விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

20 comments:

வஜ்ரா said...

//
"..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குண்த்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?
//

என்று நம் கம்யூனிஸ்டுகள் (இடதுசாரிகள் என்ற சொல்லைத் தவிற்கிறேன்) சோசியலிசத்தை விட்டொழித்து Free market முதலாளித்துவக் கொள்கைக்கு மாற்றம் அடைகிறார்களோ அன்று தான் நடக்கும். ஏனென்றால், அரசின் வேலை நிர்வகிப்பது மட்டுமே (internal, external security, infrastructure etc.,) சோப்பு தயாரிப்பது, டி.வி சேனல் நடத்துவது, சினிமா எடுப்பது, இலவசங்கள் கொடுப்பது அல்ல.

Anonymous said...

YOUR STYLE OF WRITING IS VERY GOOD AND ALSO YOUR THOUGHTS AND PNSERVATIONS. BUT ONE CONTRADICTION IN YOUR PROFILE WHICH I WOULD LIKE TO BRING TO YOUR KIND ATTENTION:

NEENGAL படிப்பது "வலதுசாரி சிந்த்னைகள்"

Favorite Movies "அன்பே சிவம்"

CONTRADICTION? HOW COME SIR?

ANBUDAN
A DIE HARD HINDU

K.R.அதியமான் said...

why not, D.H.Hindu ?

Love is God is not contradictoty to
capitalism. I like Kamal films even though i disagree with his
Marxiist ideas. And the central theme of the film is about Anbu.
Pertinent concept.

Anonymous said...

good posting mate

Unknown said...

நல்ல பதிவு அதியமான்.நன்றி.

தென்னமெரிக்க நாடுகளில் 300% விலைவாசி உயர்வு சர்வசாதாரணம்.அதனால் தான் அவை சுத்தமாக உருப்படாமல் போய்விட்டன.

சதுக்க பூதம் said...

good article

Tech Shankar said...

hi..
K.R. Athiyaman peyarla oru sex site parthen..

ungalukku idhu dhevaiya..

enakku ennamo ungal peyarile veru yaro oru pannadai open panni irukkumonnu ninaikkiren..

google kitte ezhudhi podunga

K.R.அதியமான் said...

Muthukumar Ponnambalam to me

அன்புள்ள அதியமான்,

உங்கள் வலைபதிவு அவ்வப்போது படிக்கிறேன். "விலைவாசி ஏன் உயருகிறது" படித்த பின் ஏற்பட்ட ஒரு பொதுவான ஐயம்.

பட்ஜெட்டில் துண்டு விழும் பணத்தில் ஒரு பகுதி கடன் மூலமும் மறு பகுதி நோட்டடிப்பதன் மூலமும் சமாளிக்கப்படுகிறது என்று எழுதியிருக்கிறீர்கள்.

ஏன் எல்லா தொகைக்கும் நோட்டடிக்கக்கூடாது ? பணவீக்கம் மற்றும் விலைவாசி உயரும், புரிகிறது. எப்படியாயினும் துண்டு விழும் எல்லா தொகைக்குமான பணம் நோட்டடிப்பதன் மூலமும் கடன் மூலமும் திரட்டப்படுகிறது. எனவே எல்லா தொகைக்கும் நோட்டடித்துக்கொள்வதன் மூலம் குறைந்தபட்சம் கடனாவாது வாங்காமல் இருக்கலாம் அல்லவா ?

பொதுவாக எவ்வளவு நோட்டு அடிக்கவேண்டும் என்பதை அரசு எப்படி தீர்மானிக்கிறது ? ரிசர்வ் வங்கியில் இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பிற்கு சமமான நோட்டுகளே அச்சடிக்கிறார்கள் என்று எப்போதோ கேள்விப்பட்டிருக்கிறேன்.

சமீபத்தின் நண்பரொருவர் கேட்டார். மியான்மர் மற்றும் சீனாவின் சமீப இயற்கைப்பேரிடர்களை பொருளாதார ரீதியில் சமாளிக்க தேவையான அளவு நோட்டுகளை அவர்கள் அரசே அச்சடித்துக்கொண்டால் என்ன ? எதற்கு கடன் வாங்க வேண்டும் என்று.

சற்று இதை விளக்குங்களேன் தயவு செய்து !

அன்புடன்
முத்துக்குமார்

K.R.அதியமான் said...

Athiyaman Karur R to Muthukumar
show details 11:10 AM (3 hours ago) Reply


//பொதுவாக எவ்வளவு நோட்டு அடிக்கவேண்டும் என்பதை அரசு எப்படி

தீர்மானிக்கிறது ? ரிசர்வ் வங்கியில் இருப்பில் உள்ள தங்கத்தின்
மதிப்பிற்கு சமமான நோட்டுகளே அச்சடிக்கிறார்கள் என்று எப்போதோ

கேள்விப்பட்டிருக்கிறேன்.////

We are NOT on gold standard. govt prints as much as it needs.
no diff in effects from a counterfeit money effect.

Pls see my

athiyaman.blogspot.com for more articles.

anbudan
Athiyaman

Sindhan said...

அரசு நோட்டடிப்பதற்கு காரணம் ? -

இந்திய முதலாளிகள் கொடாமல் இருக்கும் வரிப்பணம்

அவர்கள் தராமளிருப்பதற்கு காரணம்?

இது அவர்கள் அரசு

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது.////

கள்ள மார்க்கெட் - பதுக்கல் - ஊக வணிகம் - இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது///

கடன் .. இது ஒரு கழுத்து சறுக்கு - அவர்கள் கடன் வாங்கி நம் கழுத்தை நெறிக்கிறார்கள். தராமல் இருக்கும் முதலாளிகள் வரியை தள்ளுபடி செய்கிறார்கள் - போன பட்ஜெட்-இல் மட்டும் சுமார் 40 ஆயிரம் கோடி வரை

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி ...

அவன் நமை சுரண்டி - அந்த பணத்தில் கொஞ்சம் பிச்சை போட்டு அவன் நாட்டு மக்கள் அவனுக்கு எதிராக திரும்பாமால் பார்த்துக் கொள்ளுகிறான். இந்த வலுத்தவன் வாழ்வான் என்ற சமூக அமைப்பு முறையின் கேடுதான் விலைவாசி ஏற்றம்.

அரசின் வெட்டி செலவுகளுக்காக மட்ட்மில்லாமல் - இந்திய முதலாளிகளுக்காகவும் நாம்தான் விலைவாசியை சுமக்கிறோம்.

K.R.அதியமான் said...

sindhan,

your comments show your ignorance and shallow knowlwdge about economics and germany...

do more homework and reading first.

காளி said...

நல்ல பதிவுதான். ஆனால் இன்னும் விளக்கமாக எழுத வேண்டும்.குரு மூர்த்தி எழுதிய பொருளாதாரம் என்றால் என்ன...என்கிர கட்டுரையை படித்து விட்டு இதை படித்தால் எளிதில் விளங்கும்...

Anonymous said...

///sindhan,

your comments show your ignorance and shallow knowlwdge about economics and germany...
do more homework and reading first.///
In other words, do not critise the capitalists, PAAVAM AVARGAL
OK....?

Unknown said...

sindhikka vendiyathu

Ragztar said...

//ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குண்த்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...."//

என் சிறு அறிவுக்கு எட்டவில்லை;

அது போக, சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்;

Unknown said...

A good post.But it is only sketchy. The value of currency printed and circulated by the Government every year is equal to the amount of currency withdrawn from circulationdue to various reasons+the amount of currency lost by the public for various reasons+the amount of incremental goods and services produced by the country in that particular year. This is in an ideal situation. But unfortunately due the deficit financing resorted to by the Government,and some times inorder to increase the speed of creation of assets in the economy the Government deleberately prints and circulates more currency than what is mentioned above. This reults in too much paper money chasing too few goods and services.It is like the mounting the tiger.

vasu said...

@வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும்.

புரியவில்லை... மதிப்புக் குறையும்போது வாடகை எப்படி அதிகரிக்கும்?? pls விளக்கவும்

K.R.அதியமான் said...

Reader,

The rate of interest is directly proportional to the rate of depreciation of value of the currency. (that is the lender tries to keep the value of his money stable, plus rent for the money) ; instead of lending, if the money is invested in gold, etc, the rate of return should be equivalent to the rate of return if lent. (approximately).

In India, the rate of interests were above 20 % until the 80s, in proportion to inflation then. now it has touched single digits due to the fall of rate of inflation.

vasu said...

thank you... K.R.அதியமான்

Unknown said...

நல்ல எளிமையாக புரிந்து கொள்ள உதவிய கட்டுரை, அமெரிக்கா போன்ற நாடுகளில் கடன் சுமை இப்படி கடுமையாக இருக்கும் சூழலில். எல்லா நாடுகளும் இப்படி கடனில்தான் காலம் தள்ளுகின்றனவா? அப்படி எனில் யார்தான் இந்த கடனை கொடுக்கிறார்கள். சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக பலமான நாடுகளா? அவர்களின் நாட்டில் விலைவாசி குறைகிறதா இல்லை அங்கும் இதே நிலைதானா? உலக பொருளாதாரத்தோடு இந்திய பொருளாதாரத்தை ஓப்பு படுத்தி ஒரு விவரமான கட்டுரை உங்கள் பாணியில் எழுதவேண்டுகிறேன், (நம்மை போல் எல்லோரும் இருக்கிறார்களா என்று மனதை தேற்றிக்கொள்ளும் ஆர்வம்தான்) நன்றி