’உபரி மதிப்பு’ என்னும் மாயை

'உபரி மதிப்பு என்னும் மாயை'

உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value 

தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் 'சரியான மதிப்பை' விட) மிக மிக
குறைவானது, அந்த 'கொடுக்கப்படாத' சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
'சுரண்டப்பட்டு', லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
'போலி' விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.

மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
'மதிப்பு'. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த 'உபரியை' 'சுரண்டி' லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், 'தொழில்
முனைவோன்' என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :

1.தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி  செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் 'உபரி மதிப்பு' எங்கு சென்றது ? 
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?

3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் 'உபரி மதிப்பு'
எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?

மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் 'விஞ்ஞானப்படி' ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் 'சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.

இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று
world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.

மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
 good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் ஒரு பொது பிம்பத்தை
கட்டமைக்கும் அளவிற்க்கு மிகவும் பரவலாக உபயோகிக்கபடுகின்றன.
இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழை பங்காளன், ஏற்ற தாழ்வுகளை
அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை 
எதிர்ப்பவர்  ;   வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர்,
ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களை "சுரண்டுபவர்", ஏகாதிபத்திய
ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர்,
இப்படி சில முன்முடிவுகளை இந்த "லேபில்கள்" மூலம், ஒருவரை
பற்றி முத்திரை குத்த பயன்படுத்தப்படுகிறது.
 
இவை எல்லாம் வெறும் முத்திரைகள். அர்த்தமற்றவை. ஆழமற்ற
லேபில்கள். வாதங்களை எளிமைபடுத்த உபயோகப்படும் சொல்லாடல்கள்.
அவ்வளவுதான்.
 
வலதுசாரி என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல. இடதுசாரி என்றால்
அவன் ஒரு ஃபாசிச எதிர்ப்பளரும் அல்ல. ஃபாசிசத்தை முன் மொழிந்த
சர்வாதிகாரியான முசோலனியும் வலதுசாரிதான். லிபரல் ஜனனாயகத்தை,
மக்களாட்சியை முன்மொழிந்த எர்கார்ட் (ஜெர்மன் அதிபர்) போன்றவர்களும்
அதே வலதுசாரி என்ற லேபில் / முத்திரையின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.
 
சே குவாராவும் இடதுசாரிதான், நேருவும் இடதுசாரிதான். முன்னவர்
பாரளுமன்ற ஜனனாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர்
ஜனனாயகவாதி. எனவே, இந்த வலது / இடது லேபில்கள், முன்முடிவுகளை
அளித்து, ஒருவரை பற்றிய சரியான எடைபோடுதலை செய்யவிடாமல்
குழப்பும்.
 
வலதுசாரிகள் என்றால் அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. எந்த
வகை அடிப்படைவாதமும் ஃபாசிமே ஆகும். எனவே சரியான
சொல்லாடல்கள் :  ஃபாசிசவாதி / ஜனனாயகவாதி. அடிப்படை மனித
உரிமைகளை மதிப்பவர் ஜனனாயகவாதி. மறுப்பவர் ஃபாசிசவாதி.
 
அடிப்படை ஜனனாயக உரிமைகளில்  சொத்துரிமையும் அடக்கம். அதை
ஜனனாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம்.
(அப்படித்தான் எம்மை கருதுகிறேன்). ஆனால் ஃபாசிச முறையில் எதை
முன்மொழிந்தாலும் அது ஏற்க்கமுடியாது. ஃபாசிஸ்டுகள் இடது / வலது
இரு தளங்களிலும் உள்ளனர். எனவே மேலும் குழப்பம்.
 
உதாரணமாக இடி அமின், சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஃபாசிஸ்டுகள்
என்பதை சுலபமாக உணரலாம். ஆனால் மாவோ, ஜோஸஃப் ஸ்டாலின்
போன்றவர்களை ஒரு ஃபாஸிஸ்ட் என்று உணர்வது கடினம். அவர்கள்
சித்தாந்தரீதியாக "இடதுசாரிகள்" ; பொது உடைமைவாதிகள், பாட்டாளி
வர்கத்தின் ரட்சகர்கள் என்று இன்றும் சில தீவிர மார்க்சியவாதிகளால்
கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்த
செயல்கள் பற்றிய முழுவிபரமும் தெரியாமல், அல்லது தெரிந்தும்,
அதை "வரலாற்று கட்டாயங்கள்" என்று நியாயபடுத்திக்கொண்டு
கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.
 
வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம்.
ஆனால் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகள் மூலம், வளர்ந்த நாடுகள் அனைத்தும்
(முக்கியமாக இரண்டாம் உலகபோரில் அழிந்த ஜெர்மனி, ஜப்பான்,
தென் கொரியா, மலேயா போன்ற நாடுகள்) ஏழ்மையை பெருவாரியாக
குறைத்த வரலாறு பெரிதாக அறியப்படவில்லை. ஆனால் அந்நாடுகள்
பின்பற்றும் கொள்கைகள் "வலதுசாரி" கொள்கைகள். நேர் எதிராக
"இடதுசாரி" கொள்கைகளை (பல பாணிகளில்) பின் பற்றிய சுதந்திர
இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா
போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய
ஃபாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.
 
30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் சரளமாக
சில‌ சொற்கள் பிரயோகிக்கப்பட்டன : 'சோசியலிஸ்டுகள், ஏழை
பங்காளர்கள், முற்போக்காளர் / பிற்போக்காளர்', இன்னபிற. முக்கியமாக
இந்த முற்போக்காளர் / பிற்போக்காளர் என்ற முத்திரைகள் விளைவித்த
நாசம் மிக அதிகம். வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். அதனால வலதுசாரி
என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அம்முத்திரையை கண்டு அனைவரும் பயந்தனர். முற்போக்காளர்
என்ற முத்திரையை விரும்பினர். இது அறிவுஜீவிகள் மத்தியில்
மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் வட்டத்திலும் நிலவியது.
முக்கியமாக அன்றைய ஆளும் கட்சியாக, பலமாக, பல காலம்
ஆண்ட காங்கிரஸ் தலைவர்களிடம் மிகுதியாக இருந்தது. இந்திரா
காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு
இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்
"இடதுசாரி முற்போக்குவாதி" என்ற முத்திரை பெற துடித்து,
இந்திரா காந்தியின் ஃபாசிதற்க்கு துணை போயினர்.   
நல்லவேளையாக இது போன்ற லேபில்கள் இன்று அரசியல்
சூழலில் இல்லாமல் ஆனாது. ஊழல் மட்டும்தான் இன்று
பரவலாக உள்ளது. 

 

விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்

விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்

நிதியமைச்சர் அறிவித்த இந்திய பட்ஜெட்டின் வரவு செலவின்
சுருக்கம் :

அரசின் வருமானம் : ரூ.6,41,079 கோடிகள்
நிக‌ர‌ செலவு : ரூ.10,20,838 கோடிகள்
ப‌ற்றாக்குறை : ரூ.3,79,759 கோடிகள் (அனுமான‌ம்)

அதாவ‌து சுமார் 4 லச்சம் கோடி துண்டு விழுகிற‌து. பெட்சிட் அல்ல‌து
ப‌டுதா என்றும் சொல்லாம். அதை க‌ட‌ன் வாங்கித்தான் ஈடு செய்கிற‌து
ந‌ம‌து அர‌சு. மொத்த கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது. இதுவ‌ரை
வாங்கிய‌ க‌ட‌ன்க‌ளுக்கான‌ இந்த‌ வ‌ருட‌ வ‌ட்டித் தொகை : சுமார் 3,00,000
கோடிகள். மொத்த கடன் எவ்வளவு என்பதை சரியாக கண்டுபிடிக்க
முடியவில்லை. வட்டி தொகையில் இருந்து யூகிக்கலாம்.

அர‌சு ப‌ற்றாக்குறைய‌ க‌ட‌ன் வாங்கியும், நோட்ட‌டித்தும் செல‌வு
செய்கிற‌து. அத‌னால் தான் விலைவாசி க‌ண்ட‌ப‌டி உய‌ர்கிற‌து. இன்னும்
இர‌ண்டு ஆண்டு க‌ழித்து இந்த‌ ப‌ட்ஜெட்டினால் விலைவாசி உய‌ர்வு
ஏற்படும். உட‌னே தெரியாது. ஆனால் அன்று அத‌ற்கான‌ கார‌ணிக‌ள்
இது போன்ற‌ ப‌ட்ஜெட் ப‌ற்றாகுறைக‌ள் என்று பொது புத்தியில்
அறிய‌ப்ப‌டாம‌ல், இத‌ர‌ கார‌ணிக‌ள் ம‌ட்டும் விவாதிக்க‌ப்ப‌டும். பார்க்க‌ :

விலைவாசி ஏன் உயர்கிறது ?
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html

பொருளாதார‌ ம‌ந்த‌த்தை நீக்க‌வும், நாட்டின் பொருளாதார‌ம் "வ‌ள‌ர‌வும்"
இது போன்ற‌ ப‌ற்றாகுறை ப‌ட்ஜெட்டுக‌ள் தேவை என்று ஒரு எண்ண‌
ஓட்ட‌ம் இருக்கிற‌து. லார்ட் கீயின்ஸ் என்ற‌ பொருளாதார‌ நிபுண‌ரின்
வ‌ழிமுறை இது. ஆனால் அவ‌ர் சொன்ன பற்றாக்குறை பட்ஜெட் விகுத‌ம்
மிக‌ மிக‌ குறைவான‌து.இந்தியாவில் மொத்த ஜி.டி.பியில் சுமார் 10 முத‌ல்
12 ச‌த‌வீத‌ அளவில் மத்திய‌ / மாநில‌ ம‌ற்றும் மான்ய‌ ப‌ட்ஜெட்டுக‌ளின்
ப‌ற்றாகுறை உள்ள‌து. அது தொட‌ர்ந்து விலைவாசி உய‌ர்வை அதிக‌ப்ப‌டுத்தி,
விவ‌சாயிக‌ளையும், ஏழைக‌ளையும், ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளையும் க‌டும்
துன்ப‌த்திற்க்காளாக்கி, எதிர் ம‌றையான‌ விளைவுக‌ளையே த‌ரும்.
க‌ட‌னாளியான‌ அர‌சு, மேலும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடிக‌ள் க‌ட‌ன் வாங்கி,
பொருளாதார‌த்தை மேம்ப‌டுத்துவ‌து ந‌ட‌வாத‌ காரிய‌ம். வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள்
அளவு இந்திய‌ பொருளாதார‌ம் பாதிக்க‌ ப‌ட‌ வில்லை. பொருளாதார‌
வ‌ள‌ர்சி விகுத‌ம் தான் குறைந்து உள்ள‌து. ப‌ற்றாகுறை ப‌ட்ஜெட்டுக‌க‌ள்
இல்லாம‌லேயே, சில ஆண்டுகளில் அது தானாக‌வே ச‌ரியாவிடும்.
ஆனால் க‌ட‌ன் சுமையும், விலைவாசி உய‌ர்வும் அதிக‌ரிக்கும்
ப‌ற்றாக்குறை ப‌ட்ஜெடுக‌ள் ந‌ம் சாப‌க்கேடுக‌ள்.

மேலும், இந்த‌ ஆண்டு ராணுவ‌ச் செல‌வு : 1,41,703 கோடிக‌ள். சென்ற‌
ஆண்டை விட‌ சுமார் 36,000 கோடிக‌ள் அதிக‌ம். அக்கிர‌ம‌மான‌ த‌ண்ட‌ச்
செல‌வு. ந‌ம‌க்கு சிறிதும் க‌ட்டுப‌டியாகாத‌ வெட்டி வீராப்பு .ஆட‌ப்ப‌ர‌ம்.
இது போல் ப‌ல‌ துறைக‌ளிலும் வெட்டிச் செல‌வுக‌ள். அதை குறைக்க‌
வேண்டும் முத‌லில்.

இவ்வ‌ள‌வு செல‌வுக‌ளும் க‌ட‌ன் வாங்கித்தான் செய்கிறோம். க‌ட‌ன் வாங்கி
செல‌வு செய்தால் எதிர்கால‌ம் என்ன‌ ஆகும் ? த‌னி ம‌னித‌ன் இது போல்
க‌ட‌ன் வாங்கினால் என்ன‌ ஆவானோ, அதே தான் அர‌சிற்க்கு ஏற்ப‌டும்
என்ப‌தே அடிப்ப‌டை பொருளாதார‌ விதி. அது ப‌ல‌ருக்கும் புரிவ‌தில்லை.

ஆம்னி பஸ்களுக்கு விடுதலை

Ban on omnibus permits revoked
http://www.hindu.com/2009/06/11/stories/2009061159630800.htm

தமிழகத்தில், சுமார் 18 வருடங்களாக இருந்த ஆம்னி
பஸ்களுக்கான லைசென்ஸ் கட்டுபாடுகளை தளர்த்தியது
அரசு. நீண்ட தொலைவு பயணத்திற்க்கு அரசு பஸ்கள்
மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் அதிகம் தேவைபடுகின்றன.
(ரயில் வண்டிகளில் இடம் நிரம்பி வழிவதால்) ; ஆனால்
1991 முதல் புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட்டுகள்
வழங்குவதை நிறுத்தி வைத்தது தமிழக அரசு. விளைவு :
கடும் பற்றாக்குறை மற்றும் டிக்கட் விலைகள் மிக
அதிகமானது.

ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் விதமே வினோதமானது,
முட்டாளதனாமானது. மதுரையில் இருந்து சென்னை
செல்லும் ஆம்னி பஸ், டூரிஸ்ட் வண்டியாகவே இயக்கப்படுகிறது.
அதவாத பயணிகள் அனைவரும் "சேர்ந்து" சென்னையை
சுற்றி பார்க்க செல்வதாக ஒரு செட்டப். தனியார் பஸ்களுக்கு
நேரடியான அனுமதி வழங்கப்படாதால் 40 வருடங்களாக இந்த
அவலம். மேலும் புதிய ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட்
அனுமதிக்காமல் இருந்ததால், இருக்கும் பெர்மிட்டுகள்
பல கோடி ரூபாய்களுக்கு (கருப்பில்) கைமாறின. எனக்கு
தெரிந்து கரூர் சென்னை ஆம்னி பெர்மிட், சில வருடங்களுக்கு
முன் சுமார் 2 கோடிக்கு கைமாறியது.

இதில் மறைந்து நிற்க்கும் விசியம் : அரசு அதிகாரிகள்,
அமைச்சர்கள், முதல்வர் வரை லஞ்சம் விளையாடுவது.
வருடந்தோரும் மாமுலாக சூட்கேஸ்கள் அனுப்பபடுகின்றன.
இதற்க்கு பெயர்தான் குரோனி கேபிடலிசம். புதிய போட்டியாளர்கள்
உருவாகி, மலிவான சேவைகள் அதிகமாகி, லாபம்
குறைவதை தவரிக்க‌ இதுவரை பெர்மிட் பெற்ற முதலாளிகளும்,
அரசு எந்திரமும் கூட்டாக செய்யும் சதி இது.

"தனியார் முதலாளிகள் வளர்ந்துவிடுவார்கள், லாபம்
இல்லாத வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க மாட்டார்கள்,
டிக்கட் விலை மிக அதிகமாகும், மக்கள் தவிப்பர்கள்" :
இந்த டைலாக் மாமுலாக உபயோகிக்கப்பட்டு, பொது
புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது.

இப்போதும், புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட் வழங்கும்
அதிகாரம் ஆர்.டி.ஓ மற்றும் அதன் தலைவரான் போக்குவரத்து
கமிஸ்னர் (மிகவும் 'பசையுள்ள' பதவி) ஆகியோரிடம் தான்
வழங்கள்ப்பட்டுள்ளது. இனி பல கோடிகள் கைமாறும். பேரங்கள்,
சூட்கேஸ்கள்...

ஏல முறையில் வெளிப்படையாக வழங்கும் முறையே
சரியானது. ஊழல் உருவாவதை தடுக்கும். ஆனால்
விடமாட்டார்கள்.

மேலும் பார்க்க :

http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html

வட கொரியா என்னும் நரகக்குழி

வட கொரியாவின் வரலாறு மற்றும் இன்றைய நிலைமை பற்றி
பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு,
பல கொடுமைகளை அனுபவித்த கொரியா நாடு, பின் உள்நாட்டு
யுத்ததில் சிக்கியது. வடக்கு பகுதியில் கம்யூனிஸ்டுகள் (சீனா
மற்றும் ரஸ்ஸியா ஆதரவுடனும்), தென் பகுதியுல்
முதலாளித்துவாதிகள் / ஜனனாயகவாதிகள் அமெரிக்க மற்றும்
இதர நாடுகள் ஆதரவுடனும், கொரியாவை கைப்பற்ற கடும்
போரிட்டனர். 1950 முதல் 1953 முதல் நடந்த போரின்
இறுதியில் கொரியா தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு,
தென் கொரியா மற்றும் வட கொரியா என்று இரு நாடுகளாக‌
பிரிக்கப்பட்டது.

தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான
தொழில்களையும் வெற்றிகரமாக‌ பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும்
பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல்
ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது.

ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு
பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல்
பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவ செலவிற்க்காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால்,
உற்பத்தி திறன் மிக மிக‌ குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக
இருந்தது.

1994இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர்.
மிக மிக கொடுங்கோலனான‌ இவர், 'எதிரிகள்' பலரையும் கொன்றழத்தார். வட
கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி
செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே "கடத்தல்" மூலம்
அன்னிய செலவாணியை பெற முயன்றது.

பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும்,
ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும்
உருவாக்கி குவிக்கின்றனர்.

தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக
அடிமைகளாக‌ வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட
ராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது
படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே ராணுவ
செலவை குறைக்க மறுக்கும் அரசு.

ஆனால் உண்மையில் உலகின் எந்த நாடும் வட கொரியா மீது
படை எடுக்க விரும்பாது. ரஸ்ஸியா, ஜப்பான், அமெரிக்கா, தென்
கொரியா, சைனா என்று முக்கிய நாடுகள் அனைத்தும் இன்று
வரை வட கொரியாவை தாஜா செய்து, அவ்வப்போது உதவி
செய்து வருகிறது. காரணம், வட கொரியா ஒரு "failed state"ஆக
வீழ்ந்தால், பல லச்சம் அகதிகள் தென் கொரியா, சைனா மற்றும்
இதர அண்டை நாடுகளில் தஞ்சம் புக முனைவர். ச‌மாளிக‌வே
முடியாத‌ நிலை அது.

இப்போதே, அக‌திக‌ள் எண்ணிக்கை மிக‌ அதிக‌ம். ர‌க‌சிய‌மாக‌
அங்கிருந்து த‌ப்பித்து செல்வ‌ர். வ‌ட‌ கொரியா கிராம‌ங்க‌ளில்
வாழும் ம‌க்க‌ளின் நிலை, ஈழ‌ ம‌க்க‌ளின் நிலையை விட‌ மிக‌
மிக‌ கொடுமையான‌து. விடிவே இல்லாத‌ சூழ‌ல்.

தென் கொரியாவில் வாழும் கொரியார்க‌ள் மிக‌ மிக‌ மிக‌
அதிர்ஸ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். ஒரே நாட்டில் இரு நிலை.

ஆனால் இன்றும் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சிதான்.
செங்கொடி பற‌க்கிறது. நமது காம்ரேடுகள், வட கொரிய
ஆட்சியாளர்களை  "திரிபுவாதிகள்",  "போலிகள்" என்று மிக
சுலபமாக நிராகரிப்பர். ஆனால் உலகெங்கிலும் (க்யூபா) உள்பட‌
செம்புரட்சி, காலப்போக்கில் "திரிபுவாதிகள்"
வசம் சிக்கி, சீரழிந்ததே வரலாறு.

சொல்லிவைத்தது போல் விதிவிலக்கில்லாமல் அனைத்து "கம்யூனிச"
நாடுகளும் எப்படி திரிபுவாதிகளிடம் சிக்கியதாம் ? காரணம், அந்த
சித்தாந்தம் விஞஞான‌ பூரவமானது அல்ல. அல்ல. அதிகாரம் ஒரு
முனையில் குவிக்க வகை செய்யும், மக்களாட்சிக்கு, அடிப்படை
உரிமைகளுக்கு விரோதமான சித்தாந்தம் அது. அதனால் இறுதியில்
சர்வாதிகார ஃபாசிசத்திற்கே வழி வகுக்கும். இதில் எங்கும் விதி
விலக்கே  இருக்க முடியாது. மேலோட்டமாக தொழிலாளர் அரசு,
சுரண்டலை  ஒழித்தோம், சமத்துவம் என்ற labelகளை வைத்துக்
கொள்வார்கள்.

தொழிலாளர்கள் நிலை கம்யூனிச நாடுகளில்தான் மிக மிக
கொடுமையானது. கொத்தடிமைகள் போல் வாழ்க்கை. அதை பற்றி
விரிவாக பின்னர்..

North Korea Human Rights (Amnesty International's reports)
http://www.amnestyusa.org/all-countries/north-korea/page.do?id=1011213

அமெரிக்காவின் (Libertarian) லிபெர்ட்டேரியன் கட்சி

அமெரிக்காவின் Libertarian Party :
 
அமெரிக்க அரசியல் என்றாலே குடியரசு கட்சி மற்றும்
ஜனனாயக கட்சிகள் மட்டும்தான் நினைவிற்கு வரும்.
ஆனால் மூன்றாவதாக ஒரு கட்சி 1971இல் இருந்து
செயல்படுகிறது. சுமார் 2 ல்ட்சம் உறுப்பினர்களை
கொண்ட கட்சி இது.
 
இரு பெரிய கட்சிகளுக்கு ஒரு மாற்றாக, அருமையான
கொள்கைகளோடு போராடும் சிறு கட்சி இது. இதன்
முக்கிய கொள்கைகள் :
 
1.அரசு என்பது மிக மிக சிறிய, வலு குறைந்த
அமைப்பாகவே இருக்க வேண்டும். அதவாது பல
தேவையில்லாத துறைகளில் அரசின் தலையீட்டை
அடியோடு நீக்க வேண்டும். Small government. தனி
மனித சுதந்திரம் தான் மிக மிக அடிப்படையான
உரிமை. அதை பாதுகாக்க மட்டும் அரசு எந்திரம்
தேவை. 
 
2.வ‌ருமான‌ வ‌ரி ம‌ற்றும் இத‌ர‌ வ‌ரிகளின் விகுதம்
மிக‌ மிக மிக குறைக்க‌ப்ப‌ட வேண்டும்.
 
3.எந்த ஒரு தனியார் தொழில் துறை மற்றும்
நிறுவனத்திற்க்கும் அரசு எந்த ஒரு சலுகையோ,
உதவியோ அளிக்க கூடாது.  அதுதான் உண்மையான
சுதந்திர சந்தை பொருளாதாரம்.  திவால் மற்றும்
நஸ்டம் என்பது சந்தை பொருளாதாரத்தின்  ஒரு
அம்சமே. அது resourceகளை குறைந்த efficiency உள்ள
அமைப்புகளிலிருந்து மிக அதிக‌ efficiency உள்ள
நிறுவனங்களுக்கு மாற்றும்.
 
4.விவசாயம், எரிசக்தி போன்ற துறைகள் எதற்க்கும்
அரசு மானியம் அளிக்க கூடாது. அவை தானகவே
வளர வேண்டும். "Hands off" policy.
 
5.அன்னிய விவாகரங்கள் : முதல் வேலையாக அமெரிக்கா
நேட்டோ (NATO)  போன்ற அனைத்து அமைப்புகளிலிருந்து
விலக‌ வேண்டும்.  எந்த நாட்டுடனும் ராணுவ மற்றும்
இதர  ஒப்பந்தங்கள் கூடாது. உலகின் எந்த நாட்டின் உள்
விவகாரங்களிலும் தலையிடக்கூடாது. படை எடுக்க
கூடவே கூடாது.  உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ராணுவ
தளங்களை மூடிவிட்டு, அமெரிக்க ராணுவம் உள்னாட்டில்
மட்டுமே தளங்களை வைத்திருக்க வேண்டும். ராணுவ
செலவு மிகவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ராணுவம்
என்பது தற்காப்பிற்க்காக‌ (self-defence) மட்டும், சிறிய
அளவில் இருந்தால் போதும்.
 
6.உலக நாடுகள் எதற்க்கும், எந்த நிதி உதவி (aid) மற்றும்
இதர‌ 'உதவிகளை' அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும்.
முதலில் உள்னாட்டு மக்களை கவனிக்க வேண்டும். அரசின்
நிதி நிலையை மேம்படுத்தி, கடனை ஒழித்து, பட்ஜெட்டில்
துண்டு  விழாமல் தடுக்க வேண்டும். Balanced budget. உலக்
வங்கி, அய்.எம்.எஃப் போன்றவை தேவையில்லை. அதில்
இருந்து அமெரிக்கா விலக வேண்டும். தனியார் அமைப்புகள்
மற்றும் மக்கள் இது போன்ற உதவிகள் செய்ய
தடையில்லை. அது அடிப்படை உரிமை.
 
7.மதம் மற்றும் இதர விசியங்களில் சர்வ சுதந்திரம்
அனுமதிக்கப் பட வேண்டும். கருகலைப்பு, ஓரினச்சேர்க்கை
போன்றவை தனி நபர் பிரச்சனைகள். அதில் அரசு
தலையிடக்கூடாது. கட்டுபடுத்தக் கூடாது.
 
8.பொதுமக்கள் ஆயுதம் தாங்க எந்த கட்டுபாடும் விதிக்க
கூடாது. (anti-Gun Contro Regulationsl)
 
9.ஏழை மக்களுக்கான உதவி வழங்கும் திட்டங்கள் (welfare)
அரசே செய்யாமல் தனியார் மயமாக்க வேண்டும்.
 
10.அரசின் பள்ளிகள் : பெற்றோர் ஆசிரயர் கழகத்தவரால்
மட்டுமே நிர்வாகிக்கபட வேண்டும். Free education vouchers
and competition அதிகரிக்கப்பட வேண்டும்.
 
இது போல் பல விசிய‌ங்களில் முழுமையான சுதந்திர
கொள்கைகளை கொண்ட ஒரு அபூர்வ கட்சி இது. இது
ஆட்சி அமைத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற
சொல்லே வழக்கொழிந்துவிடும் !! அமெரிக்காவின் வளம்
மற்றும் தனினபர் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.
அதன் மூலம் உலகத்தில் வறுமை மேலும் குறையும்.
 
Gun Control போன்ற சில விசியங்களில் இக்கட்சியின்
நிலைபாடு  விவாதத்திற்குரியதுதான். ஆனால் இதர
அடிப்படை விசியங்களில் மிக மிக தெளிவான,
அருமையான‌ கொள்கைகள்.
 
ஆனால் இக்கட்சி பெருவாரியான ஆதரவை பெறுவது
நடக்குமா ?
 
இக்க‌ட்சியின் வ‌லைம‌னை :
http://www.lp.org/issues
 

 


 

மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

அன்புள்ள ஜெமோ,

பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய உங்கள் பதிவை ( http://jeyamohan.in/?p=97 )
இப்போதுதான் படித்தேன். அதை ஒட்டிய மடல் இது :

மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

///ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை இயல்பாகக்
கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின் மையம். அதை
எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து அளவுக்கே
முக்கியமான குரல்.////

சொத்துரிமை தான் முதலாளித்துவத்தின் ஆணிவேர். பல வகை
அடிப்படை உரிமைகளில் சொத்துரிமை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத உள்ளேன். மார்க்ஸிச‌த்தை எந்த‌ '
முறையில்' அம‌ல்ப‌டுத்தினாலும், அடிப்ப‌டை சொத்துரிமையை ந‌சுக்காம‌ல்
செய‌ல்ப‌டுத‌ முடியாது. சொத்துரிமையை ந‌சுக்கும் போது இத‌ர‌ ம‌னித‌
உரிமை மீற‌ல்க‌ள் மிக‌ இய‌ல்பாக‌ ந‌சுக்க‌ப‌டும். அதை த‌விர்க்க‌வே
முடியாது. செம்புரட்சிக்கு பின் ஸ்டாலின்ஸ‌ம் உருவாகுவ‌தை
த‌விர்க்க‌வே முடியாது.

அலெக்ஸான்ட‌ர் சோல்ஸ்சென்ன்ஸின் (Aleksandr Solzhenitsyn)
சொல‌வ‌து :

..he blamed the teachings of Karl Marx and Friedrich Engels, arguing
Marxism itself is violent. His conclusion is Communism will ALWAYS be
totalitarian and violent, wherever it is practiced. There was nothing special
in the Russian conditions which affected the outcome...

He also rejected the view that Stalin created the totalitarian state, while
Lenin (and Trotsky) had been "true communists." He argued Lenin started
the mass executions, wrecked the economy, founded the Cheka which would
later be turned into the KGB, and started the Gulag even though it did not have
the same name at that time.

இந்த‌ அம்ச‌ம் மார்கிஸ‌த்தின் அடிப்ப‌டை கூறுக‌ளிலேயே உள்ள‌து.
என‌வே ஸ்தாலிய‌த்தை உருவாக்க‌ சாத்திய‌மில்லாத‌ ஒரு
மார்க்ஸிச‌ம் சாத்திய‌மே இல்லை.


சொத்துரிமையும் அற‌விய‌லும் ப‌ற்றி மிக‌ முக்கிய‌ ப‌திவு :

"HUMAN RIGHTS" AS PROPERTY RIGHTS
http://www.mises.org/rothbard/ethics/fifteen.asp

The Ethics and Economics of Private Property
http://www.mises.org/story/1646

அன்புடன்
K.R.அதியமான்

-----------------------------

http://jeyamohan.in/?p=97

...ஒரு படைப்பு வாசகனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனை
பேர் எத்தனை முறை வாசிக்கிறார்களோ அத்தனைமுறை அது புதிதாகப்
பிறக்கிறது. சோதிப் பிரகாசம் அவர்களின் வாசிப்பு என்நூலில் இருந்து
அவர் பெற்றுக் கொண்டது. அதை சரி அல்லது தவறு என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை. அவர் கணக்கிலெடுக்கத் தவறிய விஷயங்களை,
அவர் பார்க்காத கோணங்களை சகவாசகனாக நான் சுட்டிக் காட்டலாம்.
படைப்பாளி கூட படைப்புக்கு ஒரு வாசகனே. இனி நான் எதை
சொன்னாலும் அது அந்நாவலின் பகுதி அல்ல. அது முடிந்துவிட்டது.
[விஷ்ணுபுரத்தில் புதிதாக எழுதிச் சேர்க்கப்படவில்லை]

என் நோக்கில் அந்நாவலில் மார்க்ஸியத்தையும் ஸ்தாலினியத்தையும்
துல்லியமாக வேறுபடுத்திப் பார்த்திருப்பதாகவே படுகிறது. அப்படி
வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல்
என்று சொல்லிவிடவும் முடியாது. அது ஸ்தாலினிய எதிர்ப்பு நாவலே.
ஆனால் ஸ்தாலினின் தரப்புகூட வலிமையாகவே சொல்லப்படுகிறது.
அதில் ஒற்றைப்படையாகக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இல்லை.
எல்லா கருத்தும் ஒரு விவாதத்தன்மையுடன்தான் வருகின்றன.
ஆகவே எல்லா கருத்தும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சில தரப்புகள்
தன்னிச்சையான உக்கிரத்துடன் நிகழ்ந்துள்ளன. எஸ்.எம்.ராமசாமி
சொல்லும் மாறாப்பேரறம் குறித்த தரப்பு அதில் ஒன்று. அதற்குச்
சமானமான வலிமையுடன் வருவது ஜோணி என்ற கதாபாத்திரத்தால்
முன்வைக்கப்படும் எதிர்கால மார்க்ஸியம் குறித்த பெருங்கனவு.
அந்நாவல் மார்க்ஸியத்தின் அழிவைப் பற்றி பேசவில்லை, அதன்
மறுபிறப்பைப் பற்றிப் பேசுகிறது

மார்க்சியம் ஸ்தாலினியமல்ல. ஆனால் அது ஸ்தாலினியத்தை
முளைக்கவைத்தது. அரை நூற்றாண்டு காலம் அதை நியாயப்படுத்தும்
கருத்தியல் சட்டகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை எவருமே மறுக்க
இயலாது. பின்தொடரும் நிழலின் குரலின் முக்கியமான வினாவே
அங்குதான் உள்ளது. சில எல்லைகளை நாம் ஒருபோதும்
மீறமுடியாது என எண்ணுகிறோம், சிலவற்றை கற்பனைகூட
செய்யமுடியாது என நம்புகிறோம். ஆனால் உரியமுறையில்
நியாயப்படுத்தப்பட்டால் மனிதன் எதையும் செய்வான் என்றுதான்
வரலாறு நிரூபித்துள்ளது. நாஜி வதைமுகாம்களை நடத்தியவர்கள்
மனிதர்களே. அவர்களுக்கு அவர்கள் செயல் நியாயமாக,
இன்றியமையாததாகப் பட்டது. ஆகவே மனிதன் கருத்தியல்மீது
மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்பதே நாம் இருபதாம்
நூற்றாண்டில் கற்றுக் கொண்ட பாடம். கருத்தியல் எந்த அளவுக்கு
வலிமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலும் கவனமாக இருக்கவேண்டும். எந்த அளவுக்கு முற்போக்காக,
எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலதிகக்கவனம் தேவை. தர்க்கமல்ல, மனசாட்சியே நம்
அளவுகோல்களைத் தீர்மானிக்கவேண்டும். புத்தியல்ல கனிவே
நம்மை வழிநடத்தவேண்டும். அந்நாவலில் உள்ளதாக எனக்குப்
படுவது இதுவே.

இதுவே பின் தொடரும் நிழலின் குரல் பேசும் விஷயம்.
அதைப்பேசும்பொருட்டு இக்காலகட்டத்தில் மிக வலிமையனதாக
இருந்த ஒரு கருத்தியலான மார்க்ஸியம் உதாரணமாக்கப்பட்டுள்ளது,
அவ்வளவுதான். அதன் பிரச்சினை அறத்துக்கும் தர்க்கத்துக்கும்
இடையேயான முரண்பாடு குறித்ததே. மார்க்ஸியமா ஸ்தாலினியமா
என்பதல்ல அதன் சிக்கல். எப்படி ஸ்தாலினியத்தையும் போல்பாட்டின்
கொடூரங்களையும் மகத்தான மனிதாபிமானிகளாக இருந்தவர்கள்
கூட பலவருடம் நியாயப்படுத்தினார்கள் என்பதுதான். [இன்னும்
சொல்லப்போனால் இ.எம்.எஸ் என்ற மேதை, பெருங்கருணையாளன்
எப்படி அதைச்செய்தான் என்பதே என் தனிப்பட்ட சிக்கல்]. எப்படி
எந்த ஒரு இலட்சியவாதமும் ஸ்தாலினியம் போன்ற வன்முறைக்களத்தை
உருவாக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அதன் இலக்கு. இலட்சியவாதம்
எதிர்நிலை நோக்குகளை வன்முறையை உருவாக்குமென்றால் அது
மெல்ல தன்னை வன்முறைக்குப் பலிதந்துவிடும் என்பதே. வன்முறைக்கு
அதற்கே உரிய இலக்கணமும் வழிமுறையும் உண்டு என்பதே.
அவ்வகையில்தன் ஆத்மாவின் ஆழத்திலிருந்து பின் தொடரும் நிழலின்
குரலின் வரிகளை வாசித்த பலநூறு ஈழவாசகர்களை நான் அறிவேன்.

ஸ்தாலினியம் தவறாயிற்று என இன்று சாதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் கொல்லப்பட்ட உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களை மீட்டெடுக்க
இயலுமா என்பதே அந்நாவல் எழுப்பும் வினா. வன்முறை எங்கு எப்படி
நிகழ்ந்தாலும் இந்த அபாயம் உள்ளது. அதை நிகழ்த்தும்போது உள்ள
நியாயங்கள் மாறலாம். நிகழ்ந்தவற்றைச் சரிசெய்ய இயலாது. அப்படியானால்
தியாகங்களுக்கு மதிப்பே இல்லையா? போல்ஷெவிக் புரட்சியில்
இறந்துபோனவர்களின் மரணம் வரலாற்றின் கேலிக்கூத்துதானா? [அதே
வினாவை அப்படியே ஈழத்தைப் பற்றியும் எழுப்பலாம். என்றாவது
அவ்வினா எழுந்துவரும், மிகவலிமையாக. அப்போது என் நாவல்
எதைப்பற்றியதென்ற கேள்விக்கே இடமிருக்காது]. அக்கேள்விக்கே
கிறிஸ்து வந்து பதில் சொல்கிறார்- திருச்சபையின் கிறிஸ்து அல்ல
படைப்பின் ஆன்மாவில் விளைந்த கிறிஸ்து.

ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை
இயல்பாகக் கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின்
மையம். அதை எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து
அளவுக்கே முக்கியமான குரல்.

இந்தி திணிப்பும், தனியார்மயமும்

இந்தி திணிப்பும், தனியார்மயமும்

1994இல் தனியார் சேட்டிலைட் சேனல்களை மத்திய அரசு
அனுமதிக்கும் வரை பல ஆண்டுகளாக அரசின் தூர்தர்ஸ்ன் தான்
மோனோபாலியாக கொடிகட்டிப் பறந்தது. 1970கள் முதல் 1994 வரை
சென்னை தூர்தர்சனில் இந்தி திணிப்பு மிக மிக் அதிக அளவில்
நடந்தது. இன்று 40 வயதை தொட்டவர்களுக்கு இது நியாபகம்
இருக்கும்.

நேசனல் புரோக்ராம் என்ற பெயரில் முக்கியமான நேரங்களில்
(ப்ரைம் டைம்) இந்தி மொழி நிக்ழச்சிகள் தாம். தமிழ் நிகழ்ச்சிகள்
பிற சமயங்களில் தான் அனுமதி. இது தான் இந்திய ஒற்றுமையை
நிலை நாட்ட சரியான வழி என்று டில்லியில் இருந்த தலைவர்கள்
மற்றும் அதிகாரிகளின் நினைப்பு ! எதிர்க்க முடியாத படி அனைத்து
வகை அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிந்து குடந்த
லைசென்ஸ் ராஜ்ய காலங்கள் அவை. தனியார் வானொலியும்
அன்று அனுமதி கிடையாது.

1991க்கு பின் தாரளமயமாக்கல் ஆரம்பமானாதால் ஏற்பட்ட பல
நல்ல‌ விளைவுகளில் ஒன்று தான் தகவல் தொடர்பு மற்றும்
ஊடகத் துறையில் அரசின் கட்டுபாடுகள் பெருமளவு
தளர்த்தப்பட்டு, தனியார்கள் அனுமதிக்க‌ பட்டது. 1994இல்
முதன் முதலில், தமிழில் முதல் தனியார் தொலைகாட்சியாக
சன் டீவி துவக்கப்பட்டது. அதன் பின் பல பல‌ இதர தனியார்
தொலைகாட்சி சானல்கள் மற்றும் செய்திகளுகென்றே
தனி சேனல்கள். இன்று நிலைமையில்தான் எத்தனை மாறுதல் !!
அனைத்து தனியார் தொலைகாட்சி சேனல்களிலும் தமிழ் மயம்தான்.
அவற்றின் தரம் மற்றும் தாக்கம் வேறு விசியம். ஆனால் தமிழர்கள்
விரும்பிய மொழியில் விரும்பிய நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு.
செய்திகள் மற்றும் கவரேஜ், அரசின் கட்டுபாட்டில் இருந்து
விடுபட்டதால், பரவலாக மற்றும் ஆழமான செய்திகள் முதன்
முறையாக இடம்பெற்றன. அரசியல் சார்ப‌ற்ற நடுனிலை
சேனல்களும் உருவாகின.

தூர்தர்ஸ்னின் மோனோபோலி ஆதிக்கம் ஒழிந்ததால் அது
தடுமாறியது. இன்று சென்னை தூர்தர்ஸனில் தமிழ் மொழி
புரோக்ராம்கள் மிக மிக‌ அதிகமாக ஒளிப்பரப்பு. எப்படி இந்த
மாற்றம் சாத்தியமானது ? தமிழ் அல்லாமல் இந்தியில்
ஒளிபரப்பினால், சந்தை போட்டியில் தோல்வி என்று
புரிந்தவுடன் தான் இந்த நல்ல மாறுதல்.

சுத‌ந்திர‌ ச‌ந்தை பொருளாதார‌ கொள்கைக‌ள் ப‌டிப்ப‌டியாக‌
அனைத்து வ‌கை சுத‌ந்திர‌ங்க‌ளையும், முக்கிய‌மாக‌
அர‌சிய‌ல் ம‌ற்றும் சிவில் உரிமைக‌ளை ப‌ர‌வ‌லாக்கி,
வ‌லிமையாக்கி, உண்மையான‌ ஜ‌ன‌னாய‌க‌த்தை நோக்கி
நாட்டை கொண்டு செல்லும் என்ப‌த‌ற்க்கு இது ஒரு முக்கிய‌
சாட்சி.

தொலைதொட‌ர்பு துறையிலும் இதே க‌தைதான். இன்று இந்த‌
இணைய‌ம் மிக‌ மிக‌ ம‌லிவாக‌, ப‌ர‌வ‌லாக‌ ம‌க்க‌ளில் ஊட‌க‌மாக‌,
ஈடு இணைய‌ற்ற‌ சுத‌ந்திர‌த்துட‌ன‌ வ‌ள‌ர‌ முக்கிய‌ கார‌ணம், அது
அர‌சின் க‌ட்டுப்பாட்டில் இல்லை. பி.எஸ்.என்.எல் ம‌ட்டும்
இன்றுவ‌ரை ஒரே நிறுவ‌ன‌மாக‌, மோனோபலியாக‌ தொட‌ர்ந்திருந்தால்
இது சாத்திய‌மில்லை. 1990க‌ளுக்கு முன் தொலைபேசி வாங்க‌
முய‌ன்ற‌வ‌ர்க‌ளுக்கு புரியும் இது.

இணைய‌ம் ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள், செய்திக‌ள் ம‌ற்றும்
இத‌ர‌ விசிய‌ங்க‌ளை ம‌க்க‌ள் அனைவ‌ரும் மிக‌ எளிதாக‌
ப‌ரிமாற‌ வ‌கை செய்கிற‌து. இந்திரா காந்தி கால‌த்தில் மிஸா
என்ற‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்தில் நில‌விய‌ ஊட‌க‌ முட‌க்க‌த்தை
இன்று உள்ள‌ க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌ நிலையுட‌ன் ஒப்பிட்டால்
புரியும். அன்று சோசிய‌லிச‌ம் என்ற‌ பெய‌ரில் தான்
அட‌க்குமுறை ஏவ‌ப்ப‌ட்ட‌து.

Milton Friedman என்ற‌ மாபெரும் பொருளாதார‌ வ‌ல்லுன‌ர் எழுதிய‌
முக்கிய‌ ஆக்க‌ங்க‌ள் இவை :

"Capitalism and Freedom"
http://en.wikipedia.org/wiki/Capitalism_and_Freedom

"Free to Choose"
http://en.wikipedia.org/wiki/Free_to_Choose

அனைவ‌ரும் ப‌டித்து ப‌ய‌ன் பெற‌ வேண்டிய‌ நூல்க‌ள் இவை.

சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

எழுத்தாளர் சாரு நிவேதித்தா, கேராளாவை அடிக்கடி
சிலாகித்து எழுதுவார். அங்கு எழுத்தாளர்கள் மிகவும்
கொண்டாடப் படுகிறார்கள். அவர்களின் நூல்கள்
மிக அதிகம் படிக்கபடுகின்றது /மதிக்கபபடுகிறார்கள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அந்த அளவு தமிழ்னாட்டில்
மதிக்கப்படுவதில்லை. புத்தக விற்பனையும் குறைவு.
இப்படி...

இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கேரளா /
தமிழ்நாடு பற்றிய‌ சரியான ஒப்பீட்டை தராது. தொழில்
வளார்ச்சி, வேலை வாய்ப்புகள், வன்முறை, ஜனனாயக
அடிப்படைகள் போன்றவை தாம் முக்கியம். அடிப்படை
தேவைகள்.

கேரளாவில் 40களில் இருந்து கம்யூனிச கொள்கைகள்
பரவலாக‌ பரவி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை, 1957இல்
அமைத்தது. தொழில் முனைவோர் எதிரிகளாக பார்க்கப்
பட்டனர். தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மட்டும்
போராடினர். கடமை பற்றி கவலைப்படவில்லை. மொத்த
விளைவு : கேரளாவில் கடுமையான வேலை இல்லாத்
திண்டாட்டம். மலையாளிகள் வேலை தேடி உலகெங்கும்
புலம் பெயர்ந்தன். பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
தமிழ் நாட்டிற்க்கு பல லச்சம் மலையாளிகள் வேலை
தேடி வந்தனர் / வருகின்றனர். மாற்றாக தமிழர்
கேரளாவிற்க்கு வேலை தேடி செல்வது மிக மிக
குறைவே.

கேராளா எல்லையை தாண்டினால், ஒரு மலையாளி
மிக 'நல்ல‌' தொழிலாளியாகிவிடுவார். சுறுறுப்பு, திறமை,
வேலையில் அர்பணிப்பு, ஊக்கம் போன்ற குணங்கள்
வெளிப்படும். வாழ்க்கையில் முன்னேற‌ மிக முயல்வர்.
ஆனால் இந்த குணங்கள் கேராளவிற்க்குள் இருக்கும்
போது சிறிதேனும் வெளிப்படாத விந்தை மனிதர்கள்.

திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.

கேரள விவசாயத்தின் அவலங்களை பற்றி ஒரு
தனிப்பதிவே எழுத வேண்டும். நிலச்சீர்திருத்தம்
'வெற்றிகரமாக' நடந்த‌தால் சிறு துண்டுகளாக சிதறிய
'பண்ணைகள்' இன்று பரிதாபனான நிலையில் உள்ளன்.
நெல் உற்பத்தி 30 வருடங்களுக்கு முன் இருந்ததை
விட‌ குறைந்துவிட்டது. ஆம், குறைந்துவிட்டது.

கேரளாவில் நீர் வளம், மின்சாரம், துறைமுகங்கள்,
போக்குவரத்து கட்டமைப்புகள், நிதி மூலதனம் (கேரள
வங்கிகளில் என்.ஆர்.அய் சேமிப்புகள் குவிந்துள்ளன),
திறமையான தொழிலாளர்கள் என்று அனைத்து வசதிகள்
இருந்தாலும், பைத்தியக்காரன் தான் அங்கு புதிய தொழில்
தொடங்க முனைவான்.

பந்த, வேலை நிறுத்தம் போன்றவை மிக சாதாரணம்.

மலையாளிகளே நடத்தும் வலைமனை இது. பார்க்க :
http://savekerala.blogspot.com/

இவற்றோடு ஒப்பிடும் போது நமது தமிழக நிலை
எவ்வளவோ மேல். வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
வளர்ச்சி மிக மிக‌ அதிகம். வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்ற பெயரில் பல கோடி வெளிமானிலத்தவர்
இங்கு வேலை தேடி வந்து வாழ்கின்றனர்.

கேரளாவில் வன்முறை அளவு, தமிழகத்தை விட மிக
அதிகம். தேர்தலில் புதிய வேட்பாளர்கள் / கட்சிகள்
போட்டியிடுவது இங்கு எளிது. ஆனால் அங்கு காங்கிரஸ்
/ கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர புதியவர் நுழைந்தால்
ஃபாசிச எதிர்விளைவுகள் தாம்.

எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் கேரளா சொர்க
பூமியாக‌ இருக்கலாம். ஆனால் மக்களுக்கு.

சாருவின் அபிமான மலையாள எழுத்தாளாரான பால்
ஸக்கரியாவின் கட்டுரை தான் இது :

"முட்டாள்களின் சொர்க்கம்" ; மாயாவித் திருடர்கள்
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp

இந்த பாரா ஸ்கரியாவின் கட்டுரையிலிருந்துதான் :

"..பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை'
உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத்
தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்
தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு
முன்னால் செல்வதாக நான் முன்பே
குறிப்பிட்டேன்."

இப்ப சொல்லுங்க : சாருவின் கேரளாவா அல்லது
நமது தமிழகமா ?

கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு

கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு

1940 வ‌ரை சிங்க‌பூர், ர‌ங்கூன், க‌ல்க‌ட்டா மூன்றும் ஆங்கில‌
கால‌னிய‌ சாம்ராஜ்ய‌த்தின் மூன்று முக்கிய‌ துறைமுக‌ ந‌க‌ர‌ங்க‌ள்.
மூன்றும் ஏறக்குறைய சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தனவாக
1940வரை இருந்தன. ஏறக்குறைய ஒரே அளவு வளர்சி மற்றும்
வாணிபம் அந்த துறைமுகங்கள் மூலம் நடைபெற்றன.

இரண்டாம் உலக்ப்போரின் விளைவாக, ஆங்கிலேய காலனியாதிக்கம்
சரிந்து, பின் மூன்று நகரங்களும் சுதந்திர நாடுகளின் துறைமுக
நகரங்களாக உருமாற்றாம் ஆயின.

60 ஆண்டுகளுக்கு பின் இன்று இம்மூன்று நகரங்களையும் ஒப்பீட்டால் :
சிங்கபூர் மிக மிக அதிக வளம் பெற்று, ஒரு உயர்தர வளர்ந்த நாட்டின்
துறைமுக நகராக ஜொலிக்கிறது. 1940உடன் ஒப்பிட்டால் இன்று அங்கு
வாழ்க்கை தரம் மிக மிக அதிகம். முக்கிய‌ கார‌ண‌ம் அங்கு க‌ட‌ந்த‌
60 ஆண்டுக‌ளாக‌ சுத‌ந்திர‌ ச‌ந்தை பெருளாதார‌ கொள்கைக‌ள், free port,
கூட்டாட்சி ம‌ற்றும் சுத‌ந்திர‌ம்.

ரங்கூன் (இன்று யாங்கூன் என்று பெயர் மாற்றம்) ஒரு
கொடுமையான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ். 1948முதல்
அன்னிய வெறுப்பு (xenophobia ) மிக அதிகம் கொண்டிருந்த ஒரு நாட்டின்
முக்கிய நகரம். அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நசுக்கப்பட்ட ஒரு
பகுதி. அதன் விளைவு, இன்று ரங்கூன் துறைமுகம் முக்கியத்துவம்
இல்லாமால், கவனிக்கப்படாமல் ஒரு நோயாளி போல் உள்ளது.

கல்கட்டா 1920கள் வரை ஆங்கிலேய இந்தியாவின் தலைநகர்.
முக்கிய துறைமுகம். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த
பின், காங்கிரஸ் அரசு, ஜனனாயக சோசியலிச பாணி பெருளாதார
சித்தாந்ததை இந்தியாவில் அமல்படுத்தியது. முக்கியமாக கம்யூனிச
கொள்கைகள் மேற்கு வங்கத்தில் மிக அதிகம் பரவி, 1977 முதல்
அங்கு சி.பி.எம் கட்சியின் ஆட்சி. வணிகம் மற்றும் தொழில்களுக்கு
பெரும் தலைவலி மற்றும் வெளிப்படையான எதிர்ப்பு உருவானது.
தொழில் வளர்ச்சி முடங்கி, இன்று கல்கட்டா சீரழவில் உள்ளது. 60
ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரகாசமான நிலை நலிந்து, இன்று
ஒரு பெரு நோயாளி போல் தவிக்கிறது. பெரும் தொழில்க‌ள் ம‌ற்றும்
வ‌ணிக‌ நிறுவ‌ங்க‌ள் க‌ல்க‌ட்டாவை விட்டு புல‌ம் பெய‌ர்ந்து விட்ட‌ன‌.
புதிய‌ முத‌லீடுக‌ள் ம‌ற்றும் வேலை வாய்ப்புக‌ள் மிக‌ குறைவாக‌வே
வ‌ள‌ர்கின்ற‌ன‌.

1940 வ‌ரை ஏற‌க்குறைய‌ ச‌ம‌ அள‌வில் இருந்து மூன்று பெரு
ந‌க‌ர‌ங்க‌ளின் இன்றைய‌ நிலை சொல்கிற‌து : எது ச‌ரியான‌
பொருளாதார‌ / அர‌சிய‌ல் கொள்கை என்ப‌தை..

புதிய மாவட்டங்கள் தேவையா ?

புதிய மாவட்டங்கள் தேவையா ?

திருப்பூரை தலைமையாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் சமீபத்தில், தமிழக அரசால்
உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்கள் 35 ஆக உயர்கிறது.
 
ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க கூறப்படும் காரணிகள் : வளர்ச்சி பணிகளை அதிக
அளவில் செயலாக்க முடியம், மாவட்ட ஆட்சியர் மற்றும் போலிஸ் கண்காணிப்பாளரை
சந்திக்க ஒரு பெரிய மாவட்டத்தில் விளிம்பில் வாழும் மக்கள் அதிக தொலைவு பயணம்
செய்ய வேண்டியுள்ளாது, 'decentalisation ' போன்றவை.
 
ஆனால் ஒரு புதிய மாவட்டம் உருவாக்க ஆகும் புதிய செலவுகள் (fixed costs and recurring costs) மிக
மிக அதிகம் என்பது பல‌ருக்கும் தெரிவதில்லை. மாவட்ட நிர்வாகத்திற்க்காக 100 கோடி செலவழித்து,
20 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை செயல்படுத்தும் முட்டாள்தனம் இது.
 
அய்.யே.எஸ் மற்றும் அய்.பி.எஸ் ஆபிஸர்களுக்கு புதிய வேலை வாய்புகளுக்கு வகை செய்ய
இது ஒரு வழி !!!  எங்கள் ஊரான கரூர், 90களில் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரக்கப்பட்டு தனி
மாவட்டமாக்கப்பட்டது. ஆனால் பழைய கரூர் தாலுக்கவை விட சிறிய நிலப்பரப்புதான். பழைய
கரூர் தாலுக்காவில் பணியாற்றிய ஒரு சார் ஆட்சியர் மற்றும் ஏ.எஸ்.பி களுக்கும் பதிலாக
புதிய கலக்டர், எஸ்.பி, மற்றும் பல பல புதிய ஆஃபிஸர்கள். ஆனால் கீழ்மட்டத்தில்
பணியிடங்கள் அதே விகிதத்தில் அதிகரிக்கப்படவில்லை. கான்ஸ்டபள்கள் மற்றும் இதர
நிர்வாக பணியாளர்களில் எண்ணிக்கை அதிகமாக்கப்படவில்லை. நிர்வாக முறை. ஊழலுக்கும்,
வெட்டிசெலவுகளுக்கும், அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் அதிகம் வழி வகுத்தன.
 
இருக்கும் மாவட்டங்களில் புதிய தாலுக்காக்களை உருவாக்கி, தாசில்தார்களுக்கு, அதிக
அதிகாரங்களை அளிப்பதே சிக்கனமான‌ மாற்று வழி.  ஒரு புதிய மாவட்டத்தை
உருவாக்க ஆகும் புதிய செலவுகள் அனைத்தையும், அந்த பகுதியில் வளர்ச்சிகாக
தாசிலதார் அளவில் பகிர்ந்தளித்து, திட்டங்கள் ஊழலிலாமல், செம்மயாக செயல்படுத்தப்பட்டாலே
போதும். கண்டிப்பாக அதுதான் உண்மையான‌ de-centralisation.
 
மாவட்டத்திலிருந்து வரும் வருமானம் (revenue) அதே அளவில் இருக்க, நிர்வாக
வெட்டிச்செலவுகளை மட்டும் பல மடங்கு அதிகரிப்பது, மாநில அரசின் பட்ஜெட்டில் விழும்
துண்டு / பெட்ஷீட்டுகளை மிக அதிகரிக்கும். அதானல் அரசின் கடன் அதிர்கரித்து, பண வீக்கம்
அதிகரித்து, விலைவாசி தான் உயரும். இதன் சூட்சமம புரியாமல், விலைவாசி உயர்கிறதே
என்ற கூக்குரல் மட்டும் மக்களிடம் எழுதம்.  மேலும் பார்க்க :