அமெரிக்காவின் (Libertarian) லிபெர்ட்டேரியன் கட்சி

அமெரிக்காவின் Libertarian Party :
 
அமெரிக்க அரசியல் என்றாலே குடியரசு கட்சி மற்றும்
ஜனனாயக கட்சிகள் மட்டும்தான் நினைவிற்கு வரும்.
ஆனால் மூன்றாவதாக ஒரு கட்சி 1971இல் இருந்து
செயல்படுகிறது. சுமார் 2 ல்ட்சம் உறுப்பினர்களை
கொண்ட கட்சி இது.
 
இரு பெரிய கட்சிகளுக்கு ஒரு மாற்றாக, அருமையான
கொள்கைகளோடு போராடும் சிறு கட்சி இது. இதன்
முக்கிய கொள்கைகள் :
 
1.அரசு என்பது மிக மிக சிறிய, வலு குறைந்த
அமைப்பாகவே இருக்க வேண்டும். அதவாது பல
தேவையில்லாத துறைகளில் அரசின் தலையீட்டை
அடியோடு நீக்க வேண்டும். Small government. தனி
மனித சுதந்திரம் தான் மிக மிக அடிப்படையான
உரிமை. அதை பாதுகாக்க மட்டும் அரசு எந்திரம்
தேவை. 
 
2.வ‌ருமான‌ வ‌ரி ம‌ற்றும் இத‌ர‌ வ‌ரிகளின் விகுதம்
மிக‌ மிக மிக குறைக்க‌ப்ப‌ட வேண்டும்.
 
3.எந்த ஒரு தனியார் தொழில் துறை மற்றும்
நிறுவனத்திற்க்கும் அரசு எந்த ஒரு சலுகையோ,
உதவியோ அளிக்க கூடாது.  அதுதான் உண்மையான
சுதந்திர சந்தை பொருளாதாரம்.  திவால் மற்றும்
நஸ்டம் என்பது சந்தை பொருளாதாரத்தின்  ஒரு
அம்சமே. அது resourceகளை குறைந்த efficiency உள்ள
அமைப்புகளிலிருந்து மிக அதிக‌ efficiency உள்ள
நிறுவனங்களுக்கு மாற்றும்.
 
4.விவசாயம், எரிசக்தி போன்ற துறைகள் எதற்க்கும்
அரசு மானியம் அளிக்க கூடாது. அவை தானகவே
வளர வேண்டும். "Hands off" policy.
 
5.அன்னிய விவாகரங்கள் : முதல் வேலையாக அமெரிக்கா
நேட்டோ (NATO)  போன்ற அனைத்து அமைப்புகளிலிருந்து
விலக‌ வேண்டும்.  எந்த நாட்டுடனும் ராணுவ மற்றும்
இதர  ஒப்பந்தங்கள் கூடாது. உலகின் எந்த நாட்டின் உள்
விவகாரங்களிலும் தலையிடக்கூடாது. படை எடுக்க
கூடவே கூடாது.  உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ராணுவ
தளங்களை மூடிவிட்டு, அமெரிக்க ராணுவம் உள்னாட்டில்
மட்டுமே தளங்களை வைத்திருக்க வேண்டும். ராணுவ
செலவு மிகவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ராணுவம்
என்பது தற்காப்பிற்க்காக‌ (self-defence) மட்டும், சிறிய
அளவில் இருந்தால் போதும்.
 
6.உலக நாடுகள் எதற்க்கும், எந்த நிதி உதவி (aid) மற்றும்
இதர‌ 'உதவிகளை' அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும்.
முதலில் உள்னாட்டு மக்களை கவனிக்க வேண்டும். அரசின்
நிதி நிலையை மேம்படுத்தி, கடனை ஒழித்து, பட்ஜெட்டில்
துண்டு  விழாமல் தடுக்க வேண்டும். Balanced budget. உலக்
வங்கி, அய்.எம்.எஃப் போன்றவை தேவையில்லை. அதில்
இருந்து அமெரிக்கா விலக வேண்டும். தனியார் அமைப்புகள்
மற்றும் மக்கள் இது போன்ற உதவிகள் செய்ய
தடையில்லை. அது அடிப்படை உரிமை.
 
7.மதம் மற்றும் இதர விசியங்களில் சர்வ சுதந்திரம்
அனுமதிக்கப் பட வேண்டும். கருகலைப்பு, ஓரினச்சேர்க்கை
போன்றவை தனி நபர் பிரச்சனைகள். அதில் அரசு
தலையிடக்கூடாது. கட்டுபடுத்தக் கூடாது.
 
8.பொதுமக்கள் ஆயுதம் தாங்க எந்த கட்டுபாடும் விதிக்க
கூடாது. (anti-Gun Contro Regulationsl)
 
9.ஏழை மக்களுக்கான உதவி வழங்கும் திட்டங்கள் (welfare)
அரசே செய்யாமல் தனியார் மயமாக்க வேண்டும்.
 
10.அரசின் பள்ளிகள் : பெற்றோர் ஆசிரயர் கழகத்தவரால்
மட்டுமே நிர்வாகிக்கபட வேண்டும். Free education vouchers
and competition அதிகரிக்கப்பட வேண்டும்.
 
இது போல் பல விசிய‌ங்களில் முழுமையான சுதந்திர
கொள்கைகளை கொண்ட ஒரு அபூர்வ கட்சி இது. இது
ஆட்சி அமைத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற
சொல்லே வழக்கொழிந்துவிடும் !! அமெரிக்காவின் வளம்
மற்றும் தனினபர் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.
அதன் மூலம் உலகத்தில் வறுமை மேலும் குறையும்.
 
Gun Control போன்ற சில விசியங்களில் இக்கட்சியின்
நிலைபாடு  விவாதத்திற்குரியதுதான். ஆனால் இதர
அடிப்படை விசியங்களில் மிக மிக தெளிவான,
அருமையான‌ கொள்கைகள்.
 
ஆனால் இக்கட்சி பெருவாரியான ஆதரவை பெறுவது
நடக்குமா ?
 
இக்க‌ட்சியின் வ‌லைம‌னை :
http://www.lp.org/issues
 

 


 

3 comments:

கோவி.கண்ணன் said...

//5.அன்னிய விவாகரங்கள் : முதல் வேலையாக அமெரிக்கா

நேட்டோ (NATO) போன்ற அனைத்து அமைப்புகளிலிருந்து
விலக‌ வேண்டும். எந்த நாட்டுடனும் ராணுவ மற்றும்
இதர ஒப்பந்தங்கள் கூடாது. உலகின் எந்த நாட்டின் உள்
விவகாரங்களிலும் தலையிடக்கூடாது. படை எடுக்க
கூடவே கூடாது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ராணுவ
தளங்களை மூடிவிட்டு, அமெரிக்க ராணுவம் உள்னாட்டில்
மட்டுமே தளங்களை வைத்திருக்க வேண்டும். ராணுவ
செலவு மிகவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ராணுவம்
என்பது தற்காப்பிற்க்காக‌ (self-defence) மட்டும், சிறிய

அளவில் இருந்தால் போதும்.//


அமெரிக்காவின் இன்றைய பலதலைவலிகளுக்கு அவர்கள் எங்கும் தேவையற்று தலையை நுழைத்ததே காரணம்.

அந்த சிறிய கட்சியின் கொள்கைள் நன்றாக இருக்கு. குட் ஆர்டிகல்

K.R.அதியமான் said...

Key tenets of the Libertarian Party platform include the following:[5]

Adoption of laissez-faire principles which would reduce the state's role in economic government. This would include, among other things, markedly reduced taxation, privatization of Social Security and welfare (for individuals, as well as elimination of "corporate welfare"), markedly reduced regulation of business, rollbacks of labor regulations, and reduction of government interference in foreign trade.

Protection of property rights.

Minimal government bureaucracy. The Libertarian Party states that the government's responsibilities should be limited to the protection of individual rights from the initiation of force and fraud.

Civil libertarianism: Support for the protection of civil liberties, including the right to privacy, freedom of speech, freedom of association, and sexual freedom.

Opposition to civil rights laws that regulate the private sector, such as affirmative action and non-discrimination laws.

Support for the unrestricted right to the means of self-defense (such as gun rights, the right to carry mace, pepper spray, or tasers etc).

Opposition to the censoring and the engineering of foreign radio pathways.

Abolition of laws against "victimless crimes" (such as prostitution, driving without a seatbelt, use of controlled substances, gambling, etc.).
Opposition to regulations on how businesses should run themselves (e.g., smoking bans)

A foreign policy of free trade and non-interventionism.

Support for a fiscally responsible government including a hard currency (commodity-based money supply as opposed to fiat currency).

Abolition of all forms of taxpayer-funded assistance (welfare, food stamps, public housing, Health care, etc.)

The issues on which the party is most divided are intellectual property and capital punishment.[citation needed]

A belief that abortion is a personal issue, and should not be part of government.[6] This is often improperly associated with pro-choice viewpoint, which calls for legal protection of abortion.[7]

Libertarians state that their platform follows from the consistent application of their guiding principle: "mutual respect for rights." They are therefore deeply supportive of the concept of individual liberty as a precondition for moral and stable societies. In their "Statement of Principles," they declare: "We hold that all individuals have the right to exercise sole dominion over their own lives, and have the right to live in whatever manner they choose, so long as they do not forcibly interfere with the equal right of others to live in whatever manner they choose." To this end, Libertarians want to reduce the size of government (eliminating many of its current functions entirely).

K.R.அதியமான் said...

Cato Institute என்பது லிபர்டேரியன் கொள்கைகளுக்கான முக்கிய ஆய்வு நிறுவனம். பொருளாதார விசியங்கள் பற்றி மிக முக்கிய ஆய்வுகளை தொடர்ந்து செய்கின்றனர்.

http://cato.org/

Cato Institute
1000 Massachusetts Ave, NW
Washington DC 20001-5403

கீயினிஸ் என்ற பொருளாதார மேதையில் வழிமுறைகள் பற்றி
இன்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றது.

The Fed Didn't Cause the Housing Bubble
http://online.wsj.com/article/SB123672965066989281.html#

Vs

http://cato.org/pub_display.php?pub_id=10047

இது போன்ற விவாதிங்கள் / ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்ள மிக ஆர்வம் கொண்டுள்ளேன். முதலாளித்துவத்திலும் பல கூறுகள்,
வழிமுறைகள் உள்ளன.