இந்தி திணிப்பும், தனியார்மயமும்

இந்தி திணிப்பும், தனியார்மயமும்

1994இல் தனியார் சேட்டிலைட் சேனல்களை மத்திய அரசு
அனுமதிக்கும் வரை பல ஆண்டுகளாக அரசின் தூர்தர்ஸ்ன் தான்
மோனோபாலியாக கொடிகட்டிப் பறந்தது. 1970கள் முதல் 1994 வரை
சென்னை தூர்தர்சனில் இந்தி திணிப்பு மிக மிக் அதிக அளவில்
நடந்தது. இன்று 40 வயதை தொட்டவர்களுக்கு இது நியாபகம்
இருக்கும்.

நேசனல் புரோக்ராம் என்ற பெயரில் முக்கியமான நேரங்களில்
(ப்ரைம் டைம்) இந்தி மொழி நிக்ழச்சிகள் தாம். தமிழ் நிகழ்ச்சிகள்
பிற சமயங்களில் தான் அனுமதி. இது தான் இந்திய ஒற்றுமையை
நிலை நாட்ட சரியான வழி என்று டில்லியில் இருந்த தலைவர்கள்
மற்றும் அதிகாரிகளின் நினைப்பு ! எதிர்க்க முடியாத படி அனைத்து
வகை அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிந்து குடந்த
லைசென்ஸ் ராஜ்ய காலங்கள் அவை. தனியார் வானொலியும்
அன்று அனுமதி கிடையாது.

1991க்கு பின் தாரளமயமாக்கல் ஆரம்பமானாதால் ஏற்பட்ட பல
நல்ல‌ விளைவுகளில் ஒன்று தான் தகவல் தொடர்பு மற்றும்
ஊடகத் துறையில் அரசின் கட்டுபாடுகள் பெருமளவு
தளர்த்தப்பட்டு, தனியார்கள் அனுமதிக்க‌ பட்டது. 1994இல்
முதன் முதலில், தமிழில் முதல் தனியார் தொலைகாட்சியாக
சன் டீவி துவக்கப்பட்டது. அதன் பின் பல பல‌ இதர தனியார்
தொலைகாட்சி சானல்கள் மற்றும் செய்திகளுகென்றே
தனி சேனல்கள். இன்று நிலைமையில்தான் எத்தனை மாறுதல் !!
அனைத்து தனியார் தொலைகாட்சி சேனல்களிலும் தமிழ் மயம்தான்.
அவற்றின் தரம் மற்றும் தாக்கம் வேறு விசியம். ஆனால் தமிழர்கள்
விரும்பிய மொழியில் விரும்பிய நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு.
செய்திகள் மற்றும் கவரேஜ், அரசின் கட்டுபாட்டில் இருந்து
விடுபட்டதால், பரவலாக மற்றும் ஆழமான செய்திகள் முதன்
முறையாக இடம்பெற்றன. அரசியல் சார்ப‌ற்ற நடுனிலை
சேனல்களும் உருவாகின.

தூர்தர்ஸ்னின் மோனோபோலி ஆதிக்கம் ஒழிந்ததால் அது
தடுமாறியது. இன்று சென்னை தூர்தர்ஸனில் தமிழ் மொழி
புரோக்ராம்கள் மிக மிக‌ அதிகமாக ஒளிப்பரப்பு. எப்படி இந்த
மாற்றம் சாத்தியமானது ? தமிழ் அல்லாமல் இந்தியில்
ஒளிபரப்பினால், சந்தை போட்டியில் தோல்வி என்று
புரிந்தவுடன் தான் இந்த நல்ல மாறுதல்.

சுத‌ந்திர‌ ச‌ந்தை பொருளாதார‌ கொள்கைக‌ள் ப‌டிப்ப‌டியாக‌
அனைத்து வ‌கை சுத‌ந்திர‌ங்க‌ளையும், முக்கிய‌மாக‌
அர‌சிய‌ல் ம‌ற்றும் சிவில் உரிமைக‌ளை ப‌ர‌வ‌லாக்கி,
வ‌லிமையாக்கி, உண்மையான‌ ஜ‌ன‌னாய‌க‌த்தை நோக்கி
நாட்டை கொண்டு செல்லும் என்ப‌த‌ற்க்கு இது ஒரு முக்கிய‌
சாட்சி.

தொலைதொட‌ர்பு துறையிலும் இதே க‌தைதான். இன்று இந்த‌
இணைய‌ம் மிக‌ மிக‌ ம‌லிவாக‌, ப‌ர‌வ‌லாக‌ ம‌க்க‌ளில் ஊட‌க‌மாக‌,
ஈடு இணைய‌ற்ற‌ சுத‌ந்திர‌த்துட‌ன‌ வ‌ள‌ர‌ முக்கிய‌ கார‌ணம், அது
அர‌சின் க‌ட்டுப்பாட்டில் இல்லை. பி.எஸ்.என்.எல் ம‌ட்டும்
இன்றுவ‌ரை ஒரே நிறுவ‌ன‌மாக‌, மோனோபலியாக‌ தொட‌ர்ந்திருந்தால்
இது சாத்திய‌மில்லை. 1990க‌ளுக்கு முன் தொலைபேசி வாங்க‌
முய‌ன்ற‌வ‌ர்க‌ளுக்கு புரியும் இது.

இணைய‌ம் ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள், செய்திக‌ள் ம‌ற்றும்
இத‌ர‌ விசிய‌ங்க‌ளை ம‌க்க‌ள் அனைவ‌ரும் மிக‌ எளிதாக‌
ப‌ரிமாற‌ வ‌கை செய்கிற‌து. இந்திரா காந்தி கால‌த்தில் மிஸா
என்ற‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்தில் நில‌விய‌ ஊட‌க‌ முட‌க்க‌த்தை
இன்று உள்ள‌ க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌ நிலையுட‌ன் ஒப்பிட்டால்
புரியும். அன்று சோசிய‌லிச‌ம் என்ற‌ பெய‌ரில் தான்
அட‌க்குமுறை ஏவ‌ப்ப‌ட்ட‌து.

Milton Friedman என்ற‌ மாபெரும் பொருளாதார‌ வ‌ல்லுன‌ர் எழுதிய‌
முக்கிய‌ ஆக்க‌ங்க‌ள் இவை :

"Capitalism and Freedom"
http://en.wikipedia.org/wiki/Capitalism_and_Freedom

"Free to Choose"
http://en.wikipedia.org/wiki/Free_to_Choose

அனைவ‌ரும் ப‌டித்து ப‌ய‌ன் பெற‌ வேண்டிய‌ நூல்க‌ள் இவை.

3 comments:

K.R.அதியமான் said...

"Capitalism and Freedom" is a book by Milton Friedman originally published in 1962 which discusses the role of economic capitalism in liberal society. It has sold over 400,000 copies in 18 years[1] and more than half a million since 1962. It has been translated into 18 languages. In accessible, jargon-free language, Friedman makes the case for economic freedom as a precondition for political freedom. He defines liberal in European Enlightenment terms, contrasting with an American usage that he believes has been corrupted since the Great Depression. Many North Americans usually categorized as conservative or libertarian have adopted some of his views. The book finds several realistic places in which a free market can and should be promoted for both philosophical and practical reasons, with several surprising conclusions.[citation needed] Among other concepts, Friedman advocates ending the mandatory licensing of doctors and introducing a system of vouchers for school education.

Anonymous said...

good post

K.R.அதியமான் said...

1988 கொடைகானல் டி.வி கோபுர குண்டு வெடிப்பு வழக்கு

1988இல் இந்தி திணிப்பை எதிர்த்து கொடைகானல் தொலைகாட்சி ஒளிபரப்பு கோபுரத்தை தகர்க்க‌ தமிழ் விடுதலை படையை சேர்ந்தவர்கள் முயன்றனர். குண்டு சரியாக வெடிக்காதால் முயற்சி தோல்வி அடைந்தது. அவர்கள் படுகாயமும் அடைந்தனர். அதில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், இருவர் விடுதலை
செய்யபட்டனர். மற்ற இருவர்களான பொழிலன் மற்றும் இளங்கோ இருவருக்கும் 10 ஆண்டுகால தண்டனை விதிக்ப்பட்டது. அந்த தண்டனையை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்தது.

பொழிலன் காலஞ்சென்ற பெருஞ்சித்தரனாரின் மகனாவார்.

இளங்கோ கரூரை சேர்ந்தவர். 1991க்கு பின் எனக்கு அறிமுகமானார். இனிய நண்பர்.

பின்பு வழி பிறண்டு என்னெனெவோ பாதையில் பயணித்தார். ஆ.தி.மு.காவில் சேர்ந்தார். வாழ்க்கை அவரை புரட்டி போட்டது. இளம் வயதில், அறச்சீற்றம் என்ற கருதி, போராளி ஆக முயன்று, மிக தவறான பாதையை தேர்ந்தெடுத்து, பின் கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்த துன்பயில் நாடகம் அவரின் வாழ்க்கை. இந்தி திணிப்பை தடுக்க தாரளமயமாக்கல் / தனியார்மயமாகல் உதவியது. இன்று தூர்தர்ஸ்ன் மாறிவிட்டது. மாறாவிட்டாலும் அதை யாரும் பொருட்படுத்த தேவையில்லா நிலை.

நண்பர் இளங்கோவின் நிலை அறிந்து மிக வருந்துகிறேன். அவரை சந்தித்து 10 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

:(

பெருஞ்சித்திரனார் பற்றி அறிய :
http://www.geocities.com/tamiltribune/99/1001.html