சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

எழுத்தாளர் சாரு நிவேதித்தா, கேராளாவை அடிக்கடி
சிலாகித்து எழுதுவார். அங்கு எழுத்தாளர்கள் மிகவும்
கொண்டாடப் படுகிறார்கள். அவர்களின் நூல்கள்
மிக அதிகம் படிக்கபடுகின்றது /மதிக்கபபடுகிறார்கள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அந்த அளவு தமிழ்னாட்டில்
மதிக்கப்படுவதில்லை. புத்தக விற்பனையும் குறைவு.
இப்படி...

இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கேரளா /
தமிழ்நாடு பற்றிய‌ சரியான ஒப்பீட்டை தராது. தொழில்
வளார்ச்சி, வேலை வாய்ப்புகள், வன்முறை, ஜனனாயக
அடிப்படைகள் போன்றவை தாம் முக்கியம். அடிப்படை
தேவைகள்.

கேரளாவில் 40களில் இருந்து கம்யூனிச கொள்கைகள்
பரவலாக‌ பரவி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை, 1957இல்
அமைத்தது. தொழில் முனைவோர் எதிரிகளாக பார்க்கப்
பட்டனர். தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மட்டும்
போராடினர். கடமை பற்றி கவலைப்படவில்லை. மொத்த
விளைவு : கேரளாவில் கடுமையான வேலை இல்லாத்
திண்டாட்டம். மலையாளிகள் வேலை தேடி உலகெங்கும்
புலம் பெயர்ந்தன். பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
தமிழ் நாட்டிற்க்கு பல லச்சம் மலையாளிகள் வேலை
தேடி வந்தனர் / வருகின்றனர். மாற்றாக தமிழர்
கேரளாவிற்க்கு வேலை தேடி செல்வது மிக மிக
குறைவே.

கேராளா எல்லையை தாண்டினால், ஒரு மலையாளி
மிக 'நல்ல‌' தொழிலாளியாகிவிடுவார். சுறுறுப்பு, திறமை,
வேலையில் அர்பணிப்பு, ஊக்கம் போன்ற குணங்கள்
வெளிப்படும். வாழ்க்கையில் முன்னேற‌ மிக முயல்வர்.
ஆனால் இந்த குணங்கள் கேராளவிற்க்குள் இருக்கும்
போது சிறிதேனும் வெளிப்படாத விந்தை மனிதர்கள்.

திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.

கேரள விவசாயத்தின் அவலங்களை பற்றி ஒரு
தனிப்பதிவே எழுத வேண்டும். நிலச்சீர்திருத்தம்
'வெற்றிகரமாக' நடந்த‌தால் சிறு துண்டுகளாக சிதறிய
'பண்ணைகள்' இன்று பரிதாபனான நிலையில் உள்ளன்.
நெல் உற்பத்தி 30 வருடங்களுக்கு முன் இருந்ததை
விட‌ குறைந்துவிட்டது. ஆம், குறைந்துவிட்டது.

கேரளாவில் நீர் வளம், மின்சாரம், துறைமுகங்கள்,
போக்குவரத்து கட்டமைப்புகள், நிதி மூலதனம் (கேரள
வங்கிகளில் என்.ஆர்.அய் சேமிப்புகள் குவிந்துள்ளன),
திறமையான தொழிலாளர்கள் என்று அனைத்து வசதிகள்
இருந்தாலும், பைத்தியக்காரன் தான் அங்கு புதிய தொழில்
தொடங்க முனைவான்.

பந்த, வேலை நிறுத்தம் போன்றவை மிக சாதாரணம்.

மலையாளிகளே நடத்தும் வலைமனை இது. பார்க்க :
http://savekerala.blogspot.com/

இவற்றோடு ஒப்பிடும் போது நமது தமிழக நிலை
எவ்வளவோ மேல். வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
வளர்ச்சி மிக மிக‌ அதிகம். வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்ற பெயரில் பல கோடி வெளிமானிலத்தவர்
இங்கு வேலை தேடி வந்து வாழ்கின்றனர்.

கேரளாவில் வன்முறை அளவு, தமிழகத்தை விட மிக
அதிகம். தேர்தலில் புதிய வேட்பாளர்கள் / கட்சிகள்
போட்டியிடுவது இங்கு எளிது. ஆனால் அங்கு காங்கிரஸ்
/ கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர புதியவர் நுழைந்தால்
ஃபாசிச எதிர்விளைவுகள் தாம்.

எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் கேரளா சொர்க
பூமியாக‌ இருக்கலாம். ஆனால் மக்களுக்கு.

சாருவின் அபிமான மலையாள எழுத்தாளாரான பால்
ஸக்கரியாவின் கட்டுரை தான் இது :

"முட்டாள்களின் சொர்க்கம்" ; மாயாவித் திருடர்கள்
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp

இந்த பாரா ஸ்கரியாவின் கட்டுரையிலிருந்துதான் :

"..பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை'
உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத்
தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்
தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு
முன்னால் செல்வதாக நான் முன்பே
குறிப்பிட்டேன்."

இப்ப சொல்லுங்க : சாருவின் கேரளாவா அல்லது
நமது தமிழகமா ?

6 comments:

அறிவன்#11802717200764379909 said...

அவருடைய அளவுகோல் அவருடைய புத்தகம் விற்கிறதா அல்லது பாலியல் தெருப்புழுதிகளுக்கு அங்கு கிடைக்கும் அளவுக்க வரவேற்பு தமிழ்நாட்டில் இருக்கிறதா...போன்றவையே...

இத சீரியஸா எடுத்துகிட்டு ஒரு பதிவு வேற போட்டிருக்கீங்க !

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் சாருவைப் படிப்பவன். அதற்காக அவர் கூறுவதையெல்லாம் ஏற்பதில்லை.
அதாவது அவர் கூறிய இளையராஜா;ஜேசுதாசு பற்றிய ரசிப்புக் கணிப்பு உட்பட....
சிலசமயம் எங்களை நினைத்துக் கழுதை..கற்பூரம்; அவருக்கு நினைவு
வருவது போல்...பல சமயம் அவரை நினைத்து எனக்கு வந்தது.
மாற்றம் ஒன்றே நிரந்தரமானது என்பதற்குச் சாட்சியாக கடவுள்;சாயி பாபா பற்றிக்
கருத்தை மாற்றிய இவர். நிச்சயம் தமிழ் நாடு பற்றிக் கால ஓட்டத்தில் மாற்றுவார்.

நந்தவனத்தான் said...

//திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.//

உங்களது மற்ற கருத்துக்களோடு நானும ஒத்து போகிறேன்.ஆனால் கலாஸிகளின அட்டகாசம் தமிழ்நாட்டிலும பரவலாக நடப்பதுதான்.இது பற்றி சமீபத்தில் ஒரு டிவி விவாதம்கூட பார்த்தேன்.

Rajaraman said...

\\இப்ப சொல்லுங்க : சாருவின் கேரளாவா அல்லது
நமது தமிழகமா ?//

போங்க சார் அந்த ஆள் ஏதோ போதையில் உளறியதை ellaam சீரியஸாக எடுத்துக்கொண்டீர்கள்.

கலை said...

நந்தவனத்தான் சொன்னதை வழிமொழிகிறேன்.

தூத்துக்குடி பேருந்துனிலைத்தில் சென்னையிலிருந்து வரும் வண்டியில் வந்து இறங்கினால், நீங்கள் கேரளாவில் பார்த்ததை இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சினிமா தியேட்டரின் பல்வூர்களில், டிக்கட் கொடுக்கமாட்டார்கள். சிகரெட்டு அட்டைதான் கொடுப்பார்கள்.

தமிழ் மக்கள் வாய்பேசா மடந்தைகள். மலையாளிக்ள் அப்படியல்ல.

எனவே, இங்கு மக்கள் உரிமைக்கட்சி என்றெல்லாம் கிடையாது. அங்கு உண்டு.

சாருவின் கருத்துகள் ஒவ்வாதவையென் முற்றிலும் தள்ளிவிட முடியாது.

NO said...

Mr Adhiyaman

Correct!

Mr Charu is trying hard to be illogical.
Paul Zacharia is more forthright.

Every one knows whats happening in Kerala even today. This every one includes lots of Malayalis too. In fact they condemn it vehemently when they are outside Kerala. But once inside either they are silent or made to submitt to silence.

Kerala is a pathetic state and it survives only because of Gulf money and the money sent by Keralites reisiding in other states.

The irony was that Keralites were good traders and were indeed industrious. Remember, the bulk of products from West Tamilnadu and Kerala went thro Kochin and Calicut right during from the days of Vijayanagar empires and beyond. Without a robust trading and industrial model such a trade would have not survived so long and hence was a fact that Keralites were not anti industry in the first place.

Of course, being in the hilly regions where you need to be tough on your resources a section of population was indeed thrifty. But even they traded their products every where.

Nairs, who oversaw the trade and were the policement that was maintaining order, Mopplahs and other Muslim groups that did lots of ferrying service for the traders and the Church who were baically supportive of trade and economics were fully entrenched in Kerala.

All turned turtle because of COMMUNISTS!!!

They have sowed the poison of "rights without responsibility" culture so deep, it has now turned into a dark poisonous forest.

The sad part is that the day oil money dries up, this sort of anti industry and anti progress ganging up will further rise. That is more unemployed ones thicken the ranks of these communist lazy bones.

Kerala- Where you can talk, do nothing and yet get away!

Thanks