பது அவருக்கு புரியவில்லை. பகுதி நேரம் பேராசியராக இருக்கும் இவருக்கே, அடிப்படை பொருளாதார விதிகள் புரியவில்லை. அறியாமை. இது போன்ற அடிப்படை விசியங்கள் பற்றி எளிமையாக விளக்க முயல்கிறேன்.
முதலீட்டியம் என்று சொல் சமீப காலமாக உபயோகிக்கப்படுகிறது. முதலாளித்துவம் என்ற சொல்தான் அதிகம் பிரயோகிக்கப்படும் சொல். அதைவிட முதலீட்டியம் என்ற சொல் Capitalism என்பதற்க்கு சரியான தமிழாக்கமாக உள்ளது. முதலாளி, முதலாளித்துவம் என்ற சொற்கள் வில்லத்தனமான, எதிர்மறையான அர்த்தங்களுடன் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. ஆகவே முதலீட்டியம் என்ற சொல் எமக்கு உவப்பாக இருக்கிறது !!
தொழிற் புரட்சி துவங்கிய பிறகுதான் முதலீட்டியம் உருவானது. அதற்க்கு முன் உலகெங்கும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நிலப்பிரவுத்துவம் தான். நவீன வடிவ ஜனனாயகமும், தொழில் புரட்சியுடன் சேர்ந்தே வளர்ந்தது. அய்ரோப்பாவில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.
முதலீட்டியம் பல வகைகள், பாணிகள் கொண்டது. மார்க்சியம் போன்ற ஒற்றைபடை தன்மை கொண்ட definition கிடையாது. ஒவ்வொறு நாட்டிலும் ஒவ்வொறு பாணிகள். அதை பற்றி பிறகு விரிவாக பார்போம்.
பாசிசம், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் : இவைகள் முதலீட்டியத்தோடு சேர்ந்தே பார்க்கப்படும் கோணம் உள்ளது. முதலீட்டியத்தை இரு வகைகளாக பிரிக்கலாம் : லிபரல் ஜனனாயகத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம், பாசிசத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம். இரண்டு வகைகளையும் 'முதலீட்டியம்' என்ற சொல்லிற்க்கு கீழ் அடைத்து, குழப்பிக்கொள்ளும் தன்மை அதிகம். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் லிபரல் ஜனனாயக பாணி முதலீட்டியம் பரவலாகியது. அதுவரை பாசிச பாணியிலான, ஏகாதிபத்திய தன்மை கொண்ட முதலீட்டியம் கோலோச்சியது.
காலனியாதிக்கம் செலுத்திய அய்ர்ப்ப்பிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கிய முதலீட்டிய பாணி இது.
1948இல் அய்.நா சபை பிரகடனமான : Universal Declaration of Human rights. http://www.un.org/en/documents/udhr/ இதுதான மிக மிக முக்கியமான, அடிப்படையான கொள்கை விளக்கம். மீற கூடாத 'புனித பசு' என்றும் கொள்ளளாம். சொத்துரிமை இதில் ஒரு பகுதி. அவ்வளவுதான். இந்த சொத்துரிமை தான் முதலீட்டியத்தின் ஆணி வேர். அதாவது பொது உடைமை கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை.
மேலோட்டமாக பார்த்தால், சொத்துரிமை என்பது பணக்காரர்கள், பண்னையார்கள், பெரு முதலாளிகளின் நலன்களை பாதுக்காக்க, ஏழைகளை 'சுரண்ட' உருவாக்கப்பட்ட கொள்கை போல தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏழைகளில் பலரும் கடின உழைப்பில் முன்னேறி தொழில் அதிபர்களாக, பெரு விவசாயிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், இன்று பெரும் நிறுவனங்களின் 'முதலாளிகள்' அல்லது பங்குதாரகள் அனைவரும் தங்கள் 'தனி உடைமையை' சுயமாக உழைத்து பெற்றவர்கள். அல்லது அவர்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, பண்னைகளை வாரிசு அடிப்படையில் பெற்று, அதை பெருக்கி, நிர்வாகிப்பவர்கள்.
தொடர்ந்து 1000 வருடங்களாக 'பணக்காரகளாக' இருக்கும் குடும்பம் அல்லது குழு எதுவும் இல்லை. இருப்பதாக நான் அறியவில்லை.
ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கும் ஒருவர், தம் உழைப்பினாலும், ஊக்கத்தாலும், திறமையாலும், ஒரு சிறு நிறுவனத்தை துவக்கி, படிப்படியாக வளர்த்தி, மேம்மட்ட வரலாறுகள் பல உண்டு. தாம் பாடுபட்டு உழைத்து, உருவாக்கிய நிறுவனம் அல்லது பண்ணையை, ஒரு சோசியலிச அரசோ அல்லது 'கொள்ளையர்களோ' கைப்பற்றும் சூழல் உருவானால், தொழில் முனைவோர்கள் ஊக்கமாக 'உழைக்க' மாட்டார்கள். தன்னால் உருவாக்கப்பட்ட அல்லது முன்னோர்களாக தமக்கு அளிக்கப்பட்ட சொத்துகள் / நிறுவனங்கள் / பண்னைகள், இவைகளுக்கு 'பாதுகாப்பில்லை' என்றால் அவற்றை பேணவோ, விரிவுபடுத்தவோ ஊக்கம் இருக்காது. இது அடிப்படை மனித இயல்பு. 'சோசியலிச' கொள்கைகளை அமலாக்கும் நோக்கத்தில் பெரு நிறுவனங்களை தேசியமயமாக்கும் 'அபாயம்' தொடர்ந்த காலங்களில் இருந்த ஊக்கத்தைவிட, இன்று தாரளமயமாக்கல் காலத்தில் வெளிப்படும் ஊக்கம் மிக அதிகம். Unleashed potential of Indian entrepreuneship and energy. பார்க்கவும் : http://www.heritage.org/index/pdf/2006/index2006_chapter3.pdf இதை புரிந்து கொள்ள கடந்த காலத்தில், 1991க்கு முன் இருந்த சூழல் பற்றி அனுபவ அறிவோ அல்லது வாசிப்பனுபவமோ தேவை.
நிறுவனங்கள், வணிக அங்காடிகளுக்கு பாதுகாப்பில்லாத பகுதிகளிலும் விளைவுகள் இதே போல் தான். பீகார் போன்ற பகுதிகளில் தொழில் துவங்க பலரும் தயங்குவது இதனால் தான். மாஃபியா போன்ற அமைப்புகள், தீவிரவாதிகள் மாதந்தோரும் 'protection money' (அதாவது மாமுல்) கேட்டும் அச்சுருத்தும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகுவது மிக கடினம். புதிய தொழில்கள் அல்லது முதலீடுகள் உருவாகாவிட்டால், வேலை வாய்புகளும், வரி வசூலும் பெருகாமல், வறுமை தான் அதிகரிக்கும். பீகார், ஒரிஸா, மே.வங்க ஏழை மக்கள் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் வேலை தேடி வரும் அவலம் இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். கங்கை பாயும் செழிப்பான பகுதி, கனிம வளங்கள் அதிகம். ஆனாலும் கடும் வறுமை. வேலை இல்லாத் திண்டாட்டம். காரணம் அங்கு சொத்துகளுக்கு போதிய 'பாதுகாப்பு' இல்லை.
சொத்துரிமையின் முக்கியம் பற்றி வேறு விதமாக பார்ப்போம். எழுத்தாளர்கள் மற்றும் படைப்பளிகள் உருவாக்கும் ஆக்கங்களை வணிக ரீதியாக பாதுக்க காபிரைட் சட்டங்கள் உள்ளன். ஆக்கங்களும் ஒரு வகையான சொத்துக்கள் தாம். அவற்றை விற்று பணமாக்க அரசு கொள்கைகள் தடை செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் ? அதாவது அவை பொது உடைமையாக்கப்பட்டு, எழுதாளர்கள், படைப்பளிகளுக்கு மாத சம்பளம் மட்டும் அளிக்கும் ஒரு முறை உருவானால் எப்படி இருக்கும் ?
புதிய ஆக்கங்களை உருவாக ஊக்கம் குறையும். ஒரு துறை பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூலகள் போன்றவற்றிக்கு காபிரைட் பாதுகாப்பு இல்லாமால், பலரும் அதை அப்படியே காபி அடித்து வெளியிட்டாலும், ஊக்கம் குறையும். சினிமா துறையில் அதிக நஸ்டம் வர இந்த வீடியோ பைரசி ஒரு முக்கிய காரணம் என்பதை இங்கு பார்க்க வேண்டும்.
இந்தியாவில் சொத்திரிமையின் நிலை மற்றும் சட்ட விதிகளில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றி ஒரு விரிவான சுட்டி : http://www.ccsindia.org/ccsindia/policy/rule/studies/wp0041.pdf
சொத்துரிமையை அடிப்படை உரிமையாக (Right to property as a 'Fundamental Right') ஏற்க்கபட்ட நாடுகள் தான் கடந்த நூற்றாண்டில் வறுமை அளவை மிக மிக குறைத்து, முன்னேறிய நாடுகளாக மாறின. சொத்துரிமையை பல விதங்களில் முடக்கிய, வலிமை இல்லாமல் dilute செய்த நாடுகளால் அந்த அளவு முன்னேற முடியாமல், இன்றும் வறுமையில் தத்தளிக்கின்றன. இதை பற்றி மிக விரிவான ஆய்வுகள், தரவுகள் உள்ளன. மிக எளிமையாக இதை புரிந்து கொள்ள, இன்றைய வட கொரியாவையும், தென் கொரியாவையும் ஒப்பிட்டாலே போதும்.
மேலும்..
கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?
கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?
உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை. சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளில் சோசியலிச அரசு அமைக்கப்பட்டு, படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கி நகரும் காலங்களில், திரிபுவாதிகள் தோன்றி, சீரழித்துவிட்டார்கள். இதுதான் தோழர்களின் version of history.
கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்க்கு (சமூகத்திற்க்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சமளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs..
இதில்தான் சிக்கலே. மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.
தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.
பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கத்திற்க்கா வேலை செய்யும் ஊழியர்கள். தனியார் நிறுவனங்கள் அறவே இருக்காத அமைப்பு. பிரதமர் முதல் கடைனிலை ஊழியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். (இங்கு அரசு எனபடுவதற்க்கு அர்த்தம் வேறு). அவர்களுக்கான சம்பளம், அவர்களின் வேலை மற்றும் தகுதிக்கேற்ப ஆரம்ப காலங்களில் வழங்கப்படும். பிறகு உண்மையான கம்யூனிசம் உருவாகும் போது, தேவைக்கேற்ற ஊதியம் மட்டும் வழங்கப்படும்.
ஒரு தொழிற்சாலை அல்லது கூட்டு பண்னையில் ஒரே வகை வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருக்கும். இதன் விளவு, திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல், சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்கும் நிலை. இது நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தை குறைக்கும். அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும். மொத்த விளைவு : உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைவாகவே இருக்கும். மிக முக்கியமாக மூளை உழைப்பை செய்யும் நிர்வாகிகளின்
திறன் ஒழுங்காக வெளிப்படாது.
தொழில்முனைவோர் என்படும் entrepreneuers, இவர்களின் முழு திறமையும் வெளிபட வாய்பிருக்காது. ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எந்த பாணியில் அமைக்கப்படிருந்தாலும், அதை நிர்வாக்கிக திறமையான, ஊக்கமான, நிர்வாகிகள் மிக அவசியம் தேவை. Managerial and entrepreunarl talent. இதை பொது உடமைசமூகத்தில் இழக்க நேரிடுவதால், உற்பத்தி மற்றும் efficiency மிக குறைவாகவே இருக்கும்.
தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செழுத்த ஊக்குவிக்கும். இதற்க்கு விதிவிலக்குகள் இருக்கலாம். பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகளும் அப்படி இருப்பர். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான். பெருவாரியானவர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே மனித இயல்பு. லாப நோக்கு மறுக்கப்ட்டு, தனியுடைமையின் அடிப்படையான சொத்துர்மை ரத்து செய்யப்படும் அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையாக, போதுமானதாக இருக்காது.
சோவியத் ரஸ்ஸியாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்க்கான காரணிகளை தோழர்கள் விரிவாக விவாதித்து, மிக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளனர். அதாவது திரிபுவாதிகள், ஏகாதிபத்திய சதி போன்றவை தான் காரணம் என்று சொல்வர். ஆனால் இது மனித இயல்பு என்பதே உண்மை. ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற முடியாது. ஒரு தலைமுறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினரை மட்டும்தான் உண்மையான கம்யுனிஸ்ட்களாக மாற்ற முடியும். பெரும்பான்மையோர் தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் நடிப்பார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்வார்கள். அவர்களை ‘திருத்தி’, re-training and educating about communism செய்ய அரசும், கட்சியும் முயலும். அதற்க்காக பல மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக புரிய வேண்டி வரும்.
எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை. இதை தான் வரலாறு நிறுபிக்கிறது. செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக போக உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். முக்கியமாக விவசாயத்தை திடிரென பொது உடைமை பாணியில், கூட்டுபண்னைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. இது செம்புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் ஆரம்ப வருடங்களில் நடந்தது. விதிவிலக்கே இல்லை. ஏன் என்று யோசிக்க வேண்டும். 80களி ஒரு சோவியத் ரஸ்ஸிய கூட்டுபண்ணை தொழிலாளர் சொன்னது : “We pretended to work while they pretended to pay”
இன்று உலகில் எங்கும் சோசியலிச பாணி கம்யூனிச அமைப்புடைய நாடே இல்லை. கூபாவையும் சொல்ல முடியாது. 50 ஆண்டுகளில் பெரும் மாற்றம். வரும் காலங்களில் செம்புரட்சி உருவாக வாய்புள்ள நாடு என்று ஒரு நாட்டையும் சொல்ல முடியவில்லை. (60களில் அப்படி இல்லை). மொத்த தென் அமெரிக்காவும் பொது உடைமையை நோக்கிய பாதையை கைவிட்டுவிட்டன. சீலே மற்றும் பெரு போன்ற நாடுகளின் மாற்றம் வியக்க வைக்கும். 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு புரட்சி பற்றிய சிந்தனைகள் இன்று இல்லை. ஒரு முன்னாள் மார்க்ஸிய போராளியும், இன்று ஜனாதிபதியுமான
ஒருவரின் பேட்டி இது :
A new beginning : The emerging democratic paradigm in Latin America
http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm
How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..
..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”
இந்தியா இன்று ஊழல்மயமாக உள்ளது. சராசரி இந்தியானின் நேர்மை மற்றும் ஊழலுக்கு துணை போகாத ஒழுக்கம் குறைவுதான். எதோ ஒரு வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் மிக பரவலாக வேறூண்றிவிட்டது. அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் உற்பத்தி திறன் பற்றி சொல்லவே வேண்டாம். மொத்த மக்களும் செம்புரட்சியின் மூலம் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே கொடுமையாக உள்ளது.
இதற்க்கு மாற்றாக, தனிநபர்வாதத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர சந்தை பொருளாதாரத்தை, ஜனனாயக முறையில், முறையாக பின்பற்றிய பல நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று, வறுமையில் அளவை மிக மிக குறைத்து, இன்று செழிப்பான வளர்ந்த நாடுகளாக மாறின. மே.அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற பல நாடுகளின் economic history அய் பார்த்தாலே புரியும்.
கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து, அதை நம்ப வைத்து, முழுமையாக ஏற்க்க வைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதையே வரலாறு நிருபிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் இச்சித்தாந்தம் இன்று காலாவதியானதாக கருதப்படுகிறது.
மேலும் உபரி மதிப்பு மற்றும் சுரண்டல் தான் இதற்க்கு ஆதாராமான விசியங்கள். ஆனால் அவை உண்மை அல்ல என்பதை எமது முந்திய பதிவில் எழுதியுள்ளேன்.
’உபரி மதிப்பு’ என்னும் மாயை
இடதுசாரிகளும், வலதுசாரிகளும்
இடதுசாரிகளும், வலதுசாரிகளும்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்
விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்
நிதியமைச்சர் அறிவித்த இந்திய பட்ஜெட்டின் வரவு செலவின்
சுருக்கம் :
அரசின் வருமானம் : ரூ.6,41,079 கோடிகள்
நிகர செலவு : ரூ.10,20,838 கோடிகள்
பற்றாக்குறை : ரூ.3,79,759 கோடிகள் (அனுமானம்)
அதாவது சுமார் 4 லச்சம் கோடி துண்டு விழுகிறது. பெட்சிட் அல்லது
படுதா என்றும் சொல்லாம். அதை கடன் வாங்கித்தான் ஈடு செய்கிறது
நமது அரசு. மொத்த கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை
வாங்கிய கடன்களுக்கான இந்த வருட வட்டித் தொகை : சுமார் 3,00,000
கோடிகள். மொத்த கடன் எவ்வளவு என்பதை சரியாக கண்டுபிடிக்க
முடியவில்லை. வட்டி தொகையில் இருந்து யூகிக்கலாம்.
அரசு பற்றாக்குறைய கடன் வாங்கியும், நோட்டடித்தும் செலவு
செய்கிறது. அதனால் தான் விலைவாசி கண்டபடி உயர்கிறது. இன்னும்
இரண்டு ஆண்டு கழித்து இந்த பட்ஜெட்டினால் விலைவாசி உயர்வு
ஏற்படும். உடனே தெரியாது. ஆனால் அன்று அதற்கான காரணிகள்
இது போன்ற பட்ஜெட் பற்றாகுறைகள் என்று பொது புத்தியில்
அறியப்படாமல், இதர காரணிகள் மட்டும் விவாதிக்கப்படும். பார்க்க :
விலைவாசி ஏன் உயர்கிறது ?
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
பொருளாதார மந்தத்தை நீக்கவும், நாட்டின் பொருளாதாரம் "வளரவும்"
இது போன்ற பற்றாகுறை பட்ஜெட்டுகள் தேவை என்று ஒரு எண்ண
ஓட்டம் இருக்கிறது. லார்ட் கீயின்ஸ் என்ற பொருளாதார நிபுணரின்
வழிமுறை இது. ஆனால் அவர் சொன்ன பற்றாக்குறை பட்ஜெட் விகுதம்
மிக மிக குறைவானது.இந்தியாவில் மொத்த ஜி.டி.பியில் சுமார் 10 முதல்
12 சதவீத அளவில் மத்திய / மாநில மற்றும் மான்ய பட்ஜெட்டுகளின்
பற்றாகுறை உள்ளது. அது தொடர்ந்து விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி,
விவசாயிகளையும், ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கடும்
துன்பத்திற்க்காளாக்கி, எதிர் மறையான விளைவுகளையே தரும்.
கடனாளியான அரசு, மேலும் பல லச்சம் கோடிகள் கடன் வாங்கி,
பொருளாதாரத்தை மேம்படுத்துவது நடவாத காரியம். வளர்ந்த நாடுகள்
அளவு இந்திய பொருளாதாரம் பாதிக்க பட வில்லை. பொருளாதார
வளர்சி விகுதம் தான் குறைந்து உள்ளது. பற்றாகுறை பட்ஜெட்டுககள்
இல்லாமலேயே, சில ஆண்டுகளில் அது தானாகவே சரியாவிடும்.
ஆனால் கடன் சுமையும், விலைவாசி உயர்வும் அதிகரிக்கும்
பற்றாக்குறை பட்ஜெடுகள் நம் சாபக்கேடுகள்.
மேலும், இந்த ஆண்டு ராணுவச் செலவு : 1,41,703 கோடிகள். சென்ற
ஆண்டை விட சுமார் 36,000 கோடிகள் அதிகம். அக்கிரமமான தண்டச்
செலவு. நமக்கு சிறிதும் கட்டுபடியாகாத வெட்டி வீராப்பு .ஆடப்பரம்.
இது போல் பல துறைகளிலும் வெட்டிச் செலவுகள். அதை குறைக்க
வேண்டும் முதலில்.
இவ்வளவு செலவுகளும் கடன் வாங்கித்தான் செய்கிறோம். கடன் வாங்கி
செலவு செய்தால் எதிர்காலம் என்ன ஆகும் ? தனி மனிதன் இது போல்
கடன் வாங்கினால் என்ன ஆவானோ, அதே தான் அரசிற்க்கு ஏற்படும்
என்பதே அடிப்படை பொருளாதார விதி. அது பலருக்கும் புரிவதில்லை.
ஆம்னி பஸ்களுக்கு விடுதலை
Ban on omnibus permits revoked
http://www.hindu.com/2009/06/11/stories/2009061159630800.htm
தமிழகத்தில், சுமார் 18 வருடங்களாக இருந்த ஆம்னி
பஸ்களுக்கான லைசென்ஸ் கட்டுபாடுகளை தளர்த்தியது
அரசு. நீண்ட தொலைவு பயணத்திற்க்கு அரசு பஸ்கள்
மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் அதிகம் தேவைபடுகின்றன.
(ரயில் வண்டிகளில் இடம் நிரம்பி வழிவதால்) ; ஆனால்
1991 முதல் புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட்டுகள்
வழங்குவதை நிறுத்தி வைத்தது தமிழக அரசு. விளைவு :
கடும் பற்றாக்குறை மற்றும் டிக்கட் விலைகள் மிக
அதிகமானது.
ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் விதமே வினோதமானது,
முட்டாளதனாமானது. மதுரையில் இருந்து சென்னை
செல்லும் ஆம்னி பஸ், டூரிஸ்ட் வண்டியாகவே இயக்கப்படுகிறது.
அதவாத பயணிகள் அனைவரும் "சேர்ந்து" சென்னையை
சுற்றி பார்க்க செல்வதாக ஒரு செட்டப். தனியார் பஸ்களுக்கு
நேரடியான அனுமதி வழங்கப்படாதால் 40 வருடங்களாக இந்த
அவலம். மேலும் புதிய ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட்
அனுமதிக்காமல் இருந்ததால், இருக்கும் பெர்மிட்டுகள்
பல கோடி ரூபாய்களுக்கு (கருப்பில்) கைமாறின. எனக்கு
தெரிந்து கரூர் சென்னை ஆம்னி பெர்மிட், சில வருடங்களுக்கு
முன் சுமார் 2 கோடிக்கு கைமாறியது.
இதில் மறைந்து நிற்க்கும் விசியம் : அரசு அதிகாரிகள்,
அமைச்சர்கள், முதல்வர் வரை லஞ்சம் விளையாடுவது.
வருடந்தோரும் மாமுலாக சூட்கேஸ்கள் அனுப்பபடுகின்றன.
இதற்க்கு பெயர்தான் குரோனி கேபிடலிசம். புதிய போட்டியாளர்கள்
உருவாகி, மலிவான சேவைகள் அதிகமாகி, லாபம்
குறைவதை தவரிக்க இதுவரை பெர்மிட் பெற்ற முதலாளிகளும்,
அரசு எந்திரமும் கூட்டாக செய்யும் சதி இது.
"தனியார் முதலாளிகள் வளர்ந்துவிடுவார்கள், லாபம்
இல்லாத வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க மாட்டார்கள்,
டிக்கட் விலை மிக அதிகமாகும், மக்கள் தவிப்பர்கள்" :
இந்த டைலாக் மாமுலாக உபயோகிக்கப்பட்டு, பொது
புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது.
இப்போதும், புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட் வழங்கும்
அதிகாரம் ஆர்.டி.ஓ மற்றும் அதன் தலைவரான் போக்குவரத்து
கமிஸ்னர் (மிகவும் 'பசையுள்ள' பதவி) ஆகியோரிடம் தான்
வழங்கள்ப்பட்டுள்ளது. இனி பல கோடிகள் கைமாறும். பேரங்கள்,
சூட்கேஸ்கள்...
ஏல முறையில் வெளிப்படையாக வழங்கும் முறையே
சரியானது. ஊழல் உருவாவதை தடுக்கும். ஆனால்
விடமாட்டார்கள்.
மேலும் பார்க்க :
http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html
வட கொரியா என்னும் நரகக்குழி
வட கொரியாவின் வரலாறு மற்றும் இன்றைய நிலைமை பற்றி
பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு,
பல கொடுமைகளை அனுபவித்த கொரியா நாடு, பின் உள்நாட்டு
யுத்ததில் சிக்கியது. வடக்கு பகுதியில் கம்யூனிஸ்டுகள் (சீனா
மற்றும் ரஸ்ஸியா ஆதரவுடனும்), தென் பகுதியுல்
முதலாளித்துவாதிகள் / ஜனனாயகவாதிகள் அமெரிக்க மற்றும்
இதர நாடுகள் ஆதரவுடனும், கொரியாவை கைப்பற்ற கடும்
போரிட்டனர். 1950 முதல் 1953 முதல் நடந்த போரின்
இறுதியில் கொரியா தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு,
தென் கொரியா மற்றும் வட கொரியா என்று இரு நாடுகளாக
பிரிக்கப்பட்டது.
தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான
தொழில்களையும் வெற்றிகரமாக பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும்
பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல்
ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது.
ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு
பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல்
பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவ செலவிற்க்காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால்,
உற்பத்தி திறன் மிக மிக குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக
இருந்தது.
1994இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர்.
மிக மிக கொடுங்கோலனான இவர், 'எதிரிகள்' பலரையும் கொன்றழத்தார். வட
கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி
செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே "கடத்தல்" மூலம்
அன்னிய செலவாணியை பெற முயன்றது.
பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும்,
ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும்
உருவாக்கி குவிக்கின்றனர்.
தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக
அடிமைகளாக வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட
ராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது
படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே ராணுவ
செலவை குறைக்க மறுக்கும் அரசு.
ஆனால் உண்மையில் உலகின் எந்த நாடும் வட கொரியா மீது
படை எடுக்க விரும்பாது. ரஸ்ஸியா, ஜப்பான், அமெரிக்கா, தென்
கொரியா, சைனா என்று முக்கிய நாடுகள் அனைத்தும் இன்று
வரை வட கொரியாவை தாஜா செய்து, அவ்வப்போது உதவி
செய்து வருகிறது. காரணம், வட கொரியா ஒரு "failed state"ஆக
வீழ்ந்தால், பல லச்சம் அகதிகள் தென் கொரியா, சைனா மற்றும்
இதர அண்டை நாடுகளில் தஞ்சம் புக முனைவர். சமாளிகவே
முடியாத நிலை அது.
இப்போதே, அகதிகள் எண்ணிக்கை மிக அதிகம். ரகசியமாக
அங்கிருந்து தப்பித்து செல்வர். வட கொரியா கிராமங்களில்
வாழும் மக்களின் நிலை, ஈழ மக்களின் நிலையை விட மிக
மிக கொடுமையானது. விடிவே இல்லாத சூழல்.
தென் கொரியாவில் வாழும் கொரியார்கள் மிக மிக மிக
அதிர்ஸ்டம் செய்தவர்கள். ஒரே நாட்டில் இரு நிலை.
ஆனால் இன்றும் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சிதான்.
செங்கொடி பறக்கிறது. நமது காம்ரேடுகள், வட கொரிய
ஆட்சியாளர்களை "திரிபுவாதிகள்", "போலிகள்" என்று மிக
சுலபமாக நிராகரிப்பர். ஆனால் உலகெங்கிலும் (க்யூபா) உள்பட
செம்புரட்சி, காலப்போக்கில் "திரிபுவாதிகள்"
வசம் சிக்கி, சீரழிந்ததே வரலாறு.
சொல்லிவைத்தது போல் விதிவிலக்கில்லாமல் அனைத்து "கம்யூனிச"
நாடுகளும் எப்படி திரிபுவாதிகளிடம் சிக்கியதாம் ? காரணம், அந்த
சித்தாந்தம் விஞஞான பூரவமானது அல்ல. அல்ல. அதிகாரம் ஒரு
முனையில் குவிக்க வகை செய்யும், மக்களாட்சிக்கு, அடிப்படை
உரிமைகளுக்கு விரோதமான சித்தாந்தம் அது. அதனால் இறுதியில்
சர்வாதிகார ஃபாசிசத்திற்கே வழி வகுக்கும். இதில் எங்கும் விதி
விலக்கே இருக்க முடியாது. மேலோட்டமாக தொழிலாளர் அரசு,
சுரண்டலை ஒழித்தோம், சமத்துவம் என்ற labelகளை வைத்துக்
கொள்வார்கள்.
தொழிலாளர்கள் நிலை கம்யூனிச நாடுகளில்தான் மிக மிக
கொடுமையானது. கொத்தடிமைகள் போல் வாழ்க்கை. அதை பற்றி
விரிவாக பின்னர்..
North Korea Human Rights (Amnesty International's reports)
http://www.amnestyusa.org/all-countries/north-korea/page.do?id=1011213
அமெரிக்காவின் (Libertarian) லிபெர்ட்டேரியன் கட்சி
கொண்ட கட்சி இது.
நேட்டோ (NATO) போன்ற அனைத்து அமைப்புகளிலிருந்து
http://www.lp.org/issues
மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்
அன்புள்ள ஜெமோ,
பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய உங்கள் பதிவை ( http://jeyamohan.in/?p=97 )
இப்போதுதான் படித்தேன். அதை ஒட்டிய மடல் இது :
மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்
///ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை இயல்பாகக்
கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின் மையம். அதை
எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து அளவுக்கே
முக்கியமான குரல்.////
சொத்துரிமை தான் முதலாளித்துவத்தின் ஆணிவேர். பல வகை
அடிப்படை உரிமைகளில் சொத்துரிமை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத உள்ளேன். மார்க்ஸிசத்தை எந்த '
முறையில்' அமல்படுத்தினாலும், அடிப்படை சொத்துரிமையை நசுக்காமல்
செயல்படுத முடியாது. சொத்துரிமையை நசுக்கும் போது இதர மனித
உரிமை மீறல்கள் மிக இயல்பாக நசுக்கபடும். அதை தவிர்க்கவே
முடியாது. செம்புரட்சிக்கு பின் ஸ்டாலின்ஸம் உருவாகுவதை
தவிர்க்கவே முடியாது.
அலெக்ஸான்டர் சோல்ஸ்சென்ன்ஸின் (Aleksandr Solzhenitsyn)
சொலவது :
..he blamed the teachings of Karl Marx and Friedrich Engels, arguing
Marxism itself is violent. His conclusion is Communism will ALWAYS be
totalitarian and violent, wherever it is practiced. There was nothing special
in the Russian conditions which affected the outcome...
He also rejected the view that Stalin created the totalitarian state, while
Lenin (and Trotsky) had been "true communists." He argued Lenin started
the mass executions, wrecked the economy, founded the Cheka which would
later be turned into the KGB, and started the Gulag even though it did not have
the same name at that time.
இந்த அம்சம் மார்கிஸத்தின் அடிப்படை கூறுகளிலேயே உள்ளது.
எனவே ஸ்தாலியத்தை உருவாக்க சாத்தியமில்லாத ஒரு
மார்க்ஸிசம் சாத்தியமே இல்லை.
சொத்துரிமையும் அறவியலும் பற்றி மிக முக்கிய பதிவு :
"HUMAN RIGHTS" AS PROPERTY RIGHTS
http://www.mises.org/rothbard/ethics/fifteen.asp
The Ethics and Economics of Private Property
http://www.mises.org/story/1646
அன்புடன்
K.R.அதியமான்
-----------------------------
...ஒரு படைப்பு வாசகனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனை
பேர் எத்தனை முறை வாசிக்கிறார்களோ அத்தனைமுறை அது புதிதாகப்
பிறக்கிறது. சோதிப் பிரகாசம் அவர்களின் வாசிப்பு என்நூலில் இருந்து
அவர் பெற்றுக் கொண்டது. அதை சரி அல்லது தவறு என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை. அவர் கணக்கிலெடுக்கத் தவறிய விஷயங்களை,
அவர் பார்க்காத கோணங்களை சகவாசகனாக நான் சுட்டிக் காட்டலாம்.
படைப்பாளி கூட படைப்புக்கு ஒரு வாசகனே. இனி நான் எதை
சொன்னாலும் அது அந்நாவலின் பகுதி அல்ல. அது முடிந்துவிட்டது.
[விஷ்ணுபுரத்தில் புதிதாக எழுதிச் சேர்க்கப்படவில்லை]
என் நோக்கில் அந்நாவலில் மார்க்ஸியத்தையும் ஸ்தாலினியத்தையும்
துல்லியமாக வேறுபடுத்திப் பார்த்திருப்பதாகவே படுகிறது. அப்படி
வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல்
என்று சொல்லிவிடவும் முடியாது. அது ஸ்தாலினிய எதிர்ப்பு நாவலே.
ஆனால் ஸ்தாலினின் தரப்புகூட வலிமையாகவே சொல்லப்படுகிறது.
அதில் ஒற்றைப்படையாகக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இல்லை.
எல்லா கருத்தும் ஒரு விவாதத்தன்மையுடன்தான் வருகின்றன.
ஆகவே எல்லா கருத்தும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சில தரப்புகள்
தன்னிச்சையான உக்கிரத்துடன் நிகழ்ந்துள்ளன. எஸ்.எம்.ராமசாமி
சொல்லும் மாறாப்பேரறம் குறித்த தரப்பு அதில் ஒன்று. அதற்குச்
சமானமான வலிமையுடன் வருவது ஜோணி என்ற கதாபாத்திரத்தால்
முன்வைக்கப்படும் எதிர்கால மார்க்ஸியம் குறித்த பெருங்கனவு.
அந்நாவல் மார்க்ஸியத்தின் அழிவைப் பற்றி பேசவில்லை, அதன்
மறுபிறப்பைப் பற்றிப் பேசுகிறது
மார்க்சியம் ஸ்தாலினியமல்ல. ஆனால் அது ஸ்தாலினியத்தை
முளைக்கவைத்தது. அரை நூற்றாண்டு காலம் அதை நியாயப்படுத்தும்
கருத்தியல் சட்டகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை எவருமே மறுக்க
இயலாது. பின்தொடரும் நிழலின் குரலின் முக்கியமான வினாவே
அங்குதான் உள்ளது. சில எல்லைகளை நாம் ஒருபோதும்
மீறமுடியாது என எண்ணுகிறோம், சிலவற்றை கற்பனைகூட
செய்யமுடியாது என நம்புகிறோம். ஆனால் உரியமுறையில்
நியாயப்படுத்தப்பட்டால் மனிதன் எதையும் செய்வான் என்றுதான்
வரலாறு நிரூபித்துள்ளது. நாஜி வதைமுகாம்களை நடத்தியவர்கள்
மனிதர்களே. அவர்களுக்கு அவர்கள் செயல் நியாயமாக,
இன்றியமையாததாகப் பட்டது. ஆகவே மனிதன் கருத்தியல்மீது
மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்பதே நாம் இருபதாம்
நூற்றாண்டில் கற்றுக் கொண்ட பாடம். கருத்தியல் எந்த அளவுக்கு
வலிமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலும் கவனமாக இருக்கவேண்டும். எந்த அளவுக்கு முற்போக்காக,
எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலதிகக்கவனம் தேவை. தர்க்கமல்ல, மனசாட்சியே நம்
அளவுகோல்களைத் தீர்மானிக்கவேண்டும். புத்தியல்ல கனிவே
நம்மை வழிநடத்தவேண்டும். அந்நாவலில் உள்ளதாக எனக்குப்
படுவது இதுவே.
இதுவே பின் தொடரும் நிழலின் குரல் பேசும் விஷயம்.
அதைப்பேசும்பொருட்டு இக்காலகட்டத்தில் மிக வலிமையனதாக
இருந்த ஒரு கருத்தியலான மார்க்ஸியம் உதாரணமாக்கப்பட்டுள்ளது,
அவ்வளவுதான். அதன் பிரச்சினை அறத்துக்கும் தர்க்கத்துக்கும்
இடையேயான முரண்பாடு குறித்ததே. மார்க்ஸியமா ஸ்தாலினியமா
என்பதல்ல அதன் சிக்கல். எப்படி ஸ்தாலினியத்தையும் போல்பாட்டின்
கொடூரங்களையும் மகத்தான மனிதாபிமானிகளாக இருந்தவர்கள்
கூட பலவருடம் நியாயப்படுத்தினார்கள் என்பதுதான். [இன்னும்
சொல்லப்போனால் இ.எம்.எஸ் என்ற மேதை, பெருங்கருணையாளன்
எப்படி அதைச்செய்தான் என்பதே என் தனிப்பட்ட சிக்கல்]. எப்படி
எந்த ஒரு இலட்சியவாதமும் ஸ்தாலினியம் போன்ற வன்முறைக்களத்தை
உருவாக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அதன் இலக்கு. இலட்சியவாதம்
எதிர்நிலை நோக்குகளை வன்முறையை உருவாக்குமென்றால் அது
மெல்ல தன்னை வன்முறைக்குப் பலிதந்துவிடும் என்பதே. வன்முறைக்கு
அதற்கே உரிய இலக்கணமும் வழிமுறையும் உண்டு என்பதே.
அவ்வகையில்தன் ஆத்மாவின் ஆழத்திலிருந்து பின் தொடரும் நிழலின்
குரலின் வரிகளை வாசித்த பலநூறு ஈழவாசகர்களை நான் அறிவேன்.
ஸ்தாலினியம் தவறாயிற்று என இன்று சாதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் கொல்லப்பட்ட உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களை மீட்டெடுக்க
இயலுமா என்பதே அந்நாவல் எழுப்பும் வினா. வன்முறை எங்கு எப்படி
நிகழ்ந்தாலும் இந்த அபாயம் உள்ளது. அதை நிகழ்த்தும்போது உள்ள
நியாயங்கள் மாறலாம். நிகழ்ந்தவற்றைச் சரிசெய்ய இயலாது. அப்படியானால்
தியாகங்களுக்கு மதிப்பே இல்லையா? போல்ஷெவிக் புரட்சியில்
இறந்துபோனவர்களின் மரணம் வரலாற்றின் கேலிக்கூத்துதானா? [அதே
வினாவை அப்படியே ஈழத்தைப் பற்றியும் எழுப்பலாம். என்றாவது
அவ்வினா எழுந்துவரும், மிகவலிமையாக. அப்போது என் நாவல்
எதைப்பற்றியதென்ற கேள்விக்கே இடமிருக்காது]. அக்கேள்விக்கே
கிறிஸ்து வந்து பதில் சொல்கிறார்- திருச்சபையின் கிறிஸ்து அல்ல
படைப்பின் ஆன்மாவில் விளைந்த கிறிஸ்து.
ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை
இயல்பாகக் கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின்
மையம். அதை எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து
அளவுக்கே முக்கியமான குரல்.
இந்தி திணிப்பும், தனியார்மயமும்
இந்தி திணிப்பும், தனியார்மயமும்
1994இல் தனியார் சேட்டிலைட் சேனல்களை மத்திய அரசு
அனுமதிக்கும் வரை பல ஆண்டுகளாக அரசின் தூர்தர்ஸ்ன் தான்
மோனோபாலியாக கொடிகட்டிப் பறந்தது. 1970கள் முதல் 1994 வரை
சென்னை தூர்தர்சனில் இந்தி திணிப்பு மிக மிக் அதிக அளவில்
நடந்தது. இன்று 40 வயதை தொட்டவர்களுக்கு இது நியாபகம்
இருக்கும்.
நேசனல் புரோக்ராம் என்ற பெயரில் முக்கியமான நேரங்களில்
(ப்ரைம் டைம்) இந்தி மொழி நிக்ழச்சிகள் தாம். தமிழ் நிகழ்ச்சிகள்
பிற சமயங்களில் தான் அனுமதி. இது தான் இந்திய ஒற்றுமையை
நிலை நாட்ட சரியான வழி என்று டில்லியில் இருந்த தலைவர்கள்
மற்றும் அதிகாரிகளின் நினைப்பு ! எதிர்க்க முடியாத படி அனைத்து
வகை அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிந்து குடந்த
லைசென்ஸ் ராஜ்ய காலங்கள் அவை. தனியார் வானொலியும்
அன்று அனுமதி கிடையாது.
1991க்கு பின் தாரளமயமாக்கல் ஆரம்பமானாதால் ஏற்பட்ட பல
நல்ல விளைவுகளில் ஒன்று தான் தகவல் தொடர்பு மற்றும்
ஊடகத் துறையில் அரசின் கட்டுபாடுகள் பெருமளவு
தளர்த்தப்பட்டு, தனியார்கள் அனுமதிக்க பட்டது. 1994இல்
முதன் முதலில், தமிழில் முதல் தனியார் தொலைகாட்சியாக
சன் டீவி துவக்கப்பட்டது. அதன் பின் பல பல இதர தனியார்
தொலைகாட்சி சானல்கள் மற்றும் செய்திகளுகென்றே
தனி சேனல்கள். இன்று நிலைமையில்தான் எத்தனை மாறுதல் !!
அனைத்து தனியார் தொலைகாட்சி சேனல்களிலும் தமிழ் மயம்தான்.
அவற்றின் தரம் மற்றும் தாக்கம் வேறு விசியம். ஆனால் தமிழர்கள்
விரும்பிய மொழியில் விரும்பிய நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு.
செய்திகள் மற்றும் கவரேஜ், அரசின் கட்டுபாட்டில் இருந்து
விடுபட்டதால், பரவலாக மற்றும் ஆழமான செய்திகள் முதன்
முறையாக இடம்பெற்றன. அரசியல் சார்பற்ற நடுனிலை
சேனல்களும் உருவாகின.
தூர்தர்ஸ்னின் மோனோபோலி ஆதிக்கம் ஒழிந்ததால் அது
தடுமாறியது. இன்று சென்னை தூர்தர்ஸனில் தமிழ் மொழி
புரோக்ராம்கள் மிக மிக அதிகமாக ஒளிப்பரப்பு. எப்படி இந்த
மாற்றம் சாத்தியமானது ? தமிழ் அல்லாமல் இந்தியில்
ஒளிபரப்பினால், சந்தை போட்டியில் தோல்வி என்று
புரிந்தவுடன் தான் இந்த நல்ல மாறுதல்.
சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகள் படிப்படியாக
அனைத்து வகை சுதந்திரங்களையும், முக்கியமாக
அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை பரவலாக்கி,
வலிமையாக்கி, உண்மையான ஜனனாயகத்தை நோக்கி
நாட்டை கொண்டு செல்லும் என்பதற்க்கு இது ஒரு முக்கிய
சாட்சி.
தொலைதொடர்பு துறையிலும் இதே கதைதான். இன்று இந்த
இணையம் மிக மிக மலிவாக, பரவலாக மக்களில் ஊடகமாக,
ஈடு இணையற்ற சுதந்திரத்துடன வளர முக்கிய காரணம், அது
அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டும்
இன்றுவரை ஒரே நிறுவனமாக, மோனோபலியாக தொடர்ந்திருந்தால்
இது சாத்தியமில்லை. 1990களுக்கு முன் தொலைபேசி வாங்க
முயன்றவர்களுக்கு புரியும் இது.
இணையம் பலதரப்பட்ட கருத்துக்கள், செய்திகள் மற்றும்
இதர விசியங்களை மக்கள் அனைவரும் மிக எளிதாக
பரிமாற வகை செய்கிறது. இந்திரா காந்தி காலத்தில் மிஸா
என்ற சர்வாதிகார காலகட்டத்தில் நிலவிய ஊடக முடக்கத்தை
இன்று உள்ள கட்டற்ற சுதந்திர நிலையுடன் ஒப்பிட்டால்
புரியும். அன்று சோசியலிசம் என்ற பெயரில் தான்
அடக்குமுறை ஏவப்பட்டது.
Milton Friedman என்ற மாபெரும் பொருளாதார வல்லுனர் எழுதிய
முக்கிய ஆக்கங்கள் இவை :
"Capitalism and Freedom"
http://en.wikipedia.org/wiki/Capitalism_and_Freedom
"Free to Choose"
http://en.wikipedia.org/wiki/Free_to_Choose
அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல்கள் இவை.
சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்
சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்
எழுத்தாளர் சாரு நிவேதித்தா, கேராளாவை அடிக்கடி
சிலாகித்து எழுதுவார். அங்கு எழுத்தாளர்கள் மிகவும்
கொண்டாடப் படுகிறார்கள். அவர்களின் நூல்கள்
மிக அதிகம் படிக்கபடுகின்றது /மதிக்கபபடுகிறார்கள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அந்த அளவு தமிழ்னாட்டில்
மதிக்கப்படுவதில்லை. புத்தக விற்பனையும் குறைவு.
இப்படி...
இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கேரளா /
தமிழ்நாடு பற்றிய சரியான ஒப்பீட்டை தராது. தொழில்
வளார்ச்சி, வேலை வாய்ப்புகள், வன்முறை, ஜனனாயக
அடிப்படைகள் போன்றவை தாம் முக்கியம். அடிப்படை
தேவைகள்.
கேரளாவில் 40களில் இருந்து கம்யூனிச கொள்கைகள்
பரவலாக பரவி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை, 1957இல்
அமைத்தது. தொழில் முனைவோர் எதிரிகளாக பார்க்கப்
பட்டனர். தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மட்டும்
போராடினர். கடமை பற்றி கவலைப்படவில்லை. மொத்த
விளைவு : கேரளாவில் கடுமையான வேலை இல்லாத்
திண்டாட்டம். மலையாளிகள் வேலை தேடி உலகெங்கும்
புலம் பெயர்ந்தன். பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
தமிழ் நாட்டிற்க்கு பல லச்சம் மலையாளிகள் வேலை
தேடி வந்தனர் / வருகின்றனர். மாற்றாக தமிழர்
கேரளாவிற்க்கு வேலை தேடி செல்வது மிக மிக
குறைவே.
கேராளா எல்லையை தாண்டினால், ஒரு மலையாளி
மிக 'நல்ல' தொழிலாளியாகிவிடுவார். சுறுறுப்பு, திறமை,
வேலையில் அர்பணிப்பு, ஊக்கம் போன்ற குணங்கள்
வெளிப்படும். வாழ்க்கையில் முன்னேற மிக முயல்வர்.
ஆனால் இந்த குணங்கள் கேராளவிற்க்குள் இருக்கும்
போது சிறிதேனும் வெளிப்படாத விந்தை மனிதர்கள்.
திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.
கேரள விவசாயத்தின் அவலங்களை பற்றி ஒரு
தனிப்பதிவே எழுத வேண்டும். நிலச்சீர்திருத்தம்
'வெற்றிகரமாக' நடந்ததால் சிறு துண்டுகளாக சிதறிய
'பண்ணைகள்' இன்று பரிதாபனான நிலையில் உள்ளன்.
நெல் உற்பத்தி 30 வருடங்களுக்கு முன் இருந்ததை
விட குறைந்துவிட்டது. ஆம், குறைந்துவிட்டது.
கேரளாவில் நீர் வளம், மின்சாரம், துறைமுகங்கள்,
போக்குவரத்து கட்டமைப்புகள், நிதி மூலதனம் (கேரள
வங்கிகளில் என்.ஆர்.அய் சேமிப்புகள் குவிந்துள்ளன),
திறமையான தொழிலாளர்கள் என்று அனைத்து வசதிகள்
இருந்தாலும், பைத்தியக்காரன் தான் அங்கு புதிய தொழில்
தொடங்க முனைவான்.
பந்த, வேலை நிறுத்தம் போன்றவை மிக சாதாரணம்.
மலையாளிகளே நடத்தும் வலைமனை இது. பார்க்க :
http://savekerala.blogspot.com/
இவற்றோடு ஒப்பிடும் போது நமது தமிழக நிலை
எவ்வளவோ மேல். வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
வளர்ச்சி மிக மிக அதிகம். வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்ற பெயரில் பல கோடி வெளிமானிலத்தவர்
இங்கு வேலை தேடி வந்து வாழ்கின்றனர்.
கேரளாவில் வன்முறை அளவு, தமிழகத்தை விட மிக
அதிகம். தேர்தலில் புதிய வேட்பாளர்கள் / கட்சிகள்
போட்டியிடுவது இங்கு எளிது. ஆனால் அங்கு காங்கிரஸ்
/ கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர புதியவர் நுழைந்தால்
ஃபாசிச எதிர்விளைவுகள் தாம்.
எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் கேரளா சொர்க
பூமியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு.
சாருவின் அபிமான மலையாள எழுத்தாளாரான பால்
ஸக்கரியாவின் கட்டுரை தான் இது :
"முட்டாள்களின் சொர்க்கம்" ; மாயாவித் திருடர்கள்
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp
இந்த பாரா ஸ்கரியாவின் கட்டுரையிலிருந்துதான் :
"..பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை'
உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத்
தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்
தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு
முன்னால் செல்வதாக நான் முன்பே
குறிப்பிட்டேன்."
இப்ப சொல்லுங்க : சாருவின் கேரளாவா அல்லது
நமது தமிழகமா ?
கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு
கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு
1940 வரை சிங்கபூர், ரங்கூன், கல்கட்டா மூன்றும் ஆங்கில
காலனிய சாம்ராஜ்யத்தின் மூன்று முக்கிய துறைமுக நகரங்கள்.
மூன்றும் ஏறக்குறைய சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தனவாக
1940வரை இருந்தன. ஏறக்குறைய ஒரே அளவு வளர்சி மற்றும்
வாணிபம் அந்த துறைமுகங்கள் மூலம் நடைபெற்றன.
இரண்டாம் உலக்ப்போரின் விளைவாக, ஆங்கிலேய காலனியாதிக்கம்
சரிந்து, பின் மூன்று நகரங்களும் சுதந்திர நாடுகளின் துறைமுக
நகரங்களாக உருமாற்றாம் ஆயின.
60 ஆண்டுகளுக்கு பின் இன்று இம்மூன்று நகரங்களையும் ஒப்பீட்டால் :
சிங்கபூர் மிக மிக அதிக வளம் பெற்று, ஒரு உயர்தர வளர்ந்த நாட்டின்
துறைமுக நகராக ஜொலிக்கிறது. 1940உடன் ஒப்பிட்டால் இன்று அங்கு
வாழ்க்கை தரம் மிக மிக அதிகம். முக்கிய காரணம் அங்கு கடந்த
60 ஆண்டுகளாக சுதந்திர சந்தை பெருளாதார கொள்கைகள், free port,
கூட்டாட்சி மற்றும் சுதந்திரம்.
ரங்கூன் (இன்று யாங்கூன் என்று பெயர் மாற்றம்) ஒரு
கொடுமையான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ். 1948முதல்
அன்னிய வெறுப்பு (xenophobia ) மிக அதிகம் கொண்டிருந்த ஒரு நாட்டின்
முக்கிய நகரம். அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நசுக்கப்பட்ட ஒரு
பகுதி. அதன் விளைவு, இன்று ரங்கூன் துறைமுகம் முக்கியத்துவம்
இல்லாமால், கவனிக்கப்படாமல் ஒரு நோயாளி போல் உள்ளது.
கல்கட்டா 1920கள் வரை ஆங்கிலேய இந்தியாவின் தலைநகர்.
முக்கிய துறைமுகம். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த
பின், காங்கிரஸ் அரசு, ஜனனாயக சோசியலிச பாணி பெருளாதார
சித்தாந்ததை இந்தியாவில் அமல்படுத்தியது. முக்கியமாக கம்யூனிச
கொள்கைகள் மேற்கு வங்கத்தில் மிக அதிகம் பரவி, 1977 முதல்
அங்கு சி.பி.எம் கட்சியின் ஆட்சி. வணிகம் மற்றும் தொழில்களுக்கு
பெரும் தலைவலி மற்றும் வெளிப்படையான எதிர்ப்பு உருவானது.
தொழில் வளர்ச்சி முடங்கி, இன்று கல்கட்டா சீரழவில் உள்ளது. 60
ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரகாசமான நிலை நலிந்து, இன்று
ஒரு பெரு நோயாளி போல் தவிக்கிறது. பெரும் தொழில்கள் மற்றும்
வணிக நிறுவங்கள் கல்கட்டாவை விட்டு புலம் பெயர்ந்து விட்டன.
புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் மிக குறைவாகவே
வளர்கின்றன.
1940 வரை ஏறக்குறைய சம அளவில் இருந்து மூன்று பெரு
நகரங்களின் இன்றைய நிலை சொல்கிறது : எது சரியான
பொருளாதார / அரசியல் கொள்கை என்பதை..